உள்ளடக்கத்துக்குச் செல்

அன்பு வெள்ளம்/மாந்தன் என்னை

விக்கிமூலம் இலிருந்து

மாந்தன் என்னை விரும்பினால்

தையும் ஆய்ந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லாமல் எல்லார்க்கும் புரிகின்ற விளங்குகின்ற சொற்களைக் கொண்டுதான் இயேசு தமது கருத்துகளை எடுத்துச் சொல்லி யிருக்கிறார். அதற்குகோர் எடுத்துக்காட்டு.

"ஒருவர் என்னில் அன்பு கூர்வாரேயானால் அவர் என் சொற்களின் படியே நடப்பவர் அவரை என் தந்தை, அன்புடன் விரும்புவார். அப்போது நானும் என் அன்பினை ஏற்றுக்கொண்டு என் சொற்படி நடப்பவர் எவரோ அவர் என்னுடன் தந்தையிடத்தில் ஒன்றுபடுவோம். தந்தையிடத்தில் இடம் பெறுவோம்."

மேலும் அவர் இயம்புகிறார்: "உன்னில் அன்பு மேலோங்கி உன்னை அவ் அன்பு ஆளும் என்றால் உன்னில் நான் வந்து உறைகிறேன்; உன்னுடன் இருந்து வாழ்கிறேன். உன்னுடைய இல்லறம் ஓங்கும். இல்லத்தினை, அன்பு ஒன்றே ஆட்கொண்டு நடத்திச் செல்லும் என்றால் அந்தப் பேருவகையில் நானும் உன்னுடன் பங்கு கொள்வேன்"

இல்லத்தில் கடவுளும் அவர்தம் மைந்தராம் இயேசுவும் வந்து வாழ்ந்தால் அவ் இல்லம் - குடும்பம் எப்படி பாதுகாக்கப்பட்டதாக இயேசுவும் வந்தடையும் சூழலில் சின்னஞ் சிறார்கள் வளர்ந்து வருவார்களேயானால் அவர்களுக்கு அதைவிட வேறு பெறும் பேறு இருக்க முடியாது.

உண்மை அன்பில் இயங்கும் குடும்பம், வாடகை, வரி, வாங்கிய பொருள்களின் விலையின் தொகையைத் தரவேண்டிய குறிப்புப் பட்டியல்கள் ஆகியவற்றை எப்படி ஏற்போம் என்று கலங்க வேண்டிய தேவையில்லை. அன்புறவின் அருளால் அவை தீர்க்கப் பெறும்.

பேதுருவின் படகில் அமர்ந்து கொண்டு, மக்களைப் பார்த்து இயேசு எப்படிப் பேசினார் என்பது நினைவிருக்கும். அப்படிப் பேசிய பின்பு, பேதுருவை நோக்கி 'பேதுருவே, நேற்றிரவு மீன் பிடிக்கச் சென்றனையே! ஏதேனும் கிடைத்ததா?' என்று கேட்டார் இயேசு.

"இரவெல்லாம் விழித்திருந்தும் வலை விரித்தும் ஒன்றும் அகப்படவில்லை" என்று பேதுரு மறுமொழி பகர்ந்தான்.

"ஆழமான இடத்திற்குச் சென்று வலையை விரியுங்கள்' என்று இயேசு அறிவுறுத்தினார்.

இயேசு சொல்கிறபடி நாம் செய்தால் மீன்கள் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஐயப்பாட்டுடன், "தங்கள் சொற்படி செய்-கிறேன்" என்றான் பேதுரு சொன்னபடியே, ஆழமான இடத்தை நோக்கிச் சென்று, வலையை விரித்தான். என்ன வியப்பு: வலையில் நிரம்ப மீன்கள் சிக்கின. மீண்டும் மீண்டும் வலையை வீசி இரண்டு படகுகள் நிரம்பும் அளவுக்கு மீன் பிடித்துக் கொணர்ந்தான் கரைக்கு! பேதுருவின் படகில் அமர்ந்ததற்கு ஈடாக பேதுருவுக்கு மீன் கிடைக்கச் செய்தார் இயேசு பெருமான்.

ஆகவே, இயேசு ஆண்டவரை, உன்னோடு அன்பினால் இருக்கச் செய்தால் நீ செலுத்த வேண்டியவற்றை, ஆண்டவர் இயேசுவே செலுத்தி உன் கடனைத் தீர்த்திடுவார். தந்தையும் மைந்தரும் உன்னிடம் இருக்குமாறு செய்து பார். பிறகு தெரியும் உன் கடன்கள் எப்படி ஆற்றப்படுகின்றன; உன் இல்லற வாழ்வு எப்படி தழைக்கிறது என்பதை நீ கட்டாயம் கண்டு உணரலாம்.

யோவான் 14:21 "என் கற்பனைகளைப் பெற்றுக் கொண்டு, அவற்றைக் கைக் கொள்கிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான். என் இடத்தில் அன்பாயிருக்கிறவன், என் இறைக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்".

ஆம்! இயேசுவானவர், தம்மை அவர்தம் அருள்மொழியினாலே வெளிப்படுத்துகிறார். உன்னை அன்பாக விரும்புகிற வரை அல்லது நண்பரைவிட மிக நெருக்கமாக உள்ளார்ந்த அன்பராக இயேசு விளங்குவதை நீ அறிந்து கொள்வாய். அவர்தம் திருவாய் மலர்ந்த மொழிகள் வாயிலாக, அவரில் நீ அன்பு கூர்ந்தால் அன்பு கொண்டால் அவரை உனக்கு வெளிப்படுத்திக் காட்டுவார்.

"அவரை அன்புடன் நேசிக்காதவர்களுக்கு இயேசு தம்மை வெளிபடுத்த மாட்டார். இயேசுவின் ஆடையைக் களைந்து, அம்மணமாக்கி, அவர் தலையில் முள்முடியைச் சூட்டினவர்களிடம் இயேசுவானவர் வாய்மூடி இருந்தார்; ஏதும் பேசவில்லை."

அவர் தம்மில் அன்பு கொண்டவர்க்கே தம்மை வெளிப்படுத்திக் காட்சியளிக்கிறார்.

யோவான் 15:9:10 "கடவுள் என்னில் அன்பாயிருக்கிறது போல நானும், உங்களில் அன்பாயிருக்கிறேன். என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். நான் என் கடவுளின் கற்பனைகளைக் கைக் கொண்டு, அவருடைய அன்பினை நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டு, என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்".

அன்பினில் வாழ்வது எப்படி என்று இப்போது விளங்குகிறதா? என்பதனைச் சற்றுக் கற்பனை செய்து பாருங்கள்!

ஒருவர் மற்றவர்க்கிடையே நிலவும் சச்சரவு, சண்டை, பூசல், கசப்புணர்ச்சி ஆகியவற்றினை முற்றிலுமாக ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து ஒழித்திட வேண்டுமானால், அன்பில் நிலைத் திருத்தலும் வாழ்வதுமேயாம்!

அன்பில் இணைந்து வாழும் கணவனும் மனைவியும் எப்படி வாழ்கிறார்கள் என்றால், விண்ணகத்தின் சூழலில் வாழ்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.