உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் - 45 உடலுறுப்புக்கள் ஓய்வு பெறுகின்றன. கழிவுப் பொருட்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்று கின்றன. சக்தியை அதிகம் செலவழிக்காமல் சேர்த்து வைக்கின்றன. அதனையும் கணக்கிட்டிருக்கின்றனர். ஆராய்ச்சி நிபுணர்கள். தூங்கும்போது 1 8Ο Ο -養 கலோரிதான் செலவாகின்றன. உணவை சீரணிக்கும்போது 2100 கலோரியும், ஓய்வு எடுக்கும்போது 2500 கலோரியும், சாதாரண வேலை செய்யும்போது 3300 கலோரியும், கடினமான வேலை செய்யும்போது, 4500 கலோரியும் செலவாகின்றன. இதைப் பார்க்கும்போது, உறக்கத்தில் இருக்கும்போதுதான் உடல் நன்கு ஓய்வு பெறுகிறது என்றும், சக்தியை சிக்கனமாக செலவழிக்கிறது என்றும், இதயத்திற்கும் சிரமம் குறைந்து இயல்பாக இயங்குகிறது என்றும் நம்மால் அறிய முடிகிறது. இதயம் மெதுவாக இயங்கித் தன் சிரமத்தைக் குறைத்துக் கொண்டு, உடலையும் நன்கு பாதுகாப்பதால்தான் உறக்கம் மிகமிகத் தேவை என்கிறோம். -
- கலோரி என்பது, ஒரு கிராம் தண்ணிரை, ஒரு டிகிரி சென்டிகிரேட் உஷ்ணநிலைக்கு சூடேற்றுவதற்குத்
தேவையான வெப்ப அளவாகும்.