அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/இலட்சுமிக்கு நாராயணர் பதிலுரைத்தல்
Appearance
←←அகில வளமை | இலட்சுமிக்கு நாராயணர் பதிலுரைத்தல் | நீடிய யுகம்→→ |
- நன்றுநன்று என்று நாராயணர் உரைப்பார்
- சக்தி சிவமும் தாம் உதித்த காலமதில்
- எத்திசையும் நாமள் இருபேர் பிறப்பதிலும்
- ருத்திரரும் மயேசுரரும் உதித்த நாளதிலும்
- பக்தியுள்ள தேவர் பரநாதர் நாளதிலும்
- வானோர் தெய்வார் மறைவேத சத்திரமும்
- ஈனமாய்ச் சண்டன் இவன் பிறந்த நாளதிலும்
- ஆதித்தன் வாயு அண்டபிண்டம் தோன்றியபின்
- ஈது உதித்த காலம் இராச்சியம் ஒன்று உண்டு கண்டாய்
- அவ்வுகத்தைக் கண்டு ஆதிபிரமா மகிழ்ந்து
- இவ்வுகத்து நாமம் என்ன இடுவோம் என்று
- மாலும் பிரமவும் மாயாது இருப்போனும்
- ஆலோசித்து ஆகமத்தைத் தான்பார்த்து
- நீடியயுகம் எனவே நியமித்து உறுதி கொண்டு
- தேடிய முப்பொருளும் செப்பினார்காண் அம்மானை