பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 21 உடலுக்குப் பயிற்சி செய்கிறோம் என்றால், அது உடலைப் பதப்படுத்தவும், பண்படுத்தவும், சீராக்கவும் செழுமையாக்கவும் என்று முன்னரே கூறினோம். உடற்பயிற்சி உடலை மட்டும் இவ்வாறு மேன்மைப் படுத்தவில்லை. உள்ளே இருக்கின்ற நினைவையும், மனதையும் கூட பயன்படுத்துகின்றது. பயிற்சி செய்யப் பழகுகின்றவர்களின் உடல் வளத்தை, உடல் உறுதியை, உடல் உற்சாகமாக செயல்படுகின்ற வேகத்தை, நெஞ்சுரத்தை (Stamina) தைரியத்தை, தன்னடக்கத்தை, மன ஊக்கத்தை, திடீரென்று நடக்கும் காரியங்களுக்கேற்ப சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப நடந்துகொள்ளும் மன சாதுரியத்தை மிகுதிப்படுத்தி வளர்க்கவே உடற்பயிற்சி உதவுகிறது. அப்படியென்றால், வேலையிலும் விளையாட்டிலும் இந்த நோக்கங்கள் இல்லையா என்றால்? ..... மேலே படியுங்கள்! வேலை செய்யும் பொழுது பொருளாதாரப் பயனை மட்டுமே எதிர்பார்க்கின்றோம். அங்கே உடலுறுப்புக்கள் செழிப்பாக வளர வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் எப்பொழுதும் எழுவதில்லை! உடலியக்கம் ஏற்படும் பொழுது உடல் இயங்குகிறதே தவிர, அதனால் உடலுறுப்புக்கள் உறுதி பெற வேண்டும் என்ற எழுச்சி, ஏக்கம் யார் மனதிலும் நிகழ்வதில்லை.