அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/குண்டோமசாலி பாடு
Appearance
←←சதுர யுகம் | குண்டோமசாலி பாடு | நெடிய யுகம்→→ |
- சிவனைத்தொழுது சொல்லுவாரம்மானை
- தவமேதவப்பொருளே தாண்டவசங்காரவனே
- எவனோவொருத்தனிட்ட சத்தமானதிலே
- தவலோகமெல்லாந் தானலைவதேதெனவே
- மாயனதுகேட்க வகுப்பாரங்கீசுரரும்
- ஆயனேநீயுமறியலையோ ஞாயமது
- குண்டோமசாலி கொடியமாபவியனாய்
- பண்டோர்குறோணி பாதகன்றன்றுண்டமதாய்
- பிறந்தானவனும் பேருதிரத்தன்கிழையாய்
- இறந்தாரவர்களிரையாய் அவன்றனக்கு
- ஆனபசிகள் ஆற்றாமலேயவனும்
- வானமதுஅலைய வாய்விட்டான்கண்டாயோ
- என்றுசிவனாரீ துரைக்க மாயவரும்
- அன்றுமகாமால்லக் குண்டோமசாலினுக்கு
- இறையாகத்தேவர்களை யேற்றநாங்கிலாக்கி
- வரையானதைத்தூண்டி மறையைக்கயிறாக்கி
- வாயுவைத்தோணி வருணன்றனை நிரப்பாய்
- தேயமதைச்சூளத் திரைகடலைத்தான்வருத்தி
- ஓடையாச்சதிர யுகம்வழியேதானேவி
- தேடரிமாயன் திருவோணிதானேறி
- மூவாதிமூவ ரோணிதனைத்தாள்ளிவர
- காவாலிமாயன் கன்னியிலேதூண்டலிட்டு
- சதிர்யுகம்மளுஞ் சண்டித்தடிமூடன்
- எதிரேவருமாற்றில் இரையைமிகக்கண்டாவி
- நாடிப்பசிதீர நல்லயிரையாகுமென்று
- ஓடிவந்துபாவி யுழுங்கினான் றூண்டல்தனை
- தூண்டலுழுங்கிச் சுரண்டிமிகக்கொழுகி
- மாண்டனன்காண்பாவி வலியமலைபோலே
- பாவிமடிய பரமேசுரனாரும்
- தாவிச்சலத்தால் சதிரயுகமழித்தார்
- சதிரயுகமழியத் தானவர்களெல்லோரும்
- மதுரமொழியீசன் மலரடியைத்தான்பூண்டு
- தேவர்முறையோர் தெய்வேந்திரன்முதலாய்
- மூவர்களும் வந்து முதலோனடிபணிந்து
- பரமனேநீரும் படைத்தயுகம்ரண்டதிலே
- வரமேதுங்கேட்டு வாழ்ந்தவரைக்கண்டிலமே
- அந்தசந்தமில்லா தாணுவங்கள்தானுமில்லா
- இந்தவகைச்சாதி இல்லாமலீசுரரே
- பிறந்தாலவனும் பெரியோனடிவணங்கி
- வரந்தாருமென்று வாளாயுதத்தோடே
- வலுவும்பெலமும் வாய்த்தசூரப்படையும்
- கொலுவும்பெரிய குவிந்தமதில்கோட்டைகளும்
- கெட்டுக்கிளை பாணிக்கிரணமதுவுடனே
- நாட்டுப்பயிரால் நாளும்பசிதீர்ந்து
- இருந்துபொறுக்க இராச்சியமொன்றுண்டாகும்
- வருந்திமகாதேவர் மலரோனடிவணங்கி
- ஆதிசிவனுமதிக சந்தோசமதாய்
- வேதியரைத்தான்வருத்தி விளம்புவாரீசுரரும்