அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/இறைத்துதி
Appearance
←←அவையடக்கம் | இறைத்துதி | சீர் எடுத்துக் கொடுத்தல்→→ |
- எம்பிரானான இறையோன் அருள் புரிய
- தம்பிரான் சொல்லத் தமியேன் எழுதுகிறேன்
- எழுதுவேன் என்பதெல்லாம் ஈசன் அருள் செயலால்
- பழுது ஒன்றும் வாராமல் பரமேசுவரி காக்க
- ஈசன் மகனே இயல்பாய் வா இக்கதைக்கு
- தோசம் அகலச் சூழாமல் வல்வினைகள்
- காலக் கிரகம் கர்ம சஞ்சலம் ஆனதுவும்
- வாலைக் குருவே வாராமலே காரும்
- காரும் அடியேன் கௌவை வினைதீர
- வாரும் அடியேன் மனதில் குடிகொளவே
- தர்மயுகம் ஆக்கித் தாரணியை ஆளுதற்குக்
- கர்மக் கலியில் கடவுளார் வந்த கதை
- சாகாது இருக்கும் தர்ம அன்புள்ளோர் முன்
- வாகாகத் தர்ம அம்மானைதான் வகுத்தார்
- வகுத்த பரமனுக்கும் மாதா பிதாவதுக்கும்
- தொகுத்த குருவதுக்கும் தோத்திரம் தோத்திரமே