அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/மனு நீதம்
Appearance
←←தெய்வ நீதம் | மனு நீதம் | சாதி வளமை→→ |
- தெய்வ நிலைமை செப்பிய பின் தேசமதில்
- நெய்நீதப் பெண்கள் நிலைமை கேள் அம்மானை
- கணவன் மொழிய கலவுமொழி பேசாத
- துணைவி நிலைமை சொல்லுவேன் அம்மானை
- கற்கதவு போலக் கற்பு மனக்கதவு
- தொற்கதவு ஞானத் திறவுகோல் அம்மானை
- அன்பாகப் பெற்ற அன்னை பிதாவதுக்கும்
- முன்பான சோதி முறைபோல் உறவாடிப்
- போற்றியே நித்தம் பூசித்து அவள்மனதில்
- சாற்றிய சொல்லைத் தவறாமலே மொழிவாள்
- அரசன் துயில ஆராட்டி ஓராட்டிக்
- கரமானது தடவிக் கால் தடவி நின்றிடுவாள்
- துயின்றது அறிந்து துஞ்சுவாள் மங்கையரும்
- மயன்ற ஒரு சாமம் மங்கை எழுந்திருந்து
- முகத்தில் நீரிட்டு நான்முகத் தோனையும் தொழுது
- அகத்துத் தெருமுற்றம் அலங்காரமாய்ப் பெருக்கி
- பகுத்துவமாக பாரிப்பார் பெண்ணார்
- தவத்துக்கு அரிய தையல் நல்லார் த்ங்களுட
- மனுநீதம் சொல்லி வகுக்க முடியாது
- கனியான பெண்கள் கற்புநிலை மாறாமல்
- இனிதாக நாளும் இருக்கும் அந்த நாளையிலே
- வனிதான சாதி வளமைகேள் அம்மானை