அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/333-383

விக்கிமூலம் இலிருந்து

4. மேன்மக்கள் கீழ்மக்கள் விவரம்

உலகத்தில் தோன்றியுள்ள சீவராசிகளில் உயர்திணை வகுப்பாகும் தேவர், மக்கள், நரரென்னு முத்தோற்றங்களில், வானரர் வால்நரர் என்னும் குரங்குகளில் செங்குரங்கு, கருங்குரங்கு, காட்டுக்குரங்கு, நாட்டுக்குரங்கு என்று வருண பேதத்தார் கூறியபோதிலும் குரங்கென்னும் பெயரும் வானரமென்னும் பெயரும் ஒரு சீவனைக் குறிக்கும் என்பது நிலையாம். மக்கள் மனிதர் என்று கூறும் வகுப்பில் சீனனாயினும், பர்மியனாயினும், ஆங்கிலேயனாயினும், ஆபிரிக்கனாயினும், இந்தியனாயினும், சிந்தியனாயினும் கருப்புவருணம், சிவப்பு வருணம், சிவப்பும் கருப்பும் கலந்த வருணம், மஞ்சளுங் கருப்புங் கலந்தவருணமெனக் கண்ணினாற் காணும் நிறபேதங்களையும் சீனபாஷை, பர்ம பாஷை, ஆங்கில பாஷை, வங்கள பாஷை, ஆந்திரபாஷை, திராவிடபாஷை என செவியினாற் கேட்கும் சப்தபேதங்களை உணர்ந்தபோதிலும் மக்களென்னும் பெயரும் மனிதனென்னும் பெயரும் வாலற்ற ஒரு சீவனைக் குறிக்குமென்பது நிலையாம். இவ்வகை மநுடசீவர்களின் பேதம் அந்த தேச சீதோஷ்ணங்களுக்குத் தக்கவாறு பலவகை வருண தேகங்களைப் பெற்றிருந்த போதிலும், ஒவ்வோர் தேகமும் மயிர், தோல், எலும்பு, மாமிஷம், நரம்பு, மூளை முதலியவைகளால் அமைந்திருப்பதுடன் மலமூத்திராதிகளின் மணமும் நிறமும் ஒன்றாகவே இருக்கும்.

மலமூத்திரங்களை அடக்கியுள்ள தேகி மரணமடைந்தால் அதைப் பிணமென்பார்கள். அதில் நாற்றமெழும்பிவிட்டாலோ சகல துர்நாற்றங்களை விட இதை பிணநாற்றமென்று சகல சீவன்களும் அகன்று நிற்கும்.

தன்னாற்றம் தானேசகிக்கா தேகத்தை தகனஞ்செய்து அச்சாம்பலைக் கொண்டுபோய் விருட்சங்களுக்கிட்டால் அதுவும் நசிந்துவிடுவது அநுபவமாம்.

இத்தகைய துன்னாற்றமும் நீச்சமும் அமைந்த தேகிகளாகிய நாம் மேன்மக்களென்று உயர்த்திக் கொள்ளுவதினால் ஒருக்காலும் உயரமாட்டோம்.

நம்மை உயர்த்துவதற்குந் தாழ்த்துவதற்கும் குணமுஞ் செயலுமே காரணமாம். அதாவது, நியாயச் செய்கையை உடைவர்கள் நியாயரென்றும் தீயச்செய்கையை உடையவர்கள் தீயரென்றுங் கொடுந்தமிழ் கூறுவதுபோல் குணத்தையும் ஆராய்வோம்.

முன்கலைதிவாகரம்

சாத்துவித ஞானந், தவ, முண்மெய், நல்ல பாளார்த்தமோனடே
டைம்புலனடக்கல் சத்துவமாகும்.
தானந்தவமே, தருமம்பேணன், ஞானக்கண் நலநிவை தெரித
வீணமில்லாவிராசத குணமே.
தாமத, நிறைபே, ருண்டி, வஞ்சங், காம, பீதி கேடுமுறக்கம்

நாமே வடிவ தாமத மாகும்.

உண்மெய் உணர்தல், நல்லருளாய்தல், நூல் தேடல், கற்றாரை அணுகல், தவத்தைப் பேணல், தானமீதல், ஐம்பொறியடக்கல், மோனவிழித்தல், சாந்தனிரப்பல், பல்லுயிர்க்கிரங்கல், பொருளாசையற்றல், நல்லுணருற்றல், நற்கடைபிடித்தல், நல்வாய்மெ கூறல், தண்மெய் நிருத்தல் ஆகிய நற்குணத்தையும் நற்செய்கையும் பெற்றமக்கள் யாரோ அவர்களை மேன்மக்களென்றும், மேதாவியரென்றும், மேலோரென்றும் கூறுவதுடன் மேலான சாதன சதுட்டயத்தால் மேற்சாதி என்று கூறப்படும்.

பின்கலைநிகண்டு

... வர் மிக்கோர் நல்லோர் தகுதியோருண் மெயாய்வோர்

உலகமேதாவியாருள் ஞானமீவோ .......
(சில வரிகள் தெளிவில்லை )

பொறியிலார், கயவர், கள்ளர், வஞ்சகர், தூர்த்தர், மிடியர், சிறிய சிந்தையர், குடிகெடுப்போர், பேராசையோர், தீயச்செயலோர், தீக்குணர், பொறாமெயாளர், பொய்ச்சாப்பர், மூர்க்கர், முசுடர், மிலேச்சர், அற்பர், வெறியர், ஆரியரென்னும் நீச்சகுணமும் நீச்சச்செயலும் உள்ளவர்களை இழிவான சாதனசம்பத்தால் இழிந்தசாதி என்றும் கூறப்படும்.

பின்கலை நிகண்டு

பொறியிலார் கயவர் நீசர் புள்ளுவர் புல்லர் தீயோர்
சிறிய சிந்தையர் பொச்சாப்பர் தீக்குணர்குடி கேடர்ப்பெண்
.... முசுடர் மூர்க்கருள் சுரவடர்மிலேச்சர்

லார் கள்வர் காமர் வஞ்சுராரியருங் கீழோர்.
- 1:5; சூலை 17, 1907 - 5