பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- ங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 19 அப்படியென்றால், உடலியக்கம் என்றால் என்ன? நம்மையறியாமலே நாம் உடல் உறுப்புக்களை அசைக்கிறோம். ஆட்டுகிறோம், இயக்குகிறோம், முறுக்குகிறோம். அந்த இயக்கம் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ நடக்கிறது. அது இயற்கையானது. உறுப்புக்களின் உணர்வுக்குரியது. உறுப்புக்கள் தங்கள் செழுமைக்குத் தங்களைத் தாங்களே இயக்கிக்கொள்ளும் தன்மையானது அது. அது சாதாரணமானது. அது நம் உடல் வளத்திற்கும், பலத்திற்கும், உறுதிக்கும், தெளிவுக்கும் போதாது. வகை செய்தும் தராது. வேலை என்பது வேறு! வேலையால் உடலுறுப்புக்கள் எல்லாம் சீரிய முறையிலே பணியாற்றுகின்றன. எந்திரம் போல் இயங்குகின்றன. அந்த இயக்கத்தின் போது வேலை செய்கின்ற மனிதன் எதோ ஒரு பலனை எதிர்பார்க்கிறான். அந்தப் பலன் பணமாக இருக்கலாம்; பிறரிடமிருந்து ஏதாவது ஒன்றைப் பெறுவதற்காகவும் இருக்கலாம். அங்கே, உடல் உறுப்புக்கள் இயங்கும் போது, வேலை முடிந்த பிறகு என்ன பயன் கிடைக்கும்? என்பதில்தான் கவனமும், நோக்கமும் ஓடுகின்றன. ஆகவேதான் அதை வேலை என்கிறோம். எதிர்பார்த்த பயன் கிடைத்ததும், மனம் திருப்தியடைந்து விடுகிறது. உடல் உறுப்புக்களை இயக்கியதன் நோக்கம் முடிவடைந்து விடுகிறது. ஆனால் உற்சாகமாக இயங்கிய உடல் உறுப்புக்களின் உள் நோக்கம் இங்கு நிறைவேறவில்லை. ஆகவே, வேலை