அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/மூன்று நாட்கள் வேலை செய்தார்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


(61) மூன்று நாட்கள் வேலை செய்தார்அமெரிக்க ஜனாதிபதி வாஷிங்டனுடைய வாழ்க்கை வரலாற்றை ஒரு செல்வந்தரிடமிருந்து இரவல் வாங்கி வந்து படித்தான் ஒரு இளைஞன்.

புத்தகத்தை வீட்டில் வைத்துவிட்டுப் படுத்தான் இளைஞன். இரவில் பெய்த மழையால் புத்தகம் நனைந்து கொஞ்சம் கெட்டுப் போயிற்று.

மறுநாள் புத்தகத்தை செல்வந்தரிடம் கொண்டுபோய்க் கொடுத்தான். ஆனால், அவரோ இளைஞனைக் கடிந்து, புத்தகத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.

பிறகு, ஒரு வழியாக, தம்முடைய தோட்டத்தில் மூன்று. நாட்கள் உழைக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார். இளைஞனும் அவ்வாறே மூன்று நாட்கள் உழைத்தான்.

புத்தகப் பிரியனான அந்த இளைஞன் யார்?

அவரே புகழ் பெற்ற ஆபிரகாம் லிங்கன்!