அஞ்சில் அஞ்சியார்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அஞ்சில் அஞ்சியார்[தொகு]

நற்றிணை- 90. மருதத்திணை[தொகு]

(தோழி தலைமகளுக் குரைப்பாளாய்ப் பாணனை நெருங்கி வாயின்மறுத்தது)
ஆடியல் விழவி னழுங்கன் மூதூர்
உடையோர் பான்மையிற் பெருங்கை தூவா
வறனில் புலைத்தி யெல்லித் தோய்த்த
புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர வோடிப் (5)
பெருங்கயிறு நாலு மிரும்பனம் பிணையற்
பூங்க ணாய மூக்க வூங்காள்
அழுதனள் பெயரு மஞ்சி லோதி
நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள்
ஊச லுறுதொழிற் பூசற் கூட்டா (10)
நயனின் மாக்களொடு கெழீஇப்
பயனின் ற்ம்மவிவ் வேந்துடை யவையே.


பார்க்க[தொகு]

சங்க இலக்கியம்ஆசிரியர் அகரவரிசை அடிப்படையில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அஞ்சில்_அஞ்சியார்&oldid=1083840" இருந்து மீள்விக்கப்பட்டது