உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/057-383

விக்கிமூலம் இலிருந்து

53. பறையனென்னும் மொழிமேலுள்ள பகையைப் பரக்கப்பாருங்கள்

பெளத்ததன்மத்திற்கும், பௌத்தர்களாம் மேன்மக்களுக்குஞ் சத்துருவாகத் தோன்றிய வேஷபிராமணர்கள் பௌத்தர்களைத் தாழ்த்தி பறையனென்று

(மூன்று வரிகள் தெளிவில்லை) நாவிலும் பரவிவருதற்காய் பறைப்பருந்து பாப்பாரப்பருந்தென்றும், பறை மயினா பாப்பார மயினாவென்றும், பறைப்பாம்பு - பாப்பாரப்பாம்பென்றும் வழங்கி வருபவற்றுள் பறைநாயென்னும் வார்த்தையையும் ஆரம்பித்தவர்கள் அதற்கு எதிர் மொழியாம் பாப்பாரநாய் என்பதை வழங்கினால் அஃது தங்களை இழிவுபடுத்தும் என்று உணர்ந்து பறைநாயென்னும் மொழியை மட்டிலும் வழங்கிவருகின்றார்கள் என்பதை முன்பொருகால் இப்பத்திரிகையில் தெள்ளற விளக்கியிருக்கின்றோம்.

பௌத்தர்களைப் பாழ்படுத்தி நசிப்பதற்கும் அவர்களை இழிவடையச் செய்வதற்கும் பறைநாயென்னும் மொழியைமட்டிலும் வழங்கிவருகின்றார்கள் என்று கூறியவற்றிற்குப் பகரமாய் வங்காளதேசத்தில் உண்டாய சங்கதியை கனந்தங்கிய இங்கிலீஷ், இஸ்டாண்டார்ட் பத்திராதிபர் தனது பத்திரிகையில் எழுதியுள்ள நயத்தையும்,

கனந்தங்கிய விஜயா பத்திராதிபர் தனது பத்திரிகையில் வரைந்துள்ள நயத்தையும்,

சுதேசமித்திரன் பத்திராதிபர் தனது பத்திரிகையில் வரைந்துள்ள வாக்கியங்களையும், விவேகிகள் நோக்குவார்களாயின் பௌத்த மார்க்கத்தோருக்கும் பிராமண மதத்தோருக்குமுள்ள விரோதம் தெள்ளற விளங்கும்,

சுதேசமித்திரன் பத்திராதிபரே, இவற்றை வரைந்ததாயிருப்பினும் வேறொருவர் வரைந்ததாயிருப்பினும் முன் இரு பத்திரிகைகளிலும் இல்லா மொழியை இப்பத்திரிகையில் மட்டும் உறுத்தியுறுத்திக் கூறும் உள்ள விரோதத்தை தெள்ளத் தெளிந்துக் கொள்ளும்படிக் கோருகிறோம்.

A RABID ANIMAL ATTACKS THE VICEROY'S DOG.
LORD AND LADY MINTO UNDER PASTEUR TREATMENT.

Simla, May 11. Last Friday while the Viceroy and Lady Minto were walking in Simla with their pet dog a strange dog attacked it. Their Excellencies drove the attacking animal away and afterwards handled their own animal which was covered with the saliva from the other dog's mouth. Neither of their Excellencies were bitten, but as the strange dog was afterwards declared to be mad, the Viceroy and Lady Minto are now undergoing Pasteur treatment in Simla. Capt. Carter of the Kasauli Institute is attending to their Excellencies. The Viceroy's chef Mr. Oiler, and an ayah were bitten by the rabid animal. The latter has gone to Kasauli while the former is being treated here. The Viceroy has not cancelled any dates of public functions or Viceregal fixtures.

இங்கிலீஷ் இஸ்டாண்டார்ட் பத்திரிகை, மேமீ 12உ 5-பக்கம், 6-வது கலம்.

ஒரு பெருத்த தந்தி சமாச்சாரம்

ஸிம்லா, மேமீ 11உ-சென்ற வெள்ளிக்கிழமை வைஸிராயவர்களும், லேடி மிண்டோவும் தங்கள் சிறிய நாய்க்குட்டியுடன் தெருவில் நடந்து சென்றுகொண்டிருக்கையில் வேறொரு நாய் ஓடிவந்து அந்நாய்க்குட்டியை எதிர்த்ததாம் மகிமைதங்கிய அவ்விருவரும் அப்புதுநாயை ஓட்டிவிட்டார்கள். பிறகு புது நாயால் கவ்வப்பட்ட அந்த நாய்க்குட்டியின் சரீரம் முழுமையும் புதியநாயின் உமிழ்நீரால் நனைக்கப்பட்டிருந்ததைக் கண்டார்கள். அப்புதிய நாய் வெறிநாய் என்று தெரியவந்தது. அதிர்ஷ்டவசத்தால் அவ்விருவர்களையும் கடிக்கவில்லை, ஆயினும் அவர்கள் சிம்லாவில் வைத்தியபார்வையிலிருக்கிறார்களாம். அவர்களின் கூடச்சென்ற ஆயா ஒருத்தியையும், மற்றொருவனையும் அவ்வெறிநாய் கடித்துவிட்டதாம். அவ்விருவர்களும் வைத்தியம் செய்யப்பட்டு வருகிறார்களாம். (சில வரிகள் தெளிவில்லை).

தமிழ் விஜயா பத்திரிகையில் மேமீ 13உ 3-1ம் பக்கம், 1-வது கலம். ராஜப்பிரதிநிதியும் லேடி மின்டோவும்.

ராஜப்பிரதிநிதி லார்ட் மிண்டோவும், லேடி மிண்டோவும் தாங்கள் வெகு அருமையாய் வளர்க்கும் ஒரு நாயுடன் சிம்லாவில் வெளியே உலாத்தப்போயிருந்த போது பறைநாய் ஒன்று அவர்களுடைய நாயைத் தாக்கிக் கடித்ததாம். அந்தப் பறைநாயை அடித்துத் துரத்தி அவர்களிருவரும் தங்களுடைய நாயை தடவிக்கொடுத்தபோது அதன்மேல் அப்பறைநாயின் எச்சில் பட்டிருந்ததால் லார்ட் மிண்டோவும், லேடி மிண்டோவும் வைத்தியஞ் செய்துகொள்ளுகிறார்களாம்.

சுதேசமித்திரன் பத்திரிகை மேமீ 12உ 4-ம் பக்கம் 3-வது கலம்.

- 2:49, மே 19, 1909 -