99
ரண சிகிச்சையின் முடிவைத் தெரிந்து கொள்வதற்குள் உற்றாரின் உயிர் ஊசலாடும். நிலையும் இதுதான்.
ஆம், மாமல்லன் எண்ணியது இப்படித்தான். ‘தம்பி, அடுத்த வாரம் நாமெல்லாரும் பட்டணத்துக்குப் போனதும், முதல் வேலையாக நம்ம சிந்தாமணியோடு அத்தானைத் தேடிப் பிடித்து அவர்கள் இரண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சிடனும் !” என வேளியிட்ட தன் அன்னையின் பேச்சும் சமயம் பார்த்துக் கடன் ஆற்றியது.
சிந்தாமணியின் நெடுந்தவம் பலிக்கும் தேரம் வந்து விட்டதா ? உமையவுளின் கனவை நனவாக்க ஓடோடி வந்த சிவபெருமானைப் போல சிந்தாமணி இருக்கும் இடம் நாடி வந்திருக்கிறானே குலோத்துங்கன்.?
குலோத்துங்கனும் சிந்தாமணியும் திருமணக் கோலம் பூண்டு மகிழும் நிகழ்ச்சியினை மனத்திரையில் சித்திர மாக்கிப் பார்த்தான் இவன். கற்பனையின் எழிலும் இன்பமும் அற்புதம் தான் !
ஒசை அலைக்குத் தாலாட்டுப் பாடவென்று மாயமாகத் தோன்றிய திங்களின் ஆனத்தத்துக்கு அவனுடைய மகிழ்ச்சி குறைந்ததன்று.
‘தன் காதலி மாடியில் இருக்கிறாளா வென்று கேட்டானே குலோத்துங்கன்?... அப்படியென்றால்.... சிந்தாமணியை இவன் உணரும் சக்தி பெறவில்லையா? சித்த பேதம் அவனது இன்ப நினைவையும் பேதலிக்கச் செய்து விட்டது போலும், நானும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். ஒரு கணம் காணப்படும் தெளிவு மறுகணம் இல்லையே ? சென்னைக்குப் போனதும், குலோத்துங்கனுக்குச் சிகிச்சை செய்ய வேண்டும். சிந்தாமணியின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தியாக வேண்டும்-மாமல்லன் தன்னையே மறந்து புன்னகை