அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/சாதுர்யமான பதில்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


(95) சாதுர்யமான தில்மார்க் ட்வைன் என்பவர் அமெரிக்காவின் நகைச்சுவை எழுத்தாளர்; பத்திரிகாசிரியர்.

ஒருமுறை, வியாபாரியான சந்தாதாரர் ஒருவரிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது.

“இன்று தபாலில் வந்த தங்கள் பத்திரிகையை வாங்கிப் பிரித்துப் பார்த்தவுடன் அதன் மத்தியில் சிலந்தி வலை

பின்னியிருப்பதையும் ஒட்டடை ஒட்டியிருப்பதையும் கண்டேன். இது நல்ல அதிர்ஷ்டமா? அல்லது அபசகுனமா?” என்று கேட்டிருந்தார்.

அதற்கு மார்க் ட்வைன் எழுதிய பதில்:

“நமது பத்திரிகையில் யார் யார் விளம்பரம் செய்கிறார்கள்; யார் யார் செய்யவில்லை என்பதை அந்தச் சிலந்தி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது. யார் விளம்பரம் செய்யாத வியாபாரியோ அவருடைய கடைக்குப் போனால் கொஞ்சமும் கவலையின்றி தான் வாழலாம் என்பது சிலந்தியின் எண்ணம்”.