புலவர் என்.வி. கலைமணி
அய்யன் திருவள்ளுவர்
எழுத்தின் வடிவத்தையும் - எழுத்தின் ஒலி வடிவத்தையும் தமிழ்ச் சான்றோர் உருவாக்கியபோது, எண்ணற்ற மேதைகள் அதற்காக உழைத்தார்கள்.
ஞாலம், ஞானத் திரட்சிக்காகக் கையேந்தி நிற்கும் காலத்தில், கோலத் தமிழ் எழுத்து ஓவியக் கூட்டங்களை அவர்கள் உருவாக் கினார்கள்.
ஓங்காரத் தமிழ் மொழியின் பயனை ஓர்ந்து, ஆங்கார ஞாயிற்றின் எரி நெருப்பை அலட்சியப் படுத்தி, பாங்கான தங் களின் பண்புக்கு வாழ்த்துக் கூறியவர்கள்-அந்தத் தமிழ் அறிஞர் கள்.
தீங்கு உளம் நடுங்கும் தீந்தமிழ் மனமுடைய அவர்கள், பரம்பரை பரம்பரையாகத் தமிழ் இலக்கிய, இலக்கணங்களை - ஒவியமாய், காவியமாய், ஜீவியமாய் இயற்றி மறைந்தார்கள்.
அழுதுகொண்டே பிறக்கின்ற மனிதப் பிஞ்சுகள் , சிரித்துக் கொண்டே சாகும்வரை, வாழ்க்கைக்குரிய மனித நெறித் தத்துவங்களை,'அகம், புறம் என்று தமிழிலே அவர்கள் வடித்துத் தந்தார்கள்.
காலம், அவர்களைக் களவாடிச் சென்றாலும், அந்தக் கன்னித் தமிழ்ச்சிந்தனையாளர்கள் தேடித்தந்த சிந்தனைச் செல்வங்கள் இன்றும் நம்மிடையே நடமாடுகின்றன.
குடல் விழுங்கும் உணவைப் போல - கபாடபுரத்துப் பைந் தமிழ்க் கருவூலங்களைக் கடல் விழுங்கிய போதும், கண்டும் கலங்காத அறிவேறுகளாக - அவர்கள் திகழ்ந்தார்கள்.
உலகமே சிந்திக்கத் திராணியற்று, காலச் சிதைவுக்கு ஆட்-
35