அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/கிரேதாயுகம்

விக்கிமூலம் இலிருந்து
இன்னமொருயுகத்தை இப்போபடைக்கவென்று
மன்னனதியதிருமால் மனமேமிகமகிழ்ந்து
சொன்னவுடனீசுரரும் தொன்னூல் மறைதேர்ந்து
முன்னேகுறோணி முடிந்ததுண்டமாறதிலே
ஓரிரண்டுதுண்டமுகமாய்ப் பிறந்தழிந்து
ஈரிரண்டுதுண்டமிருக்குதுகாண் மாயவரே
நேர்முறையைப்பார்க்கில் நெடியயுகங்கழிந்தால்
மேலுகந்தானிங்கே மிகுந்தகிறேதாயுகந்தான்
இருக்குதுகாணென்று ஈசருரைத்திடவே
மருக்கிதழும்வாயார் மனமகிழ்ந்துகொண்டாடி
துண்டமொன்றைரண்டாய் தூயவனார்தான்வகிர்ந்து
மண்டலங்கள்மெய்க்க வாணாள்கொடுத்தருளி
சிங்கமுகசூரனென்னுந் திரள்சூரப்பர்பனென்றும்
வங்கணமாய்ப்பிண்டம் வகுத்தனர்காணம்மானை
சூரனுடசிரசு தொளயிரத்துநூறதுவும்
போரர்க்கால்கைகள் பொருப்பெடுக்கும் மாபிலமும்
சூரன்சுறோணிதத்தைச் சுக்கிலங்கள் தானாக்கி
ஊரேநீபோவென்றுற்ற விடைகொடுத்தார்
விடைவேண்டிச்சூரன் வேண்டும்படையோடே
திடமாகப்பூமி செலுத்தியரசாண்டிருந்தான்
வரம்வேண்டாவென்று மலரோனடிவணங்கி
திரமானவோம்மிட்டிச் செப்புக்குடம்நிறுத்தி
நின்றதவத்தில் நெடியோனைக்காணாமல்
அன்றந்தச்சூரன் அக்கினியில்விழுந்தான்
சூரபர்ப்பன்விழவே சிங்கமுகவாகனனும்
பாரமுள்ள தன்சிரசைப் பறித்தெறிந்தானக்கினியில்
ஆனதாலீசுரரும் அம்மையுமயாளிரங்கி
இனமாஞ்சூரனுக்கேதுவரம் வேணுமென்றார்
ஈசனுரைக்கயேற்றஅந்த சூரனுந்தான்
பாசமுடன் செத்தப் பார்ப்பனென்றசூரனையும்
எழுப்பித்தரவேணும் யாங்கள்மிகக்கேட்டவரம்
மழுப்பில்லாவண்ணம் மரமருள்வீரென்றுரைத்தான்
சூரனிவன்கேட்கச் சீவனாரகமகிழ்ந்து
பாரமுள்ளவோம பார்ப்பமதைத்தான்பிடித்து
சிவஞானவேதஞ் சிந்திப்பாரப்பொழுது
பவமானசூரர் பர்ப்பன்பிறந்தனனாம்
இறந்துபிறந்தனர்க்கிழயான் அவன்றனக்கும்
சிறந்தபுகழீசர் செப்புவாரப்பொழுது
சூரனேயுங்களுக்குத் தோற்றமுள்ளபோர்வரங்கள்
வீரரேகேளுமென்று வேதனிவையுரைக்க
அன்னாளில்சூரன் அகமகிழ்ந்துகொண்டாடி
உன்னாலும் ஐந்துமுக முள்ளவர்கள் தன்னாலும்
உலகத்தில்பண்ணிவைத்த உத்தவாயுதத்தாலும்
இலகுமன்னராலும் இந்திரனார்தன்னாலும்
கொல்லத்துலையாத கொடியவரமதுவும்
வல்லவனேநீயும் வாழுங்கைலையதும்
தேவர்தேவாந்திரனும் திருக்கன்னிமாரையும்
ஏவலாயுன்னுடைய லோகமதிலுள்ளவர்கள்
முழுதுமெனக்கு ஊழியங்கள்செய்திடவும்
பழுதில்லாதிந்தவரம் பரமனேநீர்தாருமென்றான்
தாருமென்றுசூரன் தன்மையுடன்கேட்க
ஆருமொப்பில்லா ஆதியகமகிழ்ந்து
கேட்டவரமுழுதுங் கெட்டியாயுங்களுக்கு
தாட்டியமாயிப்போ தந்தோமெனவுரைத்தார்
வரங்கொடுத்தீசர் மலைகைலைக்கேகாமல்
பரமவுமையாளைப் பையயெடுத்தணைத்து
அலைமேலேயாயன் அருகிலேபோயிருந்து
மலைமேலேசூரன் வாய்த்ததென்றவ்வரங்கள்
கயிலைமுழுதுங் காவலிட்டுத்தேவரையும்
அகிலமுழுதுங் அடக்கியரசாண்டனனே
அப்படியேசூரன் அரசாண்டிருக்கையிலே
முப்படியேவிட்டகுறை முடிவாகும் நாளையிலே
தேவரையும் வானவரைத் தெய்வேந்திரன்வரையும்
மூவரையும்பாவி முட்டுப்படுத்தினனே
ஆனதால்தேவர் அரிக்கே முறையமிட
ஈனமில்லாதாயன் எடுத்தார்ஒருவேசம்
ஈசனிடஞ்சென்று இயம்பினாரெம்பெருமாள்
வாசமுள்ளயீசுரரே மாபாவிசூரருக்கு
ஏதுவரங்களீந்தீர்காணென் றுரைக்க
தாதுகரமணிந்த தாமன்பின்னேதுசொல்வார்
வையகத்திலுள்ள வலுவாயுதத்தாலும்
தெய்வலோகத்தில் சிறந்தமன்னர்தன்னாலும்
அஞ்சுமுகத்தாலும் அழியாதவனுயிரும்
தஞ்சலிடவானோர் தையல்தெய்வக்கன்னிமுதல்
அகிலமுழுதும் அடக்கிவரங்கொடுத்தோம்
கயிலைமுழுதும் கமண்டலங்களேழுமுதல்
என்றுவேதாவும் இவையுரைக்கமாலோனும்
நின்றுதியங்கி நெஞ்சமது புண்ணாகி
பேயனுக்கென்னுடைய பிறப்பைக்கொடுத்தல்லவோ
தேயமதில்யானும் திரிந்தலையக்காரணந்தான்
என்றுதிருமாலிது சதயஞ்சொல்லியவர்
இன்றந்தசூரர் இருவர்தன்னைக்கொல்லவே