108
இலங்கைக் காட்சிகள்
கைநலம் தோன்றச் செதுக்கிய ஓர் உருவத்தைக் கண்டோம். "இதுதான் இந்த நகரத்திலிருந்து ஆண்ட பராக்கிரம பாகுவின் திருவுருவம்” என்றார் உடன் வந்த அதிகாரி. இந்த உருவம் ஒன்றரை ஆள் உயரத்தில் நின்ற திருக்கோலமாக இருக்கிறது. இரண்டு கைகளாலும் ஏதோ ஒன்றை ஏந்திக்கொண்டிருக்கும் நிலை அதில் தோற்றுகிறது. எதிரே உள்ள புத்தர் கோயிலில் இருக்கும் புத்த பகவான் முன் பராக்கிரமபாகு நின்று, "இனி நான் வாளைக் கையால் தொடமாட்டேன். போர் செய்தது போதும்" என்று சொல்லி வாளை அதை வைக்கும் பெட்டியுடன் சமர்ப்பிப்பதைக் காட்டுவது இது என்று சிலர் சொன்னார்கள். அந்தத் திருவுருவத்தின் முன்னே நின்று கூர்ந்து கவனித்தேன். சடைமுடியும் தாடியும் தாழ் காதும் உடைய இவ்வுருவம் எவரேனும் முனிவருடைய திருவுருவமாக இருக்க வேண்டும்” என்று எனக்குத் தோன்றியது. "கையிலே வைத்திருப்பது ஏட்டுச் சுவடி என்று சிலர் சொல்கிறார்கள்” என்று சிற்பப் பாதுகாப்பு அதிகாரி சொன்னர்.
"பொலன்னறுவா என்பது புலஸ்திய நகரம் என்பதன் சிதைவு. அந்த உருவம் புலஸ்தியருடையது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது" என்று ஓர் அறிஞர் சொன்னார். 'இவ் வடிவத்தில் யாவாவிற் காணப்பட்ட அகத்திய முனிவரது வடிவத்தில் உள்ள சிற்ப இயல்புகள் அமைந்திருக்கின்றன' என்று கலைஞர் திரு க. நவரத்தினம் எழுதியிருக்கிறார்.
பராக்கிரம பாகுவின் அரண்மனையைப் பார்த்தோம். இடிந்த அரண்மனைதான். இங்கே ஏழு