பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா நம் உடலை நாம் வேண்டுமென்றே இயக்கும்போது, உடல் உறுப்புக்களில் உள்ள பாகங்கள், தசைப் பகுதிகள் அதிகமாகவே இயங்குகின்றன. இயக்கம் அதிகமானால், சக்தியும் அதிகம் செலவாகிறது. உயிர்க் காற்றின் வேலையால் சக்தி உண்டாகும்போது கழிவுப் பொருட்கள் அதிகம் சேர்கின்றன. கழிவுப் பொருட்களும், கரியமில வாயுவும் அதிகம் உடலில் தேங்கி விட்டால் உடலுக்கு ஆபத்து. எனவேதான், தசைகளில் உள்ள தந்தி நரம்புகள், இந்த சேதியை சுவாச மண்டலத்தின் தலைமைச் செயலகத் திற்கு அனுப்ப, அங்கிருந்து சேதி வரும்போதுதான். அதிகமான உயிர்க்காற்றை உள்ளிழுக்கவும், கரியமில வாயுவை விரைந்து வெளியேற்றவும் செய்ய உறுப்புக்கள் தூண்டப்படுகின்றன. அதனால்தான், நாம் உடற்பயிற்சி செய்யும்போதும் சரி, ஓடி முடித்தபோதும் சரி, அதிகமாக மூச்சு வாங்குகிறோம். அதிகமாக நாம் உள்ளிழுத்த மூச்சுக் காற்று எவ்வாறு நிலைமையை சீர் செய்கிறது? என்ற ஐயம் வருவது இயல்பே! செலவாகும் சக்தியை சரிகட்டவும், சேர்ந்துவிட்ட கழிவுப் பொருட்களை வெளியேற்றவும் நாம் காற்றை அதிகமாக உள்ளே இழுக்கிறோம் எந்த உறுப்பும் அதைச் சேர்ந்த தசைப் பகுதிகளும் அதிகமாக இயங்கு கின்றனவோ, அங்கு இரத்த ஓட்டம் அதிகமாகத் தேவைப்படுகிறது!