அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மானத் தலைவியின் பெண்ணுரிமை
பெண்ணுரிமைப் போர்கள்!
"தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று"
--என்று பண்டையத் தமிழகத்தின் - முதலிடை கடைச்சங்கங்களின் தென் எல்லையாகயாக விளங்கும், குமரிக் கடலோரம் நின்று கொண்டிருக்கும் திருவள்ளுவர் பெருமான் கூறினார்!
அக் குறளுக்கு உரை உரைக்க வந்த பிற்காலப் புலவர் பெருமக்கள் பலரும், பிறந்தால் புகழொடுப் பிற; இல்லையானால் பிறக்காதே அதாவது பிறவாமல் இருப்பதே நல்லது என்று எழுதினார்கள்!
ஆனால்,. அதுதான் உன்மையா? வள்ளுவர் பெருமான் இப்படியா உரை எழுதியிருப்பார்? எனவே, வேறு ஒரு பொருள் உள்ளது. அது இது?
புகழ் என்ற அதிகாரத்தில் இக்குறள் உள்ளது, புகழ் எப்படியெல்லாம் ஒரு மனிதனுக்கு வரும்; அந்தப் புகழைப் பெற அவன் எப்படி உழைக்கவேண்டும் என்ற வழிகளை வகுத்துக் காட்டிடிய வரம்புக்கு இது ஒரு சான்றுகுறள்!
"பிறவி எடுத்த ஒரு மனிதன் வாழ்வதற்காக அவன் தோன்றும் துறைகளிலே எல்லாம் புகழ் வருமாறு தோன்ற வேண்டும். அவ்வாறு பெற முடியாவிட்டால் அவன் பிறப்பதைவிட பிறவாமல் இருப்பதே மேலானது' என்கிறார் செந்தாப் போதார்.
இந்தக் குறளுக்கு இலக்கணம் போல் அன்னிபெச்சண்ட் அம்மையார் விளங்குகிறார்! வாழ்க்கை என்ற ரோஜா மலரைப் பறிக்கப் பிறத்த அந்த ஆம்மையார், கரடு முரடான துன்ப, துயர, வறுமை, ஆணாதிக்க முட்களால் குத்தப்பட்டு ரணகளமான கைகளோடு காட்சித் தந்தார் அவர்!
அத்தகை ஒரு பெண், அதுவும் இரண்டு பிள்ளைகளோடு கணவனைக் கைவிட்ட ஒரு பெண், செங்கோலுக்கும் விஞ்சிய சங்கீதம் எழுப்பிய அஞ்சா நெஞ்சுடைய மதவெறி எதிர்ப்புச் சிங்கமாக நடமாடினார்!
அவர் தோன்றிய துறைகளான மதவியல், பத்திரிகைவியல், தொழிலாளர் வாழ்வியல், சமுதாய வாழ்வியல், சொற்பொழிவியல், கலப்பு மணம், விதவை மணம், இளம் வயது மணம் போன்ற பெண்ணுரிமைகளின் போரியல், அரசியல், ஆன்மீகவியல் போன்ற எண்ணற்ற துறைகளிலே தோன்றினார்! புகழோடு வலம் வந்தார். புவனத்தில் இதுதான் அரிய புகழ் பெறுவதற்கான இலக்கண வரம்பு!
எந்தெந்த துறையிலே அந்த அம்மையார் நுழைந்தாரோ, அவற்றின் ஒவ்வொன்றிலும் அருமையான் சாதனைகளை ஆற்றிப் பெயரும் புகழும் பெற்றார்.
அவரது இடைவிடாமுயற்சிகளால் தொழிலாளர்கள், வேலை இல்லாதவர்கள், மத, மூட நம்பிக்கை எதிர்ப்பாளர்கள், பகுத்தறிவுவாதிகள், கணவனால் கொடுமை படுத்தப்பட்ட பெண்கள் ஆகியோர் விழிப்புண்ர்வும் நன்மைகளும் பெற்றார்கள்! மக்கள் வாழ்த்தினார்கள்!
இவ்வளவு பெயரும் புகழும் பெற்ற பிறகும் கூட, மக்களிடமிருந்து முழுமையான அன்பும், விசுவாசமும் வரவேற்புகளாக, வணக்கங்களாக, வாழ்த்துக்களாக வீறிட்டு வெளிவந்த பிறகும் கூட, அன்னி பெசண்ட் மனம் நிறைவு பெறாமலே இருந்தது.
அந்த மன நிறைவைப் பெற ஆன்மவியல் நாற்களைத் தேடித் தேடிப் படித்தார். இந்தப் பேரண்டத்தை இயக்கும் சக்தி எது? அந்த சக்திக்குரிய காரணம் என்ன
இந்த உண்மையை எப்படியாவது கண்டறிய வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்தார். அதற்கான ஆதாரங்களைத் தேடிக் கொண்டே இருந்தார்!
வாழ்க்கை என்பது என்ன? மனம் என்றால் என்ன? இரண்டுக்கும் இடையே உள்ள ஒற்றுமை-வேற்றுமைகள் என்னென்ன என்பதை ஆய்வு செய்தபடியே இருந்தார்.
அப்போது அவரது நெருங்கிய நண்பர்களிலே ஒருவரான 'ஸ்டெட்' என்பவர், அன்னி பெசண்ட்டைத் தேடி வத்தார். இரண்டு புத்தகங்களை அவர் வைத்திருந்தார்.
'இரகசியக் கோட்பாடு' என்பவை அப் புத்தகங்கள் அவற்றை எச்.பி. பிளாவட்ஸ்கி அம்மையார் எழுதியிருந்தார்.
அந்த புத்தகங்களை அன்னி பேசண்டிடம் தந்து, படித்து விமரிசனம் எழுதித் தருமாறு 'ஸ்டெட்' கேட்டார் அவர் போன பிறகு அந்த நூல்கனைப் படித்தார்.
எந்த உண்மையை அறிய வேண்டும் என்று அன்னி பெசண்ட் மன நிறைவு பெறாமல் இருந்தாரோ, அந்த எண்ணம் இப் புத்தகங்களிலே இருப்பதை அறிந்து மகிழ்ச்சி பெற்றார்.
அந்த நூல்களை எழுதிய பிளாவட்ஸ்கி அம்மையார் மீது, அன்னி பெசண்டுக்கு அளவிலா அன்பும் மதிப்பும், மரியாதையும் ஏற்பட்டது. இந்த மகிழ்ச்சியினால் அந்த நூல்களுக்கு மிக உயர்வான விமரிசனங்களை எழுதினார்.
இந்த நூல்களை எழுதியவர் பிளாவட்ஸ்கி அம்மையார். இவர்தான் பிரும்மஞான சபை என்ற ஆன்மீக சபையை ஆல்காட் என்பவருடன் சேர்ந்து நிறுவியவர் ஆவார்.
பிரும்மஞான சபையின் கிளைகள் உலகம் முழுவதும் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. சென்னை மாநகரில் அடையாறு பகுதியிலும் இதன் கிளை ஒன்று இருக்கிறது.
ஒரு நேரத்தில் இதே பிளாட்வஸ்கி அம்மையாரை எதிர்த்து எழுதியவர்தான் அன்னி பெசண்ட்! பிரும்ம ஞான சபை விவரங்களும் அன்னியின் பார்வையிலே இருந்து தப்பவில்லை.
ஆனால் இப்போது, தாக்கப்பட்ட அம்மையாரின் நூற்களுக்கு விமரிசனம் எழுதி மகிழ்வடைந்துள்ளார் என்றால், கால மாற்றத்தின் அறிவுச்சக்கர வேகத்தைக்கண்டு நம்மால் வியக்காமலிருக்க முடியவில்லை.
ஆனால், அம்மையாரது புத்தகங்களைப் படித்த அன்னிபெசன்ட், தாம் எவ்வளவு பெரிய தவறைச் செய்து விட்டோம் என்று வருத்தப்பட்டார்.
பிளாவட்ஸ்கி அம்மையாரை நேரில் பார்க்க வேண்டும் என்றார். அவரிடம் தனது வருத்தத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று துடிதுடித்து, இறுதியாக நேரிலே சென்று ஆவரைக் கண்டார்.
அம்மையாரின் அமைதியான தோற்றம் தெளிவான மேன்மையான ஞானத் தெளிவு, அன்னி பெசண்டை மிகவும் ஈர்த்து விட்டது! இருந்தாலும், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி அளவளாவிக் கொண்டார்கள்.
பிரும்மஞான சபையில் அன்னிபெசண்ட் உறுப்பினராக வேண்டும் என்று நினைத்தார்! தனது வீட்டிற்கு வந்ததும் அதைப்பற்றி சிந்தித்தபடியே இருந்தார்!
ஒருநாள் பிளாவட்ஸ்கி அம்மையாரைச் சந்தித்து தனது முடிவை அவரிடம் தெரிவித்தார்! அதற்கு அவர், 'உளவியல் ஆய்வுக்கழகம் தன்னைப் பற்றி எழுதியுள்ள புத்தகங்களை வாங்கிப் படித்து விட்டு வா' என்ற பதிலைக் கூறி அனுப்பி விட்டார்.
அன்னி பெசன்ட், அந்த நூல்களை வாங்கிப் படித்தார். அந்த நூலில், 'பினாவட்ஸ்கி ஓர் ஏமாற்றுக்காரி: தந்திரக்காரி, தீயவள்; அவளோடு சேர்ந்தவர்கள் எல்லாரும் அதே போன்றவர்கள்தான்' என்று எழுதப்பட்டிருப்பதைக் தைக் கண்டார்.
மறுபடியும் அந்த அம்மையாரிடம் அன்னி சென்ற போது, "நான் கூறிய புத்தகங்களைப் படித்தாயா? என்றார்?
"படித்தேன், நான் அதை நம்பவில்லை; என்னை தங்கள ஞான சபையிலே உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார்-சேர்ந்தார்!
பிரும்மஞான சபையிலே அன்னி சேர்ந்ததைக் கண்டு, இங்கிலாந்திலே எதிர்ப்புப் புயல் வீசியது. ஆவருடைய முன்னாள் நண்பர் சார்லஸ் பிராட்லா இதை ஆறித்து கடுமையாகத் தனது பத்திரிகையிலே எதிர்த்து எழுதினார்!
அன்னி பெசண்ட் இந்த எதிர்ப்பைக் கண்டு அஞ்சினாரில்லை! ஏனென்றால், அவருடைய வாழ்க்கையே ஆரம்ப முதல் எதிர்ப்பிலே நீய்ச்சல் போட்ட வாழ்க்கைதானே!
அதற்குப் பிறகு பேசிய கூட்டங்களிலே, நான் ஏன் பிரும்மஞான சபையிலே சேர்ந்தேன்’ என்பதற்குரிய பதிலையே பேசினார்!
ஆனாலும், பஸ், டிராம், ரயில் ஆகியவற்றில் பணியாற்றும் தொழிலாளர்க்ளின் பணிநேரங்களைக் குறைக்க ஒரு போராட்டத்திலே ஈடுபட்டார்!
பிரும்மஞான சபை சம்பந்தப்பட்ட நூற்கனைத் தேடித் தேடி படித்தார். அதன் கோட்பாடுகளைப் பரப்ப பல கூட்டங்களிலே கலந்துகொண்டு பேசினார்:
பிளாவட்ஸ்கி அம்மையார் ஒரு பெண்கள் விடுதியைப் புதிதாகக்கட்டினார். அந்த விடுதிக்கு அன்னி பெசண்டைத் தலைவராக்கினார்! இதனால் இருவருக்கும் நெருக்கமான நட்பு உருவானது.
உலகில் சகோதரத்துவத்தை உருவாக்குவதற்கும், இந்திய ஐரோப்பிய இலக்கியம், தத்துவம் ஆகியவற்றை முன்னேற்றுவதற்கும். மனிதனுள் மறைந்துள்ள இயற்கைச் சக்திகளை ஆய்வதற்கும்தான், அன்னி பிரும்மஞான சங்கத்தில் சேர்த்ததாகவும் கூட்டங்களிலே குறிப்பிட்டார்.
அன்னிபெசண்ட் ஞானசபையில் சேர்ந்த பிறகு, இரண்டாண்டுகளில் பிளாவட்ஸ்கி அம்மையார் காலமானார், இந்த வருத்தம் அன்னியை மிகவும் பாதித்தது.
பிளாவட்ஸ்கி உயிரோடு இருந்த காலத்திலேயே பிரும்மஞான சபையின் கிளைகள் உலகம் முழுவதும் உருவாகி இருத்தன. அவர் இறந்த பிறகும் கூட, அந்த சபை பின் கிளைகள் தொய்வில்லாமல் வளர்ந்து வந்தன.
கி.பி. 1893-ம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் உலக சமையங்களின் மாநாடு நடந்தது, உலக நாடுகளிலே உள்ள சமையவாதிகள் அந்த மாநாட்டிலே கலந்துகொண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்தும் மாநாடு அது.
அந்த மாநாட்டில், இங்கிலாந்து சார்பாக அன்னி பெசண்ட் கலந்து கொண்டார். அவரது சமைய ஆற்றலின் ஆழமான ஆய்வை உலக அறிஞர்களும் மதத்தலைவர்களும் அவரை வானளாவ பாராட்டிப் பெருமைப்படுத்தினார்கள்.
அமெரிக்கப் புகழோடு லண்டன் திரும்பி வந்த அன்னி பெசண்டை, லண்டன் மாநகர் சிறப்போடு வரவேற்றுப் பாராட்டி மகிழ்ந்தது. யார் யார் அன்னியின் விரோதிகளோ, அவர்கள் எல்லாம் ஊமைகளாக நின்று ஆந்தக் காட்சிகைப் பார்த்தார்கள்!
அடுத்த நிகழ்ச்சியாக, அன்னிபெசண்ட் இந்திய சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள, 1893-ம் ஆண்டு நவம்பர்மாதம் 16-ம்தேதி புறப்பட்டார். லண்டன் மாநகரச் சான்றோர்கள் கல்வியாளர்கள், அறிஞர்கள், தத்தலைவர்கள். அனைவரும் அவரைப் பாராட்டி, வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள்.
இந்தியாவின் தொன்மை, சிறப்பு, ஆன்மீகம், நாகரீகம், பண்பாடு, வரலாற்றுப் புகழ் அனைத்தைப்பற்றியும் அன்னி பெசண்ட் புத்தகங்கள் மூலமாகப் படித்து தெரிந்திருந்தார்.
இந்தியாவை மிகவும் நேசித்த அயல்நாட்டவர்களில் அன்னிபெசண்ட்டும் ஒருவர்! அதனால்தான், அவர் இந்தியாவை புனிதபூமி என்று அழைத்துப் பெருமைபட்டார்.
இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி எவ்வாறு நடக்கின்றது என்பதை அவர் கூர்ந்து கவனித்தார். அக்ரமம், அடக்குமுறை, ஆணவப்போக்கு, மக்களது உரிமைகள் பறிப்பு காட்டுத் துர்பார் போன்ற துப்பாக்கிச் சூடுகள் நடந்ததை அறிந்து கோபாவேசம் கொண்டார்.
"இங்கிலாந்து'.இந்தியா - ஆப்கனிஸ்தானம்" என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதினார் அந்தப் புத்தகத்தில், மேற்கண்ட உண்மைகள் பலவற்றை மறைக்காமல் எடுத்துரைத்தார். -
இந்தியா மீது இவ்வளவு பற்றும். மனிதாபிமான உணர்வும் கொண்ட ஒரு வீராங்கனை, இந்தியா வருவதை அறிந்த இந்தியத் தலைவர்கள், மக்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி கொண்டார்கள்.
இந்தியாவிற்கு வந்த அன்னிபெசண்ட் முதன் முதலாக, தமிழக மன்னிலே உள்ள தூத்துக்குடி நகரிலே வந்து இறங்கினார். அந்நகரில் சிறந்த ஒரு சொற்பொழிலை ஆற்றினார், பெங்களூர், விசயவாடா, காசி, ஆக்ரா, லாகூர் போன்ற பெரும் நகரங்களுக்குச் சென்று, சிறந்த உரைகளை ஆற்றினார்! அந்தந்த நகர் மக்கள் திரளாகத் திரண்டு வந்து அன்னிபெசன்ட் பேச்சுக்களைக் கேட்டு மகிழ்ந்தார்கள்.
இவற்றை எல்லாம் சிறப்பாக முடித்துக்கொண்டு, பிரும்மஞான சபையின் தலைமைக் காரியாலயம் உள்ள சென்னை மாநகர் அடையாற்றுக்கு வந்தார். சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பாக வரவேற்கப்பட்டார்.
இத்தியாவைப் பரவலாக ஒரு முறைச் சுற்றிப் பார்த்த அன்னிபெசண்ட், தான் புத்தகங்களில் படித்த இந்தியாவிற்கும், தற்போதுள்ள இந்தியாவிற்கும் இடையே-முரண்பாடுகள், வேற்றுமைகள் இருப்பதைக் கண்டார்.
ஆங்கிலேயர் வருகையாலும், ஆட்சியாலும்தான், பண்டைய இந்திய நாகரீகம், பண்பாடு, புழக்க வழக்கங்கள் எல்லாம் சீர்கெட்டடைந்து மாறி விட்டன என்பதை அவர் தேரில் கண்டு வருத்தமடைந்தார்.
பிரிடடிஷ் ஆட்சிக்குப் பணியாட்கள் தேவை என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட மெக்காலே கல்வி, வெறும் குமாஸ்தா கல்வி முறையாக இருப்பது கண்டு மிகவும் வருந்தினார். அதனால், இந்தியாவுக்கு ஏற்ற தேசியக் கல்வித் திட்டம் தேவை என்று சிந்தித்தார்.
சேன்னை அடையாறுப் பகுதியில் பிற்பட்ட வகுப்புக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் ஒன்றை ஆரம்பித்தார். அந்தப் பள்ளிக்கு ஆல்காட் தாழ்த்தப்பட்டோர் பள்ளி என்று பெயரிட்டார். இந்த ஆல்காட் தான் பிரும்மஞான சபை நிறுவனர் ஆவார்.
சென்னை இராயப்பேட்டையில் சகோதரர் சங்கம் சார்பில், பவானி பாலிகா பெண்கள் பாடசாலை ஒன்றையும் அன்னி பெசன்ட் ஏற்படுத்தினார்,
சென்னை பச்சைப்பன் கல்லூரியில், அப்போது நடை பெற்ற மாணவர்கள் கட்டத்தில் கலந்து கொண்டு சொற் பொழிவுவாற்றிய அன்னி பெசண்ட், இந்தியக் கல்விமுறையில் சீர்த்திருத்தங்கள் தேவை என்று சுட்டிக் காட்டினார்
இந்தியாவின் அவர் பேசிய சொற்பொழிவுகள், வரலாற்றுப் புகழ் பெற்றவைகளாக இருந்தன! அயல் நாட்டிலே இருந்து ஓர் அம்மையார், இந்து மதத்தைப் பற்றியும், இந்தியக் கல்வி முறைகள் குறித்தும் பேசிய உரைகளைக் கேட்டு மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
இந்திய மக்கள் வறுமையிலே வாழ்வதையும், அவர்களது தேவைகளையும்-எதற்கும் அஞ்சாமல் அவர் எடுக்கக் காட்டினார். இங்கே தங்கியிருந்து வெளிநாடுகளுக்கும் பயணம் சென்றார்.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா பிரான்ஸ், இத்தாலி. ஜெர்மனி, ஸ்காட்லாந்து, சுவீடன் போன்ற நாடுகளுக்கும் சென்று பிரும்மஞான சபையின் பல கூட்டங்களுக்குச் சென்று திரும்பி வந்தார்.
1893-ம் ஆண்டில் சுற்றுப் பயணத்தைத் தொடங்கிய அன்னி பெசண்ட் அம்மையார் சுமார் இருபது ஆண்டுகள் உலகெங்கும் உள்ள பிரும்மஞான சபைக் கூட்டங்களில் கலந்து கொன்டார்.
எந்தெத்த நாடுகளுக்கு அவர் சென்றாலும், ஒவ்வொரு ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெறும் சபையின் ஆண்டுவிழாக் கூட்டங்களில் மட்டும் தவறாது வந்து கலந்து கொண்டு சிறப்பிப்பார்.
சென்னையில் பிரும்மஞான சபையை நிறுவியவர் இருவர். அவர்கள், ஆல்காட்டும். பிளாவட்ஸ்கி அம்மையார் ஆகியோர் ஆவர். ஆல்காட் பிரும்மஞான சபைத் தலைவராக இருந்தார்; அவர் மரணமடைந்த பின்பு அந்தப் பதவிக்குத் தகுதியானவர் யார் என்று உறுப்பினர்கள் யோசித்தார்கள். அதற்கு அன்னி பெசன்ட் தான் ஏற்றவர் என்று கருதி, அந்த சபை இவரையே தலைவராகத் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கதாகும்.
பிரும்மஞான சபைத் தலைவரானதும், அம்மையார் இத்தியாவிலேயே, குறிப்பாகச் சென்னை நகரிலேயே தங்கி இருந்து தமிழக் அரசியலிலேயும் கவனம் செலுத்தலாதனார்.
1914-ம் ஆண்டில், ஐரோப்பாவில் முதல் உலகப் போர் மூண்டது. அதே நேரத்தில் இந்தியாவிலும் சுயாட்சிப் போர் உருவானது. இந்தப் போருக்குத் தலைமை வகித்தவர் அன்னி பெசன்ட் அம்மையாரே ஆவார்.
அன்னி பெசன்ட், 'நியூ இந்தியா' என்ற ஒரு பத்திரிகையை ஆங்கிலத்தில் துவங்கினார். அந்தப் பத்திரிகை வாயிலாகவும், ஒவ்வொரு சம்பவத்திலும் நேரில் கலந்து கொண்டும் சுய ஆட்சிக் கிளர்ச்சியை நடத்தினார்.
ஆங்கிலேயருக்கு இந்திய அரசியல் அடிமைகளாக இருப்பதைக் கன்டு உள்ளம் கொதித்த அம்மையார், அவர்களுக்கு அரசியல் கதந்திரமும், நாட்டுச் சுதந்திர உரிமையும் தேவை என்று கருதினார். அதனால், ஆங்கிலேயரை எதிர்த்தே இந்திய மக்களுக்காகச் சுதந்திரப் போர் நடத்தினார். அந்தப் போர்தான் சுய ஆட்சிப் போர் என்பதாகும்.
ஆங்கிலேயர் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண். ஆங்கிலேயரை எதிர்த்தே போர் நடத்துவதைக் கண்டு-இந்தியர்களே வியந்தார்கள்! அதனால் அந்த அம்மையார் நடத்தும் சுய ஆட்சிப் போருக்கு ஆதரவு தந்தார்கள்.
அப்போது சிறையிலே இருந்து விடுதலையாகி வெளியே வந்த மராட்டியச் சிங்கமான் பாலகங்காதரத்திலகர் அன்னி பெசண்ட் அம்மையார் போராட்டத்தை ஆதரித்து, அம்மையாருடன் இணைந்து அறப்போரிலே ஈடுபட்டதை இந்திய நாடும் ஆதரித்தது.
அம்மையாருடன் நீதிபதியாக் இருந்த ஜஸ்டிஸ் சதாசிவ ஐயர், தமிழ்த் தென்றல் திரு வி. கலியாணசுந்தரனார், பண்டித மேதிலால் நேரு, சுப்பராய காமத், போன்றவர்கள் சேர்த்து அரசியல் விவகாரங்களில் ஈடுபட்டார்கள்.
சென்னையில் அப்போது ஜஸ்டிஸ் கட்சி என்ற நீதிக் கட்சி; பல கூட்டங்களை நடத்தியது. அதில் ஒன்று ஸ்பர்டாங்க் என்ற எழும்பூர் ஏரிக் கூட்டம், அந்தக் கூட்டம் ஆதி திராவிடர்க்கென்றே கூட்டப்பட்ட கூட்டமாகும்.
கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் டாக்டர் நாயர் என்பவர் ஆவார். அவர் நீதிக் கட்சியின் பெருந்தலைவர்களுள் ஒருவர். அக் கூட்டத்திற்கு அன்னி பெசண்ட் அம்மையாரைச் சேர்ந்த சுய ஆட்சிக் கிளர்ச்சிக்காரர்களில் ஒருவரான திரு.வி.க.வும் சென்றிருந்தார்.
திரு.வி.க., ஜஸ்டிஸ் கட்சிக் கூட்டத்தில் ஒரு துண்டுச் சீட்டு எழுதிக் கொடுத்தார். அந்தச் சீட்டு கூட்டத்தவரிடையே கலவரத்தை எழுப்பிவிட்டது. ஆதனால், ஜஸ்டிஸ் கட்சித் தொண்டர்களுக்கும், சுய ஆட்சிக் கிளர்ச்சியினருக்கும் இடையே கைகலப்பு, சண்டைகளை உருவாக்கியது.
அங்கே எழுத்த கலவரத்தைக் கண்ட டாக்டர் நாயர் கோபாவேசமாகப்பேசினார். அந்தக் கூட்டத்தின் கலவரம், சுய ஆட்சியினருக்கு ஆதரவாக முடிந்தது.
இந்தக் கலவரத்தைக் காரணம் காட்டி, ஆங்கிலேயர் அரசு, சுய ஆட்சிக் கிளர்ச்சிக் கட்சியின் தலைவராக இருந்த அன்னி பெசண்ட் அம்மையாரையும், அருண்டேல் வாடியா என்ற இருவரையும் சேர்ந்து 16-6-1917-ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தது. அன்னி பெசண்ட்டும், அவர்தம் குழுவைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டதால், நாடெங்கும் காங்கிரசார் உட்பட அனைவரும் கிளர்ச்சி செய்தார்கள். சென்னை மட்டுமல்ல; நாடே கொதித்தது.
அப்போது மக்களிடையே எழுந்த போராட்டங்களால் அன்னி பெசண்ட் அம்மையாரும் மற்றவர்களும் விடுதலை செய்யப்பட்டார்கள். அக் கிளர்ச்சி மக்களிடையே மேலும் சுதந்திர உணர்வை ஊட்டியது.
திரு.வி.க. நடத்தி வந்த 'தேசபக்தன்' என்ற பத்திரிகை சுயஆட்சிக் கிளர்ச்சியை ஆதரித்து செய்திகளை வெளியிட்டு வந்ததால், சென்னை பெண்ட்லிண்டு பிரபு அரசு, 'தேசபக்தன்' அச்சக முன் ஜாமின் பணத்தை பறிமுதல் செய்தது. அதனால் இரண்டாவது முன்ஜாமின் பணம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அன்னி பெசண்ட் அம்மையாரும், மூதறிஞர் ராஜாஜியும் சேர்ந்து இரண்டாயிரம் ரூபாயையும் முன் ஜாமினாகக் கட்டினார்கள். அப்போது காங்கிரஸ் கட்சி, மிதவாதிகள் பிடியில் சிக்கிச் சிதறிக் கொண்டிருந்ததைக் கண்ட அன்னி பெசன்ட், அந்தச் சிதறலை தடுத்து கய அட்சி இயக்கத்தை ஆரம்பித்தார்.
சுய ஆட்சிக் கிளர்ச்சி இயக்கம், பிரிட்டிஷ் தொடர்புடன் சுய ஆட்சி பெறுவது; இயக்கம் தடத்தும் கின்ர்ச்சி நியாய வரம்புக்கு உட்பட்டதாய் இருத்தல் என்ற கொள்கையுடன் அன்னி பெசண்ட் தலைமையில் போராடி வத்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
1917-ம் ஆண்டில் அன்னி பெசண்ட் கைது செய்யப்பட்ட நாளை இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாதமும் உரிமைக் கிளர்ச்சி நாள்ளாகக் கொண்டாடப்பட்டது.
ஆங்கிலேயப் பெண் எவ்வளவு தைரியமாக, ஆங்கிலேயரையே எதிர்த்து இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிச் சிலை சென்றார் என்ற கருத்து விட, அந்த நாள் இந்தியா முழுவதுமாக இந்தியர்கள் கொண்டாடினார்கள். இதனால் அன்னி பெசண்ட் அம்மையாருக்கு பெரும்புகழ் வளர்ந்தது. எனலாம்.
அன்னி பெசண்ட் அம்மையாரின் எழுத்தும், பேச்சும், மூன்று மாதச் சிறையடைப்பும்,இந்திய மக்களை ஒற்றுமைபடுத்தின. இந்தியாவுக்கு மக்கள் பொறுப்பு ஆட்சி வழங்கப்படும் என்ற அறிக்கையை பிரிட்டிஷ் அரசு 1917ல் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்டது.
காந்தியடிகள், பிணங்கி நிற்கவில்லை; திலகர் பேராதரவு இயக்கத்துக்குக் கிடைத்தது: ஜனாப், ஜின்னாவும் அம்மையார் இயக்கக் கிளர்ச்சிக்குப் பேராதரவு தந்தார். இதனால், 1917-ம் ஆண்டில் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மகா சபைக்கு அன்னிபெசண்ட் அம்மையாரைக் காங்கிர்ஸ் பேரியக்கம் தேர்ந்தெடுத்தது.
திலகர், சர்வாலண்டையன்சிரால் என்பவர் மீது லண்டனில்வழக்குத்தொடுத்திருந்தார்.அந்த வழக்குக்குரிய சான்றைக் கூறிவிட்டு, இந்தியா திரும்பும்போது தான் சென்னை வந்து இறங்கினார். பெரம்பூரில் உள்ள தேசபக்தன் காரியாலயக் காரியதரிசி சுப்பராயக் காமத் என்பவர் வீட்டில் திலகர் தங்கியிருந்தார்.
இந்த வழக்கில் அன்னி பேசண்ட் அம்மையாரும் ஒரு சாட்சி. அவரும் லண்டன் சென்று தனது சாட்சியத்தைக் கூறிவிட்டு இந்தியா திரும்பினார்.
திலகரைக் கப்பலோட்டிய தமிழன், வ.உ.சி.யும், திரு வி.க.வும், காமத்தும் சென்று வரவேற்றுப் பெரம்பூர் காமத் வீட்டில் தங்கவைத்துப் பேசிக் கொண்டிருந்தார்கள் அப்போது, அம்மூவருள் ஒருவர் திலகர் பெருமானிடம் ஒரு கேள்வி கேட்டார்.
அக்கேள்வி இது : நான் தங்களைத் தலைவராகக் கொண்டவன்: தங்கள் அடிச்சுவட்டைப் பற்றி நடத்தவன்; இப்போது ஒதுங்கி இருக்கிறேன். காரணம், தாங்கள் அன்னிபெசண்ட் அம்மையார் சுய ஆட்சிக் கிளர்ச்சியில் ஆதரவு தத்து கலந்து கொண்டதுதான்!
"அந்த அம்மையாரிடத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது. போர் காலத்தில் நாட்டில் பெரும் கிளர்ச்சி எழுமென்று ஊகித்து, அதை ஒடுக்க, பெசண்ட் அம்மையார் சுய ஆட்சிக் கிளர்ச்சியில் தாமே வலிந்து புகுந்தார். நாடு ஏமாந்தது.
"மூன்று மாதக் காவல் அவருக்குக் கிடைத்தது என்பது வெறும் நடிப்பு: பெசண்ட் அம்மையார் ஆங்கிலேய அரசுச் சார்புடையவர். தாங்கள் அந்த அம்மையாருடன் கலந்து போராடியது குறித்து நான் வருந்துகிறேன்" என்று கேட்டார். அவர் முறையீடு வேறு சிலர் ஆதரவையும் அப்போது பெற்றது.
அதற்கு அந்த மராட்டியச் சிங்கம் பதில் கூறும்போது: "நான் தனி மனிதர் மீது கருத்துச் செலுத்துவது இல்லை: எனது தேச விடுதலைக்கு எவர் முயன்றாலும் அந்த முயற்சிக்குத் துணை நிற்பது என்ற எண்ணம் உடையவன்."
"மனிதர் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்: அவர் செயலால் நாட்டில் விடுதலை உணர்வு வளர்கிறதா- தேய்கிறதா என்பதைத்தான் பார்ப்பேன். வளர்வதாக இருந்தால் துணையிருப்பேன்; தேய்வதானால் துணை போகேன்."
"அன்னி பேசன்ட் அம்மையார் உள்ளம் எத்தகையதோ, அதை ஆண்டவன் அறிவான்! அந்த அம்மையா செய்து வரும் கிளர்ச்சிகளால் நாட்டில் சுயராஜ்ஜிய வேட்கை வளர்ந்திருப்பது கண்கண்ட காட்சி; யான் விரும்புவதும் அதுவே.
அம்மையார் கிளர்ச்சி போலி என்றும், சிறை சென்றது வெறும் நடிப்பு என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள். போலி யும்-நடிப்பும் நாட்டில் இவ்வளவு எழுச்சியை உண்டு பண்ணின என்றால், நீங்கள் உண்மையில் நின்று கிளர்ச்சி செய்தால், சிறையில் புகுந்தால்-அவை எவ்வளவு எழுச்சியை உண்டு பண்ணி இருக்கும்?"
"ஏன் ஒதுங்கி நிற்கிறீர்கள்? உண்மையை மனதில் கொண்டு களத்துக்கு வாருங்கள்; கிளர்ச்சி செய்யுங்கள் சிறைக்குச் செல்லுங்கள்; வீண் பேச்சு எதற்கு?
"பெசண்ட் அம்யைார் கிளர்ச்சியால் நலம் விளைகிறதா? தீமை விளைகிறதா? என்று பார்த்தேன். நலம் விளைதல் கண்டேன்; துணை போகிறேன்; நாளைத் தீமை விளைவதைக் கண்டால் அவரது கிளர்ச்சிக்குத் துணை போகேன்; இதை ஒரு நொடியில் சாய்க்க முயல்வேன் என்று முழக்கமிட்டார்.
'திலகர் பெருமான், அன்னி பெசண்ட் அம்மையாரின் இந்திய சுதந்திர போராட்ட உணர்ச்சியை உண்மையே என்று மதித்தார்! மரியாதை தந்தார்! அதைப் பாராட்டினார்: அன்னி பெசண்ட் எதிரிகள் மீது கோபம் கொள்ளமல் நீயும் வா களத்துக்கு; போராடு; சிறை போ! என்று அவரது பொறாமை உள்ளத்துக்கு உரிய வழியைக் காட்டி அழைத்தப் பண்பாளராக விளங்கினார்! இதுவன்றோ அரசியல் தலைமைக்கு அழகு!
அன்னி பெசண்ட் வடநாடு சென்று பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ், திலகர் போன்றவர்கள் அப்போது உடன் இருந்தார்கள்.
அமிர்தசரஸ் நகர் தேசிய மகாசபைக் கூட்டம் முடித்த பின்பு, அன்னி பெசண்ட் சென்னை வந்தார். அவரை வரவேற்று திரு.வி.க. ஊர்வலமாக அழைத்துச் செல்ல முயன்றபோது; அம்முயற்சியை கப்பலோட்டிய சிதம்பரமும், அவர் சார்பாளரும் தடுத்தார்கள். அதற்கு திரு.வி.க. பதில் கூறும்போது, நான் காங்கிரஸ் கட்சி சார்பாக அன்னி பெசண்ட் அம்மையாரை வரவேற்கவில்லை; தொழிலாளர் சார்பாகவே வரவேற்கிறேன் என்றார். என்றாலும், அம்மையாருக்கு எதிரான துண்டு அறிக்கைகளும், மறுப்புக் கூட்டங்களும் நடந்தேறின.
தனக்கு வரவேற்பு அளித்த சம்பவத்தில் அன்னி பெசண்ட் பேசும்போது, "இத்தகைய ஒர் ஊர்வலத்தையும் வரவேற்பையும் என் வாழ்க்கையில் நான் கண்டதே இல்லை' என்று மகிழ்ச்சிப் பெருக்கெடுக்க அவர் நன்றி கூறினார்.
அன்று மாலை சென்னை கடற்கரையில் அம்மையாருக்கு வரவேற்புக் கூட்டம்; அக்கூட்டத்தில் கப்பலோட்டிய சிதம்பரமும் பேசினார்: பேசினார் என்பதை விட அம்மையாரை வசைசாடினார் என்றே கூறலாம் என்கிறார் திருவி க.
தேசபக்தர் வ. உ.சி. வசைகளை பத்திரிகைகள் வெளி யிட்டன. அம்மையாருக்கும், கூட்டத்தை நடத்திய திரு.வி.க.வுக்கும் வசைத் திரட்டுகளை சிலர் அனுப்பி வைத்தார்கள்.
அடுத்த நாள் அன்னி பெசண்ட் அம்மையார் கார் திரு.வி.க. நடத்தும் 'தேசபக்தன்' பத்திரிகை காரியாலயம் முன்பு வந்து நின்றது. திரு.வி.க. சென்றார். அம்மையார் திரு.வி.க.வை வண்டியில் ஏறுமாறுக் கூறியதும் காரும் புறப்பட்டது.
நேற்றைய கடற்கரையில் வ.உ. சிதம்பரம் பேசிய நிகழ்ச்சி உமக்குத் தெரியும் அல்லவா? என்று அன்னி பெசண்ட், திரு.வி.க வைக் கேட்டபோது, தெரிந்தேன்’ என்றார் ஆவர்.
"நான், சார்லஸ் பிராட்லாவிடம் பயின்றவள். எப்படிப்பட்ட வசைகளையும் தாங்குவேன்; நீர் தமிழ்ப் போத கர்; புண்ணியத் தொழில் புரிந்தவர்; நேற்றைய வசைகள் உமது மனதையும் புண்படுத்தி இருக்குமே; என்னால் அல்லவா உமது மனதும் புண்படும் நிலை வந்தது, என்றார் அன்னிபெசண்ட்-திரு.வி.க.விடம்!
"வ உ. சிதம்பரம் பிள்னை என் சகோதரர்; அவர் தம் வசைமொழிகளை யான் வாழ்த்து மொழிகளாகவே கொண்டேன். என் மனம் புண்படவில்லை உலகுக்கும். நாட்டுக்கும் பல வழிகளிலும் நலம் புரிந்து வரும் ஒருவர் பொருட்டு என்போன்ற சிறுவர் வசை மொழிகளைத் தாங்குதல் பெரியதன்று என்று அம்மையார்க்கு திரு வி.க. ஆறுதல் கூறினார்.
அரசியல் துறையில் மட்டும் யான் தங்களைத் தலைவராகக் கொண்டவனல்லன். பல துறைகளில் தங்கள் அடிச் சுவட்டைப் பற்றி நடப்பவன்' என்றார் திரு.வி.க.
அதற்கு அன்னிப்பெசண்ட், "நீர் என் கட்டுக்கு அடங்குதல் வேண்டும் என்ற நியதி இல்லை; உமக்கு உரிமை உண்டு என்றார்,
"என்னைப் பொறுத்தவரையில் சட்ட மீறலை நாகரிகமாக நான் கொள்ள மாட்டேன். அது நாளடைவில் கொள்ளை, கொலை, புரட்சி முதலிய தீமைகளை நாட்டிலே புகுத்தி விடும்" என்ற தனது கருத்தை அம்மையார் வெளியிட்டதும் அவர் புறப்பட்டு விட்டார்!
வ.உ.சிக்கு ஆடுத்தபடியாக, அன்னிபெசண்ட் அம்மையாரை இந்திய அரசியல் உலகத்திலே இருந்து துரத்த முயன்றவர்களுள் டாக்டர் வரதராஜலு நாயுடும் ஒருவராக இருந்தார். ஆணால், வரதராஜலு 29.8.1918ல் திடீரென்று கைது செய்யப்படவே அவரது முயற்சி பிசு பிசுத்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டு உலகுக்கு சில அறிஞர்களை வழங்கியது. அவருள் ஒருவர் டாக்டர் அன்னிபெசன்ட் பெசண்ட் அம்மையார். அவர் ஒரு நாட்டவர் அல்லர்; உலகர் என்று உரைப்பதே பொருந்தும்.
இந்திய தேச விடுதலைக்கு காந்தியடிகளும் தொண்டர் பெசண்ட் அம்மைாரும் தொண்டர்; காந்தியத்தால் என்னென்ன தீமைகள் விளையும் என்று அம்மையார் விளக்கிக் கூறினார்.
“காந்தியடிகள் அளவில் அவரது சத்தியாக்கிரகப் போராட்டம் பொருந்தி வரும். அது நாட்டளவில் மற்றவர்கள் தவறாக நடந்து நாட்டைப் பாழ்படுத்துவிார்கள்' என்று அன்னிபெசண்ட் அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
இவ்வாறு அன்னிபெசண்ட் இந்திய அரசியலிலும், தமிழக அரசியல் துறையிலும் தலையிட்டு, இந்திய மக்களது சுதந்திரப் பிரச்னைக்காக சுய ஆட்சிப் போர் நடத்திக் கொண்டிருந்தார்.
இங்கிலாந்திலே இருந்து தனியொரு பெண்ணாகத் தமிழகத்திற்கு வந்து அரசியல் துறையிலே ஏற்கனவே அரும்பாடுபட்டவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளும் வீரம்செறிந்த போராட்ட உணர்வுகளை மக்கள் இடையே எழுப்பிப் போராடி வருவதைக் கண்ட அரசியல் அழுக்காறுகளுக்க மன எரிச்சல் நெருப்பாக மாறியது.
அன்னி பெசண்ட் போராட்டத்திற்கு திலகர் பெருமானின் பேராதரவும், காந்தியடிகளின் பிணக்கமற்ற ஒத்துழைப்பும். முகமதலி ஜின்னாவின் தீவிர ஆதரவும் அகில இந்திய அளவில் மோதிலால் நேரு உணர்ச்சி உந்தலும் அன்னி பெசண்ட்டுக்கு திரண்டு குவிந்ததைக் கண்ட, இந்திய மாநிலக் காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு வயிற்று கண்டது!
தமிழ் மாநில அளவில் தமிழ்த் தென்றல் திரு.வி.க., காமத், டாக்டர் ஜி. சுப்பிரமணி ஐயர் போன்ற ஜட்ஜ், வழக்குரைஞர்கள் கல்வியாளர்கள், ஆன்மீகவியல் நேயர்களது ஆதரவுகள் பொங்கி வழிந்ததை, சில தீவிரவாதிகள் எனப்பட்டோர் எல்லாம் பின்னடைத்து வீரக்தியாளர் ஆனார்க்ள்.
இந்த நிலையிலும், அன்னி பெசண்டு சும்மாயிருக்கவில்லை. கல்வித்துறைக் குறைபாடுகளை உலகுக்கு உணர்த்த ஒரு மாதப் பத்திரிக்கையைத் துவக்கி நடத்தினார்.
ஒரு நாடும் இழந்த தனது நாகரீகம், பண்பாடு சுதந்தரம் இவைகளின் மீண்டும் சீரடைய வேண்டுமானால், அந்த நாட்டு மக்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக, கற்றவர்களாக இருக்க வேண்டும்.
அப்போதுதான், அவர்களது பண்டைக் காலச் சிறப்புக்களைப் பாதுகாக்க முடியும். இப்போதுள்ள கல்விமுறை மக்களது மேம்பாட்டுக்கு ஒவ்வாத முறை, அறிவு வளர்ச்சி பெறுவதற்காகவே கல்வி கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். ஆனால், இப்போதுள்ள கல்வி முறை அரசு பணிகளுக்காக மட்டுமே கற்கும் முறையாக உள்ளது என்று மனம் நொந்து கல்விக் கூடக் கூட்டங்களில் பேசினார்.
ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்களது தாய் மொழியில் தான் கல்வி கற்றாக வேண்டும். அப்போதுதான், அவர்களது வரலாறு என்ன? நாகரீகம் என்ன? பண்பாடுகள் என்ன? என்பதையெல்லாம் பிறர் தயவு இல்லாமலே பெறமுடியும். இதற்குகந்த கல்விமுறைதான் இப்போதைய தேவை என்பதை வற்புறுத்தினார். இந்தக் கருத்தை மக்களுக்கு விளக்கவே-இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார். "இந்தியாவிலே உள்ள செல்வச் சீமான்களும், கல்விக் கோமான்களும் தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளைத் தாராளமாக வழங்கினால்தான், இந்தியருக்குரிய கல்வி முறையை உருவாக்க முடியும்" என்று சுற்றுப்பயணம் செய்த இடங்களில் எல்லாம் வலியுறுத்தினார்!
அன்னி பெசண்ட் கருத்தைக் கேட்ட பணக்காரர்கள், கல்வியாளர்கள், பொதுமக்களில் சிலர் தாராளமாகப் பண உதவிகளைச் செய்தார்கள். இதைக் கண்டு அம்மையார் மனம் மகிழ்ந்தார்.
காசி நகரில், 'மத்திய இந்துக் கல்லூரி' என்ற ஒரு கல்லூரியை அமைத்தார். அன்னி பெசண்ட் உருவாக்கிய அந்தக் கல்லூரிதான் அளித்து இன்று காசி இந்துப் பல்கலைக் கழகமாக உள்ளது என்பதை நாம் நினைவு கொள்ள வேண்டும்.
பெசண்ட் மாதப் பத்திரிகையைத் துவக்கினார் அல்லவ அது ஆயிரக்கணக்கில் விற்பனைக்கு வந்தது. இந்த ஏடு இந்தியரது கல்வி முறைக்காகவே உழைத்தது.
கல்லூரியின் புகழ் இந்தியாவில் மட்டுமல்ல! கடல் கடந்தும் புகழ் பெற்றது. இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் இந்தியா வருகை தந்தபோது, அவர் அக்கல்லூரியைக் கண்டு பாராட்டினார்.
அந்தக் கல்லூரி நாளடைவில் வளர்ந்து பல்கலைக் கழகமாகப் புகழ் பெற்றபோது அந்த அம்மையாருக்கு அது டாக்டர் என்ற பட்டத்தை வழங்கிப் பெருமை படுத்தியது மறக்க முடியாத ஒரு வரலாற்றுச் சம்பவமாகும்.
அன்னி பெசண்ட் அம்மையார், ஆணாதிக்க மதவெறி பிடித்த கணவனால் கொடுமை படுத்தப்பட்டவர். அதற்காக பத்திரிக்கையில் பல கட்டுரைகள், சிறுகதைகள் எழுதி தாமஸ் ஸ்காட் மூலம் வெளியிட்டவர் என்பதை அவர் மறக்கவில்லை.
அதற்கேற்ப தமிழகத்தில் ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்த ஓர் இந்தியர், பெண்களை அடிமைகளாக நடத்தி வந்ததைக் கேள்விப்பட்டுப் புண்பட்டமணமானார்! அதே நேரத்தில் அவருடைய சொந்த நிகழ்ச்சிகளும் அவருக்கு நிழலாடின.
ஆணும், பெண்ணும் வாழ்வின் இரண்டு கண்கள். அவர்களுள் உயர்வு தாழ்வு காட்டுவது தண்டனைக்குரிய ஒன்று என்று எண்ணி அதற்கான நடவடிக்கைகளிலே தீவிரமாக ஈடுபட்டார்.
பெண் கல்வி அவசியத்தையும், பொதுவாழ்வில் பெண்கள் தன்னைப் போலத் துணிகரமாக ஈடுபட வேண்டும் என்பதையும் குறிப்பிட்ட அவர், பெண் கல்விப்பள்ளிகளை ஆங்காங்கே உருவாக்கினார். அதில் ஒன்றுதான் பவானி பாடலிகா பாடசாலை.
1919-ம் ஆண்டு. வடநாட்டிலே பெண்களுக்கு என்று ஒரு மாநாடு கூடியது. அதில் தாசிகள் சேர்க்கப்படவில்லை. அதை மறுத்து அற்புதானந்தா சுவாமிகள்- திரு.வி.க. தேசக்தின் பத்திரிகைக்கும்-ஆன்னி பெசண்ட் ஆம்மையாருக்கும் தகவல் அனுப்பினார். அன்னிபெசண்ட் தனக்கு வந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு; திரு வி.க விடம் வந்து தாசிகள் யார்? தேவடியாள் யார்? இந்தக் கடிதத்தில் எழுதியுள்னதைப் பாருங்கள் என்று கடிதத்தைக் காட்டினார்.
அதற்கு திரு.வி.க. ஆங்கிலத்தில் அம்மையாருக்குக் கறும்போது Fallen.sisters என்றார்! அன்னி சிரித்து விட்டு அந்த மாநாட்டிற்கு ஒரு வாழ்த்துச் செய்தியை அனுப்புமாறு கூறினார்.
இளம் வயது சிறுமிகள் திருமணம் இந்தியாவில் பழங்காலத் தொட்டு நடந்து வரும் ஒன்று. அதை ராஜாராம் மோகன்ராய் போன்றவர்கள் எதிர்த்து ஒழிக்கப்பாடுபட்டதை அம்மையார் அறிந்த ஒன்று, அதனால் இளமை மனம் நடை பெறுவதை அம்மையார் எதிர்த்தார்!
சிறு வயதில் இளமை மணம் செய்யப்பட்ட சிறுமிகள் அவர்கள் கணவர்கள் என்று கூறப்படும் சிறுவர்கள் இறந்துவிட்டால் ஒன்று உடன்கட்டை ஏற்றுவர்கள்! அல்லது வெள்ளைப் புடவையைக் கொடுத்து, மொட்டையடித்து கைம்பெண் அதாவது விதவை என்று பெயரிட்டுக் கொடுமைப்படுத்துவதையும் அன்னிபெசண்ட் நேரிலேயே பார்த்தார்.
அதனால் விதவைகள் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் வளர வேண்டும் என்பதற்காக எழுதினார்: பேசினார்.சில செய்தும் வைத்தார்; அதற்கு பிரும்மஞான சயை ஆதரவு உண்டு என்று தீர்மானம் போட்டார்.
பிரும்மஞான சபை, உலகளாவிய. உலக சகோதர நேயத்தை அறிவுறுத்தும் சபையாகும். அதன் தலைவி அன்னிபெசண்ட் அம்மையார். அவர் பிறப்பில் உயர்வு தாழ்வு ஒழித்தார்; கலப்பு மணத்தைச் செய்ய முன்வருவோரை பிரும்மஞான சபை ஆதரிக்கும், ஆதரவு தரும் என்று எழுதினார்; பேசினார்.
சென்னையிலே கலாசேத்திரா பகுதியிலே போனால் ருக்மணி அருண்டேல் என்ற பெயரில் ஒரு வீதினயைவே பார்க்கலாம். அதன் வரலாறு என்ன? இதோ:
அருண்டேலும்- ருக்மணியும் ஒருவரை ஒருவர் உணர்ந்து காதலராயினர். இவர்களது கலப்பு மணம் பிரும்ம ஞான சபையிலே நடந்தது. அப்போது இத்த திருமணத்தை எதிர்த்துக் கிளர்ச்சிகள் நடந்தன.
சென்னையிலே மட்டுமன்று தென்னாடு முழுவதுமே கிளர்ந்து எழுந்தது. 'ஹிந்து' என்ற ஆங்கில ஏடு அந்தக் கிளர்ச்சிக்கு எண்ணெய் வார்த்து எழுதியது: “சுதேச மித்திரன்“ பத்திரிகைக்கு வீரமே வீறிட்டது.
கப்பலோட்டிய தமிழன் எனப்படும் வ.உ.சி.; கோபாவேசங்கொண்டு எதிர்ப்புத் துண்டு அறிக்கைகனை வெளி யிட்டுக் கிளர்ச்சி செய்தார். கடற்கரையிலே கூட்டங்களைக் கூட்டிக் கண்டித்தார்.
இத்த திருமணத்தை தடத்தும் பிரும்மஞான சபையையையும், அன்னி பெசண்டாரையும், திரு.வி.க. போன்ற தமிழரையும், அருண்டேல் என்ற கலப்பு மணமகனையும் மனம்போனபடி வசை பொழிந்து சாடினார்!
அவருக்குப் பிறகு கப்பிரமணியம் சிவா என்ற பெருமைகுரிய மற்றொரு தேசபக்தர் பொங்கி எழுந்து கொந்தளித்தும் பேசினார். திரு.வி.க.வின் பத்திரிகைக் காரியாலயத்திற்கு ஓடினார்!
சிங்க நோக்குடன் சிவா கர்ஜித்து, "ஒரு வெள்ளைக்காரன் அருண்டேல், நம் சென்னைப் பெண்ணை களவாடுகிறான். அதை முதலியாரே நீர் ஆதரிக்கிறீரா?” என்று முழங்கினார்!
"அதற்கு திரு.வி.க. பதில் கூறும்போது: காதல் நுட்பம் உங்களுக்குத் தெரியவில்லை; இந் நுட்பத்தை உணர்த்து கொள்ளாமலே நீங்கள் காலம் கழித்து விட்டீர்கள்,"
"காதல் கண்ணுக்கு வெண்மை-கருமை தோன்றுமோ காதல் நுட்பம் உணராதவர்கள் எப்படி நாட்டின் விடுதலைக்கு உழைத்தல் கூடும்? களவுதான் காதல், தொல்காப்பியத்தைப் பாருங்கள்."
"உங்களுக்கு அன்னி பெசண்டின் அரசியலில் மனம் செல்வதில்லை. அதனால், "அருண்டேல்-ருக்மணி மணத்தையும் தூற்றுகிறீர்கள்" என்று விளக்கினார். சிவாவுக்கு கோபச்சிரிப்பு தோன்றி திரும்பினார்.
பிறகு ருக்மணி அருண்டேல் திருமணம் நடந்தது. தொழிலாளர் சங்கத்துக்கு அழைத்து வந்து தம்பதிகளுக்கு திரு.வி.க. வாழ்த்துக் கூறி அனுப்பினார்.
பெண்ணுரிமைகளைப் பேணுவதற்கும். அவர்களை விழித்தெழச் செய்வதற்கும் ஓர் பெண்ணின அமைப்புத் தேவை என்று அன்னி பெசண்ட் பேசும்போது குறிப்பிடுவார். அத்தகைய அமைப்பு ஒன்று உருவாக யோசித்தார்.
அன்னி பெசண்ட் முயற்சியால் ஓர் அமைப்பு ஏற்பட்டது. அதற்கு, மாதர் இந்திய சங்கம் என்று பெயர் வைக்கப்பட்டது. அச்சங்கத்தின் முதல் தலைவராக டாக்டர் அன்னிபெசண்டே தேர்ந்தெடுக்கப்பட்டார்
ஆணாதிக்கச் சமுதாயத்திற்கு அடிமையாக அடங்கி ஆமைபோல, ஊமை போல வாழ்ந்த பெண்குலம்; தனது உரிமைகனைத் தட்டிக்கேட்கும் தைரியம் வரப்பெற்றதால், பெண்ணினம் அன்னி பெசண்ட் அம்மையை வாழ்த்திக் கொண்டே இருக்கின்றது.
எந்தத் துறையில் புதுப்பது முயற்சிகளை எடுக்கின்றாரோ அன்னி பெசன்ட் அந்தத் துறை எக்காரணம் கொண்டும் தோல்வியுறுவதில்லை. மென்மேலும் அத்துறைகள் ஓங்கியே வளரும் தன்மையிலே சிறக்கும்.
மாதர் இந்தியச் சங்கம் சென்னையிலே மட்டுமன்று, இந்தியா முழுவதும் கிளைகள் பெருகி நன்கு வளர்ந்து போராட்டங்களை இன்றும் நடத்திக் கொண்டுதான் இருக்கின்றன.
மாதர் இந்தியச் சங்கத்தில் படித்த பெண்கள், குடும்பப் பெண்கள், பணியாற்றும் பெண்கள், உட்பட்ட பலர் உறுப்பினர்களாகி, தங்களுடைய எந்த ஒரு பிரச்னைகளையும் தீர யோசித்து உரிமைகளைப் போராடியோ புத்தி துட்பத்தாலோ-இன்றும் அடைந்து வருகிறார்கள்.
ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் தகுதி, திறத்திலே குறைந்தவர்கள் அல்லர் என்பதற்கு, மாதர் இத்தியச் சங்கத் தலைவரே ஓர் எடுத்துக்காட்டல்லவா?
எனவே, பெண்களை வாழ்விக்கும் கலப்புமணம்; விதவை மணம் போன்றவைகட்கும் குருகுலமாகத் திகழ்ந்தது பிரும்மஞான சபை இளமை மணத்தை எதிர்த்துப் போராடியது, பெண் உரிமைகளுக்காக மாதர் சங்கம் கண்டது; இந்திய மக்களுக்கு சுய ஆட்சி உணர்வை ஊட்டியது; இந்தியக் கல்வி முறையில் புதிய முறையைப் புகுத்தியது; தாய் மொழியிலே கல்வி பெறும் முறை இருக்க வேண்டும் என்றது: இந்து பல்கலைக்கழகம் ஆரம்ப பெண் பாடசாலை ஆதிதிராவிடர் முன்னேற அவர்களுக்குரிய பள்ளிக்கூடம், ஆன்மீக மறுமலர்ச்சிச் செயல்கள் போன்ற துறைகளிலே அன்னி பெசண்ட் வெற்றிக் கொடியைப் பறக்க விட்டார்.
பெண்களுக்கு இந்த சமுதாயம் செய்யும் கொடுமைகளை, ஒவ்வொரு பெண்ணும் தனது மானத்துக்கு விடும் அறை கூவலாகக் கருத வேண்டும்!
அத்தகையச் சவால்களோடு பெண்கள் தன்மானத்துடன் போராடினால் இந்தச் சமுதாயத்தில் உள்ள ஒவ்வோரு பெண்ணும் நாணக் கவசம் பூண்ட மானத் தலைவியாக வாழமுடியும் என்பதற்கு அன்னி பெசண்ட் ஒர் எடுத்துக்காட்டு அல்லவா?