அமிழ்தின் ஊற்று/கதை!

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

கதை!
அழகினுக் கழகாய் மாளா
அழிகினுக் கணியாய் வந்த
பழந்தமிழ் நல்வி ருந்தே !
பல்கலைக் கூட்டு யிர்ப்பே !
இழைந்திடும் ஈருஉள் ளத்தின்
வனப்பில்லை இணைந்த சீரே !
பிழையிலா உன்நெஞ் சத்தின்
பெருங்கதை கூரு யோநீ!


அன்னையின் மடிஇ ருந்து
வந்தனை அவள்உள் ளத்தே
என்றுநீ புகுந்தாய் ? தந்தை
இதயத்தில் உலவி ளுயோ ?
என்னென்ன கண்டாய் ? அன்னைர்
எழிலினை மாந்தி வந்தாய் !
மின்னிய உளங்கண் டாயோ
மேலோனே கதையைச் சொல்லு !

உலகத்து மொழிக் ளெல்லாம்
உன்னுடை மொழிக் ளன்ருே
உலகத்துப் பொருள்க ளெல்லாம்
உன்னுடை பொருள்க ளன்ருே
உலகத்து உயிர்கள் எல்லாம்
உன்னுடை உறவும் அன்ருே
உலகத்து நாய கன்நீ
உரையாயோ கதைகள் கோடி!