அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/நூல் பயன்
Appearance
←←சீர் எடுத்துக் கொடுத்தல் | நூல் பயன் | தெச்சணத்தின் பெருமை→→ |
- வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்குப்
- பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா
- பழித்தோர் நகைத்தோர் பதில் எதிரியாய்ப் பறைந்தோர்
- கழித்தோர் வறுமைகண்டு கடுநகரம் புக்கிடுவார்
- மலடியும் இக்கதையை மாவிருப்பத்தோடு இளகித்
- தலம் அளந்தோனை நாடிதான் கேட்பாளாமாகில்
- என் ஆணை பார்வதியாள் ஏகாபரத்தின் தன் ஆணை
- உன் ஆணை மதலை உடனே கிடைக்குமடா
- குட்டமது கொண்டோர் குணம் வைத்துக் கேட்பாராகில்
- திட்டமது சொன்னோம் தீரும் திருவாணை