அம்மெய்யனாகனார்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


அம்மெய்யனாகனார்[தொகு]

நற்றிணை - 252. பாலைத்திணை[தொகு]

(பொருள்வயிற் பிரியுமெனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது)உலவை யோமை யொல்குநிலை யொடுங்கிச்
சிள்வீடு கறங்குஞ் சேய்நாட் டத்தந்
திறம்புரி கொள்கையொ டிறந்துசெயி னல்லது
அரும்பொருட் கூட்ட மிருந்தோர்க் கில்லென
வலியா நெஞ்சம் வலிப்பச் சூழ்ந்த (5)
வினையிடை விலங்கல போலும் புனைசுவர்ப்
பாவை யன்ன பழிதீர் காட்சி
ஐதேய்ந் தகன்ற வல்குல் மைகூர்ந்து
மலர்பிணைத் தன்ன மாயிதழ் மழைக்கண்
முயல்வேட் டெழுந்த முடுகுவிசைக் கதநாய் (10)
நன்னாப் புரையுஞ் சீறடிப்
பொம்ம லோதிப் புனையிழை குணனே.
"https://ta.wikisource.org/w/index.php?title=அம்மெய்யனாகனார்&oldid=13097" இருந்து மீள்விக்கப்பட்டது