உள்ளடக்கத்துக்குச் செல்

அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/காப்பு

விக்கிமூலம் இலிருந்து
ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில் பாண்டவர்தமக்காய் தோன்றி
பகைதனைமுடித்துமாயோன் வீன்றியகலியன்வந்த
விசனத்தால் கயிலையேகிச் சான்றவர் தமக்கயிந்த
தரணியில் வந்தஞாயம் ஆண்டவர் அருளிச் செய்ய
அம்மானை யெழுதலுற்றேன் சிவமேசிவமேசிவமணியே
தெய்வமுதலே சிதம்பரமே தவமே தவமே தவக்கொழுந்தே
தாண்டவசங்கராத்தமியே யெங்களுடபவமேபவமே
பலநாளுஞ்செய்த பவமறுத்துன்னகமேவைத்
தெங்களையாட்கொள்வாய் சிவசிவசிவசிவ
அரகரா அரகரா அலையிலேதுயிலாதிவராகவா
ஆயிரத்தெட்டாண்டினிலோர்பிள்ளை சிலையிலே பொன்மகர
வயிற்றினுள்செல்லப்பெற்று திருச்சம்பதி தனில்
முலையிலேபொன்மகரப்பாலை உமிழ்ந்துபின் னுற்றதெட்சணம்
மேதிலிருந்துதான் உலகில்சோதனைபார்த்தவர்
வையிந்தரின் உவமைசொல்ல உகதர்மமாகுமே
திருமொழிசீதையாள்க்கு சிவதலம்
புகழவெங்குமொருபிள்ளை உருவாய்த்தோன்றி
யிகபரசோதனைகள்பார்த்து திருமுடிசூடி தர்மச்சீமையில்
செங்கோலேந்தி ஒருமொழியதர்க்குள்ளாண்ட
உவமையையுரைக்கலுற்றார்.