அந்தி இளங்கீரனார்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


அந்தி இளங்கீரனார்[தொகு]

அகநானூறு- 71. பாலைத்திணை.[தொகு]

(பொருள்வயிற் பிரிந்தவிடத்து ஆற்றாளாய தலைமகட்குத் தோழி சொல்லியது)நிறைந்தோர்த் தேரு நெஞ்சமொடு குறைந்தோர்
பயனின் மையிற் பற்றுவிட் டொரூஉ
நயனின் மாக்கள் போல வண்டினஞ்
சுனைப்பூ நீத்துச் சினைப்பூப் படர
மையின் மானின மருளப் பையென (5)
வெந்தாறு பொன்னி னந்தி பூப்ப
வையறி வகற்றுங் கையறு படரோ
டகலிரு வான மம்மஞ் சீனப்
பகலாற்றுப் படுத்த பழங்கண் மாலை
காதலற் பிரிந்த புலம்பி னோதக (10)
ஆரஞ ருறுந ரருநிறஞ் சுட்டிக்
கூரெஃ கெறிஞரி னலைத்த லானா
தெள்ளற வியற்றிய நிழல்காண் மண்டிலத்
துள்ளூ தாவியிற் பைப்பய நுணுகி
மதுகை மாய்தல் வேண்டும் பெரிதழிந் (15)
திதுகொல் வாழி தோழி யென்னுயிர்
விலங்குவெங் கடுவளி யெடுப்பத்
துளங்குமரப் புள்ளிற் றுறக்கும் பொழுதே.
"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தி_இளங்கீரனார்&oldid=13096" இருந்து மீள்விக்கப்பட்டது