பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 53 முச்சிழுத்து, கீழ் இறக்கும்போது மூச்சினை வெளியேற்ற வேண்டும்). - 2. முதற் பயிற்சி போலவே நின்று, இரண்டு கைகளையும் சேர்ந்தாற்போல், ஏற்றி இறக்குதல் (10தடவை மூச்சிழுத்தல் முன்பு போலவே). 3. கால்கள் இரண்டையும் அகல வைத்து, உள்ளங்கை ஒன்றையொன்று பார்ப்பது போல, இரண்டு கைகளையும் மார்புக்கு முன் விறைப்பாக நீட்டி, அங்கிருந்து பக்கவாட்டிற்குக் கொண்டு செல்லுதல் (10தடவை) (கைகளை விரிக்கும்போது மூச்சிழுத்து, சேர்த்தபின் மூச்சு விடுதல்). 4. இரு கால்களையும் சேர்த்து நின்று, உள்ளங்கை தொடையின் பக்கவாட்டில் இருக்குமாறு கைகளைத் தொங்கவிட்டு, அங்கிருந்து கைகளைத் தலைக்கு மேற் புறம் தூக்கி உயர்த்தி இறக்குதல். ( 10 தடவை). (மேல் நோக்கிக் கைகள் போகும்போது மூச்சிழுத்து, கீழிறக்கும்போது மூச்சு விடுதல்) - 5. கால்களை அகலமாக பரப்பி நின்று. இடுப்பில் கை வைத்து, இடது புறம் வளையவும், பிறகு நிமிர்ந்து வலது புறம் வளையவும், பிறகு நிமிரவும் ( 10 தடவை). (இடுப்பை வளைக்கும்போது மூச்சிழுத்து, நிமிரும்போது மூச்சு விடவும்). 6. கால்களை அகல வைத்து நின்று, உள்ளங்கைகள் மேற்புறமாக இருக்க, மார்புக்கு முன்புறம்