அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/இராணுவமேதைகளின் தகுதி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

(15) ராணுவமேதைகளின் குதி


இராணுவத்துக்கு ஆள் சேர்த்துக் கொள்வது என்றால், உடல் நலம், உயரம், கனம் முதலான எத்தனையோ சோதனைகளைச் செய்கிறார்கள். -

உலகத்தின் சிறந்த இராணுவ மேதைகளுக்கு மட்டும் அம்மாதிரிதேர்வுகளில் அவர்கள் தேறியிருக்கவே மாட்டார்கள். அளவுக்கு அதிகமான உடல் நிறையுடையவர் பிஸ்மார்க். பொய்ப் பற்கள் கட்டிக் கொண்டிருந்தார் ஜார்ஜ் வாஷிங்டன். - வயிற்றிலே புண் இருந்தது நெப்போலியனுக்கு. காக்கை வலிப்பு உடையவர் ஜூலியஸ் ஸீஸர். ஒற்றைக் கண், ஒற்றைக் கையர் நெல்சன். சூம்பிய கைகளை உடையவர் வில்லியம் கெய்ஸர். உடல் எடைகுறைவாக இருந்தவர் வெல்லிங்டன்.