அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/சமயோசித புத்தி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

(100) மயோசித புத்திபிரிட்டனின் எட்டாவது படை ஆப்பிரிக்காவில் போரிட்டுக் கொண்டிருக்கும்போது புதுமையான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

பிரிட்டிஷ் ரைபிள் படை ஒன்று சிதறிப் பிரிந்து, முப்பத்து நான்கு மணி நேரம் தன்னந்தனியே ஜெர்மானியருடன் போரிட்டபிறகுதான் தப்பி ஓடமுடிந்தது.

அந்த ரைபிள் படையிடம் இடையில் ஒரு சமயம், துப்பாக்கி ரவைகள் கொஞ்சம் கூட இல்லாமல் தீர்ந்துபோய்விட்டன.

எதிரிகளோ சரமாரியாகச் சுட்டுக் கொண்டிருக் கின்றனர். என்ன செய்வது? இந்தக் குண்டு மழைக்கு மத்தியில், சிறிய ராணுவக் கை வண்டி ஒன்றை அனுப்பி துப்பாக்கி ரவைகளை வரவழைக்கத் துணிந்தர் அதிகாரி ஒருவர்.

கைவண்டியும் வெற்றிகரமாகத் துப்பாக்கி ரவைகளோடு திரும்பி வந்ததது. ஆனால், வண்டி வரும் போதே தீப்பற்றி எரிந்து கொண்டே வந்தது.

தீ பரவுமுன் துணிவோடும் அவசர அவசரமாகவும் துப்பாக்கிரவைகளை இறக்கிவிட்டார்கள். என்றாலும், எரிந்து, கொண்டிருக்கும் கை வண்டியை என்ன செய்வது?

அதற்கும் ஓர் உபயோகத்தைக் கண்டுபிடித்தனர். எரியும் வண்டிமீது தேயிலைப் பானையை ஏற்றி, சுகமான தேநீர் தயாரித்துக் குடித்து மகிழ்ந்தார்கள் வீரர்கள்.