உள்ளடக்கத்துக்குச் செல்

அண்டார்க்டிக் பெருங்கடல்/அண்டார்க்டிக்காவில் அமெரிக்கா

விக்கிமூலம் இலிருந்து

6. அண்டார்க்டிகாவில் அமெரிக்கா

உடன்படிக்கை

பன்னிரண்டு நாடுகள் 30 ஆண்டுக் காலத்திற்கு உடன்படிக்கை செய்துகொண்டு, அண்டார்க்டிக் கண்டத்தில் தளங்கள் அமைப்பதில் முனைந்துள்ளன. அதற்காகப் பெருமளவில் பணத்தையும் செலவிட்டுக் கொண்டிருக்கின்றன. உடன்படிக்கை காலம்வரை அதன் நிலப் பகுதிகள் தனக்குத்தான் சொந்தம் என்று உடன் படிக்கையில் கையெழுத்திட்ட எந்தநாடும் உரிமை கொண்டாடுவதற்கில்லை. உடன்படிக்கையின் கட்டாயங்களில் ஒன்று, எந்த நாடும் அண்டார்க்டிக் கண்டத்தில் போர்துறைப் பயிற்சிகளை, ஆராய்ச்சிகளைச் செய்யக்கூடாது. முழு அளவுக்கு விஞ்ஞான ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டும் என்பதாகும்.

அமெரிக்க நிலையங்கள்

அண்டார்க்டிக் க ண் ட த் தி ன் ப சி பி க் பகுதியில் நிலையான நிலையங்களை அமைக்க அமெரிக்கா முயன்று கொண்டிருக்கிறது. அவ்வாறு செய்வதற்குக் காரணங்களாவன:

உடன்படிக்கைப்படி யாரும் 30 ஆண்டுக் காலத்திற்கு அண்டார்க்டிக் கண்டத்தின் நிலப்பகுதிகளில் உரிமை கொண்டாடுவதற்கில்லை. கால எல்லை அதிகமிருப்பதால், நிலை யான நிலையங்களை அமைக்கலாம். அன்றியும், ஆஸ்திரேலியா உரிமை கொண்டாடும் பெருநிலப் பகுதியில் உரு சி யா ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றது. நில இயல்நூல் ஆண்டுத் திட்டத்திலிருந்துதான் அண்டார்க்டிக்கில் உருசியா ஆர்வம் காட்டிவருகிறது.

அண்டார்க்டிக்கில் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளுக்கு அமெரிக்கக் கடற்படை பலவகை யிலும் உதவி செய்து வருகிறது. நேர்முகமாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக அத்துறைக்கு வேண்டிய செய்திகளை ஆராய்ச்சியின் வாயிலாகப் பெறலாம்.

தொடக்க நிலை ஆராய்ச்சியிலிருந்து தெரிய வருவதாவது: அண்டார்க்டிக் வானில் கொடிய கதிர்வீச்சின் மட்ட உயரம் குறைவு. ஆகவே, இங்கிருந்து ம னி த வான் வெளிக் கப்பல்களை ஏவலாம்.

நில இயல்நூல் திட்டத்தின் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு, அண்டார்க்டிக்கில் அமெரிக்கா ஏழு தளங்களை நிறுவிற்று. அவை அண்டார்க்டிக்கின் ஏழு. ந க ர ங் க ள் ' எனப் படுபவை.

மக்மர்டு நிலையம்

அவற்றில் மிகப் பெரியது மக்மர்டு என்னும் நகரமாகும். இது ராஸ்தீவின் கரையில் கட்டப் பட்டுள்ளது. அது ஒரு போக்குவரவுத் தளமாகப் பயன்படுகிறது. கோடையில் இதில் 1,000 பேர் இருப்பார்கள் ; மாரிக்காலத்தில் 150 பேர்தான் இருப்பார்கள். கோடையில் (செப்டம்பர்-மார்ச்) பனிக்கட்டியைத் தகர்த்துக் கொண்டு இத்தளத் திற்கு வர இயலும். இங்கு மிதக்கும் பனிக்கட்டி யில் விமானத்தளமும் உள்ளது. பளுவான விமா னங்கள் இங்கு இறங்கலாம்.

மக்மர்டு வசதிகள் நிறைந்த நகரமே. கிறித்துவக்கோயில், அஞ்சல் அலுவலகம், தீயணைக்கும் நிலையம், திரைப்பட அரங்கு, மருத்துவமனை முதலிய வசதிகள் நிரம்பப் பெற்றது.

இங்கு அணு நிலையம் ஒன்று அமைக்கப்பட் டுள்ளது. தளத்தின் ஆற்றல் தேவைகளை நிறைவு செய்ய அணு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அண்டார்க்டிக்கில் அமைந்த மு த ல் நிலையம் இதுவே.

நூறுபேர் நிலையாக வாழ்வதற்குரிய இடங் கள் அமைக்கப்படும். பொதுவாகக் கோடையில் தான் இவ்வகை வேலைகள் தொடங்கப்பெறும். தற்பொழுதுள்ள நிலையங்கள் குடிசைகளே.

பயர்டு நிலையம்

மற்றோரு நிலையம் புதிய பயர்டு நிலையம். இது அண்டார்க்டிக்கின் மேட்டுச் சமவெளியில் உயரத் தில் அமைக்கப்படுகிறது. கட்டுமானத் திட்டத் தில் மிகப் பெரியது இது. அகழிகள் தோண்டி முன்னரே உருவாக்கப்பட்ட கட்டடங்கள் அதில் பொருத்தப்படும். தற்பொழுதுள்ள நிலையம் பணி அழுத்தத்தினால் அ ழிந்து கொண்டிருக்கிறது. நிலையம் அரைமைல் நீளத்திற்கு அமையும். உள் பொருத்தப்பட்ட கட்டடங்களில் விஞ்ஞான ஆராய்ச்சி செய்யலாம்.

தென்முனை நிலையம்

மற்றொரு புதிய நிலையம் தென்முனை நிலைய மாகும். தற்பொழுதுள்ள நிலையம் பழைய பயர்டு நிலையம் போலவே பனியால் சிதைந்து கொண்டு வருகிறது. கால்கள் அல்லது அகழிகள் அல்லது குகைகளில் நிலையம் அமைக்கப்படலாம். பெரும் பாலும் குகை முறையே மேற்கொன்ளப்படும். இந்நிலையம் கட்டிமுடிய இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகலாம். இவ்விரு புதிய நிலையங் களிலும் அணுநிலையங்கள் அமைக்கப்படும்.

மக்மர்டு, புதிய பயர்டு, தென்முனை ஆகிய மூன்றும் அண்டார்க்டிகாவிலுள்ள மிகப், பெரிய நிலையங்களாகும். இவை மூன்றும் முக்கோண வடிவத்தில் அமைந்துள்ளன ; 3:லட்சம் சதுர மைல்களை அடைத்துக்கொண்டிருக்கின்றன.