அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/கந்தன் அவதாரம்

விக்கிமூலம் இலிருந்து
கந்தன் அவதாரம்
ஆறுமுகமாய் ஆயனளவிடவே
கூறிடவேசத்திதனைக் கொண்டார்வேலாயுதமாய்
நல்லசிவனாரை நந்தீசுரராக்கி
வல்லபிலமுள்ள வாய்த்திக்கெட்டிலுள்ள
பாலரைவீரர்களாய்ப் பண்ணினாரெம்பெருமாள்
வாலமுள்ளசன்னாசி மாரைப்பெருப்படையாய்
கந்தனெனநாமங் கனத்தசடையாண்டியுமாய்
கொந்துகொந்தாய் பீற்றைக்கூறைமிகவணிந்து
வேலுமிகப்பிடித்து வெண்ணீறுமேதரித்து
நாலுரண்டுசிரசில் நல்லருத்திராச்சமிட்டு
பத்துரண்டுகாதில் பைம்பொன்னாச்செம்பணிந்து
முத்திரிகளிட்டுக்கந்தப் பொக்கணங்கள்தோழிலிட்டு
சன்னாசிபோலே தானடந்தெம்பெருமாள்
நன்னாதானாவெனவே நாலஞ்சிகவிதான்படி
வந்துஒருமலைபோல் வாய்த்தகூடாரமிட்டு