உள்ளடக்கத்துக்குச் செல்

அனுமார் அனுபூதி

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

அனுமார் அனுபூதி

எழுதினான் : ஏ. கே. வேலன்

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

அனுமார் அனுபூதி


1. அஞ்சனையின் அருந்தவப் புதல்வனே அனுமந்தராயனே
மந்த மாருதம் தந்த மைந்தனே மாருதி
புத்தி, யுக்தி, சக்தி சித்திகளில் வலியவனே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே

2. காலைக் கதிரவனை கணியென்று பறிக்கத் தாவிய
வால் அறிவனே, வானர வீரனே, வானவனே
மூலத்தில் பிறந்த முதல்வனே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே

3. ஆதவன் பாடம் சொல்ல முன்னின்று பின்ஓடி
ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஓதாமல் உணர்ந்த
வாயு புத்திரனே ராமனுக்குப் பிரிய வானரனே
ஆதி வியாதி ஹரராம ஆஞ்சனேயனே

4.வாலியின் இளவலுக்கும் அயோத்தி முதல்வனுக்கும்
நட்பெனும் பாலமிட்ட நாயகனே அதனை
அங்கியே சான்றாக உறுதி செய்த உத்தமனே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


5. நங்கநல்லூர் நாதனே ராமதுதனே
சிங்களத்துக்கு பந்தனம் இட்ட தீரனே
பிங்களக் கண்ணனே பிராட்டியின் தனையனே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


6 அங்கதன் நீலன் சாம்பன் அனுமன் இடையே
அலைகடலைத் தாண்டுவது யாரென்று கேள்விக்கு விடையே
சாம்பன் உணர்த்த உணர்ந்ததளபதி அனுமனே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே

7. மலையிலும் வலிய பெரிய வடிவான அனுமனே
மழைத்துளியின் இடைவெளியில் புகுந்துவரும் மெலியனே
அன்னையைத் தேடிச் சென்ற சிறிய திருவடியே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


8. விண்ணே விதானமாக நெடுங்கடல் நீல விரிப்பாக
ஆயிரம் கருடர்கள் ஒன்று திரண்டு எழுந்தனரோயென
எரிநட்சத்திரம் ஒன்று எகிறிக் குதித்ததோயெனப் பாய்ந்த
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


9. மைநாக மலையின் விருந்தை மறுத்து
அங்கார தாரகையின் அடி வயிற்றைக் கிழித்தவனே
சங்கர சொரூபனே ஏகாதச ருத்ரவீரியனே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே

10. இலங்கையை மிதித்தான் அனுமன், எதிர்த்தாள் இலங்கிணி
இடது முஷ்டியால் குத்தினான் ஒடுங்கினாள் ஒதுங்கினாள்
சின்ன வடிவெடுத்து பெரிய மதில் தாண்டியவனே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


11.அமராவதியோ அழகாபுரியோ என மயங்கி
தேடாத இடமெல்லாம் தேடிக் கலங்கி
கற்பின் நாயகியை காணாமல் தவித்தவனே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


12. சுந்தரகாண்ட நாயகனே சுக்கிரீவமகா மந்திரி
அதிவினையன் சொல்லின் செல்வன் என்றான் ராமன்
அன்னையைத் தேற்ற ராமநாமம் சொன்னவனே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே

13 சிம்சுவா விருட்சத்தில் சிறு வடிவில் இருந்தவனே
பேருருக் காட்டி பிரமிக்கவைத்த பெரியோனே
கணையாழி கொடுத்து சூடாமணி பெற்ற சிரஞ்சீவியே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


14 பிறவிப் பெருஞ்சிறையில் சிக்கித் தவித்த பிராட்டி
அரக்கன் வெஞ்சிறையில் ஆவி துறக்க நினைத்தாள்
அது நேரம் தடுத்து ஆண்ட தர்ம சீலனே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


15. அசோக வனத்தை அழித்து அட்சயனைக் கொன்று
இலங்கையை எரித்து நிகும்பலை வேள்வி மிதித்த
இலட்சுமண ரட்சகனே அதிவீர பராக்கிரமனே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே

16. இலங்கைப்பொன் நகரை புடைத்து பொடித்து
கிங்கரரை கொன்று குவித்து இராவணன் அதிர
பஞ்ச சேனாதிபதிகளை அழித்த பராக்கிரமனே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


17. வாலுக்குத் தீயிட்ட வல்லரக்கர் மாநகரை
காலும் கனலும் கலந்தடித்து நீராக்க
கடலாடி சிரஞ்சீவி வரத்தோடு திரும்பிய வரதனே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


18. சீலத்தில் பெரிய சிவக்கொழுந்தே சிரஞ்சீவியே
காலத்தை வெல்லும் கணக்கறிந்த ஞானியே
நீதியில் வலிய நியாய மூர்த்தி நீயே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


19. ஐயனே உன் பக்தியில் ஆழ்ந்துவிட்டால் வரமாக
தவ ஞான யோக சித்தியெல்லாம் சித்திக்காதோ
சர்குருவே மானுடம் தழைக்க வந்த மகா குருவே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


20. ராமனை நினைந்து நினைந்து ராமனே ஆன
ராமநாதனே யோகநாதனே ராமஜோதியே
சொல்லுக்குச் சொல் சுடர்விடும் ஜீவசக்தியே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


21. பகவான் சனி பற்ற வந்தான் நீ பற்றி எடுத்து
விட்ட மூச்சில் விசும்பு கடந்து வீழ்ந்தான்
அதுமுதல் உன் அடியவரை அவன் தொடுவதே இல்லை
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே

22. திருமாலின் சக்கரத்தை திருடிச் சென்று
ஆழ்கடலில் ஒளித்த அரக்கனை வென்று
சக்கரத்தை மீட்டுவந்த பஞ்சமுகனே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


28. ஆயிரம் இதழ் கொண்ட அற்புதத் தாமரை
செளகந்தி பறிக்க தறுக்கோடு சென்ற பீமனை
வாலால் வழிமறித்து அண்ணனென்று அறிவுறுத்திய
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


24. பார்த்தனின் கொடியிலிருந்து அசைந்து ஆடி
பரந்தாமன் சொன்ன கீதையைப் படித்துக்கொண்டே
பண்டிதனே ஞான விளக்கே மோன முனிவனே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே

25. களத்தில் இளையவன் மூர்ச்சித்தான் ராமன் அதிர்ந்தான்
மருந்தாக சஞ்சீவியை குன்றோடு கொண்டு வந்தவனே
கவிகுல திலகமே கருணை மறவனே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


26. அடைக்கலம் கேட்ட வீடணனை அனைவரும் மறுத்தார்
அவன் ஒருவனே அண்ணனிடம் நீதிகேட்டான் அவன் மகளே
அன்னைக்கு துணை நின்றாள் என எடுத்துறைத்த நடுநாயகமே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


27. இம்மைக்கும் மறுமைக்கும் நீயே கதி
செம்மைக்கும் செழுமைக்கும் நீயே கவசம்
உண்மைக்கும் நன்மைக்கும் உறவான தெய்வமே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே

28. ராமன் வர தாமதம் ஆனதால் பரத நம்பி.
தான்மூழ்க தீமூட்டினான் தாவி வந்து அணைத்து
அதோ வந்தார் வந்துவிட்டார் என ஆர்ப்பரித்தவனே
ஆதிவியாதி ஹரராம ஆஞ்சனேயனே


29. முடிசூட்டு விழாவில் முத்துச்சரம் தந்தாள் வைதேகி
கடித்துத் துப்பியதால் கலவரப்பட்டது பேரவை
ராமநாமத்தின் சுவை இதிலே இல்லை என்றவனே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


30. அனுமனின் கானத்தில் கனிந்து குழைந்த பாறை,
நாரதனின் வீணையைப் பற்றிக் கொள்ள
நாரதன் இசையில் பெரியோன் என்ற தருக்கழித்தவனே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே

31. வாழிய பனைத்தோள் வீரனென்று வாழ்த்தப்பட்டவனே
ஊழிகளைக் கடந்து உலவும் மேலோனே
ஊழையும் வெல்லும் உலக நாயகனே வாழிய
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


32. ராமாயண பாராயண வீணா கானப் புலவனே
நின் அனுபூதி கொண்டு அனுபூதி சொன்னேன்
எல்லா நலங்களும் எல்லோர்க்கும் தருக தருகவே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே

"https://ta.wikisource.org/w/index.php?title=அனுமார்_அனுபூதி&oldid=1637986" இலிருந்து மீள்விக்கப்பட்டது