உள்ளடக்கத்துக்குச் செல்

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/பசி அறியாத விஞ்ஞானி

விக்கிமூலம் இலிருந்து


(104) சி றியாத விஞ்ஞானி



உலகம் முழுதும் அறிந்த விஞ்ஞானி நியூட்டன், பல நாட்கள் உணவை மறந்து ஆராய்ச்சியில் மூழ்கிக் கிடப்பார்.

ஒரு நாள் நியூட்டனின் நண்பர் ஒருவர் அறையில் நுழைந்து, நியூட்டனுக்காக வைக்கப்பட்டிருந்த உணவைச் சாப்பிட்டுப் போய் விட்டார்.

சிறிது நேரம் கழித்து சாப்பிடவந்தார் நியூட்டன். தட்டுகள் காலியாகக் கிடந்தன. அதைப் பார்த்துவிட்டு, “நான் ஒரு முட்டாள், சாப்பிட்டதை மறந்துவிட்டு, மறுபடியும் இங்கே சாப்பிட வந்திருக்கிறேனே" என்றார்.

பின்னர், நியூட்டனின் நண்பர் கூறிய பிறகே அவருக்கு விஷயம் தெரிய வந்ததாம்.