உள்ளடக்கத்துக்குச் செல்

அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் மூன்று/சான்றோர் பிறப்பு

விக்கிமூலம் இலிருந்து

Page 120/716 Page 119/716

சத்தியுள்ள வித்தொன்று தானெடுத்தாரம்மானை இப்படியே மேலோக யேழுயுகமதிலும் அப்படியேயுள்ள ஆர்க்கமுள்ள வித்தேழு எடுத்துத்திருமால் யிருதயத்திலேயடக்கி கொடுத்து நின்றநாதாவ பிரமாவுபதேசம் பிறப்பு வுருவேத்தி குரமாய் வருணன் குளிரத் தொழிந்திடவே காமத்தணலாய்க் கருமேனியானதிலே வேமக்கனல் போல் விழி கொழுந்திட்டெறிய சாந்தணியுங்கன்னி தையல் தெய்வமாமணிகள்

கூந்தல்விரித்துக் கூபந்தனிலிறங்கி அறிவோமெனவே ஆடிக்கரையேறி தரிவோமெனவே சலக்கரையை விட்டவர்கள் உயரவரவே உள்ளுதரத் துள்ளல் கொண்டு அயரக்கால்கைகள் அங்கமெல்லாந்தொங்கலிட கிடுகிடென தேகங்கிழிமொளிவாய்க் கொட்டிடவே திடுதிடெனவக்கினியைத் திரைபோல் வழையலுற்றார்


கன்னியேழு பேருங் கனலைமிகவாவ உன்னித்திருமால் ஓங்கார மோகமதால் மங்கையேழு பேர்க்கும் வயற்றிலுற்றதம்மானை சங்குவண்ணமாலோன் சச்சுருவங் கொண்டனரே உடனே ஸ்திரிகள் வுள்தரித்த பிள்ளைகளை தடமேலே பெற்று சஞ்சலித்து மாமடவார் வெருவிப் பயந்து விழிமடவாறெல்லோரும்

கருவித் தொண்ணுத்தாருங் கலங்கியே தானோடி துயிலை யெடுத்துடுத்து சுருட்டினார் கெங்கைதனை கையில் சலந்தான் கட்டித்திரளாமல் கலங்கி அழுது கண்ணீர்மிகச்சொறிந்து மலங்கி அழுது மண்ணில் அவர்புரண்டு அய்யோ பொருளே அறியாமல் விட்டோமே மெய்யோடேகுத்தி விழுந்தளுதாரம்மானை


விருத்தம் கனலைத்துணையாமென்றாவிக் கர்ப்பையிழந்தோம் கன்னியரே புனலைத்திரட்டப் பிலனின்றி புத்தியழிந்தோம் பூவையரே அனலைத்தரித்த வரன்முன்னே அங்கேசென்றால் பங்கம்வரும் இனத்தைப் பிரிந்தமானதுபோல் யிருப்போம் வனத்திலென்றனரே நடை கன்னியர்கள் மேனி கனிந்து மினுமினுத்து மின்னித்தனங்கள் மிகுபால் சுரந்திடவே

Page 121/716

கர்ப்புக் குளறிக் கைலையுக மானதர்க்கு அர்ப்புதவேள்கங்கை அவர்நினைப்பில்லாமல் எல்லோருமிக்க யீசுரரை தானினைந்து வல்லோனேயென்று வரம்பெறவே நின்றனராம் நின்றார் தவத்தின் நிலைமை கேளம்மானை இன்றெங்கள் கர்ப்பை யீடளித்த மாமுனிவர்

வந்தெங்கள் தன்னை மாலையிட வேணுமென்று பந்து தனமின்னார் பாவையேழுபேரும் யீசுரரே தஞ்சமென்று யிருந்தார் தவசதிலே மாசுவொன்றில்லா மாதர்யேழு பேரும் மிக்கத்தவசு மிகப்புரிந்தாரம்மானை கர்ப்பளித்தெங்களுடன் கன்னித்திரளாமல் வைத்தோன்

பொர்ப்பாத முண்டெனவே பூவைத்தவசிருந்தார் பாலிழகிநல்லமுர்தம் பாலாறாய் வோடிடவே காலிழகாவண்ணங் கடுந்தவசு செய்தனரே பிள்ளையேழு பேரும் பெற்றுப்பெருகிடவும் கள்ளஞ்செய்த மாமுனிவர் கைப்பிடிக்க யெங்களையும் மக்களையும் யெங்களையும் மாமுனிவர் வந்தெடுத்து ஒக்கவொருமித்து வுலகாள வைத்திடவும்