அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/விலை மதிப்பற்ற சிறப்புடையது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

(17) விலை திப்பற்ற சிறப்புடையது


'இழந்த சொர்க்கம்' என்னும் உலகப் புகழ்பெற்ற காவியத்தை இயற்றிய கவிஞர் மில்டன், அந்தக் காவியத்துக்குப் பதிப்பாளரிடமிருந்து பெற்றுக்கொண்ட சன்மானம் எவ்வளவு என்று நினைக்கிறீர்கள்?

பத்தே பத்துப் பவுன்கள் மட்டுமே.

அதைப் பற்றி மார்க் பட்டிசன் என்பவர் கூறுகிறார்:

'அதனால் பரவாயில்லை!. ஆங்கிலத்தின் மகுடம் போன்ற இந்தக் காவியம் ஒருவரிக்கு ஒரு பவுன் பெறுமானம் உடையது. (அட்சர லட்சம்) என்று சொல்லப் படுவதைவிட அதற்கு விலையே கிடையாது. (விலைமதிப்பற்றது) என்ற புகழ் இருப்பதே மேல்”. -

தங்களுடைய படைப்புகளை மிகக் குறைந்த சன்மானத்துக்கு விற்று விட்டு, வருந்திக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் இதனால் ஆறுதல் பெறலாம் போலும்! -