அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/பணமா? குழந்தையா?
Appearance
(24) பணமா? குழந்தையா?
சினிமா நடிகை ஜெனி டீர்னியிடம் அவருடைய தோழி, "உனக்குப் பத்தாயிரம் டாலர்கள் பணம் அல்லது பத்துக் குழந்தைகள் கிடைக்கும் என்றால், இரண்டில் நீ எதை விருமபுவாய்?” என்று கேட்டார்.
பத்து குழந்தைகளைத்தான்!” என்று உடனே பதில் அளித்தார் நடிகை. "ஏனென்றால் பத்தாயிரம் டாலரைப் பெற்ற பின்ன்ரும் மேலும் மேலும் பண ஆசை அதிகரித்துக் கொண்டே போகும் பத்துக் குழந்தைகளைப் பெற்றாலோ போதும் போதும் என்றாகிவிடும்” என்ற காரணமும் கூறினார் நடிகை.
பெரும்பாலோர் பணத்தையே விரும்புவார்கள்!