அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்/N

விக்கிமூலம் இலிருந்து
N

N. A. C. A. cowling : (வானூ.) என். ஏ. சி. ஏ. மேல்மூடி : வானூர்தி எந்திரத்தின் ஒருவகை மேல்மூடி இது காற்றினால் குளிர்விக்கப்படும் கதிர்களைப் போலமைந்த எஞ்சினை மூடியிருக்கும். இதில் ஒரு தலைச்சீரா அல்லது வளையம் இருக்கும். இதுவும், உடற்பகுதியின் பின்புறமுள்ள ஒருபகுதியும், குளிர்விக்கும் காற்று தலைச் சீராவின் முன் முறம் வழியாக உட் சென்று, உடற் பகுதிக்கும் தலைச் சீராவின் பின்பகுதிக்குமிடையிலான வழவழப்பான கோண வடிவப் பள்ளத்தின் வழியே வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

Nacelle : (வானூ.) விமான எந்திர வேயுறை : பயணிகளுக்கான அல்லது மின் எந்திரத்திற்கான அடைக்கப்பட்ட காப்பிடம். இது பொதுவாக விமானத்தின் கட்டு மானச் சட்டத்தைவிடக் குறுகலாக இருக்கும். இதில் வால் பகுதி இருக்காது.

Nail : ஆணி : மெல்லிய உலோகத் துண்டு. இதன் ஒரு முனை கூர்மையாகவும், இன்னொருமுனை தட்டையான அல்லது உருண்டையான கொண்டையினையும் கொண்டிருக்கும். மரத் துண்டுகளையும், பிற பொருட்களையும் இணைக்க இது பயன்படுகிறது. இணைக்க வேண்டிய பொருட்களைப் பொருத்தி ஆன்னியின் கொண்டையில் அடித்துப் பிணைக் கலாம்.

Nail puller : (எந்.) ஆணிக் குறடு ; (1) ஆணி பிடுங்கப் பயன்படும் ஒரு கருவி. இது இரு கவர்முனைகளைக் கொண்டிருக்கும். கவர் இடைவெளியை ஆணியின் கொண்டைக்குக் கீழே கொடுத்து நெம்பி ஆணியைப் பிடுங்கலாம்.

(2) இரு தாடைகள் கொண்ட ஒரு எந்திர சாதனம். இது மரத்தில் அறையப்பட்டுள்ள ஆணியைப் பிடுங்குவதற்கு ஒரு நெம்பு கோலாகப் பயன்படுகிறது.

Nail set : (மர.வே.) ஆணித் தண்டு : 4" அல்லது 5" நீளமுள்ள ஒரு சிறிய எஃகுத் தண்டு. இதன் ஒரு முனை நுனி நோக்கிச் சிறுத்தும் ஆணியின் கொண்டை வழியே கழன்று விடாதவாறு சற்றே கிண்ண வடிவிலும் அமைந்திருக்கும். ஆணியின் கொண்டையை மேற்பரப்புக்குக் கீழே செலுத்துவதற்குப் பயன்படுகிறது.

Naphtha : (வேதி.) இரச கற்பூரத் தைலம் : பெட்ரோலியத்திலிருந்து கேசோலினுக்கும் பென்சீனுக்குமிடையே வடித்து இறக்கப்படும் பொருள். இது தூய்மைப்படுத்தும் பொருளாகப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. Naphthalene : (வேதி.) இரச கற்பூரம் : C 1௦ Hg : கரி எண்ணெயில் (கீல்) கலந்திருக்கும் ஒரு கூட்டுப் பொருள். இது கரி எண்ணெயிலி ருந்து வெண்படிகச் சிம்புகளாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. சாயப்ப பொருட்சள் தயாரிப்பதாலும், நோய் நுண்ம ஒழிப்புப் பொருளாகவும், அந்துப்பூச்சி அழிப்பானாகவும் பயன்படுகிறது.

National electrical code : (மின்.) தேசிய மின் விதித்தொகுப்பு : மின் கடத்திகள், மின் சாதனங்கள், மின் எந்திரங்கள் போன்றவற்றை நிறுவும்போது மின்னியல் வல்லுநர்களுக்கு வழி காட்டியகவுள்ள விதிகளின் தொகுப்பு.

Nstive copper : (கனிம.) தன்னியல்புத் தாமிரம் : மிக உயர்ந்த தரமான செம்பு. இது உலோக வடிவிலேயே தோண்டியெடுக்கப்பபடுகிறது. மின்னியல் நோக்கங்களுக்குப் பெரிதும் பயன்படுகிறது.

Natural : (அச்சு.) இயற்கை வண்ணம் : சிறிதளவு செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட மரக் கூழின் இயற்கை வண்ணத்திலிருந்து கிடைக்கும் காகிதத்தின் வண்ணம்.

Natural cement : (பொறி.) இயற்கை சிமெண்ட் : சீமைச் சிமெண்ட் (போர்ட்லண்ட் சிமெண்ட்) எனப்படும் சீமைக்காரையிலிருந்து வேறுபட்டது. இது விரைவாக இறுகிக் கொள்ளும்; விலை மலிவானது; வெளிர் நிறமுடையது. வலிமை குன்றியது.

Natural gas : (வேதி.) இயற்கை வாயு : நிலத்திலிருந்து இயற்கையாக வெளிப்படும் வாயு. இது எண்ணெய்ப் படுகை மண்டலங்களில் ஏராளமாகக் கிடைக்கிறது. மிகுந்த வெப்பத்திறன் கொண்டது. மிகச் சிறந்த எரிபொருள்.

Natural resins : (வேதி.குழைம.) இயற்கைப் பிசின் : தாவரங்களிலிருந்து சுரக்கும் திடப்பொருள்; எளிதில் உடையக்கூடியது; கண்ணாடிபோல் பளபளப்புடையது. கிளிஞ்சலின் தன்மையுடையது; தண்ணிரில் கரையாதது; பல்வேறு உருகுந்திறன் கொண்டது.

Nautical measure : கடல் அளவை 6080, 20 அடி = 1 கடல் மைல் அல்லது அலகு: 8 கடல் மைல் = 1 லீக் 60 கடல் மைல் = 1 பாகை (பூமத்திய ரேகையில்)

N.B. (அச்சு.) பி.கு. பின் குறிப்பு என்பதன் சுருக்கம் பின் வருவதை நன்கு கவனி என்பது பொருள்.

Neat cement : (க.க.) தூய சிமெண்ட் : மணல் கலக்காத தூய்மையான சிமெண்ட் காரை.

Neat’s-foot oil : மாட்டு காலடி எண்ணெய் : எருது வகையைச் சேர்ந்த தூய்மையான கால்நடைகளின் காலடி மற்றும முழந்தாள் எலும்புகளை நீரில் கொதிக்கவைப்பதன் மூலம் கிடைக்கும் ஒருவகை எண்ணெய். இது வெளிர் மஞ்சள் நிறமுடையது. இது தோலை மென்மைப்படுத்துவதற்கு முக்கியமாகப் பயன்படுகிறது. Neck : (க.க.) தூண் கழுத்து :(1) தூணின் தலைப்பை அடுத்த கீழ்ப் பகுதி.

(2) மரத்தண்டின் இடை இணைப்புப் பகுதி.

Needle bearing : ஊசித் தாங்கி : ஒருவகை உருள் தாங்கி. இதிலுள்ள உருளிகள் ஊசிகளைப்போல் மெல்லிதாக இருக்கும்.

Needle point ; ஊசிப் பின்னல் வேலை : திரைச்சீலைகளில் கம்பளி இழைகளினால் செய்யப்படும் நுட்பமான ஊசிப் பின்னல் வேலை.

ஊசிமுனை : (எந்.) எந்திரவியலில் ஊசிபோல் கூர்முனையுடைய ஒரு கருவி.

Needle valve : (எந்.) ஊசி ஓரதர் : ஒரு குண்டுசியை அல்லது ஊசியைச் சீரமைவு செய்வதன் மூலம் திரவம் அல்லது வாயு பாய்வதை முறைப்படுத்தக்கூடிய ஒரதர். இது அடிப்பகுதியில் ஒரு சிறிய துவாரத்தில் கூம்பு வடிவப் பள்ளத்தில் பொருத்தப்பட்டிருக்கும்.

Negative ; மறிநிலைத்தகடு : ஒளிப்படக் கலையில் ஒளியும் நிழலும் நேர்மாறாகப் பதிந்திருக்கும் ஒளிப்பட உருவப்படிவம்.

Negative brushes of a dynamo : (மின்.) நேர்மின்னாக்கி மறி நிலைத் தூரிகை : எதிர்மின் வாயுடன் இணைக்கப்பட்டுள்ள மின்னோட்ட அலைகளைத் திருப்பி விடும் கருவியின் தூரிகை

Nagative garbon : (மின்.) எதிர் மின் கார்பன் : ஒரு தொடர் மின்னோட்டச் சுடர் விளக்கில் கீழ் நிலைக் கார்பன்.

Negative charge : (மின்.) எதிர் மின்னேற்றம் : எலெக்ட்ரான்கள் சற்று மிகுதியாகவுடைய ஒரு மின்னழுத்த நிலை.

Negative conductor : (மின்.) எதிர்மின் கடத்தி : எதிர் மின்வாயிலிருந்து செல்லும் ஒரு மின் கடத்தி.

Negative ghosts : மறிநிலைத் இரட்டைத் தோற்றம் : தொலைக்காட்சியில் காலந்தாழ்த்தி அனுப்பப்பட்ட அடையாள அலையுடன் பின் அலை கலப்பதால் கறுப்பு வெள்ளைப் பகுதிகள் ஒன்றுக்கொன்று மாறி ஏற்படும் இரட்டைத் தோற்றக் குளறுபடி.

Negativ plate : (மின்.) எதிர் மின் தகடு : (1) ஒரு சேமக்கலத்தில் உள்ள கடற்பஞ்சு போன்ற ஈயத் தகடு. இது மின்னியக்கத்தின் போது எதிர்மின் தகடாக அல்லது எதிர்மின் வாயாகச் செயற்படுகிறது.

(2) ஓர் அடிப்படை மின்கலத்தில் கார்பன், செம்பு, பிளாட்டினம் முதலியவை எதிர்மின் வாயாகச் செயற்படுகின்றன.

Negative side of circuit : (மின்.) மின் சுற்றுவழியின் எதிர் மின்பாதை : ஒரு மின்சுற்று வழியில் மின் விசை நுகர்வுச் சாதனத்திலிருந்து மின் வழங்கும் ஆதாரத்திற்குத் திரும்பிச் செல்லும் மின் கடத்து பாதை. Neon light : (மின்.) செவ்வொளி விளக்கு : மின் இழைக்குப் பதிலாக இரு மின் முனைகளைக் கொண்ட ஒருவகை விளக்கு. குழாயினுள்ளிருக்கும் செவ்வொளி வாயு அயனியாகும்போது ஒளி உண்டாகிறது. விளம்பரங்களில் இந்த விளக்குகள் பெருமளவில் பயன்படுகின்றன.

Neon - lightignition timing : (தானி.) செவ்வொளிச் சுடர்மூட்ட நேரம் : உந்து ஊர்தியின் எஞ்சினில் ஒரு சிறிய செவ்வொளி விளக்கினை கம்பிகள் மூலமாகத் தொட ரிலிலுள்ள சுடர் மூட்டக் கம்பியின் துணை மின் சுற்றுவழியின் கம்பிகளை முதல் எண் சுடர்ப்பொறிச் செருகுடன் இணைப்பதன் வாயிலாக, முறிப்பான் தொடும்போதும் விடும்போதும் ஒளி மின்னுகிறது. சமனுருள் சக்கரத்தில் அல்லது அதிர்வு அடக்கியில் உள்ள காலக் குறியீட்டில் நேரடியாக ஒளி மின்னும்போது எஞ்சின் உரிய இயக்க நேரத்தில் இருப்பதாகக் கண்டு கொள்ளலாம்.

Nep : பருத்தி முடிச்சு : பருத்தியில் குறைந்த உருட்சி அல்லது மட்டமான விதை நீக்கம் காரணமாக ஏற்படும் சிறிய முடிச்சுகள்.

Nernst lamp : (மின். ) நெர்ன்ஸ்ட் விளக்கு : ஒருவகை வெண்சுடர் விளக்கு. இதிலுள்ள ஒளிரும் பகுதியில் அரிய மண்களின் உருகா ஆக்சைடுகளினாலான ஒரு பென்சில் இருக்கும்.

Nested tables : கூண்டு மேசை : பயன்படுத்தாத போது ஒன்றுக்குள் ஒன்றைச் செருகிவைத்துக் கொள்ளத் தக்கவாறு அமைக்கப்பட்டுள்ள ஒரு மேசைத் தொகுப்பு. இது பொதுவாக நான்கு அடுக்குகளைக் கொண்டிருக்கு ம்.

Nest of saws : (மர.வே.) தொகுப்பு ரம்பம் : ஒரே கைப்பிடியில் பயன்படுத்தக் கூடிய, பல்வேறு நீளங்களைக் கொண்ட அலகுகள் அமைந்த வட்ட வடிவ ரம்பங்களின் தொகுதி. இலேசான வேலைப்பாடுகளுக்குப் பயனபடுகிறது.

Nest plate : (குழை.) தொகுப்புத் தகடு : வார்ப்படங்களை உட்செலுத்துவதற்குப் பயனபடும் உட்குழிவுப் பாளங்களுக்கான பள்ளப் பகுதியைக் கொண்ட காப்புத்தகடு.

Neutral : (தானி.) இயங்காநிலை : விசையூக்க எந்திரத்தில் இயக்கம் ஊட்டாது இயங்கும் பகுதியின் நிலை. இந்நிலையில் வேகமாற்றப் பல்லிணை பொருந்தாமலிருக்கும்.

மின்னியலில் நேர் மின்னாகவோ எதிர்மின்னாகவோ இல்லாமல் இருக்கும் நடுநிலை இணைவு.

Neutral axis : (பொறி.) நொதுமல் அச்சு : ஓர் எளிய விட்டத்தில் மேற்புற இழைகள் எப்போதும் அமுக்கத்தில் இருக்கும். அப்புற இழைகள் எப்போதும் விறைப்புடனிருக் கும். எனவே, இழைகள் அமுக்கத்திலோ விறைப்புடனோ இல்லாத ஒரு புள்ளி இருக்கவேண்டும். இந்தப் புள்ளிதான் அப்பகுதியின் 'நொதுமல் அச்சு' எனப்படும்.

Neutral flame: நடுநிலைச் சுடரொளி: வாயுமூலம் பற்ற வைப்பதற்கான சுடரொளி. இதில் முழுமையான உள்ளெரிதல் இருக்கும்.

Neutralization: (வேதி.) செயலற்றதாக்குதல்: அமிலக் கரைசலில் காரத்தைச் சேர்ப்பதுபோல். மாறான விளைவினால் பயனற்றதாகவோ செயலற்றதாகவோ ஆக்குதல்.

Neutral position ; (தானி.) நடுநிலை : உந்து ஊர்தியை இயக்காமல் எஞ்சின் மட்டும் ஓடிக் கொண்டிருப்பதற்கு இடமளிக்கும் வகையில் மாற்றுப் பல்லிணை களை ஒன்றையொன்று தொடாம லிருக்கச் செய்யும் பல்லிணை மாற்று நெம்புகோலின் நிலை.

Neutral wires (மின்.) நடுநிலை மின்கம்பி : சமநிலை மின்கம்பி. மூன்று கம்பிகள் கொண்ட மின் வழங்கு முறையில் கட்டுப்பாட்டு மின்கடத்தி. இந்தக் கம்பி சம நிலையற்ற மின்னோட்டத்தை எடுத்துச் செல்கிறது.

Neutrodyne : (மின்) நடுநிலை   விசையழுத்தம் : கொண்மிகளைச் செயலற்றதாக்குவதன் மூலம் தேவையற்ற பின்னூட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு வானொலி மின் சுற்று வழி.

Neutron: (இயற்.) நியூட்ரான்/நொதுமம்: (இயற்.) மின்னியக்கமில்லாத சிற்றணு மூன்று அடிப்படை அணுத்துகள்களில் ஒன்று. இது புரோட்டான் போன்றே எடையுள்ளது. ஆனால் இதில் மின்னேற்றம் இராது.

Newel : (க. க.) நடுத்தூண் : சுழற் படிக்கட்டின் உச்சியில் அல்லது அடியில் உள்ள நடுக் கம்பம்.

News: பத்திரிகைக் காகிதம்: அடி மரக் கூழிலிருந்து தயாராகும் ஒரு வகைக் காகிதம். செய்தியிதழ்கள் அச்சடிக்கப் பயன்படுகிறது.

News board: செய்தியிதழ்க் காகித அட்டை : செய்தியிதழ்க் காகிதக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை மலிவான காகித அட்டை.

Newsprint : (அச்சு ) செய்தித்தாள் காகிதம் : செய்தித்தாள் அச்சிடுவதற்கான, மரக்கூழில் தயாரான தாள்.

Newsstick : (அச்சு )செய்தி அச்சுக்கோப்புக்கட்டை: ஒரு குறிப் பிட்ட அளவுடைய அச்சுக் கோப்புக் கட்டை. பத்தி அகலத்தைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது. செய்தித்தாள் பணியில் பயன்படுத் தப்படுகிறது.

Newton's laws of motion : (இயற்.) நியூட்டன் இயக்க விதிகள்: முதல் விதி : புறவிசைகள் எவற்றுக்கும் உட்படாதிருக்கும் போது,

ஒவ்வொரு பருப்பொருளும் தொடர்ந்து அசையா நிலையிலோ, ஒரு நேர்கோட்டில் ஒரே சீரான இயக்கத்திலோ இருந்து வரும்.                                                                                                                                                                                                        இரண்டாம் விதி : “ஒரு பொருகளின் முறுக்கமானது (அதாவது, அதன் வேக வளர்ச்சி வீதம்),அந்தப் பொருளின் மீதான நிகர விசையினை அந்தப் பொருளின் பொருண்மையினால் வகுப்பதால் கிடைக்கும் ஈவுக்குச் சமம்"                                                                                                                                                                                                                                  மூன்றாம் விதி :ஒவ்வொரு வினைக்கும், அதாவது, ஒவ்வொரு இயற்பியல் விசைக்கும் சமமான எதிர் வினை உண்டு’

Nibbler: (எந்.) கொந்து கருவி: உலோகத் தகடுகளைச் சிறுகச் சிறுகக் கொந்தி விசித்திரமான வடிவங்களை உருவாக்கப் பயன்படும் உலோக வேலைப்பாட்டுக் கருவி.

Wibs: பேனா அலகு : பேனாவின் கூர்மையான அலகு.

Niche: (க.க.) சுவர்மாடம்: சிலையுருக்கள் வைப்பதற்குரிய சுவர் மாடம் :

Nichrome: (உலோ.) நிக்ரோம்: நிக்கலும், குரோமியமும் கலந்த ஓர் உலோகக் கலவையின் வாணிகப் பெயர். இது எளிதில் பற்றிக் கொள்ளும். மின் அடுப்புகள், பிற மின் தடைச் சாதனங்கள் தயாரிக்கப்படுகிறது.

Nickel: (உலோ,) நிக்கல்: உலோகக் கலவைகளில் பெரிதும் பயன்படுத்தப்படும் கெட்டியான ஒளிரும் பொருள். இதன் ஒப்பு அடர்த்தி 8 68. நிக்கல் மூலாம்பூசவும், உலோகக் கலவைகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

Nickel aluminum : நிக்கல் அலுமினியம் : 80 % அலுமினியமும், 20% நிக்கலும் கலந்த உலோகக் கலவை. நிக்கல் கலப்பதால் அலுமினிய உலோகக் கலவைகளின் விறைப்பாற்றல் அதிகமாகிறது.

Nickel copper: (உலோ.) நிக்கல் செம்பு : நிக்கலும் செம்பும் கலந்த உலோகக் கலவை. அமிலம் அரிக்காத வார்ப்படங்கள் தயாரிக்கவும், உராய்வுத் தாங்கு வெண்கலமும் தயாரிக்கவும் பயன்படுகிறது. இதில் 60% நிக்கல், 88% செம்பு, 8.5% மாங்கனீஸ், 8.8% இரும்பு கலந்திருக்கும்.

Nickel malybdenum iron : (உலோ) நிக்கல் மாலிப்டினம் இரும்பு : 20%-40% மாலிப்டினம், 60% நிக்கல், சிறிதளவு கார்பன் கலந்த ஒருவகை உலோகக் கலவை. இது அமில அரிப்புத்தடுப்பானாகப் பயன்படுகிறது.

Nickel plating : (மின்.) நிக்கல் முலாம் : உலோக மேற்பரப்பில் நிக்கல் மூலாம் பூசுதல். ஒரு நிக்கல் உப்பு நீரில் உலோகத்தை மூழ்க வைத்து குறைந்த அழுத்த மின்னோட்டத்தைச் செலித்தினால் உலோகத்தில் நிக்கல் முலாம் படியும். Nickel silver:நிக்கல் வெள்ளி : இதனை ஜெர்மன் வெள்ளி என்றும் கூறுவர். செம்பு, நிக்கல், துத்த நாகம் கலந்த உலோகக் கலவை.

Nickel steel: (பொறி.) நிக்கல் எ.கு: 3.5% நிக்கல் அடங்கிய எஃகு. மிக வலிமை வாய்ந்தது; முறையாகச் சூடக்கிப் பக்குவப்படுத்தினால் திண்மையாக இருக்கும.

Nickel-tantalum alloy: (வேதி.) நிக்கல் டாண்டாலம் உலோகக் கலவை : 70% நிக்கல், 80% டாண்டாலம் அடங்கிய கடினமான, ஆனால் ஒசிவுத்தன்மையுடைய உலோகக் கலவை. மின் தடைக்கம்பிகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

Nitrate: (வேதி.) நைட்ரேட்டு:

(1) நைட்ரிக் அமிலத்தின் உப்புப் பொருள் சில்வர் நைட்ரேட்டு இந்த வகையைச் சேர்ந்தது.

(2) நைட்ரிக் அமிலத்துடன் அல்லது ஒரு கூட்டுப் பொருளுடன் மூல அடிப்பொருளோ வெறியமோ சேர்வதால் உண்டாகும் உப்பியற் பொருள்.

Nitric (வேதி) நைட்ரிக்: நைட்ரஜனிலிருந்து அல்லது நைட்ரஜன் தொடர்பான பொருள்.

Nitric acid: (வேதி.) நைட்ரிக் அமிலம்: சோடியம் அல்லது பொட்டாசியம் நைட்ரேட்டைக் கந்தக அமிலத்துடன் கலந்து சிதைத்து வடிப்பதால் உண்டாகும் அமிலம்.

நிறமற்றது. மிகுந்த அரிக்கும் தன்மை கொண்டது.

Nitriding: (வேதி.) நைட்ரஜனேற்றம்: இரும்பை ஆதாரமாகக் கொண்ட உலோகக் கலவைகளில் நைட்ரஜனை ஏற்றும் செய்முறை. உலோகக் கலவையை அம்மோனியா வாயுவுடனோ வேறேதேனும் நைட்ரஜனியப் பொருளுடனோ கலந்து சூடாக்குவதன் மூலம் நைட்ரஜன் ஏற்றலாம்.

Nitrojen : (வேதி.) நைட்ரஜன்: காற்று மண்டலத்தில் ஐந்தில் நான்கு பகுதியாகவுள்ள வாயுத் தனிமம் நிறமற்றது; மணமற்றது.

Nitroglycerin: (வேதி.) நைட்ரோ கிளிசரின்: வெடிப்பாற்றல் மிக்க மஞ்சட் கலவை நீர்மம். இளமஞ்சள் நிறத்திலோ நிறமற்றதாகவோ இருக்கும். எண்ணெய்ப்பசையுடையது. கிளிசரின், கந்தக அமிலம், நைட்ரிக் அமிலம் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மிகுந்த வெடிப்பாற்றல் வாய்ந்தது. களிமண்ணுடன் கலந்து சுரங்க வெடி தயாரிக்கப்படுகிறது.

Noble metal (வேதி.) துருப்படாத உலோகம்: விலையுயர்ந்த அல்லது தூய உலோகத்தைக் குறிக்கும் சொல். எளிதில் துருப்பிடிக்காத உலோகங்களையும் குறிக்கும்.

Nodes: (மின்.) அதிர்வு மையப் புள்ளி: அதிர்வுடைய பொருளின் அதிர்வு மையப் புள்ளி.

Noheet metal: செம்பத உலோகம் : இதனைச் "செம்பத ஈயம்" என் றும் கூறுவர். இது சோடியத் துடன் கலந்து கெட்டியாக்கிய ஈயத்தைக் கொண்ட உராய்வுத் தடுப்பு உலோகம். Noil: கம்பளிச் சீவல்: குறுகிய கம்பளிச் சீவல். உல்லன் நூல்களுக்குப் பயன்படுகிறது.

Nomenclature. (பொறி.) கலைச் சொல்: ஒரு குறிப்பிட்ட கலையில் அல்லது அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் தனிச் சொற்களின் தொகுதி.

Nonconductor: (மின்.) மின் கடத்தாப் பொருள்: தன்வழியாக மின் விசை செல்வதை அனுமதிக்காத ஒரு பொருள்.

Noncorrosive flux: அரித்திடா உருகு பொருள்:பற்றாசு வைத்தல், ஒட்டவைத்தல் போன்றவற்றில் பயன்படுத்தப்படும்போது அரிமானம் உண்டாக்காத ஒருவகை உருகுங் கலவைப் பொருள்.

Nondeforming steel: (உலோ.) உருத்திரியா எஃகு : 1.5% மாங்கனிஸ் கலந்த கடினமாக்கிய எஃகு. இது கருவிகள் செய்யவும், வார்ப்படங்கள் செய்யவும் பயன்படுகிறது.

Nonferous metals: (பொறி.) அயமிலா உலோகங்கள்: இரும்புஅடங்கியிராத உலோகங்கள்.

Noninductive circuit: (பொறி.) தூண்டா மின் கற்றுவழி: மின்னோட்டத்தின் காந்த விளைவு மிகக் குறைந்த அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ள அல்லது அடியோடு இல்லாமல் செய்யப்பட்டுள்ள ஒரு மின் சுற்றுவழி.

Non inductive resistance: (பொறி.) தூண்டா மின்தடை : தன் தூண்டலிலிருந்து விடுபட்ட மின்தடை.

Non inductive winding: (பொறி.) தூண்டாச் சுருணை: கம்பிச் சுருளின் ஒரு பாதியில் பாயும் மின்னோட்டத்தில் ஏற்படும் காந்தப் புலம், மறுபாதியில் எதிர்த்திசையில் பாயும் மின்னோட்டத்தினால் ஏற்படும் காந்தப் புலத்தின் மூலம் செயலற்றதாக்கப்படும் வகையில் அமைக்கப்பட்ட சுருணை.

Nonmetallic sheath cable: (பொறி.) உலோகமிலா உறை பொதிக் கம்பிவடம்: உலோகமல்லாத ஒர் உறையில் அல்லது தறி போன்ற உறையில் பொதியப்பட் டுள்ள இரண்டு அல்லது மூன்று மின் கடத்திகளைக் கொண்ட ஒரு வகை மின் கம்பிப் பொருள்.

Nonpareil: (அச்சு.) தனி நிலை அச்செழுத்து: அச்செழுத்தின் அளவு வகைகளில் ஒன்று. இது 6 புள்ளி அளவினைக் குறிக்கும்.

Non pressure: அழுத்தமிலா ஒருங்கிணைப்பு: அழுத்தம் எதுவுமின்றிப் பற்றவைப்பதற்குரிய பற்றவைப்பு முறைகளில் ஒன்று.

Nonrigid airship:(வானூ.) விறைப்பிலா வான்கலம் : வாயுப் பைகள், காற்றறைப்பைகள் போன்றவற்றிலுள்ள அக அழுத்தத்தின் மூலம் மட்டுமே வடிவம் பராமரிக்கப்படும் ஒரு வான்கலம்.

Nordberg key: (எந்.) நார்ட்பெர்க் திறவுகோல்: சக்கரத்தின் குடத்தைச் சுழல்தண்டுடன் பிணைத்துப் பூட்டுவதற்கான வட்டவடிவத் திறவுகோல். இது அடிக்கு 1/16" என்ற அளவில் நுனிநோக்கிச் சிறுத்திருக்கும். பெரிய விட்டம சுழல்தண்டின் விட்டத்தில் 1/4 பகுதி 6 வரை இருக்கும. பெரிய வடி வளவுகளில் : இத் திறவுகோல் சுழல்தண்டின் விட்டத்தில் ஐந்தில் ஒரு பகுதி என்ற அளவில் இருக்கும். பெரிய வடிவளவுகளில், இத் திறவுகோல் சுழல்தண்டின் விட்டத்தில் ஐந்தில் ஒரு பகுதி என்ற அளவில் இருக்கும்.

Normal: இயல்பளவு : நிலைநாட்டப்பட்ட சட்டம் அல்லது விதிக்கிணங்க அமைந்துள்ள நிலை.

(2) செங்குத்துக்கோடு: (கணி.)ஒரு வளைவுக்குச் செங்குத்தாக இருக்கும் ஒரு கோடு.

Normalizing: (பொறி.) இயல்பாக்குதல்: எஃகினை உயர்ந்த மாறுநிலை வெப்பத்திற்குக் கூடுதலாகச் சூடாக்கி, காற்றில் குளிர்வித்தல்.

Normal loop: (வானு.) இயல்புக் கரண வளைவு: விமானம் இயல்பாகப் பறப்பதிலிருந்து தொடங்கி, ஏறி, தலைகீழாகக் கவிழ்ந்து, சறுக்கிப் பாய்ந்து மீண்டும் இயல்பாகப் பறக்கும் நிலைக்கு வருதல்.

Normal or three-point landing: இயல்பான அல்லது மும்முனைத் தரையிறக்கம்: தரையிறங்கும் பரப்பிற்குத் தொடுவரைபோற் செல்கிற ஒரு பாதையில் தறையிறங்குதல். இதில் பறக்கும் வேகத்தில் ஏறத்தாழத் தொடுங்கணத்திலேயே ஏற்படுகிறது.

Normal solution: (வேதி,) இயல்புக் கரைசல்: ஒர் அமிலத்தின் இயல்புக் கரைசலில் 1000 க.செ.மீ. கரைசலுக்கு ஒரு கிராம் ஹைடிரஜன் அயனிகள் அடங்கியிருக்கும். எடுத்துக்காட்டுகள்: 1000 க.செ. மீ.யில் 86.5 கிராம் ஹைட்ரஜன் குளோரைடு (HCL) 1000 க.செ மீ.யில் 49 கிராம் கந்தக அமிலம் (H2 SO4), உற்பத்தியாகும் ஹைட்ரஜன் அயனிகளின் எண்ணிக்கையினால் அணு எடையை வகுப்பதன் மூலம் இந்த மதிப்புக் கிடைக்கிறது. ஓர் உப்பு மூலத்தின் இயலபுக் கரைசலில் 1000 க.செ.மீ.யில் 17 கிராம் ஹைட்ராக்கில் அயனிகள் அடங்கியிருக்கும். எடுத்துக் காட்டு 1000 க.செ.மீ.யில் 40 கிராம் சோடியம் ஹைட்ராக்சைடு.

Normal spín: (வானு.)இயல்பு சுழற்சி: விமானம் அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கும் எதிர்மாறாக இயல்பான நிலையிலிருந்து சுழன்று கொண்டே தலைகீழாக இறங்கும் இறக்கம். இதனைக் 'கட்டுப்படுத்திய' சுழற்சி என்றும் அழைப்பர். Norman : (க.க.) நார்மானிய கட்டிடக் கலை: நார்மானியர் இங்கிலாந்தை வெற்றி கொண்ட பின்னர் இங்கிலாந்தில் உயர் நிலையை எட்டிய நார்மானிய பாணிக் கட்டிடக் கலை,

Nose : (பட்.) அலகு : ஆயுதங்கள், கருவிகள் போன்றவற்றின் கூர்மையான அலகுப்பகுதி. கடைசல் எந்திரத்தின் திருகிழை முனை, துளையிடு எந்திரத்தின் கதிர், துரப்பணத்தின் கூர் அலகு போன்றவை இதற்கு எடுத்துக் காட்டு.

Nose - down : (வானூ.) கீழ் நோக்கிப் நோக்கிப் பாய்தல் : பறக்கும் விமானத்தின் கூம்புப் பகுதியைக் கீழ் நோக்கிப் பாயும்படி செய்தல்.

Nose heavy : (வானூ.) கூம்பு இறக்கம் : விமானம் இயல்பாகப் பறக்கும் போது, அதன் கூம்புப் பகுதி கீழ் நோக்கி இறங்கும் போக்கு.

Nose - over : (வானூ.) கூம்பு ஏற்றம் : விமானம் தரையிறங்கும் போது அதன் கூம்புப் பகுதி தற்செயலாக மேல் நோக்கித் திரும்புவதைக் குறிக்கும் சொல்.

Nose-up : (வானூ.) கூம்பு உயர்வு: பறக்கு விமானத்தின் கூம்புப் பகுதியை உயர்த்துதல்.

Nose wheel : (வானூ.) கூம்புச் சக்கரம் : விமானத்தின் கூம்புப் பகுதியினைத் தாங்குவதற்காக முதன்மைச் சக்கரங்களுக்கு முன்னே அமைக்கப் பட்டுள்ள, திசையறிந்து திருப்பத்தக்க சக்கரம்.

Nosing ; (க.க.) படி வரிசை : படி வரிசை விளிம்பின் உலோக முகப்பு.

Notation : குறிமான முறை : குறியீடுகள், சைகைகள், உருவங்கள், எழுத்துகள் போன்றவற்றால் செய்திகளைத் தெரிவிக்கும் முறை.

Notching machine: வடுவெட்டுக் கருவி : உலோகத் தகடுகளில் வடுத்தடங்களை வெட்டவும், விளிம்புகளை மட்டப்படுத்தவும் பயன்படும் கருவி.

Novolak: {வேதி; குழை.) நோவோலக்: நிரந்தரமாக உருகி இளகக் கூடியதும், கரையத் தக்கதுமான ஃபினோ லால்டிஹைட் பிசின். பினாலின் ஒரு மூலக்கூறுடன், ஃபார்மாடிஹைடின் ஒன்றுக்குக் குறைவான மூலக் கூற்றுடனும். ஓர் அமில வினையூக்கியுடனும் வினைபுரிவதன் மூலம் கிடைக்கும் விளைபொருள் இது.

Nozzle: (எந்.பொறி.) கூம்பலகு: நீள் குழாயின் குழாய் முனை போன்ற கூம்பலகு.

Nuclear energy : (இயற்.) அணு ஆற்றல்: அணுவியல் வினையில் வெளிப்படும் ஆற்றல்.

Nuclear turbojet: (வானூ.) அணுவியல் விசையாழி: விசையாழி யின் வழியாகவரும் காற்றினைச் சூடாக்குவதற்காக, உள்ளெரி அறைக்குப் பதிலாக, ஒர் அணு உலையைக் கொண்டிருக்கிற விசையாழி.

Nucleus: (வேதி.) மையக்கரு: அணுவின் உள்மையத்தில் செறிந்துள்ள அணுத்திரள். இதில் நியூட்ரான்களும், புரோட்டான்களும் செறிந்து சேர்ந்திருக்கும்.

Number drills:(உலோ.வே.) எண்ணிட்ட துரப்பணம்:1 முதல் 80 வரையில் எண்ணிடப்பட்ட சிறிய துரப்பணங்கள். இவற்றின் விட்டம் ஒர் அங்குலத்தின் ஆயிரங்களின் பகுதியாகக் குறிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக 1 ஆம் எண் துரப்பணத்தின் விட்டம் 0.228"; 80ஆம் எண் துரப்பணத்தின் விட்டம் 0.0135",

Numbering machine: இலக்கமிடும் எந்திரம்: காசோலைகள், அனுமதிச் சீட்டுகள் முதலியவற்றில் தொடர்ச்சியாக இலக்கங்களை முத்திரையிடும் எந்திரம் அல்லது சாதனம்.

Numerals: (அச்சு.) எண்குறி : எண் குறித்த இலக்கத் தொகுதி. பெருவழக்காகப் பயன்படுவது 1,2,3,4,5,6,7,8.9.0 என்ற அராபிய எண் குறிகள். ரோமானிய எண்கள்: 1 (1), V (5), L (60), c (100, D (500). М (1000).

Numerator: (1) பின் மேல் இலக்கம்: பின்னத்தில் மேல் இலக்கத்தின் பகுதிகளைக் குறிக்கும்.

(2) எண்ணுபவர்.

Numismatics: நாணயவியல்: நாணயம், பதக்கம் ஆகியவற்றை ஆராய்ந்து வரலாற்றைக் கணிக்கும் அறிவியல்.

Nut : (எந்.) திருகாணி : சதுரமான அல்லது அறுகோண வடிவமுடையதும், உலோகத்தில் அல்லது வேறு பொருளினாலானதுமான ஒரு சிறிய துண்டு. இதன் உள்புறத்தில் மரையாணியை ஏற்பதற்கான திருகிழைகள் அமைந்திருக்கும்.

Nutarbor or nut mandrel:(எந்.) ஆதார அச்சு : திருகாணிகளை வடிவமைப்பதற்குப் பயன்படும் சுழலும் முதன்மை ஆதார அச்சு.

Nut machine (பட்.) திருகாணிப் பொறி : ஒர் உலோகப் பட்டையிலிருந்து அல்லது உலோகத் தண்டிலிருந்து திருகாணிகளைத் தயாரிப்பதற்கு வெட்டவும். துளையிடவும், தட்டி விடவும் பயன்படும் ஓர் எந்திரம்.

Nut shanks : (பட்.) திருகாணித் துண்டு : பெரிய மரக்கைப் பிடிகளுடன் பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்பட்ட திருகாணித்தண்டு அல்லது துண்டு.

Nylon : (குழை.) நைலான் : குழைமப் பொருள்களின் ஒரு குடும்பம். இதில் பல வகைகள் உண்டு. இரு காடி மூலங்களையுடைய கரிம அமிலங்களை டையாமின்களுடன் சேர்த்துச் செறிமானம் செய்வதன் மூலம் ஒரு வகைப் பிசின் உண்டாகிறது. இந்தப் பிசின் கெட்டியானது; அதிக வெப்பத்தையும், உராய்வையும், வேதியியல் எதிர்ப்பையும் தாங்கக்கூடியது.