உள்ளடக்கத்துக்குச் செல்

அமிழ்தின் ஊற்று/வாழ்த்து

விக்கிமூலம் இலிருந்து
வாழ்த்து



ஆண்பெண்ணின் அகவ ரங்கின்
அற்புதக் கனவில் கூடி,
மாண்புடன் காதல் படி,
மகிழ்வலை நடன மாடி,
காணமில் கதைய மைப்பில்
நவரசம் கூட்டிக் காட்டி,
விணையின் பொன்னி சைபோல்
வெளிவந்த குழந்தாய் வாழ்க!

மனிதமா இனத்தில் இன்பம்
மாமழை பொழிந்து வாழ்வில்
இனிதான செல்வ மெல்லாம்
இசைததமிழ எனவ ளர்த்துப்
புனிதமா ஞானப் பைங்கூழ்
புதையாது காட்டும் அன்பே!
தனித்தொளிர் காதற் பாட்டின்
தண்மனப் பெட்ட கம்!

வாழ்கநீ இரண்டு ளத்தேன்
வார்த்திடும வாழ்க்கைப் பாட்டே!
வாழ்கநீ மனிதர்க் கிங்கு
மகிழ்தருஉம் அமுத வானே !
வாழ்கநீ உலகிற் இங்கோர்!
உறுதியை வழங்கும் பாலே!
வாழ்கநீ குடும்பங் காண
வளர்ந்திடும் குலவிளக்கே!