அதிராசேந்திர சோழன் மெய்க்கீர்த்தி
Appearance
அதிராசேந்திர சோழன் மெய்க்கீர்த்தி
[தொகு]- திங்களேர் மலர்ந்து வெண்குடை மண்டில
- மன்னுயிர் தோறு மின்னருள் சுரந்து
- நிறைநிழல் பரப்பி நிற்ப முறையிற்
- செங்கோல் திசைதொறுஞ் செல்லத் தங்கள்
- முலமுதற் பரிதியின் வலிசேர் புவனிக்கும்
- ஒற்றை யாழி யுலாவ நற்றவத்
- திருமலர்ச் செல்வியு மிருநிலப் பாவையும்
- கீர்த்தியங் கிள்ளையும் போர்த்தனிப் பூவையும்
- வதுவையிற் புணர்ந்து பொதுமை துறந்து
- உரிமை தேவிய ராக மரபினிற் (10)
- சுடர்மணி மகுடஞ் சூடி நெடுநில
- மன்னவர் முறைமுறை தன்னடி வணங்க
- வீரமுந் தியாகமு மாரமெனப் புனைந்து
- வீரசிம் மாசனத்து உலகமுழு துடையாளொடும்- வீற்றிருந்தருளிய
- மாப்புகழ் மனுவுடன் வளர்த்த கோப்பரகேசரி வர்மரான
- உடையார் ஸ்ரீ ஆதிராசேந்திர தேவர்க்கு யாண்டு...
- மெய்க்கீர்த்திகள் :[[]] :[[]] :[[]]