அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/நினைவுச் சின்னம் யாருக்கு?
Appearance
(93)
நினைவுச் சின்னம் யாருக்கு?
ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரசபை மண்டபத்தில் பலருடைய வெண்கலச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.
அவை யாருடைய சிலைகள் என்று நினைக்கிறீர்கள்?
அடிப்படைக் கல் நாட்டியவர், திறப்புவிழா நடத்தியவர்
போன்ற செல்வாக்கு மிக்கவர்களுடையவையாக இருக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள்? இல்லவே இல்லை.
கட்டிடத்துக்கு முதல் கல்லை வைத்த கொத்தனார் எல்லோரையும் விட அதிக நாட்கள் உழைத்த தொழிலாளி, மிகத் திறமையாய் வேலை செய்த கொல்லர் முதலான பற்பல தொழிலாளர்களின் சிலைகளே அவை! ஆச்சரியமாக இல்லையா?