அண்டர்மகன் குறுவழுதியார்

விக்கிமூலம் இலிருந்து

அண்டர்மகன் குறுவழுதியார்[தொகு]

பாடிய பாடல் தொகை
4 (நான்கு)


அகநானூறு: 150 நெய்தல் திணை[தொகு]

(பகற்குறி வந்து கண்ணுற்று நீங்குந் தலைமகனைத் தோழி தலைமகளை இடத்துய்ந்து வந்து, செறிப்பறிவுறீஇ வரைவுகடாயது)

பின்னுவிட நெறித்த கூந்தலும் பொன்னென
வாகத் தரும்பிய சுணங்கும் வம்புவிடக்
கண்ணுறுத் தெழுதரு முலையு நோக்கி
யெல்லினை பெரிதெனப் பன்மாண் கூறிப்
பெருந்தோ ளடைய முயங்கி நீடுநினைந் ( )
தருங்கடிப் படுத்தினள் யாயே கடுஞ்செலல்
வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறைக்
கனைத்த நெய்தற் கண்போல் மாமலர்
நனைத்த செருந்திப் போதுவா யவிழ
மாலை மணியிதழ் கூம்பக் காலைக்
கண்ணாறு காவிநொடு தண்ணென மலருங்
கழியுங் கானலுங் காண்டொறும் பலபுலந்து
வாரார் கொல்லெனப் பருவருந்
தாரார் மார்பநீ தணந்த ஞான்றே. [1/4]


அகநானூறு: 228. குறிஞ்சித்திணை[தொகு]

(தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. இப்பாட்டு, பகலே சிறைப்புறம்.)


பிரசப் பல்கிளை யார்ப்பக் கல்லென ( )
வரையிழி யருவி யாரந் தீண்டித்
தண்ணென நனைக்கு நளிர்மலைச் சிலம்பிற்
கண்ணென மலர்ந்த மாயிதழ்க் குவளைக்
கன்முகை நெடுஞ்சினை நம்மொ டாடிப்
பகலே யினிதுடன் கழிப்பி யிரவே ( )
செல்வ ராயினு நன்றுமற் றில்ல
வான்கண் விரிந்த பகன்மரு ணிலவிற்
சூரல் மிளைஇய சார லாராற்
றோங்கன் மிசைய வேங்கை யொள்வீப்
புலிப்பொறி கடுப்பத் தோன்றலிற் கயவா
யிரும்பிடி யிரியுஞ் சோலைப்
பெருங்கல் யாணர்த்தஞ் சிறுகுடி யானே. [2/4]


குறுந்தொகை: 345. நெய்தல் திணை[தொகு]

(பகல் வந்து ஒழுகுவானைத் தோழி இரா வா என்றது)


இழையணிந் தியல்வருங் கொடிஞ்சி நெடுந்தேர்
வரைமரு ணெடுமணற் றவித்தனி ரசைஇ
தங்கினி ராயிற் றவறோ தகைய ( )
தழைதா ழல்கு லிவள்புலம் பகலத்
தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங்கழி
யிழுமென வொலிக்கு மாங்கட்
பெருநீர் வேலியெஞ் சிறுநல் லூரே. [3/4]


புறநானூறு: 346. திணை: காஞ்சி; துறை: மகட்பாற் காஞ்சி[தொகு]

பிற... ....ள பாலென மடுத்தலி ( )
னீன்ற தாயோ வேண்டா லல்லள்
கல்வியெ னென்னும் வல்லாண் சிறாஅ
னொல்வே னல்ல னதுவா யாகுத
லழிந்தோ ரழிய வொழிந்தோ ரொக்கற்
பேணுநர்ப் பெறாஅது விளியும்
புன்றலைப் பெரும்பாழ் செயுமில ணலனே. [4/4]


பார்க்க[தொகு]

அகர வரிசையில் சங்க இலக்கியம்


( )
( )
( )