உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணலாரும் அறிவியலும்/6

விக்கிமூலம் இலிருந்து

வேதியியல் துறைக்கு வித்தூன்றியவர்கள்

இன்று அறிவியலின் பெருங்கூறாக அமைந்துள்ள இரசாயனம் எனும் வேதியியல் வெகுவாக வளர்ந்துள்ளது.பல்வேறு உட்பிரிவுகளாகக் கிளைத்துச் செழுமையாகடி வளர்ந்து இன்றைய அறிவியல் வளர்ச்சியின் உயிர் மூச்சாகிக் கொண்டு வருகிறது. இத்தகைய வேதியியலுக்கு வலுவான அடிப்படை அமைந்த பெருமை அன்றைய முஸ்லிம் வேதியியல் விற்பன்னர்களையே சாரும். இத்துறையின் ஆரம்பகால வளச்சிக்கு கால்கோளிட்ட பெருமை நூ பிர் இப்னு ஹையான் எனும் வேதியியல் வல்லுநரையே சேர்ந்தது என்பதை வரலாறு காட்டுகிறது.

பாஷாணமும் மருந்தாகிய விந்தை

எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவரை மேனாட்டார் ‘கெபர்’ என்ற பெயரால் அழைக்கின்றனர். இவர் பாஷாணத்தை ஆற்றல்மிகு மருந்தாக மருத்துவத் துறையில் எப்படிப் பயன்படுத்தி, நோய் அகற்ற முடியும் என்பதை எண் பித்தவர். இவர் காலத்திலும் அதற்குப் பிறகும் பாஷாணமும் ஒருவகை மருந்தாகக் கையாளப்பட்டது.இன்று பாம்பு விஷப் பொருட்களும் பாஷாணங்களும் உயிர் காக்கும் மருந்துப் பொருட்களாகப் பயன்பட்டு வருவதைக் காணலாம்.

முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை போன்ற விசேஷ நாட்களில் கண்களில் 'சுர்மா' இட்டுக் கொள்கிறார்கள் இது ஒரு சுன்னத்தான செயலாகவும் கருதப்படுகிறது. இந்தச் சுர்மாவைத் தரும் அஞ்சணக் கல்லை முதன் முதலில் கண்டறிந்தவர் ஜாபிர் இப்னு ஹையானே ஆவார்.

உலோகங்களைப் பிரித்தெடுக்கும் நவீன முறை

அக்காலத் தில் உலோகங்களைப் பற்றி ஓரளவு அறிந்திருந்தபோதிலும் அவற்றைச் சுத்தம் செய்து பெறுகின்ற நவீனமுறை ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை வேதியியல் முறையில் உலோகங்களைச் சுத்தம் செய்யவும் அவற்றைத் தனித் தனியே பிரித்தெடுக்கவுமான நவீன முறையை ஆராய்ந்து கண்டுபிடித்தவரும் இவரே யாவார்.

துணி நெய்யவும் தோல்களைப் பதனிடவும் அக்காலத்தில் தெரிந்திருந்தார்கள். ஆனால், சாயத்தை உருவாக்கி,அதைத் துணிகளிலும் பதனிட்ட தோள்களிலும் பயன்படுத்தி சாயமேற்றும் முறை அறியாததொன்றாகவே இருந்து வந்தது. வேதியியல் முறையில் வண்ணச் சாயங்களை உருவாக்கியதோடு அவற்றைக் கொண்டு துணிக்கும் தோலுக்கும் சாயமேற்றி கண்கவரும் வகையில் உருவாக்கிப் பெறும் முறையை முதன்முதலில் கண்டறிந்த பெருமையும் இவரையே சாரும்.

இரசவாதக் கலையின் தந்தை

இவர் காலத்தில் மிகப்பிரபலமாகப் புகழ்பெற்று விளங்கிய இரசவாதக் கலையில் மிகச் சிறந்து விளங்கினார். பல புதிய நுட்பங்களை ஆராய்ந்து கண்டுபிடித்தார். அதன்மூலம் செயற்கை முறையில் உலோகத் தன்மை கொண்ட பொருட்களை உருவாக்கும் இரசவாதக் கலையை பெரும் முன்னேற்றம் காணச் செய்தார். இவர் இன்னும் எத்தனை யெத்தனையோ வேதியியல் கண்டுபிடிப்புகளை வெளியாக்கி, இரசாயனத் துறையின் மாபெரும் வளர்ச்சிக்கு வழிகோலினார். தனது வேதியியல் கண்டுபிடிப்புகளைப் பற்றி ஐந்து நூல்களை எழுதியுள்ளார் இத்துறையின் பல்வேறு அம்சங்களை அலசிஆராயும் நூல்களாக அவை அமைந்தன. இத்துறையில் எழுந்த முதல் முழுமையான நூல்கள் எனும் சிறப்பை இந்நூல்கள் பெற்றன.

இரசவாதக் கலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அரபி மொழியிலிருந்து இந்நூல்கள் லத்தீன் மொழிக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டன. பதினான்காம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டுவரை இந்நூல்களே ஐரோப்பாவெங்கணும் இருந்த பல்கலைக்கழகங்களில் பாட நூல்களாக அமைந்திருந்தன என்பது இந்நூல்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகும்.

இவரைப் போன்றே இன்னும் சிலரும் வேதியியல் துறையின் விற்பன்னர்களாக விளங்கி இத்துறையின் உன்னத வளர்ச்சிக்கு உழைத்துள்ளார்கள் என்பதை வரலாற்றில் விரிவாகக் காணமுடிகிறது. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக விளங்குபவர்கள் காலித் இப்னுவலீது என்பவரும் இமாம் அல் சாதிக் என்பவரும் ஆவர்.

இன்றைய வேதிப் பொருட்களில் மிக முக்கியத்துவ முடையனவாக உள்ள ஒரு சில பொருட்களில் சிறப்பிடம் பெறுவன பொட்டாசியம் நைட்ரேட் நைட்ரிக் ஆசிட் மற்றும் சல்ஃபூரிக் ஆசிட் ஆகியனவாகும். இலைகளின் கூட்டால் பல்வேறு புதுப் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. இம்மூன்று வேதிப் பொருட்களையும் உருவாக்குவதற்கான விதிமுறைகளை முதன் முதல் ஆய்ந்து கண்டவர்கள் இவர்கள் இருவருமே ஆவர். இவர்களின் வழி முறைகளின் அடிப்படையிலே நவீன உத்திகளைக் கையாண்டு இவ்வேதிப் பொருட்கள் இன்று பெருமளவில் உருவாக்கிப் பயன்படுத்தப்படுகின்றன.

பாஷாணத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்த முடியும் என்பதை எண்பித்த ஜாபிர் இப்னு ஹையானைப் பின்பற்றி வேறு சில முஸ்லிம் வேதியியல் ஆய்வாளர்கள் நச்சுத் தன்மை கொண்ட தாதுப் பொருட்களை உரியமுறையில் வேதியியல் அடிப்படையில் மாற்றமுறச் செய்து அவற்றை நோய் நீக்கும் மருந்துப் பொருட்களாகப் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினர். இதன்மூலம் மருந்தியல் துறை வளர்ச்சியும் முனைப்பும் பெறலாயிற்று.

இவ்வாறு வேதியியல் துறை சரியான தோற்றம் பெறவும் முறையான வளர்ச்சியடையவும்வழியமைத்த பெருமை அக்கால முஸ்லிம் வேதியியல் ஆய்வாளர்கட்கே உரியதாகும் என்பதை இன்றும் வேதியியல் ஆய்வாளர்கள் நினைவு கூரவே செய்கிறார்கள். இன்றைய வேதியியல் துறையின் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அழுத்தமாக அன்றைய முஸ்லிம்கள் அமைத்ததன் விளைவாகத் தான் பின்னால் வந்த வேதியியல் துறை விற்பன்னர்கள் அத்துறையில் வீறுநடைபோட முடிந்தது.

அரும்பெரும் மருத்துவர் அண்ணலார்

அறிவியலின் பிற துறைகளைப் போன்றே அன்றைய இஸ்லாமியர்கள் மருத்துவத்துறையிலும் பெரும் முன்னேற்றம் கண்டிருந்தார்கள். அண்ணல் நபிகள் நாயகம் (சல்)அவர்களே மருத்துவ முறைகள் நன்கு தெரிந்த வல்லுநராக விளங்கியவர்கள்.

அண்மையில் நான் ஹஜ் கடமையை நிறைவு செய்ய புனித மக்கா, மதினா பயணத்தை மேற்கொண்டேன் .அப்போது உடன் இருந்த பாகிஸ்தான் ஹாஜி ஒருவரும் துருக்கி நாட்டு ஹாஜி ஒருவரும் ‘பில்லிசான்’ என்று ஓர் மருத்துப்பெயரைச் சொல்லி இந்த மருந்தை ஊருக்குக் கட்டாயம் வாங்கிச் செல்ல வேண்டும் என்றனர். மேலும் தொடர்ந்து அந்த மருந்து இங்கு தவிர வேறு எங்கும் கிடைக்காது என்றும் கூறினர். ஒரு நோய்க்கு ஒரு மருந்து என்றுள்ள இக்காலத்தில் ஒரே மருந்து பல நோய்களைத் தீர்க்கும் அதிசய சக்தி படைத்தது என்றும் தொடர்ந்து விளக்கிக் கூறினார். இதைக் கேட்டபோது எனக்கு மேலும் வியப்பேற்பட்டது மேலும் துருக்கி ஹாஜி தொடர்ந்து,அண்ணலார் காலந்தொட்டு இன்றுவரை அந்த மருந்து சர்வரோக சஞ்சீவியாகவே விளங்கிவருகிறது என மேலும் விளக்கினார்.

குறுக்கிட்டுப் பேசிய பாகிஸ்தான் ஹாஜி அந்த மருந்துக்கு மற்றொரு சிறப்பும் உண்டு முதன் முதலாக அந்த மருந்தை உருவாக்கியவரே பெருமானார் தான் மருத்துவத்திறன் நிரம்பப் பெற்ற பெருமானார் பத்ரு போர்க்களத்தில் படுகாயமுற்று, நோயலாய்ப்பட்ட முஸ்லிம் போது வீரர்கள் விரைவில் குணமடையும் பொருட்டு அப்பாலைப் பகுதியில் மட்டும் வளரக்கூடிய ஒருவகை மரத்தின் சாறிலிருந்து உருவாக்கிய இம்மருந்து பாதிப்புக்காளான முஸ்லிம் படை வீரர்கள் அனைவரின் காயமும் நோயும் விரைந்து மறைய ஏதுவாயிற்று. அன்று முதல் அம்மருந்தின் சிறப்பும் உயர்வும் நிலைத்துவிட்டது பெருமானார் வழிமுறையைப் பின்பற்றி இன்றும் அம்மருந்து தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது சவூதி வரும் பயணிகளை இம்மருந்தை அறிந்தவர்கள் வாங்காமல் செல்லதே இல்லை என்று கூறியபோது எனக்குப் பெருமாரின் மருத்துவத் திறன் மீதும் அம்மருந்தின் மீதும் பற்றே ஏற்பட்ட டுவிட்ட தெனலாம் அப் மருந்து இல்லாத கடையே இல்லை எனுமளவுக்கு எல்லாக் கடைகளிலும் அம்மருந்து விற்பனையாகிறது. இதற்கான தனி விளம்பரப்பலகை எல்லாக் கடைகளிலுமே உண்டு, அவர்களோடு நான் வாங்கி வந்த அம்மருந்தை இங்குப் பயன்படுத்தியபோது அதிசயிக்கத் தக்க வகையில் நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கண்டு வியப்படைந்தேன். இதிலிருந்து பெருமானாரின் மருத்துவ முறையும் திறனும் காலத்தையும் வென்று நிலைக்கும் வல்லமை பொருந்தியது என்பது போதரும்.

இரசவாதத் தந்தை

பெருமானார் காலத்திற்கு முன்னர் இருந்த மருத்துவமுறை இரசவாதக் கலையோடு இணைந்த ஒன்றாகவே இருந்தது. இந்தத்துறையில் வியக்கத்தக்க திறமையாளராக அக்காலத்தில் போற்றப்பட்டவர் ஜாபிர் இப்னு ஹையான் என்பவர் ஆவார். எட்டாம் நூற்றாண்டில்கூட கூஃபாவில் வாழ்ந்த இவரே வரலாற்றாசிரியர்களால் ‘அரப் இரசவாதத் தந்தை’ எனப் போற்றப்படுகிறார்.

இரசவாதக் கலையும் புதிய மருத்துவ முறைகளும்

அண்ணலார் அவர்கள் உடல் பிணி தீர்க்கும் மருத்துவர்களைப் பெரிதும் மதித்தார் மருத்துவ ஆய்விலும் பணியிலும் முனைப்புக் காட்டும் வகையில் அவர்களைத் தூண்டி வந்தார். இதன் மூலம் மருத்துவத் தொழில் மிகப்புனிதமான தொழிலாக அன்றைய முஸ்லிம்களால் கருதப்பட்டது. மருத்துவர்களுக்குச் சமுதாயத்தில் மிகப் பெரும் அந்தஸ்தைப் பெருமானார் அவர்கள் உருவாக்கித் தந்தார் இதனால் மருத்துவத்தில் புதிய முறைகளும் மருந்து உருவாக்கத்தில் புதிய செயற்பாடுகளும் ஏற்படலாயின. இரசவாத முறையினின்றும் விடுபட்ட மருத்துவ முறை சீரான வழியில் செழிப்பாக வளர பல மருத்துவ அறிஞர்களும் ஆய்வாளர்களும் பெரிதும் உழைக்கலாயினர்.

அக்கால முஸ்லிம்கள் கண்டறிந்த மருத்துவ முறைகளே பிற்காலத்தில் மருத்துவத் துறை மாபெரும் முன்னேற்றத்தை அடைய அடிப்படையாக அமைந்தது.

மருத்துவ மலர்ச்சிக்குக் காரணமான இரு பெரியார்கள்

மருத்துவத்துறை மலர்ச்சிக்குக் காரணமாயமைந்தவர்களாக மருத்துவ வரலாற்றில் குறிக்கப்படுபவர் இருவர். ஒருவர் ரேஸஸ் என மேனாட்டாரால் அழைக்கப்படும் அல்-ராஸி. மற்றொருவர் அவிசென்னா என அழைக்கப்படும் இப்னு சினா ஆவார். இன்றும் பாரிஸ் பல்கலைக்கழகம் உட்பட பல மருத்துவப் பல்கலைக் கழகங்களிலும் மருத்துவக் கல்லூரிகளிலும் இவ்விருவரின் படங்கள் அலங்கரித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.

இவ்விருவரில் முந்தையவராகக் கருதப்படுபவர் அல்ராஸியாவார். கி.பி. 86 இல் பிறந்த இவர் 925 இல் மறை வெய்தினார். இவர் புகழ்பெற்ற மருத்துவ வல்லுநராயினும் இஸ்லாமிய மார்க்கத் தத்துவம் இரசாயனம்,கணிதம், வானவியல் மற்றும் அக்காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கிய இரசவாதக் கலை ஆகியவற்றிலும் விற்பன்னராக விளங்கினார். இத்துறைகள் அனைத்தையும் பற்றி இவர் பலப்பல நூல்களை எழுதினார்.மருத்துவ இயல் பற்றி சிறிதும் பெரிதுமாக சுமார் 140-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். குழந்தை நோய்பற்றி முதன் முதலாக விரிவாக நூல் எழுதியவர் இவரேயாவார்.

மனோதத்துவ மருத்துவ முறை

அக்காலத்தில் முஸ்லிம்களின் முழுமையான ஆளுகைக்குட்பட்ட ஸ்பெயினில் கார்டோபாலை நிலைக்களனாகக் கொண்டு வாழ்ந்த இவ்வறிஞரின் மருத்துவ நூல்கள் அனைத்தும் லத்தீன் மொழியில் மாற்றம் செய்யப்பட்டன. பின்பு அதிலிருந்து ஐரோப்பிய மொழிகளுக்குப் பெயர்க்கப்பட்டன.

மருந்துகளால் மட்டுமல்லாது மனோதத்துவ முறையிலும் ஒருவருடைய நோயைக் குணப்படுத்த முடியும் எனக்கூறி அம்முறையிலும் நோயைப் போக்கியும் வந்தார்

சின்னம்மை பெரியம்மை நோய்கள்

அன்று சின்னம்மை நோயையும் பெரியம்மை நோயையும் ஒன்றாகவே கருதினர். அவற்றிடையே எவ்வித வேறு பாடும் தெரியவில்லை. ஆனால், அவ்விரு நோய்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளை முதன்முதலாக அறிவியல் அடிப்படையில் கண்டறிந்து கூறியவர் அல்-ராளியேயாவார், அத்துடன், இவ்விருவகை அம்மை நோய்க்கான காரணங்களையும் இவரே கண்டறிந்து கூறினார். இதை இவர் இரத்தப் பரிசோதனை முறை மூலமும் கண்டறிந்தார். இந்நோய்கள் தோன்றுவதற்கு அடிப்படைக்காரணம் ஒருவகை நச்சுக் கிருமிகளே என்பதை எண்பித்தார். இதிலும் இவரே முதல் மருத்துவராக விளங்குகிறார் ஒருமுறை பெரியம்மை கண்டால் மறுமுறை அந்நோய் வராது என முதன் முதல் கண்டறிந்து கூறியவரும் இவரே.

மருத்துவர்களின் இளவரசன்

இஸ்லாமிய ‘மருத்துவ வளர்ச்சிக்கு மாபெரும் உந்து சக்தியாக அமைந்த மற்றொருவர் மருத்துவர்களின் இளவரசன்’ என மருத்துவ உலகால் போற்றிப் புழப்படும் அலி இப்னு சினா ஆவார். இவர் அவிசென்னா என்றும் அழைக்கப்படுகிறார்.

கி.பி. 980 ஆம் ஆண்டில் பொக்காரோவில் பிறந்த இப்னு சினா சிறு வயதிலேயே இஸ்லாமியத் திருமறையைத் தெளிவாகக் கற்றறிந்தவர். ‘கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்’ என்ற பழமொழிக் கொப்ம இவர் சிறு வயதில் படிக்கக் கிடைக்கின்ற நூல்கள் எதுவாயினும் அதனைப் படித்து முடிப்பது இவரது இயல்பாகும். படிப்பதில் அவ்வளவு பேரார்வமுடையவராக விளங்கினார்.இதன் விளைவாக அவர் வயது ஏற ஏற பல்துறை அறிவும் அவரிடம் பொங்கிப் பொழியத் தொடங்கியதெனலாம்.ஆன்மீகத் துறையிலும் தத்துவச் சிந்தனைகளிலும் பேரார்வம் கொண்டிருந்த இவர் மருத்துவம், இயற்பியல்,வேதியியல், வானவியல் போன்ற துறைகளில் உறித்திளைத்தார் என்றே கூற வேண்டும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=அண்ணலாரும்_அறிவியலும்/6&oldid=1637064" இலிருந்து மீள்விக்கப்பட்டது