உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
என்னுரை

உலகம் புகழும் ஒப்பற்ற ஒலிம்பிக் பந்தயத்தின் கதையை, தெளிவான வரலாற்றைத் தமிழறிந்த தகைமை யாளர்களுக்கெல்லாம் சுவையாகச் சொல்ல முயன்றிருக்கிறேன்.

சுவைக்கு, வரலாற்று நிகழ்ச்சிகள் மட்டும் போதாது. வடித்தெடுக்கும்விதத்தில் சொற் கூட்டமும், நடைஓட்டமும், கற்பனை ஏற்றமும் வேண்டுமெனக் கருதி எழுதியிருக்கிறேன்.

'விளையாட்டுத் துறையில் தமிழிலக்கியம் தேவை' என்ற என் நோக்கத்தைப் பல நூல்களில் புகுத்தியுள்ளேன். வெற்றிபெற்றிருக்கிறது என் முயற்சி என அறிந்தபோது. வீறுகொண்ட தமிழ் நடையை இக் கதையிலும் இணைத்துள்ளேன்.

இந் நூலுக்கு மிக அருமையான அணிந்துரையை எனது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழகத்தின் உடற் கல்வித் தலைமை ஆய்வர் திரு. V M. இரகுபதி பி.ஏ., பிடி., டி.பி. இ. அவர்கள் தந்திருக்கின்றார்கள். என் நன்றி கலந்த வணக்கங்களை அவருக்கு உரித்தாக்குகிறன். அழகாக அச்சிட்டுத் தந்த கிரேஸ் பிரிண்டாருக்கும், உதவிய திரு. R. சாக்ரடீஸுக்கும்என் நன்றி.

கதை நூல் உங்கள் கையில், படித்து மகிழுங்கள். துடித்தெழும் தமிழக இளைஞர் கூட்டம் ஒலிம்பிக் பந்தயம் சென்று, வென்று வரவேண்டும் என்ற பேரார்வத்தோடு உங்கள் முன் வைக்கிறேன்.

ஞானமலர் இல்லம் எஸ். நவராஜ்செல்லையா.
சென்னை - 600017