உள்ளடக்கத்துக்குச் செல்

அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/வைகுண்டர் சீர் எடுத்துக் கொடுத்தல்

விக்கிமூலம் இலிருந்து
வைகுண்டர் சீர் எடுத்துக் கொடுத்தல்
தோத்திரம் என்று சுவாமிதமைத் தொழுது
இராத்திரி தூக்கம் நான் வைத்திருக்கையிலே
ஆண்டான ஆண்டு ஆயிரத்துப் பதினாறில்
கண்டானைக் கண்டேன் கார்த்திகை மாதமதில்
தெய்தி இருபத்தேழில் சிறந்த வெள்ளி நாளையிலே
சுருதியுடன் நித்திரையில் சுபக் கியான இலக்கமதில்
நாதன் என் அருகில் நலமாக வந்திருந்து
சீதமுடன் எழுப்பிச் செப்பினாரே காரணத்தை
காப்பில் ஒரு சீர் கனிவாய் மிகத்திறந்து
தாற்பரியமாகச் சாற்றினார் எம்பெருமாள்
மகனே இவ்வாய் மொழியை வகுக்கும் காண்டமதுக்கு
உகமோர் அறிய ஊணு நீ முதல் காப்பாய்
சரிசமனாய் நான் வகுப்பேன் தான் எழுது காண்டமதை
நான் உரைக்க நீ எழுதி நாடு பதினாலறிய
யான் உரைக்க நீ எழுதி அன்போர்கள் தங்கள் முன்னே