உள்ளடக்கத்துக்குச் செல்

அமுதவல்லி/சாலையிலே ரெண்டு மரம்

விக்கிமூலம் இலிருந்து

10. சாலையிலே ரெண்டு மரம்!

‘கண்ணு முழி ரெண்டையும் தொறந்துப் புட்டியா?...’ என்று ஆர்வத்தின் தடுமாற்றத்துடன் கேட்டுக்கொண்டு வந்து நின்ற அந்தப் புது இளவட்டத்தை நொடிப் பொழுது இமை பரவாமல் பார்த்த செம்பவளம், மறுகணம் பேயடி பட்டவள் மாதிரி பொறி அதிர்ந்து எழுந்து, சுற்றும் முற்றும் பரிதாபமாக விழித்துப் பார்த்துவிட்டு, அதே சடுதியில், "ஆத்தாடியோ!... நானு மோசம் போயிப்புட்டேனே!.ஐயையோ!,. ஆத்தாளே!" என்று ஒலம் பரப்பலானாள்! பட்ட காலிலே படுவது போன்று படர்ந்து கிடந்த உவர்க் கோடுகளிலேயே கண்ணிரின் புதிய கோடுகளும் அழுத்திப் பதிந்தன. காதுப்புறங் களை ஒட்டிச் சரிந்து விழுந்த சுருள் அலைக் கேசங் களைத் தலையை உலுக்கி ஒதுக்கிவிட்டாள் அவள். முன் போலவே, நாற்புறமும் கண்களை ஒட்டினாள். ஒட்டி விட முடியாத நீள் மூச்சும் ஒட்டிக்கொள்ள முடியாத விதியும் அவளது பேதை நெஞ்சத்துக்குப் புயலாயினவோ?

கணங்கள் சில ஊர்கின்றன!

பேய்க்கணங்களா அவை?

செம்பவளம் ஏறிட்டு விழித்துப் பார்த் தாள். மேனி அசதி திருகி முறுக்கியது.

அந்த ஆள், பார்வையைத் தாழ்த்தி விட்டவனாக நின்று கொண்டிருந்தான். கன்னங்களின் இரு மருங்குகளிலும் நீர் முத்துக்கள் தவழ்ந்தன. தவழ்ந்து கொண்டிருந்த அந்தக் 'கறுக்கரிவாள் மீசை'யின் அடியோரங்களில் ஈரத்தின் கசிவு இருந்தது.

வாடிய கோல விழிகளை மூடித் திறந்தாள் அவள். கொட்டாவி பறந்தது.

நெஞ்சத்தின் மையத்தில் பதிந்து விட்டிருந்த அந்தப் பயங்கரக் காட்சி'யினை இப்போதும் அவள் தரிசிக்கத் தவறவில்லை. ஆத்தா இனிமெ நானு என்ன செய்ய ஏலும்?...இந்தப் பாளத்த மண் ணிலே மறுகாவும் கண்ணு முழிக்கிறத்துக்கு எம் மண்டையிலே விதிச்சுப்புடுச்சாங்காட்டி? மூத்தவளே, ஏதுக்கு இந்தப் பொட்டைக் குட்டியை இம்மாந் தொலைவுக்கு தலைமாடு கால்மாடாய் வீசியெறிஞ்சு அலைக் கழிக்கிறே?... உன்னோட குஞ்சில்லையா நானு?... ஏதுக்கு இந்த வசத்திலே சோதனை காட்டினே? ஐயோ! நானு பாவி ஆகிப்பூட்டேனே? . ஐயையோ!.. சமைஞ்ச பொண்ணு நானு, ஒஞ் சொத்திலே குத்து மண்ணையா வாரி வீசிப்போட்டேன்!... சொல்லு, ஆத்தா!... ஊம்! நீ பேச மாட்டே!... அதுக்காகவத்தான் விதி பேசிப்புடுச்சுப் போலே! ஆத்தாடியோ!...

நெஞ்சு பிளந்துவிட துடித்துக் கொண்டிருந்ததோ ?

நெஞ்சின் இதயப் பகுதியைப் பிடித்து அழுத்திக் கொண்டாள் அவள்.

எரிமலையின் வாயைப் பொத்தி விட முடியுமோ?

செம்பவளம் தலையைக் குவிந்து நேத்திரங்களை இறக்கினாள். கண்டம் தீயாக எரிந்தது. இறங்கியும் ஏறியும் விளையாடி-விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த மார்பகத்தை நோக்கினாள்.

ஊடுருவிப் பரவிய எரிச்சலை மூடிக் கொண்டிருந்த ரவிக்கையின் இருபுறங்களின் கொட்டடிப் புள்ளிகள் எரிச்சலின் நோவு புரியும் படி சுட்டின. கசங்கிக் கிடந்த மேலத் தொங்கலில் கிழிசல் பொன் வண்டாக பளிச்சிட்டது.

பதறிப் போனாள் அவள்.பதட்டத்தின் துடிப்புடன் மாரகச் சேலையை இழுத்து விட்டாள். தாழ்ந்த விழிகளை ஏற்றினாள்.

அந்த இளசு முகத்தை நிமிர்த்த வில்லை!

செம்பவளம் கட்டிலை விட்டு இறங்கி ‘தட தட வென்று ஒடத் தலைப்பட்டாள். தண்டைகள் குலுங்கின; 'மிஞ்சி'கள் கெஞ்சின.

அவன் திடுக்கிட்டு நிமிர்ந்தபோது, அவள் வெளிப் புறத்துத் திட்டி வாசலை எட்டி விட்டதைக் கண்டான். இடுப்பில் செருகி வைத் திருந்த திருக்கை வால் தார்க்குச்சியை சோற்றுக் கையில் “லாவிப் பற்றியவனாக, அவன் தப்படி போட்டுத் தாவினான்.

மந்தாரம் கலைந்த அந்தி பாங்கு சேர்த்து, பரிவு கூட்டி, பண்பு பிணைந்து, அன்பு துாவி விளையாடிவிளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த பொன் நிறைப் புனித வேளை அது!

 “எலே பொண்ணு! இந்தாலே ஒன்னைத்தான்!
கூவிக் கொண்டே ஓடினான். நிழல்கள் வளர்ந்து ஓடின.

கூப்பிடக் கூப்பிட பறிஞ்சிட்டியே சிட்டுக் குருவி யாட்டம்?” என்று கேட்டுக் கொண்டே வேலிப் படப்பின் தலைப்பில் வழி மறித்து நின்றான் அவன் இரைப்பு மிஞ்சியது.வேர்வை எஞ்சியது.

“என்னை வழி மறிக்கிறதுக்கு நீ... நீங்க யாராம்: எம்பிட்டு விதியைத் தேடிக்கிட்டு நானு போய்க்கிட்டு இருக்கிறேன் ! என்னை வழி மறிச்சு நிக்கிறது க்கு ஒங்களுக்கு என்னா அதிகாரம் இருக்குது? நீங்க யாருங்குறேன்?...”

பத்திரகாளியா அவள் ?

அவள் கண்கள் கொவ்வைப் பழங்களாயின. எரி தழலின் செம்மையை அவை ஏற்றிருக்க வேண்டும்.

வெந்தணல் அவள் நெஞ்சில் இடம் கண்டு நாழிகை ஐந்தாறு இருக்குமே!

அவன் அன்பு திறை செலுத்திய விழிகளால் அவளைப் பார்த்தான். கண்ணிர் திரையிட்ட கண்கள் அவளையே சுற்றின. ‘நானு யாருன்னுதானே கேக்கிறே? நானு ஒரு மனுசன்! அம்புட்டுத்தான்!” அவன் நாதழுதழுத்தது.

நீங்க மனுசன் என்கிறது. மெய்தானுங்க, ஐயா... ஆனா, நானு அனாதைச் சென்மமா ஆயிப்பிட்டேனுங்க; அபலைப் பொண்ணா ஆகிப்புட்டேனுங்க! நானு இனிமே இந்த மண்ணுக்குச் சுமை கல்லாட்டம் தானுங்க. ஆனபடியாலே, என்னை இனிமேயும் தடுத்து நிறுத்தாதீங்க; அதுக்கு ஒங்களுக்கு அதிகாரமும் கெடையாதுங்க. ஆமாங்க, நறுவிசான தாக்கலுங்க, ஐயா!’

அவள் பேசிக் கொண்டே, அவன் குறுமறுக்காக நீட்டிய தார்க்குச்சியையும் மோதித்தள்ளி விலக்கியவ ளாக, கதவுப் படலை எற்றித் தள்ளிவிட்டு வெளியே பாய்ந்தாள்.

புயலா அவள்?

“இந்தாப் பாரு!...”

அவன் அலட்டினான்.

சாலை நெடுகிலும் செம்மறிக்கிடா கும்பல் சேர்த்து வந்துகொண்டிருந்தது.

அவன் மீண்டும் அலட்டினான்.

அவள் ஒடிக் கொண்டேயிருந்தாள்.

அந்தியும் ஓடிவிட்டது!

சோளக் கொல்லைக்குக் கீழ்வசத்தில் இருந்த ஏற்றக் கிணற்றை நெருங்கினாள் செம்பவளம்.

"ஐயையோ! ஏலே பொண்ணு! அது எரக்க மத்த பாழுங்கிணறு! நில்லு"? என்று கூவிக் கொண்டே அவன் தலைதெறிக்க ஓடினான்.

சுக்கான் கல் இடறி விழுந்து, எழுந்து மீளவும் ஓடினான்.

அதோ கிணறு!

எட்டுந்தொலைவில் செம்பவளம் ஓடினாள்.

இந்தனவே இனிதமட்டும் ஒங்களதுக்குவாங்கிடு! அது எங்கிணறு, அதிலே விளுந்துச்சாகிறத்துக்கு உனக்கு அதிகாரத் இல்லே! என்னாக்கா அது எனக்கு இச்செந்தமான கேணி அப்படியே நீ மீறி விழுந்தியின்னா, அதே நொடியில் நானும் ஒங் கூடவே விளுந்து உசிரை மாய்ச்சிக்கிடுவேன்! நானு கும்பிடுற தாராடி சாமி சத்தியமான ஆணை இது: ம்!..." என்று வீறுகொண்டு முழங்கினான் அவன்.

சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட நல்ல பாம்பு கணக்கிலே செம்பவளம் அப்படியே-அங்கேயே நின்றுவிட்‌டாள்! ரத்தப் பசைமிகுந்த தளிர்மேனியில் கத்திபட்டதும் ரத்தம் பீறிடுமே, அப்படி அவள் நயனங்களிலிருந்து ரத்தம் கொப்பளித்துப் பீறிட்டது! ரத்தம்-ஆம்; ரத்தக் கண்ணிர் பொங்கி வழிந்தது.

அவள் முன்னே அவன் வந்து நின்றான்.

“நீ....நீங்க எதுக்கு என்னை இப்பிடிக்குச் சோதிக்கிறீங்க?’ என்று தேம்பினாள் செம்பவளம்,

அவன் நடுங்கினான். சோளக் கொண்டிையின் முனையை எட்டிப் பற்றி நெருடிக் கொண்டிருந்தன அவனுடைய முறுக்கேறிய விரல்கள். நானு ஒன்னைச் சோதிக்கலையே! நீ தானாக்கும் என்னைச் சோதிக்கிறே?’ என்று பதிலுக்குச் செப்பினான்.

நானு சோதிக்கிறேனா? பொய்! என்னையில்ல தெய்வம் சோதிச்சுப்பிடுச்சு சத்தமுந்தி!தெய்வம் இல்லே! யாரோ துப்புகெட்ட ஆம்பளை -யாரோ ஒரு ஈவிரக்கமத்த பாவி என்னைச் சோதிச்சுப்பிட்டான்! ஆட்டுக் குட்டியைக் குண்டுக்கட்டாக் கட்டி மடிக்கி அழுத்தி பதம் பார்த்துடானுங்க‌ ஒரு கொடுமைகாரன்!...அய்யையோ! எஞ்சாமியே!

அவள்‌ காட்டேறியாக பற்களைக் கடித்துத்துப்பினாள். விழிகள் ஏறிச் சிவந்தன. நெற்றித் திடலில் பச்சை நரம்புகள் புடைத்தன. செக்கச்சிவந்த நாசியின் முனையில் ரத்தம் கட்டி விட்டது. சுடுநீர் சரம் தொடுத்தது தலையில் அடித்துக் கொண்டாள்; முடி இழைகளைப் பிய்த்துக் கொண்டாள். மறு தரமும் அழலானாள். தொண்டைக் குழி எரிந்தது,

அவன் கண்களைத் துடைத்துக் கொள்ளக்கூட நினைவிழந்து அவளையே ஆழ்ந்து நோக்கினான். “மெய்யாலுமா? அதாலே தான் நீ சாலை மரத்துக் கிளையிலே உருவு சுருக்குப் போட்டு அதிலே ஒங்கழுத்தை மாட்டிக்கிட்டு நாண்டுக் கிட இருந்தியா? நல்லவேளை, தாராடிச்சாமி எங்கண்ணுப் புறத்துக்கு ஒம்பிட்டு மூஞ்சியைக் காட்டிச்சு. கண்ணு முடி, கண்ணைத் தொறக்கிறதுக்குள்ளாற ஒன்னைக் காப்பாத்திப் போட்டேன்!” என்று சொல்லி, அவளை ஆதர்வாக நெருங்கினான். “ஒன்னை இப்படி ஏச்ச பாவியை இன்னிக்கு இல்லாங் காட்டியும் எப்பவானும் ஒரு கடுத்தம் எங்க குலதெய்வம் எங்கிட்டே கொண்டாந்து சிண்டுப் பிடியாய் நிறுத்தாமத் தப்பாது; அப்படியே கட்டாயம் செய்யும் தெய்வம், அப்படிச் செய்யலைன்னா அது தெய்வம் இல்லே! என்னை நம்பு: ஒன்னைக் கெடுத்த அந்தப் பாவியை அந்த ஈன மிருகத்தை-அந்தப் பாழத்த வெறியனை நானு இந்தத் தார்க்குச்சியாலவே கும்மாங் குத்தாக் குத்தி குத்துயிரும் குலை உயிருமா நதக்கி அடிச்சுப் போட்டுப்புட்டு, அவனை உங்காலிலே விளுந்து மாப்பு கேட்டுக்கிட வச்சுப்புடுறேன்!... அப்பாலே அவன் எங்கிட்டாலும் ஒரு மரத்து உச்சியிலே தான் மாண்டுக்கிட்டுக் கிடப்பான், மெய்யாலுமே ரோசம் உள்ள பொறப்பாய் அவன் இருந்தாக்க ஒரே ரத்தத்துக்குப் பொறந்தவனுக்கு மானமும் ரோசமும் தான் உசிரு!... வரட்டும்!...சரி... நீ வா!.. குடி சைக்குப் பறிஞ்சு உண்டனப் பேசலாம்!” என்று அவன் கெஞ்சி  னான். கட்கத்தியிலிருந்து கைக்குத் தாவிய தாரை மீண்டும் இருப்புக்கு இடம் மாற்றினான அவன்.

அடித்துப் போட்டாற் போன்று அசதி வலுத்தது; அவனையே வெறிக்க வெறிக்கப் பார்த்தாள் செம்பவளம்.

அவன் முகத்தில் ஓரிடம் தரிசு வைக்காமல்

கண்ணீரின் தடயங்கள் தடம் காட்டின. ‘நானு கண்ணு முழிச்சடியுமே நீங்க ஒரே ஓட்டமா வந்து என் முன்னரிக்கே நின்னிங்க. அதுதொட்டு நீங்க கண்ணு கலங்கிக்கிட்டே இருக்கீங்க! இந்தப் பேதைக் கன்னிக்காவத் தானுங்களே! ஆமா, இம்மாந்தூரம் எம்பேரிலே பச்சாதாபப்படுகிற நீங்க யாரு? என்னைப் பத்தி இம்புட்டு அக்கரைப்படுற நீங்கதான் என் தெய்வமா?... சொல்லுங்க!...’ என்று ஓங்கிய குரலில் கேட்டாள் அவள்.

‘நானு...நானு மனுசன்! சாதாரணமான ஒரு ஆள்! நாலு பேரைப் போலவே குறையும் நெறையும் கொண்ட ஒரு ஆம்பளை நானு! என்னைக் காளியப்பன் அப்ப்டியின்னு அழைப்பாங்க! ஒம் பேரு?...’ என்று எதிர் வினா சொடுக்கினான் அவன். கண் களைத் துவாலை முண்டாசை உதறித் துடைத்துக் கொண்டான். பாகவதர் கிராப்பைக் கோதிவிட்டுக் கொண்டான். சொல்லுகிறேன்! ஒம்பேரு என்ன? என்னை நம்பு! ஒன்னை நம்புறவன் நானு! ஆனதாலே என்னை நம்புங்கிறேன்: ஒம் பேரு என்னை அடுத்து, மைத்த காக்கைக் குருவிக்குக்கூட தெரியாம கமுக்கமாய் பார்த்துக்கிடுவேன். நெஞ்சை ஒளிச்சு வஞ்சகமா? சும்மா சொல்லு!’ என்று உணர்ச்சிச் சுழிப்புடன் பேசிய அவன், அவளுடைய கைகளைப் பற்றிக் கெஞ்ச முனைந்து, அவளை நெருங்கிவிட்  டான். அரைக் கணத்தில் அவன் நிலை மாறியது பின்வாங்கிக் கொண்டான்.

காளியப்பனின் வைரக்கட்டு கூடிய மேனியை மறுமுறையும் பார்த்தாள் செம்பவளம். கம்பீசமும் ஆண்மையும் அன்பின் பண்புடன் பொலிந்தன; மனிதாபிமானம் குழைந்த அம்முகத்தை அவள் நம்பினாள். அ.ண்.ணா...ச்.சி என்று ஒவ்வொரு எழுத்தையும் கூட்டிப் போட்டு, ஒரே குரலில் கூவிவிட எண்ணியவளின் .ெ ந ஞ் சி ல், ‘'சொல்லப் போனா, குத்தமில்லை! என்னை நம்புலே நீ! என்ற குற்றச் சாட்டும், அக்குற்றத்தின் அநியாயம் போல ஒலித்த தேம்பலும் மட்டையடியாக விழுந்தன. எண்ணியதை மறந்தாள்.

‘எம் பேரு செம்பவளம்!” என்று செப்பினாள். செம்பவள உதடுகள் துடிப்புச் செய்தன. தெய்வச் சிலையை பார்ப்பதை நினைந்து, அவனைப் பார்த்தான். அவனுடைய கண்ணீர் அவளுக்கு நம்பிக்கை ஆயிற்று!

அவன் ஜீவனுடன் சிரித்தான்!

அந்தி மயங்கிவிட்டது.

‘இப்ப நானு என்ன செய்யணும்?

‘ஏங்கூட எம்புட்டுக் குடிசைக்கு நீ வர வேண்டும்!”

“வந்து’

“எஞ்சோத்துப் ப ரு க் கை ைய ச் சாப்பிட வேணும்!”

‘சாப்பிட்டுப்புட்டு..." “ அப்பாலே ஒம் மனசுப்படி செஞ்சுக் கிடலாம்!’ ‘ மெய்யாலுங் காட்டியா?”

‘ஆமாலே! நம்பு புள்ளே!’

புள்ளே யா?”

‘நம்பு செம்பவளம்’

“எங்க நாட்டுப்புறத்திலே புள்ளேன்னாக்க’ பொஞ்சாதியைத் தான் சுட்டும். கொண்டவளைக் கொண்டவன் அப்பிடித்தான் அழைப்பானுங்க!

‘அப்பிடியா?”

அவள் ஏன் சிரித்தாள்?

அவனும், சிரித்தான்!-ஏனோ?

சிரிப்பு விதிக்கு மாத்திரம்தான் சொந்தமா என்ன?

“ பைய நட..

சோளக் கொல்லை, மிளகாய்ப்பாத்தி, கேணி, பலாமரக் குழு, நிலக்கடலை தாக்கு- இப்படி அறிமுகப்படுத்தியவனாக அவன் முன்னே நடக்க, அவள் அவன் தடத்தை ஒற்றினாள். வைக்கோல்போர் மறுகியது.

வானத்தாய் கறுப்புப் படுதாவை விரித்து உதறினாள். அந்தப் படுதாவில், தன்னுடைய தர்மமிகு பண்புகளை உடுக்களாக்கி விளையாடி-விளையாட்டுக் காட்டத் தொடங்கினாள்!

அதோ காளியப்பனுக்கு உடைமை கொண்ட

குடிசை வந்துவிட்டது! பொங்கலுக்கு பூசிய காவி வர்ணம் எடுப்பாக விளங்கியது! மொள்ளமா தலையைக் குனிஞ்சிக்கணு உள்ளுக்குள்ள வா, செம்பவளம்’ என்று எச்சரிகை விடுத்தான் காளிப்பன். முழங்காலுக்கு மேலாக கோவணக்கட்டு கட்டியிருந்த சாய வேட்டியை அவிழ்த்து விட்டான். இடதுகைப் புஜத்தில் கட்டப் பட்டிருந்த ‘தாயத்து பளிச்சிட்டது. பொன்னுக்குத் “தக்கனை காந்தி.

குனிந்த தலை நிமிராமல் உள்ளே நுழைந்தாள் செம்பவளம், சரிந்து விழுந்த சேலை மேலாக்கைக் கொய்து போட்டுக்கொண்டாள். நிலைப்படியைத் தாண்டி, பதுங்கிக்கொண்டே உள்ளே நுழைத்து சிதறிய சீதளக் கதிர்களின் மயங்கிய ஒளியின் துணை கொண்டு அவள் சுற்றிச் சூழ பார்வையைச் சுற்றினாள் .

எட்டடிக்குச்சு அது. மண்ணாலான கட்டைச் சுவர். முகட்டில் பனை ஓலைக்கட்டு. சாணம் போட்டு மெழுகி, உரை கல்லால் தேய்த்துப் பழகியிருந்த மண் தரை. முகம் பார்த்தால் முகம் தெரியும். ஆனால், அவன் அதற்கென்று தனியே முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று வைத்திருந்தான். அதோ, ஈசான்ய விட்டத்தில் பனஞ்சப்பையின் தாங்கலில் தொங்கிக் கொண்டிருக்கிறது ஆடி நூவரலியாவில் கிரயம் செய்தது அது. சல்லி: கூடுதல்:

‘செம்பவளம்...” எ ன் று குரல் ஈர்த்தான் அவன். தெற்குப் பார்த்த குச்சில் அவனும் தெற்குப் பக்கம் பார்த்தவனாகக் கூப்பிட்டான்.

“சும்மா உள்ளுக்கு வாங்க. தலைபத்திரம்: என்றாள் அவள். குரலில் எவ்வளவு பாசம் பெருக் கெடுத்தது:” பூவை எஸ். ஆறு முகம் 209

அவன் தயங்கியபடி தென்பக்கம் திரும்பி உள்ளே வாகுபார்த்து நுழைந்தான். கட்டுவிட்டிருந்த ஒலைகளின் இடுக்குகளை ஏய்த்துவிட்டு, உள்ளே சிந்திய வெள்ளைப் புள்ளிகளின் ஜா டையில் அவனுக்குக் கை விளக்கு தென்படத் தவற வில்லை. கைப்பதனமாகப் பற்றினான். சீமை எண்ணெய்ப் போத்தலும் தீக்குச்சியும் விளக்குப் பொருதின.

‘குந்து...!” ‘குந்துங்க!”

ஒரே தொனியில், ஒரே பாவத்துடன், ஒரே பாவனை கொண்டு புறப்பட்டு ஒலித்தன இரட்டைக் குரல்கள்.

ஓலைப்பாயில் சரணடைந்தாள் செம்பவளம். எதிர்த் தரப்பில் காணப்பட்ட கவனம் அவள் பார் வையை ஈர்த்தது. கொஞ்சமுந்தி நானு படுத்து எந்திருச்ச எடம் அதான் போல! கூதல் காற்று தறி கெட்டு வீசிற்று. பொட்டல் வெளியில் காற்றுக்கா பஞ்சம்?

“ஆமா, நானு எப்படி இங்கிட்டு வந்தேன்?”

‘நீ செத்துப்புட எத்தனம் செஞ்சப்ப, நானு வந்து ஒன்னைக் காப்பாத்தி என்னோட பொட்டி வண்டியிலே ஒன்னைக் கிடத்தி ஒரே விரட்டிலே இங் கிட்டுக் கொண்டாந்து சேர்த்துப் புட்டேன். ஒனக்குச் சுயபிரக்ஞை வரலே. அந்தாலே தெரியுதே கொட்டகை, அதிலே கட்டிலுமேலே ஒண்ணைக் கிடத் தினேன். குவளையிலே தண்ணி மொண்டாந்து உம்மூஞ்சிலே தெளிச்சேன், மூச்சுக்காட்டலே 2 : 0 அமுதவல்வி

நீ ஆனா, ஒனக்கு மூச்சு மட்டும் உள் வட்டமா அடங்கிப்போச்சு. அதொட்டித்தான் எனக்குத் தெம்பு ஊறிச்சு, சோளத் தட்டைக்குத் தண்ணி கொளுவி பனுக்கிப்புட்டு திரும்பியாந்து பார்த்தேன். நீ கண்ணைத் தொறக்கலே! ஆத்தர மூத்தவளுக்கு மேலைக்கு பள்ளயம் படைக்கிறதா நேர்ந்து கிட்டேன். நொடி கழிச்சு, செவலைகுப் புண்ணாக்கு உடைச்சுப் போட்டு தண்ணி காட்டிப்புட்டு ஒடியாந்தேன். அப்பதி தான் நீ கண்ணு ரெண் டையும் தொறந்து பரிதாபமா முழிச்சுப் பார்த்தே! தெகை தப்பி இருந்திச்சு ஒங்கண்ணுக ஆத்தாடி இப்பத்தான் கொஞ்சத்துக்கு கொஞ்சம் உம் மூஞ்சியிலே களை உண்டாகியிருக்குது!’ என்று அவள் முகத்தைப் பார்க்காமல், சூன்யத்தில் கண் பதித்து, அவள் முகத்தைப்பற்றி வியாக்கியானம் செய்தான் காளியப்பன். பாயின் வட முனையில் பட்டும் படாமலும் அவன் கால்பரவி உட்கார்ந்து கொண்டான்.

“ஆமாம்; எனக்கிண்ணே தான் ஒங்களை இந்தப் புறத்தாலே எஞ் சாதிச்சாமி தட்டி விட்டிருக்க வேணும்!”

இருக்கும், இருக்கும் சனிச்சந்தைக்குப் போயிட்டுத் திரும்பு காலிலே, தானே நானு ஒன்னைக் கண்டுக்கிட வாய்ச்சிது”

“அதே எஞ்சாமி ஓங்களை ஒரு பொட்டுப் பொருளுக்கு முன்னாடியே அங்கணே கூட்டியாந்து விட்டிருந்தாக்க, நானும் தப்பிச்சிருப்பேன்; ஒசந்த மானமும் பொழைச்சிருக்கும். ஐயையோ!... சாமியே இந்தப் பாவத்தை நானு சொமக்கிறத்துக்கு நானு என்ன பாவம் செஞ்சேனோ?... ஆத்தாளே!' பூவை எஸ். ஆறுமுகம் 21

தனக்குத் தானே புலம்பி அப்புலம் பலின் அழுத்தத்தில் தன்னைத் தானே அழுத்திக்கொண்டு திக்கு முக்காடினாள். திமிலோ கப்பட்ட இதயம் தரை மீனாகத் தத் தளித்தது.

“அழுவப்புடாது செம்பவளம். நானு அந்தத் தருணத்துக்கு வந்திருந்தாக்க, அந்தப் போக்கிரிப்பய மவனைக் குதறி எடுத்து அவன் குருதியைக் குடிச் சிருக்க மாட்டேனா, சாமியாடிச் சாம்பானுக்கு மிஞ்சி? எம் பொசிப்பு அம்மட்டுத்தான்! ஊரு பேரு மூஞ்சி முகரை தெரியாத அந்தப் பாவிமவன் தப்பிச் சுக்கிட்டான்!. ஆமா, அந்த ஆளை தடயம் கண்டுக்கிடக்கூட ஏலலையா?... எங்கானும் கண்டாக்கூட இனம் காண ஏலாதா?-’ என்று பதட்டம் மூள விசாரித்தான் காளியப்பன்.

“ நானு நடப்பைப் புட்டுவச்சுச் சொன்னாத்தான் ஒங்களுக்கு அல்லாம் மட்டுப்படும். எனக்குப் பொறந்த மண்ணுநா குடி, அரசர் குளத்திலே எங்க அம்மான் ஆடு இருக்குது; அங்கிட்டாலே விருந்தாடி பறிஞ்சேன். அம்மான் மவன் காரங்கதான் இந்தத்தை கடோசியிலே எனக்கு வாய்ச்சிட்ட மச்சானாக ஆக இருந்திச்சு. அதுக்கு எந்தலையிலே தம் எழுதிப் போடலை நானு விருந்துக்கு உட்கார்ந்துப்பிட்டு, மதியத்துக்கு- அதான் இன்னியப் பொளுது மதியத்துக்குத் தாண்டி அடி சாயத்தலைப் பட்ட பொளுதுக்கு, நானு காட்டுப் பக்கம் நாடி வந்தேனுங்க. அம்மன் வூட்டு காடு கண்ணுங் களுக்குப் புதுப்புல்லு கொஞ்சம் செதுக்கிப் போடுவோமேயின்னு உளவாரமும் தட்டுக் கூடையுமாய்ப் பறிஞ்சு நடந்து, புல் கண்ட இடத்துக்கு வந்தேன். வெயிலோட சுள்ளாப்பு தணிஞ்சு வந்திச்சு, பாதச்சூடு பதவிசானது ஆனதாலே, சாவகாசமாக் குந்திக் 2 12 அமுதவல்லி

கிணு புல்லு செதுக்க ஆரம்பிச்சேன். முசுன்னு மப்பு வேறே மானத்திலே விளுந்திச்சு. அந்தச் சமயங்கண்டு, பேய் பிசாசு தன்மையிலே யாரோ ஒரு ஆளு. பின்வசமா நலியாம வந்து லபக்கினு ஒரு தடித்துப் பட்டியை எம்மூஞ்சியிலே போட்டு மூடி அப்பிடியே குண்டுக் கட்டாத் தூக்கி லாந்திக்கினு போயி என் னமோ ஒரு பத்தை ஒண்டலுக்கிட்டே என்னைப் போட்டு ..... ஐயையோ! ஈனச் செம்மம் ஆகிப் போனேனே! ஆத்தாடியோ! ஐயையோ!...’

வெடித்தது விம்மல். கைகள் இரண்டையும் தரையில் ஓங்கி ஓங்கி அடித்தாள். நலிந்துபோயிற்று. அவள் முகம். நீர்ச்சுழிப்பு வேறு. ‘எம் மூஞ்சி துப்புரவா மூடப்பட்டு போச்சு. அதனாலே வந்த ஆம்பளையோட மூஞ்சி முகரையை நானு கண்டுக்கிடவே வாய்க்கலே எம்பலம் எனக்கு உதவலே. எம்பிட்டு ஆங்காரத்துக்கு மாத்திரம் அப்பைக்கு ஒரு பாதை கிடைச்சிருந்திச்சு தின்னா, அப்பவே அந்த ஈன மிருகத்தை இந்தப் பல்லாலேயும் இந்தச் சூரி நகத்தாலேயும் கடிச்சுக்கு தறித் துப்பிப் போட்டிருப்பேனே! அதுக்குக் கூட ஒரு வழி . கிடைக்காமப் போயிட்டுதே! இனிமே, அந்தப் பாளத்த பாவியை நானு எப்பிடிங்க இனம் காண ஏலுமுங்க? ஊருக்கு ஒசந்தவளே! அப்பவே என்னைக் கொண்டுகிட்டுப் போயிறப்புடாதா? ஐயோ!’ மீண்டும் அழுகை மீண்டது.

ஒருகல் தொலைவில் இருந்த புண்ணிய பூமியின் அமைதி இங்கே வந்து அனைத்தது. எங்கோ கதறிய சாக்குருவி களின் அபயஒலம் இங்கே வந்து ஒடுங்கியது. வங்கு நாயின் ஊளைச்சத்தம் வேறு மடங் கியது. பூவை எஸ். ஆறுமுகம் ais

சரி, சரி. நானு ஒரு புத்தி கெட்டவன். சையே நோண் டிக்கிட்டு இருக்கிறேன்...சரி அந்தச் சனியனைப் பத்தி இனிமெ நெஞ்சுக்குக் கொண்டா ரவே புடாது. அதான் லாயக்கு : இப்ப நீ எங்க ஆட்டுக்கு விருந்தாடிப் பொண்ணு நேரத் தோடவே இங்காலே வந்திருந்தா, ஒரு கோழியைத் தட்டிக் குழம்பு ஆக்கிப் போட்டிருப்பேன். அல்லாம் விடியட்டும். விருந்து ஒடியா போகுது? இப்ப நீ ஏதாச்சும் சாப்பிட வேணும். பாக்குக் கடிச்சுத் துப்புற நாழிகை நீ இந்த .வெத்திலைக்குட் டானிலே இருக்கிற பாக்கைக் கடிச்சுக்கிட்டு, வெத்தி லையையும் மென்னுக்கிட்டு இரு. மறந்திடாம, மூனாவதையும் சேர்த்துக்கிடு நானு சோறு களைஞ்சு போட்டு வடிச்சுப்பிடுறேன். காலம் பற ஆக்கின குழம்பு இருக்கு. சுண்டல் சாதம் வேறே ஊர்ப்பட்டது மிஞ்சியிருக்குது! போதுமில்ல. இல்லேன்னா, அந்தாலே நிக்குது கோழி, அதைப்பிடிச்சாந்து தலையைத் தட்டட்டுமா?” என்று ஒரே மூச் சில் பல விவரங்களை அவள் முன் வைத்தான் காளியப்பன். அகன்று விரிந்திருந்த மார்பகத்தில் துளிர்த்திருந்த வேர்வையை லேஞ்சுகொண்டு துடைத்தான். பிறகு, அவளை உன்னிப்பாக நோட்டம் பதித் தான். - -

அவளோ அவனை அதிசயமாகப் பார்த்தாள், மீன் விழிகளிலே மீன் களைக் காணோம்; விந்தைக் குறியீடுகள் தாம் காணக் கிடத்தன: காணக் கிடைத்தன! ஆமா, ஒங்க பொஞ்சாதி?’ என்று மெல்ல இழுபறியாக ஒதுக்கினாள்.

நல்லாக் கேட்டே பொஞ்சாதி தானே? எருச்சி வேளான்கிட்ட அச்சாரம் கட்டி செய்யச் சொல்லி ஏகப்பட்ட கிழமை நழுவிப்பிடுச்சு. பொஞ்சாதியைச் செஞ்சு கொண்டாரலே!" 2 I & - அமுதவல்லி

அவனுக்குப் பதிலாக அவள் சிரித் தாள்.

“என்னாங்க இது? தடம் தப்பி வந்த பொன்னாச்சேயின்னா , காதுகுத்தப் பார்க்குங்க. வெட்டு ஒண்னு துண்டம் ரெண்டாச் சொல்லுங்க. ஒங்களுக்குக் கண்ணாலம் கட்டியாச்சா? இல் லியா?” சிரிப்பின் லயம்மாறி, வெஞ்சினத்தின் சாயல் லேசாக அகம் காட்ட முனைந்திருந்தது.

அவள் முகத்தை நேருத்திரமாக நோக்கவில்லை அவன். ‘நானு இப்பைக்கு ஒண்டிக் கட்டை, இன்னும் எனக்குக் கண்ணாலம் ஆகலே!”

செம்பவளம் ‘சடக்கென்று எழுந்தாள்: “ ஒத்தை ஆம்பளையோடே இந்தக் குட்டி இந்தக் குடிசையிலே தங்குவா இங்கிறது. ஒங்க நெஞ்சோட சபலம்? அப்படித் தானுங்களே, ஐயாவே?’ என்று சத்தி சிவசங் கரியின் பாங்கினிலே விளித்தாள் அந்தக் காட்டுப் பூ, ‘ஏமாந்த பொண்ணு... சதாவும் ஏமாந்துப்புடு மின்னு பொய்க் கணக்குப் போட்டுப்புட்டீங்களாக் கும்?’ என்று அவள் கண்டத்தைக் கடினமாக்கிக் கேட்டாள். ‘சொல்லுங்க... எம் மூஞ்சியைப் பார்த்துச் செப்புங்க. என்னை நல்லாப்பாருங்க. குத்தமில்லே ஒங்களுக்கு நெஞ்சிலே ஓங்களை யும் மீறிக் தினு வேறே ஏதாச்சும் யோசனை கடிலம், குயுத்தி இருக்குதாலே உடைச்சுப் பேசுங்க அப்பன்

இன்னன் பொல்லாதவரை ஆக்கிப்புடிாதிங்து ஆம்:

இப்பவே சொல்லிப் பூட்டேனுங்க ஆடுக்குக்கரன்

புச்சாட்டித்தான்

இன் முனையில் சினம

ஒளிந்தது. பூவை எஸ். ஆறுமுகம் 2I5

‘செம்பவளம், என்னை என் னான்னு நெனைக்கப் பேசறே?... பொண்ணாச்சே, அந்நியம் அசலாச்சே, பாவம் எக்குத்தாப்பா மனசொடிஞ்சு வந்திருக்குதேயின்னு வாயடைச்சுக் கிடக்கிறேன்! நிதானமாப் பேசு! நானு ஆம்பளை... மனுசன்! நானு புறம்போக்கு இல்லே! போகுடி நாட்டானும் இல்லே! எனக்கு காடு, கரை, நிலம் நீச்சு, சொத்து சுகம் அல்லாம் இருக்குது எனக்கு மனசுக்குப் பிடிச்ச பொண்ணு தட்டுப்படலே! ஆனதாலே , கண்ணாலம் கட்டிக் கலே: மத்தப்படி, நானு நெனச்சா, எம்பிட்டோ சமைஞ்ச குட்டிங்க வந்து எங்காலடியிலே தவம் கெடப்பாங்க... ஆனா, நானு யோக்கியமானவன். எனக்கு மானம் ஒசத்தி! ஆனா, நீ தப்புப் புள்ளி கணிச்ச மாதிரி, நானு ஒன்னை வஞ்சனை செஞ்சுப்புட மனசிலே இத்தி கூட நெனைக்கலே, அந்த மாதிரி சமயம் உண்டாகவே இல்லே! ... அப்படியே எம்மேலே ஒனக்கு நம்பிக்கையும் நல்லெண்ணமும் உண்டாகாங்காட்டி, இப்பவே என்னைக் கொன்னுப்புடு, ...இந்தா கொடுவாள்!’ என்று மொழிந்து, கூரைக் கட்டில் இருந்த கூர்மைக் கத்தியை எடுத்து அவளிடம் கொடுத்தான்!

செம்பவளம் நரது நஜித்தாள், முத்தைஉறிஞ்சிக் கொண்டாள்.'விசீம்ப்ல கிளர்ந்தது கண்களின் பளபளப்பை விண்ணொளி கூட்டிக்காட்டியது என்னைச்சமிச்சுப்பிடுங்க! அதை ஆமா மெய்வுக லுமே நீங்களங்கமுனியாடிம்தான் காமியேம்னுகங்க ரூபத்திலு ஏன் வரப்புடின் தகம்?. உங்க இண்டு வலுக்குள்ளே இருக்கிறப்புண் , எனக்கு ஏதுங்க பயம்வருது:ஆசிங்கி நீங்கலுத்தங்கழ் இறகுத் குந்திக்கிடங்க. நானு:இக்கடன்கி தரத்திவேகிக்கது .2 16 அமுத வல்வி

கொதிக்க வச்சுப்புடுறேன். சா மான் சட்டுகளை அள்ளுங்க!’ என்று துருசு படுத்தினாள்.

நல்ல மூச்சு வெளிவந்தது காளியப்பனிடமிருந்து, கொடுவாளை இருந்த இடத்திலே சேர்ப்பித்தான்.

வெரசுபடுத்துங்க. பாவம், ஒங்களுக்குப் பசிக்கும்!” என்றாள் செங்கமலம்.

அவனுடன் சுவரொட்டி விளக்கும் ஓடியாடியது, பிறகு அவளுடன் அணைந்தது, அணையாத விளக்கு.

அவள் அடுப்படிக்குள் அடியெடுத்து வைத்தாள், அரிசியுடன்.

அவள் அடுப்படியை விட்டு அடி மீட்டெடுத்தாள், சோற்றுடன்,

‘இந்தாப் பாருங்க, ஒங்களைத் தானுங்களேஎன்று அலட்டினாள் செம்பவளம். கழுத்தின் அடி வட்டத்தில் அப்பியிருந்த வேர்வையைச் சேலை முகத் தலைப்பினால் துடைத்தாள். எரிச்சல் விளைந்தது. குனிந்துப் பார்த்தபோது, நகக் கீறல்கள் இரண்டு ‘குறுக்குச் சாலோடி இருந்தன. அட பாவி . பாதகா கச்சையின் கீழ் முடிச்சுக்களை “லாகவம் பார்த்தபடி நேரே நடை பயின்றாள். வண்ணக் கலாபமாக ஆனாளோ என்னவோ? -

பிறை வடித்த பால் வண்ண நிலவில் காளியப்பன் எதிர்ப் புறம் பார்வையைச் சாடியபோது, செம்பவளம் அவன் கண்களிடை மிதந்தாள். மாடுகளுக்குத் தீவனம் வைத்த பின்னர், திரும்பினான். அவன் கையில் பூவரசுத்தடுக்கு இலை ஒன்று தையல் கண்டு இருந்தது. தையலுக்கல்லவா? அவன் கொட்டாவியை வெளியேற்றிக்கொண்டு வந்தான், பூவை எஸ். ஆதுமுகம்

தூக்கம் கண்ணைச் சுத்துதுங்களா?”

‘பசி தான் கண்ணைச் சுத்துது, வெள்ளன கஞ்சி குடிச்சது!...”

சுருக்கண் மூஞ்சியைக் கழுவிக்கிணு ஒடியாங்க!”

அவனுடைய குறிஞ்சிப்பாடி வட்டி"யில் சோறு ஆவி பறந்தது. வெஞ்சனத் தட்டில் தட்டின்றி பதார்த்தங்கள் காட்சியளித்தன. பழைமை மாறாக் கோலம்!

முகத்தைத் துடைத்துக் கொண்டு வந்தான் காளியப்பன்.

‘துண்ணுருவேனுமா ?” என்று கேட்டுக் கொண்டு விபூதி மடலை அவனிடம் நீட்டினாள். மருதாணி நகங்கள் மின்னின.

அவன் பூசிக்கொண்டான். குந்தினான். வட்டிலை நகர்த்திக் கொண்டான். அந்த இலையிலே நீ உண்ணுக்க?’ என்று ஆலோசனை பகன்றான்.

“ஊம் கொட்டினாள் அவள்.

‘உண்ணுங்க!

“முதலிலே நீங்க உண்ணுங்க. அதான். வளமை”

‘நீ எம்புட்டு விருந்தாடிப் பொண்ணாச்சுதே?

ஆமா, விருந்துக்கு வந்து வாய்ச்சவள்தான். அட்டி சொல்லலோ நானு பொட்டைக் களுதை பொறகாலே சாப்பிட்டுக்குறேன்!” -

சும்மா நீயும் சாப்பிடு!”  அமுத வல்லி

மேலு குளிக்கோணுமா? சொல்லு, நானு அங்கிட்டாலே ஒடிப்புடுறேன்!”

‘அது ஒண்ணு தான் கொறை ச்சல் எனக்கு! நீங்க சாப்பிடுங்க! நானு சொன்னாச் சொன்னதுதான்... நீங்க முந்திச் சாப்பிட்டாத்தான் நான் பிந்திச் சாப்பிட ஒப்புக்குவேன் !’

அவன் பேச்சு மூச்சுக் காட்டினால் தானே? வட்டில் நிறைந்து, காலி ஆனது. “ஆமா, இந்த ஊருக்குப் பேரு என்னவாம் ?

அதுவா!... சேந்தமங்கலம்னு பேரு!’ ‘இதுக்கும் எங்க நா குடிக்கும் எம்மாந்துாரம் இருக்கும்?’ - - *

“பன்னெண்டு கல்லுக்கு மிஞ்சித் தான் இருக்கும்!” “எங்க மச்சான் காரக ஊருக்கும் அதாங்க... அரசர் குளத்துக்கும் இதுக்கும்?”

“ஒண்ணு ரெண்டு பதிய இருக்கும். அம்புட்டுத்தான்!”

அவன் பதில் சொல்லிக் கொண்டே சாப்பிட்டான். ஏதுக் காம் கேக்குறே?” :

அவள் அகப்பைச் சாதத்தைக் கொட்டிவிட்டு, “என்னைக் காணாம இந்நேரம் அம்மான் ஆடு அமளி துமளிப்படும். இடு சாமச் சங்கதி எங்க ஆத்தாக் காரிக்கும் விழுந்திருக்கும். இடுக்கிப் பூச்சியா துடித்திருப்பா என்னைப் பெத்த புண்ணியவதி என்று தழு தழுக்கச் சொன்னாள்.

“நெசந்தான் செம்பவளம் என்று எழுந்தான். “தண்ணிச் சோறு?, என்று இடிை மறித்தாள். ஆவை எஸ். ஆறுமுகம் - 2 19

‘சாப்பிடுற பழக்கம் இல்லே! என்று கைகளைக் கழுவினான்.

அவள் தன்னிடம் முன்பு ஒப்படைக்கப்பட்ட வெற்றிலைக் குட்டானை இப்போது அவனிடம் ஒப்படைத்தாள்.

“நீப்போட்டுக்கலையா?” “இந்த மூஞ்சிக்கு இதுதான் பத் தலையா?” அவன் மெளனத்தை விழுங்கினான். “சரிலே... நீ சாப்பிடு!” அவள் நீர் முட்டியைக் கவிழ்த்துக் கையைக் கழு வினாள். இலையின் முன்னே குந்தினாள். பாங்குற அட்டனைக் கால் இட்டுக்கொண்டாள். கால் தண்டைகளை மறைத்தாள். எம்பித் தணிந்தது மார்பகம். மார கச் சேலையைச் சீர்ப்படுத்திக் கொண்டவள். திடுதிப்பென்று கதறியழுதவளாக எழுந்தாள். சருவச் சட்டியில் கால் இடறியது. ‘எனக்குச் சோறு வேணாம்! என்னை எம்போக்குக்கு விட்டுப் புட மாட்டீங்களா, ஐயா?: என்று கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சினாள் செம்பவளம்.

சாப்பிடு. அப்பாலே போவலாமே!” வாய்க்காதுங்க!” நானு சாப்பிட்டது தப்பு!”

அப்படிச் சொல்லப்படாதுங்க. அடுக்காது.

பின் என்னவாம்? நீ நல்லதன மாச் சாப்பிடுவே, அழும்பு பேசமாட்டேன்னு நம்பித்தானே நானு முந்திச் சாப்பிட்டேன்!" 220 அமுதவல்லி

மெய் தான்!” பின்னே சாப்பிடு:

ஊக்கூம்! நானு பறியப் போறேன்!” ஒங்க ஆட்டை நாடியா? இல்லே உம் மச்சான் ஆட்டுக்கா?

“எங்கணவும் போகல்லே!”

பொறகு.?? “என்னோட விதியைத் தே டி க் கி ட் டு ப் போறேன்!”

காளியப்பன் தவித்தான்; துடித்தான். மறுபடியும் சாகப் போறியா?”

அவள் மெளனம் சாதித்தாள். நீ செத்தா நானும் அந்தடியும் செத்துப்புடுவேன்!”

அவள் பதறித் தவித்துத் துடிப்பைக் கக்கினாள். “எனக்கும் ஓங்களுக்கும் என்னா புனை?’ என்று நைந்த குரலெடுத்து நயனத்திடை நீத்தொடுத்து, நெடுமூச்சை வெளியெடுத்துக் கேட்டாள்.

“நானு நெஞ்சுள்ள மனுசன்! நீ நெஞ்சு கொண்ட அபலைப் பொண்ணு! அதான் பிணை காரணம்... சகலமும் புரிஞ்சுதா?

கூண்டைத் துண்டித்து வெளியேற எத்தனம் செய்தது கோலப் பசுங்கிளி.

அவளது பூங்கரம் பற்றித் தடுத்தான் காளியப்பன். இந்தாப் பாரு...நீ உன்னோட நேச மச்சான் ஆட்டுக்குவா. கையோட கொண்டாந்து அங்கனே விட்டுப்புட்டு வரேன்!... உன் ஆத்தா கிட்ட வா... பூவை எஸ். ஆறு முகம்

ரேக்ளாவிலே கொண்டு போய்ச் சேர்ப்பிக்கிறேன்...! ஆனா, ஒன்னை ஒண்டியா மட்டும் விட்டுப்புட ஏலாது!’

அவள் கண்ணிர் பெருக்கினாள். எம்பேரிலே உசிரையே வைச்சிருக்கிற எம்புட்டு ஆசை மச்சானை நானு இனிமே எந்த மூஞ்சியோட போய்க்கண்டு தண் டு வேனுங்க?... அவங்க அன்பை, நேசத்தை : பாசத்தை வஞ்சிக்க நானு துணிஞ்சேன் னா, அப்பாலே எனக்கு ஏழேமு பொறப்புக்கும் கடைத் தேறவே வழி கெடைக்காதுங்க! ஆனா, எனக்கு நேர்ந்திட்ட இடு சாமத் தீவினையை அவுக கேட்டாக்க, அப்பவே என்னை தழையைச் சீவுறதொப்ப சீவி காவு வீசிப்புடுவாருங்க! என்னைப் பெத்த ஆத்தா இந்தச் சேதியைக் கேட்டா, அப்பவே நெஞ்சடைச்சு சிவலோகம் போயிடுவாங்க! இப்ப சொல்லுங்க எனக்கு ஒரு வழி... ம்... சொல்லிடுங்க! ஒத்தை தடமானாலும், ஒசந்த தடம் இனி எனக்கு இருக்கு துங்களா, செத்து மடி பிறத்தைத் தவிர்த்து? வாயைத் தொறந்து கேக்குறேனுங்களே, வாயைத் தொறக்க மாட்டீங்களா?...”

அவள் வீறுடன் வினவியவளாக, அலைபாய்ந்து நின்ற காளியப் பனை உலுக்கி விட்டாள்.

“சொல்லட்டுமா?”

“சொன்னா, கோபிச்சுக்க மாட்டீயே?”

“ஊஹ அம்!”

“எஞ்சொல்லுக்கு மதிப்பு தருவியா?”

‘ம்! கதுப்புக் கன்னங்கள் குழிந்தன. அமுத வல்வி

‘சாமி ஆணையா?”

‘சாமி ஆனையாத்தான் !’

‘கையடிச்சுக் கொடுக்க ஏலுமா?

ஒ!’ என்றாள் நெஞ்சம் நெகிழ. கண்ணாடி வளைகள் குலுங்க கையடித்துக் கொடுத்தாள். நீங்க சொல்லுங்க, ஒங்க சொல்லு தான் இனிமே எனக்கு வேத வாக்கு!’

நொடி நேரம் காளியப்பன் சிறு பிள்ளை போல தேம்பிக் கொண்டே நின்றான். உணர்ச்சியின் ருசி பேதங்கள் அவனுடைய நாக்கின் நரம்புகளிலே அடிநாதமிட்டன; ரத்த நாளங்களைப் பேசச் செய்தன வீராப்பின் நெஞ்சுரத்துடன் அவன் வாய் திறந்தான். “நீ என்னை கண்ணாலம் கட்டிக்கிட ஒப்புவியா? என்று கேட்டான். -

செம்பவளம் அழகின் கலையுணர்ச்சி மிளிர விம் மினாள். சிந்துரக் கன்னங்களிலே ஒய்யாரம் பதித் தது நீர் முத்தங்கள். நெச மாலுமாம்... சரிங்க! ரோசிச்சேன். நீங்க செப்பிட்டீங்க!... எனக்கு விடி மோட்சம் காட்டியிருக்க நீங்க! ஒங்களோட அன்புக்குக் கட்டுப்பட்டுத் தான் என்னோட வாழ்க்கையை ஒங்களுக்குத் தர்மம் செய்யச் சமமதிக் கிறேன்!... ஆமாமுங்க, எங்க சாமிக்கு மெய்யான விசயமுங்க இது!’

காளியப்பன் தன்னுடைய எழிலார்ந்த கறுமை படர்ந்த கறுக் கரிவாள் மீசையை ஒயிலுடன் நீவிவிட்டுக் கொண்டான், சபாசு! நானு ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சவனாக்கும்! அதான் ஒன் னையே எடுத்துக் கிட்டேனாக்கும்!... எனக்குப் பொசிப்பு அனையமாயிருக்கு அதான், இந்தப் பூவை எஸ். ஆறுமுகம்

சீதேவிப் பொண்ணு நீ எனக்குப் புதையலாட்டம் கெ டச்சிருக்கிறே!’ என்று மெய் மறந்து பேசினான் அவன். கண் ணீர் துலங்கியது:

அவளுடைய கண்ணிரை அவன் துடைத்து விட்டான், கை விரல்கள் நடுங்கி, அடங்கின. சரி, இப்பவாச்சும் சாப்பிடு, செம்பவளம்!”

அவள் மோனம் நிறைந்த நாணம் தூவினாள் எஞ்சோறை இனி நானு சாப்பிடாம இருப்பேனா ?”

அவன் சிரித்தான். அவள் குந்தி னாள் . அவன் இலையை நகர்த்தினான்.

அவளோ எச்சில் வட்டியை தன் திசைக்கு வசமாக்கினன்.

மோதிரக்கை பரிமார, வளைக் கரங்கள் கவளங்களை உருட் டின.

“ஒரு சங்க திங்க... நானு இங் காலே இருக்கிற துப்பு ஒரு ஈ காக்காவுக்குத் தெரியப்புடாது.”

“அது எனக்குப் புரியாதா, புள்ளே? விடியறதுக்குள்ளே நாம மேலச் சீமைக்குப் பறிஞ்சிடுவோம்!”

அவள் நளினக் கவர்ச்சியுடன் நகை சிந்தினாள். ‘நானு இந்த வட்டைக்கு ராசா பல்லு மேலே

பல்லுப் போட்டு ஒரு பய என்னை ஏதும் கேட்கவே மாட்டான்!”

அவள் மறுபடி சிரித்தாள். அவளுக்குக் கை கழுவ நீர் கொடுத்தான், அவன்!

அவனுக்கு இதழ் சிவக்க தாம் பூலம் கொடுத்தாள், அவள் ! -

பிறை வெட்கம் வந்து தொலைந்த து:  சுந்தரக் கனவுகள் நெஞ்சிலும் நினைவிலும் பின்னி விளையாட, காளியப்பன் அந்தம் சேர்ந்துத் தன்னுடன் சிரித்துக் கொண்டான். மேனியின் சிலிர்ப்புத் தட்டுப்பட்டது. விண்ணுக்கும் மண்ணுக்குமாகக் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தான். தன்னுள் செம்பவளத்தை நிறைத்துக் கூடு விட்டுக் கூடு பாய்ந்தான். இன்பம் பாய்ந்தது. இனிப்புக் கண்ணீர் பாய்ந்தது. இனிய நற்கனவுகளின் இனிய நல்நினைவுகள் பாய்ந்தன .

“சொக்க வெள்ளிப் பாற்குடம் செம்மை நலம் கொழித்து பிறைவடிவில் மிதந்து கொண்டிருந்தது.

அழகனுக்கு அழகை ரசிக்கத் தெரியும். அழகுக்கு அழகில் மயங்கத் தெரியும். போதைக்குப் போதம் புதிது.

போதத்துக்குப் போதை அந்தியம்.

அவன் அவளுள் அடங்கி மீண்ட நினைவில், போதையும் போதமும் லய சுத்தமாகப் பின்னி விலகின. அவள் ஞாபகத்தில் அவன் கலந்த சித்தத் தெளிவோடு, எட்டி நடந்தான். பாவட்டா பீடிகளைச் சுவைத்து இழுத்தவனாக அவன் நடந்த வேளையில், சாலை நெட்டுக்குமாக வெறுமைச் சாட்சியாய் நின்ற பாழ் வெளிக்கு ஒரு திருஷ்டி பரிகாரம் போல அமைந்திருந்த அந்த இரண்டு ஆலமரங்களையே இமை வலிக்கப் பார்த்துக் கொண்டேயிருந்தான். அப்போது அவன் கைவிரலில் கொடுக்கியிருந்த துண்டு பீடிகை நழுவ, அவள் இதழ்க் கரையை விட்டு பாட்டு ஒன்று கிளம்பியது. அவன் பாடினான். பாட்டிடைக் கலந்தான். ‘சாலையிலே ரெண்டு மரம் !

சர்க்காரு வச்ச மரம் ! ஓங்கி வளர்ந்த மரம் ! ஒனக்கேத்த தங்க மரம் !’

அவன் இதழ்களை நிறுத்தி ஓய்ந்த நேரத்திலே, அருகாகச் சென்ற ரேக்ளா ஒன்று விசுக்கென்று நின்றது. ஓரிளைஞன் குதித்தான். வாட்டசாட்ட மான புள்ளி.

‘அண்ணாச்சிக்கில்ல... ஏறுங்க!- நா குடிப்பொண்ணு ஒண்னு இந்தப் பக்கம் வந்திச்சுங்களா? கஞ்சிப் பொளுது தாண்டி பறிஞ்சு வந்ததை இம்மாம் பொழுது மண்டியும் வீட்டுப் புறத்தாலே காண முடியலிங்க... செம்பவளம்னு பேருங்க கண்ட துண்டா அண்ணாச்சி!” என்று குரல் கலங்கக் கேட்டான் அந்த அழகன். -

அவனையே வெறிக்கப் பார்த்து நின்ற காளியப்பன், சுயப்பிரக்ஞை பெற்றதும், “அப்படி ஒரு பெண்ணும் இந்தச் சாலைப் பக்கமே வரலையே! நானு இங்கிட்டுத் தானே மம்மலிலேந்து இது நேரத் தொட்டியும் சுத்திக்கினு இருக்கேன்!... ஒங்களைப் பார்க்கிறதுக்குப் பரிதாபமா இருக்குது! உங்க நாட்டுப் பகுதியிலே தேடிப் பாருங்க!” என்று முத்தாய்ப்பு வைத்தான். அவனது அடிமரம் நெகிழ்ந்தது.

காளியப்பன் புதிய உள்ளத்துடன் கேணியில் இரண்டு சால் நீர் இறைத்துத் தலையில் ஊற்றிக் கொண்டு புதிய உடம்புடன் தன் இருப்பிடத்தை அடைந்து, புள்ளே செம்பவளம்’ என்று கூவி, குளிச்சாச்சா? புதுசு உடுத்தியாச்சா? ஒம் மச்சான் காரன் நானு தலையை உள்ளாற காட்டலாமா? வரம் கேட்டு நிக்கிறேன்!” என்று அடுக்கினான்.

அதற்குள் அவள் முன்னே, வாசல் வெளி நிலவில், புதிய நிலவாக வந்து நின்றாள் செம்பவளம். செம்பவளத்தின் தேஜஸ் அவள் உருவில் உருக்காட்டியது. அக்கரைச் சீமைப் புடவையையும் ரவிக்கையும் அவளுக்கு அழகுக்கு அழகாக அமையலாயின. பூவும் பொட்டும் மனத்தன!

காளியப்பன் உட்புறம் வ ந் து குந்தினான். அவனது பாதத் தடியில் இருந்த சுள்ளிக் கட்டை விலக்கினான். அடைப்புக் கதவு ஒன்று இருந்தது. அதன் பூட்டைத் திறந்தான். குனிந்து கையை நுழைத்தான் ஒரு சிறிய பெட்டி மீண்டது. அதிலிருந்து நகை- நட்டுக்கள் சிலவும் மீண்டன!

“இந்தாலே, அல்லாத்தையும் போட்டுக்க!”

அவள் எல்லாவற்றையும் பார்த்தாள். ஆமா, ஏதுங்க இந்தத்தாலி?’ என்று தடுமாற்றத்துடன் விநயமாகக் கேட்டாள்.

“எம் பொஞ்சாதியாய் வரத்தக்கவளுக்குன்னு அக்கரைச் சீமையிலேயே அந்த மாச்செஞ்சு கொண்டாந்தது இதுக!’

அவள் அணிகலன்களை அணிந்து கொண்ட பின், தங்கத் தாலியை அவனிடம் சமர்ப்பித்தாள்; ‘ இந்தாங்க!’ என்றாள்.

அவன் அந்தத் திருமாங்கல்யத்தை வாங்கிக் கொண்டான். இப்ப தொட்டு நீங்க தானுங்க எனக்குச் சதம். ஒங்களைத் தானுங்க அல்லாத்துக்கும் நானு நம்பியிருக்கேன்! நீங்க எஞ்சாமி கணக்குத்தான். எங்க சாமியே தான் மஞ்சள் பூசிய வதனம் ஒளிர்த்தது.

அவளால் மேற்கொண்டு பேசமுடியவில்லை.

‘நானு ஒன்னை நம்புறேன். அதொப்ப நீயும் என்னை நம்பு, செம்பவளம்! இப்படியொரு பாக்கியம் எனக்கு எழுதிப் போட்டிருக்குமினு நானு சொப்பனத்திலே கூட ரோசிச்சது .ெ கிடையாது!’ நானு கொடுத்து வச்சவன்! அதானாக்கும் ஒன்னை எடுத்துக் கிட்டேன்! என்று சுகத் தெம்புடன் பேசி, அதே லயிப்பின் உணர்வுக்கிறக்கத்தின் ஊடாக. அவளுக்குத் திருப்பூட்டினான் காளியப்பன்.

கண்ணீரும் கண்ணீரும் கலந்தன.

பிறகு, சிரிப்பும் சிரிப்பும் ஒன்றின.

ஒன்றாய் ஊர்ந்த வான் பிறை, சத்தியத்துக்கு ஒர் ஆதரிசமாக-தர்மத்திற்கு ஒரு சாட்சியமாக விண்

னிடைப் பொலிந்து மண் ணிடைத் தவழ்ந்து கொண் டிருந்தது.

‘பசும்பாலை நல்ல பதத்தோடே காய்ச்சி’ யாச்சா?”

ஓ.

வெத்திலை பாக்கு இருக்கில்ல?”

ம்.  வாசனைத் தைலத்தின் நெடியில் அவன் மூச்சு

திணறியது.

மயில் கண் ஜரிகை வேட்டி சலசலக்க, அவன் நர்தாங்கி இட்டுத் திரும்பினான்.

செம்பவளத்தை அ ப் ப டி ேய விழுங்கிவிடப் போகிறானோ?

‘இந்தாலே புள்ளே!’

என்னாங்கிறேன்!

“இந்தாலே! பாச்சாமம் வரப்போவுதே!’

ம்.. ஸ்..

‘சும்மா இருங்க!”

“என்னா சொன்னியாம்?”

‘ஐயையோ! ஒண்ணும் சொல்லலீங்க, மச்சானே! மாப்பு...மாப்பு!”

சிரிப்பு பூந்தாதாக மணத்தது.

நளினத்தில் நாணம் பூத்தது.

‘ஏலே!’

“ம்!”

‘வெளக்கை மூத்துப் புடவா?  கெட்ட கனா கண்டவன் நிலையில் காளியப்பன் தட்டுத் தடுமாறி எழுந்தான். கிறக்கமும் அசதியும் அவன் உடலை முறித்துப் போட்டன. சோம்பல் முறித்து, நெட்டி பறித்து முடிந்ததும், இருட்டில் கண்களைத் துழாவிய வண்ணம் அவசரமாகக் கைகளைப் பக்கத்தில் நீட்டித் தடவினான். மறுகணம், நட்டு வக்காளி, கொட்டினாற் போன்று அவன் உயிர்க் கழுவில் துடித்தான். கபாலம் சூடேறியது. வேர்வைக்கொட்டிது. எம்புட்டுச் செம்பவளம் எங்கிட்டுப் போச்சு?” மண்டை வெடிக்கு முன்னே நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது. பதட்டம் சேர்த்து, விளக்கில் ஒளியைச் சேர்த்தான்.

செம்பவளத்தைக் காணவில்லை!

உள் மனம் அவளை அழைக்க, உள் ஒலம் அவனை விளிக்க, நிலவுக்கும் நினைவுக்குமாகப் பாய்ச்சல் மடை கட்டியவாறு காளியப்பன் பறந்து ஓடினான்; ஓடிப் பறந்தான்.

சாமக்குருவி வீரிட்டது!

சாலை வந்தது.

சாலை மரத்தின் உச்சாணிக் கொம்பிலிருந்து: சாமக்குருவியின் பயம் செறிந்த கதறல் நழுவிக் கொண்டிருந்தது. .

தலையை நிமிர்த்தினான் அவன்.

சாலை மரத்தில் அவனுக்கென ஒரு காட்சி காத்துத் தவம் இருந்தது.

“ஐயையோ...எந் தெய்வமே!...” நெடுஞ்சாண் கிடையாக அந்த மண்ணில் அடித்து விழுந்து கூக்குரல் பரப்பினான்: பாங்குறத் தொங்கிய அந்தக் கஞ்சமலர்ப் பாதங்களைப் பற்றித் தன்னுடைய கண்களிலே ஒற்றிக்கொண்டு கதறிக் கதறிப் புலம்பினான் அவன்-காளியப்பன். எங்கண்ணே, செம்பவளம்! இனி எப்பொறப்புக்குமே நீ இந்தப் பாவியைச் சமிக்கவே மாட்டியோ?... ஐயையோ!. எந் தெய்வமே! .

உடைந்து கிடந்த கண்ணாடி வளைகள் சிரித்தன!

புலர்கிறது:

சாலையின் இரண்டாவது மரத்தின் கிளை உச்சத்திலே ஊருக்கென மற்றொரு காட்சி தவம் இருந்தது.

‘பாவிப் பயலே!... பாளத்த காளியப் பா!...” 


கதைகளில் வரும் பெயர்களும்

சம்பவங்களும் கற்பனையே !

நூலாசிரியர் பற்றி.....

இயற்பெயர் : பூவை எஸ். ஆறுமுகம்
புனைப் பெயர்கள் : கார்த்திகை பாலன், மறைநாயகம், இளையபிரான், பிறைசூடி
பிறந்த நாள் : 31-01-1926
பிறந்த ஊர் : பூவை மாநகர், புதுக்கோட்டை மாவட்டம்.
முதல் கதை : 15-8-1949
சுதேசமிததிரனில் “கரகம்” வெளியிட்டவர் சாண்டில்யன்.
இலக்கிய பணி : ‘பொன்னி”, “காதல்’, ‘மனிதன்”,
‘உமா‘ ஆகிய இதழ்களில் சேவை. பல்வேறு துறைகளில் 175 நூல்களுக்கு மேல் படைத்தது.
அரசுப் பணி : ஏலக்காய் வாரியத்தில் பத்தாண்டு காலம்
நாடகப் பணி : ‘ஜாதி ரோஜா’ சமுதாயப் புரட்சி நாடகக் கதை வசனம்.
திரை உலகப் பணி : ‘கூண்டுக் கிளி‘ கதை வசன உதவியாளர், “சொந்தங்கள் வாழ்க” மூலக்கதை.
நட்புப் பணி : எழுத்துப்பணி தொடர்கிறது! இனிமேலும் தொடரும்:

T. M. S. Printers, Madras-17. Phone : 440155