அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்/P

விக்கிமூலம் இலிருந்து

P

Pack harden: (உலோ.) கார்பனாக்குதல் (1) கார்பனாக்குதல் அல்லது கெட்டிப்படுத்துதல்

(2) மென் எஃகிற்குக் கடினமான புறப்பரப்பினைக் கொடுக்கும் முறை.

எஃகினை ஒரு கார்பன் பொருளுடன் சேர்த்துப் பக்குவப்படுத்தி எண்ணெயில் அமிழ்த்துவதன் மூலம் இது செய்யப்படுகிறது.

Padlock: பூட்டு: நாதாங்கியுடன் இணைவாகப் பயன்படுத்தப்படும் பிரித்தெடுக்கக்கூடிய ஒருவகைப் பூட்டு.

Pad lubrication:திண் மசகிடல்:எண்ணெய்ப் பூரிதமாகிய அடை பொருள். கரையாத பிசின் செய்யப் பயன்படுகிறது.

Ozone: (வேதி.) ஓசோன்: கார நெடி கொண்ட நிறமற்றவாய (O3) சலவை எண்ணெய்கள். மெழுகுகள், மாவு, மரப்பொருள் முதலியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. சில சமயம், குடி நீரைக் கிருமி நீக்கம் செய்வதற்கும் பயன்படுகிறது. ஒரு தனிவகைச் சாதனத்திலுள்ள உலர்ந்த மற்றும் குளிர்ந்த காற்றின் வழியே உயர் அழுத்த மின்விசையைச் செலுத்துவதன் மூலம் இந்த வாயு தயாரிக்கப்படுகிறது.

பஞ்சுடன் இணைத்து மசகிடும் முறை.

pad saw: பொதி இரம்பம்: ஒரு வகைக் கை ரம்பம். நீண்ட கூம்பு வடிவ அலகினைக் கொண்டிருக்கும் இந்த அலகு ஒரு குதை குழிக்குள் அல்லது பொதிவுக்குள் பொருத்தப்பட்டிருக்கும். பயன்படுத்தப்படாதபோது இந்த அலகு கைப்பிடியாகவும் பயன்படும்.

Pagoda: கூருருளையோடு: கூர்ங் கோபுரம் வடிவிலான ஒரு முகடு.

Paint: (வேதி.) வண்ணம்: எண்ணெய் அல்லது நீருடன் கலந்த அல்லது உலர்ந்த வண்ணப் பூச்சு. Paint base : (வேதி.) வண்ண ஆதாரம் : ஈயம் அல்லது துத்த நாகம் போன்று, வண்ணத்தின் ஆதாரப் பொருள் .

Paint drier :வண்ண உலர்த்தி : வண்ணம் பூசியதும் அந்த வண்ணத்தை விரைவாக உலரும்படி செய்வதற்குப் பயன்படும் பொருள். பெரும்பாலான வண்ண உலர்த்திகள் ஈயத்தினாலும், மாங்கனீசினாலும் ஆனவை. இந்தப் பொருளை அளவோடு பயன்படுத்துவது நலம். அளவுக்கு மீறிப் பயன்படுத்துவது கெடுதல்.

Paint for concrete :கான்கிரீிட் வண்ணம் : துத்தநாக ஆக்சைடை அல்லது பேரியம் சல்பேட்டை எண்ணெயுடன் கலந்து தயாரிக்கப்படும் வண்ணப் பொருள்.

Painting! வண்ணம் பூசுதல் : வண்ணம் பூசி அலங்கார வேலைப் பாடுகள் செய்தல்.

Paint thinner . வண்ண நெகிழ்ப்பான் : திண்ணிய வண்ணப் பொருள்களை எளிதாகப் பயன்டுத்துவதற்கு வசதியாக நெகிழ்வுறுத்துவதற்காகக் கற்பூரத் தைல அல்லது பெட்ரோலியச் சாராவிகள் பயன்படுத்தப்படுகின்றன. மலிவாகக் கிடைப்பதால் பெட்ரோலியச் சாராவிகளே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

Packtong :பேக்டாங் : நிக்கல், துத்தநாகம், செம்பு கலந்த ஒர் உலோகம். ஜெர்மன் வெள்

ளியை ஒத்தது உலோக வேலைப்பாடுகளுக்குப் பயன்படுகிறது.

Palladium: (வேதி.) பல்லேடியம் ! வெண்ணிறமான, கம்பியாக இழுக்கக்கூடிய, தகடாக்கக்கூடிய ஒர் அரிய உலோகம். இது பிளாட்டினத்துடன் கிடைக்கிறது.

Pamphlet (அச்சு.) துண்டு வெளியீடு : அட்டைகளின்றி அல்லது கட்டுமானம் செய்யப்படாமல் காகிதத்தில் அச்சிடப்பட்ட ஒரு சிறு புத்தகம்.

Pan: தாலம்: (1) ஓர் ஒளிப்படக் கருவின் இயக்கம், இது ஒரு தொகுதியின் அடுக்கணிக்காட்சியைக் காட்டக்கூடியது.

(2) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளக்குகள் பயன்படுத்தப்படும் ஒரு பிரதிபலிப்பு அலகு. இதில் பெரும்பாலும் நுண் ஊதாக் கதிரால் ஒளிரும் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

Panchromatic: (ஒ.க.) நிறப்பதிவுப் பசை: ஒளியின் நிறங்கள் அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய பசைக் குழம்புகள்.

Panel board (மின்.) மின் விசைப் பலகை: மின் விசைகளும், உருகு கம்பிகளும் உடைய ஒரு கட்டுப்பாட்டுப் பலகை.

Pantograph: படப்படியெடுப்பான்; வரைபடங்களை பெரிதாக்கிய அளவிலோ, சுருங்கிய அளவிலோ படி யெடுக்கப் பயன்படும் ஒரு சாதனம்.

Pantometer: (கணி.), கோண மானி: கோணங்கள். உயரங்கள் முதலியவற்றை அளவிடுவதற்கான ஒரு சாதனம்.

Paper: வரைதாள்: படங்கள் வரைவதற்குப் பயன்படும் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தாள். இரண்டும் தட்டைத் தகடுகளாகவும் சுருள்களாக இருக்கும். நல்ல வரை தாள் முரடாகவும், பென்சிலையும் மையையும் ஏற்கக் கூடியதாகவும், அழித்துத் திருத்த இடமளிப்பதாகவும் இருக்க வேண்டும். இதற்குப் பொதுவாகக் கையினால் செய்யப்படும் காகிதம் பொருத்தமாக இருக்கும்.

Paper birch: காகிதப் பிரம்பு மரம்: இதனை வெண்பிரம்பு மரம் என்றும் அழைப்பர். இது 50" முதல் 75" வரை வளரும். மரம் வலுவானது; கடினமானது. இளம் பழுப்பு நிறத்தில் இருக்கும். காகிதத்கூழ் தயாரிக்க முக்கியமாகப் பயன்படுகிறது.

Paper condenser: (மின்.) காகிதச் செறிவுறுத்து சாதனம்: ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட காகிதத்தினாலான மின் தடைப் பொருள் கொண்ட கெட்டிப்படுத்தும் சாதனம்,

Paper cutter: (அச்சு.) காகித வெட்டி: காகிதத்தை வேண்டிய வடிவனவுகளில் வெட்டுவதற்குப் பயன்படும் ஓர் எந்திரம். இதனை கையினாலோ விசையினாலோ இயக்கலாம்.

Paper drill: (அச்சு.) காகித துளைக் கருவி: அடுக்கிய காகிதங்களில் துளையிடுவதற்குப் பயன்படும் கருவி.

Paper machine: காகித எந்திரம்: காகிதத்தை வடிவமைக்கவும், அழுத்தவும், உலர்த்தவும், மெருகூட்டவும். சுருள்களாக கருட்டவும், தகட்டுத் தாள்களாக வெட்டவும் பயன்படும் எந்திரம்.

Papier mache:தாள் கூழ்: பல்வேறு வடிவங்களில் காகிதங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படும் காகிதக்கூழ்.

Parabola: (பொறி: கணி.) மாலை வளைவு: கூருருளையின் பக்கத்திற்கு இணையான தள வளைவு. ஒரு கூருருளையை பக்கத்திற்கு இணையாகச் செலுத்துவதன் மூலம் இது கிடைக்கிறது.

Parabolic girder: (பொறி.) மாலை வளைவு உத்தரம்: ஒரு மாலை வளைவுக்குள் வரையப்பட்ட பல கோண வடிவில் அமைத்த ஓர் உத்தரம். இது பாலங்கள் அமைப்பதற்குப் பயன்படுகிறது.

Parachut: (வானூ.) வான்குடை (பாராசூட்): வானிலிருந்து மெதுவாக மிதந்து கொண்டே தரையிறங்குவதற்குப் பயன்படும் குடை. வடிவச் சாதனம். இதன் குடை வடிவம் வானிலிருந்து இறங்கும் போது காற்றை எதிர்த்து வேகத்தைக் குறைத்து மெதுவாகத் தரையிறங்குவதற்கு உதவுகிறது.

parachute canopy: (வானூ.) வான்குடை மேற்கட்டி: ஒரு வான் குடையின் முக்கிய ஆதார மேற் பரப்பு.

Parachute flare: (வானூ.) வான் குடை மின்னொளி : ஒரு குறிப்பிட்ட உயரத்தில் விமானத்திலிருந்து குதிக்கும்போது ஒரு பரந்த பரப்பளவில் மின்னொளி பரவும்படி வடிவமைக்கப்பட்ட சாதனம் பொருத்திய வான்குடை.

Parachute harness : (வானூ.) வான்குடைச் சேணம் : வான் குடையை அணிந்து கொள்பவர் தன்னோடு பிணைத்துக் கொள்ளப் பயன்படுத்தும் பட்டைகள் பட்டைப்பிடிகள், இணைப்பான்கள் அமைந்த ஒரு கூட்டு அமைப்பு.

Paraffin : (வேதி.) பாரஃபின் மெழுகு : பெட்ரோலியத்தைக் காய்ச்சி வடித்தல் மூலம் கிடைக்கும் ஒருவகை மெழுகு. இது ஒளி, ஊடுருவக்கூடியது; திண்மையானது.

Parallax : (மின்.) மாறு கோணத் தோற்றப் பிழை : நோக்கு மயக்கம்; பார்வைக் கோணத்தால் பொருள் நிலையில் தோன்றும் மாறுதல் கோண அளவு.

Parallel: இணை கோடு: ஒரு

போக்குடைய இணைகோடுகள். இவை ஒரே திசையில் செல்பவை, எல்லா முனைகளிலும் இணை தொலைவுடையவை.

Parallel circuit , (மின்.) இணைச் சுற்று வழி : பொதுவான ஊட்டு வாயும், பொதுவான திரும்புவாயும் உடைய ஒரு மின்சுற்றுவழி. ஊட்டு வாய்க்குமிடையே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கருவிகள் இணைக்கப்படுகின்றன. ஒவ்வொரு கருவிக்கும் பொது ஊட்டு வாயிலிருந்து தனித்தனி அளவு மின்னோட்டம் பாயும்.

Parallel connected transformer : (மின்.) இணை இணைப்பு மின்மாற்றி : ஒரே மின் வழங்கு ஆதாரத்துடன் .தொடக்கச் சுருணைகள் இணைக்கப்பட்டுள்ள ஒன்று அதற்கு மேற்பட்ட மின் மாற்றிகள். இதில் அழுத்தப்பெற்ற மின்னழுத்தம் ஒவ்வொரு நேர்விலும் மின் வழியிலுள்ள அதே அளவுக்கு இருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும்.

Parallel forces : (எந்.)இணை விசை : இரண்டு விசைகள் இணையாக இருந்து, ஒரே திசையிலிருந்து தொடங்காமல் ஆனால் ஒரே திசையில் செயற்படுமானால், அதன் கூட்டு விளைவாக்கம் இரண்டு விசைகளுக்கும் இணையாகவும், அவற்றின் கூட்டுத் தொகைக்குச் சமமாகவும் இருக்கும். இரு விசைகளும் எதிர்த் திசைகளில் செயற்படுமானால், அப்போது கூட்டு விளைவாக்கம், அவ்விரு விசை களுக்குமிடையிலான வேறுபாட்டிற்குச் சமமாக இருக்கும்.

Parallel jaw pliers : (பட்.) இணைத்தடை இடுக்கி : செங்கோணியக்க இணைப்புடைய இடுக்கி. இது வாயளவு எவ்வாறிருப்பினும் தாடைகள் இணையாக இருப்பதற்கு இடமளிக்கிறது.

Parallelogram : (கணி.) இணைவகம் : எதிர்ப்பக்கங்கள் சமமாகவும் இணையாகவும் உள்ள ஒரு நாற்கரம், பரப்பளவு = ஆதாரம் x செங்குத்து உயரம்,

Parallelogram of forces: (எந்.) இணைவக விசை: இரண்டு விசைகள் இணைந்து ஒரே விசையாகச் செயற்படும்போது திசையிலும் அளவிலும் மூல விசைகள் இரண்டும் ஒர் இணைவகத்தின் இரு புடைப் பக்கங்களுக்கும் இணை விசை அவற்றுக்கிடைப்பட்ட மூலை விட்டத்திற்கும் சமமாக் இருக்கும் நிலை.

Parallel rulers: இணைகோடு வரைகோல்: ஒரு போகுக் கோடுகள் வரைவதற்குரிய, சுழல் அச்சால் இணைக்கப்பட்ட இரட்டை வரை கோல்.

Paramount: மேதகவு:அனைத்திற்கு மேலான தகைமை சான்று.

Parapet: (க. க.) கைப்பிடிச்சுவர்; மேல்முகடு, மேல்மாடி, அல்லது ஒரு பாலத்தின் பக்கத்தில் மறைப்பாகக் கட்டப்படும் தாழ்வான சுவர் .

Parasite drag: (வானூ.) ஒட்டு இழுவை: விமானத்தில் இறகுகளின் விரைவியக்கப் பகுதியிலிருந்து தனித்தியங்கும் இழுவைப் பகுதி.

Parasol monoplane: (வானூ.) விமானத்துள் விமானம்: விமானத்தின் கட்டுமானச் சட்டகத்திற்கு மேலே இறகு அமைந்துள்ள ஒரு குறு விமானம்,

Parchment: வரைதோல் தாள்:எழுதுவதற்காக விலங்குத் தோல் போல் பாடம் செய்யப்பட்ட காகிதம். காகிதத்தை வலுக்குறைந்த கந்தக அமிலக் கரைசலில் நனைத்து கெட்டித் தன்மையுடையதாகவும், நீர் புகாதவாறும் செய்யப்படுகிறது. இக்காகிதம் பளபளப்பாகவும், ஒளி ஊடுருவக் கூடியதாகவும் இருக்கும்.

Pargeting: (க.க.) சுண்ணச்சாந்து: சுவர்ப்பூச்சுச் சிற்ப ஒப்பனை வேலைப்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் அலங்காரக் காரை.

Paring chisel: (மர.வே.) செப்பனிடு உளி: சீவிச் செப்பனிடவும், தறித்து ஒழுங்குபடுத்தவும், விளிம்பு வெட்டவும் ஒரம் நறுக்கவும் பயன்படும் ஒரு நீண்ட உளி,

Paris green: (வேதி.) பாரிஸ் வண்ணம்: (CuHAsO3): பூச்சிகொல்லி யாகவும் வண்ணப்பொருளாகவும் பயன்படும் தாமிர ஆர்சனைட் என்ற நச்சு வேதியியற் பொருள்,

Parquetry : (க.க.) மரக்கட்டை எழில் விரிப்பு: தளங்களில் மரக் கட்டையினால் எழிற்பரப்பு அமைத்தல்,

Particle : துகள் : சிறு துண்டு; அணுக்கூறு.

Parting : (வார்.) வகிடு : ஒரு வார்ப்படத்தின் இரு பகுதிகளைப் பிரிக்கும் இணைப்பு அல்லது பரப்பு.

Partition : (க. க.) தடுப்புச் சுவர்: ஒரு கட்டிடத்தைப் பல அறைகளாகப் பகுப்பதற்குக் கட்டப்படும் நிரந்தரமான உள்சுவர். வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும், அலுவலகக் கட்டிடங்களிலும் பல்வேறு கட்டுமானப் பொருள்களினால் வசதிக்கேற்பத் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்படுகின்றன.

Party wall (க.க.) இடைச் சுவர்: கட்டிடங்களுக்குப் பொதுவுரிமையாக வழங்கப்படும் இடைச்சுவர்.

Pascal’s law : (இயற்.) பாஸ்கல் விதி : "ஒரு திரவத்தின் ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் செலுத்தப்படும் அழுத்தமானது. அந்தக் கொள்கலத்தின் அதே அளவுப் பகுதி ஒவ்வொன்றுக்கும் சற்றும் குறையாமல் செலுத்தப்படுகிறது' என்பது பாஸ்கல் விதி.

Paste board :தாள் அட்டை: இன்று நடுத்தர அளவு கனமுடைய கெட்டியான அட்டை எதனையும் இது குறிப்பிடுகிறது. முன்னர் பல தகட்டுத்தாள்களை அடுக்கி ஒட்டிய அட்டையை குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.

Pastel :வண்ணக்கோல் : வண்ணக் கோல்கள் செய்வதற்காகப் பசை நீரில் நிறமிகளைக் கலந்து உண்டாக்கப்படும் உலர் பசைக் கோல்.

Patent; காப்புரிமை : புதுமுறை ஆக்க விற்பனைகளுக்கு அரசு வழங்கும் தனிக் காப்புரிமை.

Patenting: மெருகிடல்: இரும்பை ஆதாரமாகக் கொண்ட உலோகக் கலவைகளை முட்டுபதன் அளவுக்குச் சூடாக்கி, பிறகு அளவுக்குக் குறைவாகக் காற்றிலோ அல்லது 700" ஃபா. வெப்பமுடைய உருகிய ஈயத்திலோ குளிர்வித்து மெருகிடுதல்.

Patina : பசுங்களிம்பு : பழைய வெண்கலப் பொருள்களில் காலத்தால் ஏறும் உலோகக் களிம்பின் மென்படலம்.

Pattern : (வார்.) தோரணி : ஒர் எடுத்துக்காட்டு வார்ப்பு. முன் மாதிரியாகக் கொண்டு ஒரே மாதிரியான பொருள்களை வார்ப்படம் மூலம் செய்வதற்கான படிவம்,

pattern letter : (வார்.) முன் மாதிரி எழுத்து : ஈயம், வெள்ளீயம் அல்லது பித்தளையில் செய்த எழுத்து. இது ஒரு தோரணையில் பொருத்தப்பட்டிருக்கும். அதிலிருந்து ஒரே மாதிரியான பெயர் அல்லது இலக்கத்தை வார்த்தெடுக்கலாம்.

Pattern - making : தோரணி வார்ப்படம் : வார்ப்படத் தொழிலில் பல்வேறு மாதிரிகளை அல்லது உருவரைகளைத் தயாரிப்பதற்குப் பயன்படும் வார்ப்படம்.

Pattern shop : தோரணிப் பட்டறை : வார்ப்படங்கள் தயாரிக்கப் பயன்படுத்துவதற்கான மரத்தோரணிகளைத் தயாரிக்கும் பட்டறை.

Pavement : (க.க.) தள வரிசை: சாலை அல்லது ஓர் நடைபாதையில் அமைக்கப்படும் கடினமான பாவு தளம்,

Pavilion : (க.க.) காட்சி அரங்கம்: முற்றிலும் சுவர்களினால் அடைக்கப்படாமல் கூடாரமிட்ட ஒப்பனைப் புறத் தாழ்வாரம். காட்சி அரங்காக அல்லது கேளிக்கை அரங்காக இது பயன்படும்.

Pay load : (வானூ.) வருவாய்ப் பகுதி : விமானத்தில் பயணிகள், சரக்குகள் போன்ற வருவாய் தரும் பாரத்தின் பகுதி.

Payne's process : தீத்தடைக் காப்பு முறை : மரத்தில் இரும்பு சல்பேட்டை ஊசிமூலம் செலுத்தி, அதன் பின் சுண்ணாம்புச் சல்பேட்டு அல்லது சோடா கரைசலை ஊசி மூலம் செலுத்தி தீத் தடைக்கசப்பு செய்யும் முறை.

Peak load ; (மின்.) உச்சமின் விசை : ஒரு மின்னாக்கி அல்லது மின் விசை உற்பத்தி அமைப்பு, 20மணி நேரத்திற்கு ஒரு முறை என்பது சீரான இடைவெளிகளில், மிக உயர்ந்த அளவு வழங்கும் மின் விசையின் அளவு.

Pearl: (வேதி.) முத்து: இது அரும் பொருள்களில் ஒன்று. முத்துச் சிப்பியில் கால்சியம் கார்போனேட் என்ற வேதியியற் பொருளினால் உண்டாகிறது.

Pearling: இழை முடிப் பூ வேலை: இழை முடிக் கண்ணியிட்டுச் செதுக்கிப் பூ வேலைப்பாடுகள் செய்தல்.

Pearlite; (உலோ ) பியர் லைட்: கார்பனும் இரும்பும் கலந்த எல்லாக் கலப்புக் கூறுகளையும் உடைய உலோகக் கலவை. இதில் 0.9% கார்பன் கலந்திருக்கும்.

Pear wood:பேரி மரம்: இளம் பழுப்பு நிறமுடைய, நெருக்கமான மணிக்கரண் அமைந்த ஒரு வகை மரம். மிதமான கடினத்தன்மையுடையது. வரைவாளர்கள் T-சதுரம், முக்கோணங்கள் முதலியவை செய்யப் பயன்படுகிறது.

Peat: (வேதி.) புல்கரி: ஒரளவு கார்பனாக்கிய தாவரக் கனிமப் பொருள். எரிபொருளாகப் பயன்படுகிறது. இதனைத் தோண்டியெடுக்கும்போது இதில் நீர்ச்சத்து மிகுதியாக இருக்கும். அதனால் இதனை அழுத்தி, உலர்த்தி எரி பொருளாகப் பயன்படுத்த வேண்டும்.

Pebble dash: (க.க.) கூழாங்கல் பதிப்பு: சாந்து அல்லது சிமென்ட் பூசிய சுவர்களில் கூழாங் கற்களைப் பதித்து அலங்கார வேலைப்பாடு செய்தல்.

Pedestalt: நிலை மேடை: தூண் சிலை போன்றவற்றின் அடிப்பீடம்.

Pediment: (க.க.) முக்கோண முகப்பு முகடு: பண்டையக் கிரேக்கக் கட்டிடக் கலைப் பாணியில் அமைக்கப்பட்ட வரி முக்கோண முகப்பு முகடு.

Pedometer: அடியீடுமானி: காலடி எண்ணிக்கை மூலம் தொலைவைக் கணக்கிட்டுக் காட்டுங் கருவி.

Peen: (எந்.) சுத்தி மென்னுணி: உலோக வேலைத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் சுத்தியல் தலைப்பின் மெல்லிய நுணி.

Peg: ஆப்பு : அறைகலன்களின் உறுப்புகளை ஒன்று சேர்த்து இணைப்பதற்கு ஆணிகளுக்குப் பதிலாகப் பயன்படும் மரத்தினாலான முளை.

Pellucid தெள்ளத் தெளிவான : தெள்ளத் தெளிவான, ஒளி எளிதில் ஊடுருவிச் செல்லக்கூடிய,

Pendant switch : (மின்.) பதக்க விசை : முகட்டிலிலிருந்து தொங்கும் ஒரு கயிற்றில் இணைக்கப்பட்டுள்ள ஒரு சிறிய அழுத்துப் பொத்தான் விசை. முகட்டிலுள்ள விளக்குகளை இயக்குவதற்குப் பயன்படுகிறது.

Pendulum : ஊசல் : ஒரு நிலையான புள்ளியிலிருந்து தொங்குகிற

ஒரு பொருள். இது கடிகாரத்தின் ஊசல் போன்று இருபுறமும் தங்கு தடையின்றி ஊசலாடக் கூடியது.

Penetrating oil: ஊடுரு எண்ணெய் : துருப்பிடித்த அல்லது அரிக்கப்பட்ட உறுப்புகளை எளிதாக இயக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஊடுருவிச் செல்லக்கூடிய ஒரு தனி வகை எண்ணெய்.

Penetrometer: (குழை.) ஊடுருவு மானி: திடப்பொருள்களின் மேற்பரப்பில் ஊருடுவும் திறனை அளவிடுவதற்கான ஒரு கருவி.

penny: (மர.வே.) பென்னி: ஆணி களின் நீளத்தைக் குறிக்கும் ஒரு சொல். பத்துப் பென்னி என்பது ஒர் ஆணியின் 3" நீளத்தைக் குறிக்கும். ஆதியில் "பென்னி என்பது நூற்றுக்கு விலையைக் குறித்தது

Penny-weight: பென்னி எடை: இருபத்து நான்கு குன்றிமணி எடை அளவு.

Pentagon: (கணி.) ஐங்கோணம்: ஐந்து பக்கங்கள் கொண்ட ஓர் உருவம்.

Penumbra: அரை நிழல்: பூமி-நிலவு இணை நிழலான திண்ணிழற்பகுதி சூழ்ந்த அரை நிழல் வட் டம்.

Percentage: (கணி;எந்) விழுக்காடு: நூற்றில் பகுதி; சதவீதம்; நூற்று விழுக்காடு. Perforating; (அச்சு.) துளையிடல்: தாளில் முத்திரைகளுக்கான சூழ்வரிசைத் துளையிடுதல்; கிழிப்பதற்கு வசதியான துளை வரிசை,

Perforating machine: (அச்சு.) துளையிடு கருவி: தாளைக் கிழிப்பதற்கு வசதியாகத் தாளில் துளையிடுவதற்குப் பயன்படும் ஒரு கருவி.

Performance-type glider: (வானூ.) செயல்திறன் சறுக்கு விமானம்: மிக உயர்ந்த அளவு செயல்திறன் வாய்ந்த ஒரு சறுக்கு விமானம்,

Perimeter: (கணி.) சுற்றளவு: வட்டமான உருவின் சுற்றுவரை நீளம்.

Periodic arrangement: (வேதி.) எண்மானப் பட்டியல்: ஒத்த வேதியியற் பண்புகள் ஒரே ஒழுங்காகத் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட தனிமங்களின் அணு எண் படியான வரிசைப் பட்டியல்.

Peripheral speed: (எந்.) பரிதி வேகம்: ஒரு சக்கரம். அல்லது சுழல்தண்டு போன்ற உறுப்புகள் வட்டப்பரப்பின் சுற்றுக்கோட்டில் ஒரு நிமிடத்திற்குச் சுழலும் கழற்சிகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடும் வேகம்.

Periphery: (கணி.)பரிதி: வட்டம், நீள்வட்டம் போன்ற உருவங்களின் வட்டப்பரப்பின் சுற்றுக் கோடு.

Periscope: புறக்காட்சிக் கருவி: நீர்மூழ்கிக் கப்பலின் முகட்டு மேற்பரப்புக் காட்சிக் கருவி, பாதுகாப்புக் குழியின் புறக்காட்சிக் கருவி,

Peristyle: (க.க.) சுற்றுத் தூண் வரிசை: கோயில், மடம், மண்டபம் முதலியவற்றைச் சுற்றிலும் உள்ள தூண் வரிசை.

Permanent load: (பொறி.) நிலைச் சுமை: எந்திரத்தில் அதன் கட்டமைப்புச் சுமை போன்ற ஒரு போதும் மாறாத நிலையான சுமையின் அளவு.

Permanent magnet. (மின்.) நிலைக் காந்தம்: ஒரு காந்த எஃகு தான் பெற்ற காந்த சக்தியை ஒரு போதும் இழக்காமல் ஒரு காந்தப் புலத்தின் ஆற்றலுடன் நிரந்தரமாக இருத்தி வைத்துக் கொள்கிறது. இக்காந்தம் நிலைக் காந்தம் எனப்படும்.

Permanganate:(வேதி.) பெர்மாங்கனேட்(HMnO4) : பெர்மாங்கனிக் அமிலத்தின் உப்பு. இது அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும்.

Permeability: (மின்.) கசிவுத் திறன்: ஊறி உட்புக இடந்தரும் திறன்.

Permutation: (கணி.) முறை மாற்றம்: ஒரு தொகுதியில் அடங்கிய பொருள்கள் ஒன்று மாற்றி ஒன்று வரிசை மாறும் ஒழுங்கமைவு.

Perpend: (க.க.) ஊடுகல்:சுவரின் ஒரு கல்லிலிருந்து மற்றொரு பக்கத் திற்கு அதனூடே செல்லும் கல். Perpendicular: செங்குத்துக் கோடு: ஒழி கோட்டிற்கு அல்லது தளத்திற்குச் செங்குத்தாக உள்ள கோடு.

Perron: (க,க.) வாயிற்படிமேடை: ஒரு கட்டிடத்திற்கு வெளியே முதல் மாடிக்குச் செல்ல அமைந்துள்ள வாயிற் படி,

Perspective: பரப்புத் தோற்றம்: ஒரு சமதளப் பரப்பில் உள்ள பொருள்கள் கண்ணுக்குத் தோன்றுகிற அதே தோற்றத்தில் காட்சிப் படங்களை வரைந்து காட்டுதல்.

Pet cock: அடைகுமிழ்: நீராவி முதலியவற்றை வெளியிடுவதற்கான அடைப்புக் குமிழ்.

Petrography : கற்பாறையிய்ல் : கற்பாறைகளின் அமைப்பு, உருவாக்கம் முதலியவற்றை ஆராய்ந்தறிதல்.

Petrol : கல்லெண்ணெய் (பெட்ரோல்) : பொறி வண்டிகளுக்கும், விமானம் முதலியவற்றுக்கும் பயன்படும் தூய்மையாக்கப்பட்ட நில எண்ணெய். அமெரிக்காவில் இதனை கேசோலின்' என்பர்.

Petroleum : (வேதி.) பெட்ரோலியம் : உள் வெப்பாலைகளிலும் பிறபொறிகளிலும் எரிபொருளாகப் பயன்படும் நிலப்படுகைக்குரிய தாது எண்ணெய்.

Pewter : (உலோ.) பீயூட்டர் : வெள்ளீயமும் காரீயமும் கலந்த சாம்பல் நிற உலோகக் கலவை.

Pharmaceuticals: (வேதி.) ஆக்க மருந்து: மருந்துக் கடைகளில் ஆக்கம் செய்து விற்பனை செய்யப்படும் மருந்துகள் மற்றும் வேதியியற் பொருள்கள்.

Phase : (மின்.) மின்னோட்டப் படிநிலை : மாறுபட்ட அலை இயக்கத்தில் செல்லும் மாற்று மின்னோட்ட இயக்கப் படிநிலை.

Phase angle : (மின்.) மாற்று நிலைக் கோணம் : மாற்று மின்னோட்டச் சுற்று வழியில் மின்னோட்ட இயக்கப் படிநிலையைக் குறிக்கும் கோணம். -

Phase meter : {மின்.) மின்னோட்டப் படிநிலை மானி : மின் சுற்று வழியில் அலைவெண்ணைக் குறிக்கும் மானி. இதனை அலைவெண் மானி என்றும் கூறுவர்.

Phenol (வேதி.) கரியகக் காடி (C6H5OH) : ஒரு படிகப் பொருள். கரி எண்ணெயிலிருந்து (கீல்) ஒரளவு எடுக்கப்படுகிறது. சோடியம் பென்சைன் சல்ஃபோனேட்டை காரச்சோடாவுடன் இணைத்துச் செயற்கை முறையிலும் தயாரிக்கப்படுகிறது. கிருமி நீக்கியாகப் பயன்படுகிறது.

Phenolic resins moiding type: (வேதி. குழை,) பெனோலிக் பிசின் வார்ப்படம் : பிளாஸ்டிக் குடும்பத்தில் மிகப் பழமையானது; மிக முக் கியமானது. குறைந்த செலவில் கிடைக்கக்கூடியது; பயனுள்ள பண்பியல்புகளைக் கொண்டது இவற்றின் வெப்பத்தை எதிர்க்கும் தன்மையும், பெரும்பாலான அரி மானப் பொருள்களை எதிர்க்கும் தன்மையும் முக்கியமானது. இது மின் கடத்தாப் பொருளாகும். எனவே இதைக் கொண்டு மின் செருகிகள் இணைப்புக் கைபிடிகள். அடைப்பான்கள் போன்ற சாதனங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

Pheno plast: (வேதி;குழை.) பெனோபிளாஸ்ட்: பெனால் ஆல்டி ஹைட் பிசின்களைக் குறிக்கும் பொதுவான சொல். இதனை "பெனோலிக்ஸ்" என்றும் கூறுவர்.

Phosphor bronze: (உலோ.) பாஸ்போர் வெண்கலம்: தாமிரம், வெள்ளீயம் ஆகியவற்றுடன் சிறிதளவு பாஸ்பரம் கலந்த ஓர் உலோகக் கலவை. இது பெரும்பாலும் தாங்கிகள் செய்யப்பயன்படுகிறது.

Phosphorus: (வேதி.) பாஸ்பரஸ்: இளமஞ்சள் நிறமுள்ள மெழுகு போன்ற திடப்பொருள். ஒப்பு அடர்த்தி 1.83; உருகுநிலை 44.4°C. இது எளிதில் தீப்பிடிக்கக் கூடியது. இதனை எப்போதும் தண்ணிரிலேயே அமிழ்த்து வைத்திருக்கவேண்டும். இது சிறுசிறு குச்சிகளாக விற்பனை செய்யப்படு கிறது.

Photo composing:(அச்சு.) ஒளிப்பட அச்சுக்கோப்பு: ஒளிப்படமுறையில் அச்சுக்கோக்கும் முறை.

Photo electric cell:(மின்.) ஒளி

மின்கலம்: ஒலியாற்றலை மின்னாற்றலாக மாற்றக் கூடிய ஒரு சாதனம். ஒளி ஆதாரத்தின் மூலம் தானாகக் கட்டுப்படுத்துவதற்கு இது முக்கியமாகப் பயன்படுகிறது.

Photo-engraving: (அச்சு.) ஒளிச் செதுக்கு வேலை: ஒளிப்பட உத்தி மூலமாக செதுக்கு வேலைப்பாடுகள் செய்யும் முறை.

Photography:T***(வேதி.) ஒளிப் படக்கலை: ஒலியுணர்வுடைய தகடு, படச்சுருள், தாள் ஆகியவற்றில் ஒளி படியச் செய்து, சில வேதியியற் பொருள்களைக் கொண்டு அவற்றைப் பக்குவம் செய்வதன் வாயிலாக உருவங்களைப் பதிவு செய்யும் முறை.

Photogravure: (அச்சு.) ஒளிப்பட மறிபடிவத் தகட்டுச் செதுக்குரு: ஒளிப்பட மறிபடிவத்தை உலோகத் தகட்டில் பதியவைத்துச் செதுக்குவது மூலமாக ஒப்புருவம் எடுத்தல்.

Photometer: (இயற்.) ஒளிச் செறிவுமானி: ஒளியின் செறிவினை அளவிடுவதற்கு அல்லது பல்வேறு ஒளிகளின் செறிவினை ஒப்பிடுவதற்குப் பயன்படும் ஒரு கருவி.

Photomicrograph: (உலோ.) உருப்பெருக்கு ஒளிப்படம்: உருப் பெருக்காடியினால் விரிவாக்கம் செய்யப்பட்ட பொருளின் ஒளிப்படம். உருப் பெருக்காடியையும், ஒளிப்படக் கருவியையும். இணைத்து இந்தப்படம் எடுக்கப் படுகிறது. உலோகப் பொருள்களின் வரிவாக்கம் 100 முதல் 500 மடங்கு வரை அமைந்திருக்கும்.

Photostat: ஒளி நகல் படவுருப்படிவம் :ஆவணங்கள், வரிவடிவங்கள் முதலியவற்றின் படியுருவங்களை எடுப்பதற்கான ஒளிப்பட அமைவு.

Photosynthesis : (வேதி.)ஒளிச்சேர்க்கை : தாவரங்களின் இலைகளில் சூரிய ஒளிபடும் போது, நீரிலிருந்தும் கார்பன்டை யாக்சைடிலிருந்தும் தாவரங்கள் கார்போஹைடிரேட்டுகளைத் தயாரித்துக் கொள்ளும் முறை.

Physical Astronomy : (இயற்.) இயற்பியல் வானியல் : வான் கோளங்களின் இயற்பியல் நிலையையும் வேதியியல் நிலையையும் ஆராயும் அறிவியல் துறை.

Physical change : (இயற்.) இயற்பியல் மாற்றம் : ஒரு பொருளின் தற் பணபுகள் மாறாத வகையில் ஏற்படும் மாற்றம். எடுத்துக் காட்டு: ஒரு பலகையை ரம்பத்தால் அறுத்துச் சிறு சிறு துண்டுகளாக ஆக்குதல்.

Physical chemistry : இயற்பியல் வேதியியல் : இயற்பியல் சார்ந்த வேதியியல் கூறுகளையும், வேதியியல் சார்ந்த இயற்பியல் பண்புகளை, வேதியியல் இயைபுகளோடு உடனாக ஏற்படும் இயற்பியல் மாற்றங்களையும் ஆராய்ந்தறியும் துறை•

Physical geography i (இயற்.)இயற்பியல் நிலவியம் : இயற்கை அமைப்புகளைப் பற்றிக்கூறும் நில வியல்,

Physical metallurgy : இயற்பியல் உலோகவியல்: உலோகங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை ஆராய்ந்தறியும் துறை.

Physics : இயற்பியல்: இயற் பொருள், ஆற்றல் ஆகியவற்றின் இயல்புகளைப் பற்றி ஆராயும் அறிவியல் துறை.

Pi : (கணி.) பை: வட்டத்திற்கும் விட்டத்திற்கும் சுற்று வரைக்கும் உள்ள தகவினைக் குறிக்கும் பை' என்ற வட்டலகின் அடையாளம். இது 'பை' என்ற ஒலிப்புடைய கிரேக்க எழுத்தினால் குறிக்கப்படுகிறது.

பை (ா) = 3.1416.

Piano wire : (உலோ.) பியானோ கம்பி : மிகவும் வலுவான ஒரு கம்பி. இதன் விறைப்பாக்க வலிமை ஒரு சதுர அங்குலத்திற்கு 3,00,000 முதல் 3,40,000 பவுண்டு ஆகும்' இதில் கார்பன் 0.570, சிலிக்கன் 0.090, சல்பர் 0.011, பாஸ்பரம் 0.018, மாங்கனீஷ் 0.425 அடங்கியுள்ளது.

Pica : பிக்கா : ஒர் அங்குலத்தில் ஆறு வரிகள் அடுக்கக்கூடிய அளவுள்ள அச்சுருவப் படிவம்.

Pickle: வார்ப்படக் கரைசல்: வார்ப்படங்களைத் தூய்மையாக்குவதற்குப் பயன்படும் கரைசல். இரும்பு வார்ப்படங்களுக்கு நீர்த்த கந்தக அமிலமும், பித்தளைக்கு நைட்ரிக் அமிலமும் பயன்படுகின்றன.

Picric acid: பிக்ரிக் அமிலம்: (C6H2, (NO2)3, OH): ஒரே உப்பு மூலமுடைய அமிலம். பெனால். சல்போனிக் அமிலத்தை நைட்ரிக் அமிலத்துடன் கலந்து தயாரிக்கப்படுகிறது. இது மஞ்சள் படிக வடிவில் இருக்கும். வெடி பொருள்கள் தயாரிப்பதற்கும், சாயத்தொழிலும் பயன்படுகிறது.

Picture noise: பட ஒலி: ஒளி வாங்கிப் பெட்டிகளில் படங்கள் தாறுமாறாக ஏற்படவும், ஒளிப்புள்ளிகள் உண்டாகவும் செய்யவும் சைகைக் குறுக்கீடுகள்.

Picture signal: படச் சைகை : தொலைக்காட்சியில் ஒளிப்படங்களை உருவாக்கும் மின் துண்டல்கள்.

Picture tube :படக் குழல்: தொலைக்காட்சிப் பெட்டியில், ஒளிக்கற்றைச் செறிவு மாற்றத்தின் மூலம் உருக்காட்சிகளை உண்டாக்கும் எதிர்மின் கதிர்வகைக் குழல்.

Piezoelectricity: (மின். ) அழுத்த மின்விசை: சில படிகங்களின் மீது குறிப்பிட்ட திசைகளில் அழுத்தம் செலுத்துவதன் மூலம் மின்னேற்றம் உண்டாக்குதல்.

Piezometer: அழுத்தமானி: பாய்மங்கள் அல்லது திரவங்கள் மீதான அழுத்தத்தை அளவிடுவதற்கான ஒரு அளவு கருவி.

Pig: (உலோ.) இரும்புப் பாலம்: உலையிலிருந்து எடுக்கப்பட்ட நீள் இரும்புப் பாளம்.

Pig iron: (உலோ.) தேனிரும்பு: உருக்கும் உலையிலிருந்து வாணி கத்திற்கு வரும் வார்ப்பிரும்பு. இது பொதுவாக 45 கி.கி. எடையுள்ள பாளங்களாக இருக்கும்.

Pigment (வேதி; அச்சு) நிறமி: வண்ணப் பொருளுக்கு அல்லது சாயப்பொருளுக்கு நிறம் சேர்க்கச் சேர்க்கப்படும் பொருள்.

Pigskin: பன்றித்தோல்: பதனிட்ட பன்றித்தோல், வீட்டில் வளர்க்கப்படும் பன்றியின் தோலிலிருந்து நெடுநாள் உழைக்கக்கூடிய, தரமான தோலினைப் பதனிட்டு, கை யுறைகள், சிகரெட் பெட்டிகள், கைப்பைகள் முதலியன தயாரிக்கிறார்கள் .

Pigtail: (மின்.) புரியிணைவு மின் கடத்தி: இணை மின்கடத்திகளின் அவிழ்முனைகளை புரியாகத் திரித்துத் தயாரிக்கப்படும் மின் கடத்திகள்.

Pile driver: பதிகால் எந்திரம்: கட்டிட அடிப்படை | தாங்கும் நீண்ட பதிகால்களை அடித்திறக்குவதற்கான எந்திரம்.

Pillar: (க.க.) தூண்: ஒரு கட்டுமானத்தின் ஆதாரக்கால். Pillow block: (எந்.) முட்டுத் திண்டுக்கட்டை: ஒரு சுழல் தண் டுக்கு முட்டுக்கொடுப்பதற்கான திண்டுக்கட்டை.

Pilot: (வானூ.) விமானம் ஒட்டி: விமானம் பறப்பதைக் கட்டுப்படுத்தி இயக்குபவர்.

Pilot balloon: (வானூ.) திசையறி புகைக் கூண்டு: காற்றுவீசும் திசை யையும் வேகத்தையும் கண்டறிவதற்காக மேலே பறக்கவிடப்படும் சிறு புகைக்கூண்டு.

Pilot drill: (கணி.) முன்னோடித் துரப்பணம்: ஒரு பெரிய துரப் பணத்தைச் செலுத்துவதற்கு வசதியாக ஒரு முன்னோடித்துளையிடுவ தற்குப் பயன்படும் சிறிய துரப்பணம்.

Pilot light: (மின்.) வழிகாட்டி விளக்கு: ஒரு சுவர்ப்பெட்டியில் அல்லது கொள்கலத்தில் கட்டுப்பாட்டு விசையில் அதன் அருகே அமைக்கப்பட்டுள்ள ஒரு சிறு விளக்கு. இது அதனுடன் இணைக்கப்பட்டுள்ள சாதனம் இயங்குகிறதா என்பதைக் காட்டும்.

Pincers: குறடு: இரு கவர் உள்ள இடுக்குப் பொறி

Pine: தேவதாரு: பசுமை மாறாத ஊசி இலை மரம். கடினமானது; கனமானது; கனரகக் கட்டுமானத்திற்குப் பயன்படக் கூடியது.

Ping: (தானி.) விண்ணொலி: துப்பாக்கிக்குண்டு பாய்தல் அல்லது எஞ்சின் நீள் உருளை வெடித்தல் மூலம் உண்டாகும் விண்ணென்ற ஒலி,

Pinion: (பல்.) சிறகுப் பல்லிணை: வடிவளவு எவ்வாறிருப்பினும், சரி வாக்கிய அல்லது குதிமுள்ளுடைய ஒரு சிறிய பல்லிணை.

Pinnacle: (க.க.) கோபுரமுகடு: உயர்ந்த அல்லது மிக உயர்ந்த மோட்டு முகடு.

Pin punch: (பொறி.)முளைத் தமரூசி: இறுக்கமாகப் பொருத்தியுள்ள முளைகளை வெளியே எடுப்பதற்குப் பயன்படும் ஒரு நீளமான மெல் தமரூசி.

Pin spanner: (எந்.) முளைப்பு முடுக்கி: சுற்றுப்புறப் பரப்பில் புரி முடுக்கி முளைகள் நுழைவதற்குள்ள துவாரங்கள் கொண்ட வட்டமரையாணிகளை முடுக்குவதற்குப் பயன்படும் முளைப்புரி முடுக்கி.

Pint; பிண்ட்: நீர் முகத்தளவைச் சிற்றலகு ஒரு காலனின் எட்டில் ஒரு பகுதி.

Pintle: (எந்.) தாழ்கட்டை:சுழலுறுப்புக்கு ஊடச்சாக உதவும் தாழ்கட்டை.

Pipe: (உலோ.) குழாய்: திரவங்கள் முதலியவற்றைக் கொண்டு செல்வ தற்குப் பயன்படும் உட்புழையுடைய நீண்டகுழாய். குழாய்கள் எஃகு இரும்பு, செம்பு, பித்தளை, உலோகக் கலவைகள் முதலியவற்றால் செய்யப்படுகிறது. Pipe coupling: ( கம்மி.) குழாய் இணைப்பி: இரு குழாய்களை இணைப்பதற்குப் பயன்படும் மறையுள்ள குழல்.

Pipe cutter: (கம்மி.) குழாய் வெட்டி: இரும்பு, எஃகுக் குழாய்களை வெட்டுவதற்குப் பயன்படும் கருவி. இதன் வெட்டுமுனை வளைவாக இருக்கும். இந்த முனையைக் குழியில் பதித்துச் சுற்றுவதன் மூலம் குழாய் வெட்டப்படுகிறது.

Pipe die (கம்மி.) குழாய் மரை பொறிப்புக் கட்டை: குழாய்களில் திருகிழைகளைப் பொறிப்பதற்குப் பயன்படும் திருகு தகட்டுக் கருவி.

pipe thread :(எந்.) குழாய்த் திருகிழை: குழாய்களிலும், குழல்களிலும் பயன்படும் 'V' வடிவத்திருகிழை. இது இறுக்கமான இணைப்புகளை அமைக்கப் பயன்படுகிறது.

Pipette: (வேதி.)வடிகுழல்: சிறு அளவான நீர்மங்களை அளவாக ஊற்றப் பயன்படும் ஆய்வுக் கூடக் கூர்முகக் குழாய்க்கலம்.

Pipe vise: (கம்மி.) குழாய்க்குறடு: குழாய்க் குறடுகள் இருவகைப் படும்: (1) சிறிய குழாய்களுக்கான “V” வடிவத் தாடைகளுடைய கீல் பக்கமுடைய வகை; (2) பெரிய குழாய்களுக்கான சங்கிலிவகை . .

Piston (பொறி.) உங்து தண்டு: ஒர் எஞ்சினில் அல்லது இறைப்பானில் உள்ள நீர் உருளைக்குள் இயங்குகின்ற தண்டு. இத்தண்டு சரியாகப் பொருந்தியிருப்பதைப் பொறுத்து அழுத்தத் திறம்பாடு அமையும்.

Piston head (தானி.) உந்து தண்டு முனை : ஒர் உந்து தண்டின் மூடப்பட்ட மேல் முனை.

Piston pin (தானி.) உந்து தண்டு முளை : உந்து தண்டுடன் இணைப்புச் சலாகையை இணைக்கும் மேல் முனையை இணைக்கின்ற ஓர் உட்புழையுள்ள எஃகுச் சுழல் தண்டு. இது கெட்டிப்படுத்தப்பட்டதாகவும் மெருகேற்றப்பட்டதாகவும் இருக்கும். இதனை "மணிக்கட்டு முளை" என்றும் கூறுவர்.

Piston pin bosses : (தானி.) உந்து தண்டு முளைக்குமிழ் :உந்து தண்டு முளைக்குமிழ். முனை களைத் தாங்கும் உந்து தண்டின் பகுதிகள்.

Piston ring ; (எந்.) உங்து தண்டு வளையம் : ஒர் உந்து தண்டுக்குரிய வில்சுருள் பொதிந்த வளையம்,

Piston rod : (எந்.) உந்து தண்டுச் சலாகை : உந்து தண்டினை இயக்குகிற ஒரு சலாகை. இது கோட்டச் சுழல் தண்டின் குறுக்கு மேல் முனையுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

Piston skirt : (தானி.) உந்து தண்டு விளிம்பு : உந்து தண்டு முளைக்குக் கீழேயுள்ள பகுதி.

Piston stroke : (தானி.) உந்து தண்டு இயக்கம் : உந்து தண்டு அதன் நீள் உருளையில் ஒரு முறை முழுமையாக முன் பின் இயங்குதல்.

Piston valve : (பொறி.) உந்து தண்டு ஓரதர் : ஒரு நீள் உருளை இயங்கும் கூண்டினுள் காற்றுப் புழைகள் இருக்கும். இந்தப் புழைகள் உந்து தண்டு இயங்கும் போது திறந்து மூடும்.

pitch : (வேதி:) (குழை) நிலக்கீல்: கருநிறமான, சூட்டில் களியாக இளகும் தன்மையுடைய பசை போன்ற கட்டிப் பொருள் நீரில் கரையாதது. ஆனால் கார்பன் டை சல்பைடு, பென்சோல் முதலியவற்றில் ஓரளவு கரையக் கூடியது. (2)இடைத் தொலையளவு : எத்திரங்களில் சக்கரப் பற்களின் இடைத் தொலையளவு.

Pitchblende: (கனிம.) பிட்ச் பிளண்டி: யுரேனிய ஆக்சைடு வகை • கருமைநிறக் கனிமப் பொருள். நிலக்கீல் போல் பளபளப்புடையது. யுரேனியமும், ரேடியமும் அடங்கிய ஒரு தாதுப் பெருள்.

Pitch circle:வீரச்செறி வட்டம்: தூக்கி எறியும் வட்டக் கோட்டின் சுற்றளவு. வலைப் பின்னல் பல்லிணைத் தொடர்பு வட்டம்.

Pítch díameter: (பல்லி.) வீச்செறி வட்டவிட்டம்: ஒரு பல்லிணைச் சக்கரத்தின் வீச்செறி வட்டத்தின் விட்டம்.

Pitch indicator: (வானூ.) வீச்செறி அளவி: ஒரு விமானத்தில் வீச்செறி விசை வேகம் இருப்பதைச் சுட்டிக் காட்டும் ஒரு கருவி.

Pitch of a roof: (க.க.) சாய்வளவு: மோட்டுச் சாய்வின் செவ்வு நிலை அளவு.

Pitch of a screw: (எந்.)திருகு இடைத்தொலையளவு: ஒரு திருகின் இழையில் ஒரு புள்ளியிலிருந்து அடுத்த சுற்றின் நேரிணையான புள்ளி வரையிலான தொலைவின் அளவு. இதனைத் திருகின் ஒரு சுழற்சிக்கான முன்னேற்ற அளவு என்றும் கூறலாம்.

Pitch of gears; (எந்.) பல்லிணை இடைவெளியளவு: சக்கரப் பற்களின் வடிவளவினைக் குறிக்கும்.பல்லிணைகளுக்கிடையிலான இடைவெளியளவு,

Pitch ratio: (வானூ.) வீச்செறி விகிதம்: விமானச் சுழல் விசிறியின வீச்செறிவுக்கும் அதன் விட்டத்திற்குமிடையிலான விகிதம்.

Pittman: (எந்.) இணைப்புக் கரம்1 ஒரு சுழல் எந்திரத்தை அதன் நே ரெதிர் உறுப்புடன் இணைக்கும் தண்டு அல்லது கரம்.

Pitot tube: (வானூ.) நீள் உருளைக் குழாய்: நீள் உருளை வடிவக் குழாய். இதன் ஒரு முனை மேல் நோக்கித் திறந்திருக்கும். இதனால் காற்று இதன் வாயை நேரடியாகச் சந்திக்கும்.

Pivoted casement (க.க.) சுழல் முளைப் பலகணி: மேல் முனையிலும், கீழ்முனையிலும் சுழல் முளை மீது திருகி இயங்கும் அமைப்புடைய பல கணி.

Pivot pin: திருகுமுளை: திருகிச் சுழலும் ஆதாரமுடைய ஒரு முளை,

Plan: வரைபடம்: நகரம், நகரப் பகுதி, நிலம், கட்டிடம் முதலியவற்றின் நிலவரைப்படிவ உருவ வரை படம்.

Plane: (1) சமதளம்: சரிமட்டமான சமதளப் பரப்பு. இரு புள்ளிகளை இணைக்கும்நேர்கோடு. அதே பரப்பில் அமைந்திருக்குமானால் அது சமதளம் ஆகும்.

(2) இழைப்புளி: உலோகம் அல்லது மரத்தை இழைத்துத் தளமட்டப் படுத்தும் கருவி.

Plane trigonometry; (கணி.)திரிகோண கணிதம்: முக்கோணத்தின் கோணச் சிறை வீதங்களைக் கணித்து ஆராயும் கணிதவியல் பிரிவு. இதில் கோணங்களையும் பக்கங்களையும் தொடர்புபடுத்தி ஆறு சார்பலன்கள் வகுக்கப்பட்டுள்ளன. இவை கணிதத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை

Planimeter: ( கணி.) தளமட்டமானி: சமதளப்பரப்பு எதனின்

Pla

475

Pla


பரப்பளவையும் அளவிடுவதற் கான ஒரு கருவி. இக்கருவியின் முள்ளை எல்லையோரமாக நகர்த்தி அளவுகோலைப் பார்த்து பரப்பளவை அறியலாம்.

Planish: (உலோ.) மெருகூட்டுதல்: உலோகப் பரப்புகளை சுத்தியால் அடித்து அல்லது உருட்டி மெரு கூட்டுதல்.

Plank: (மர.வே.) பலகை: ஒர் அட்டையை விடக் கனமான அகலமான மரப்பலகை. இது 112-6" கனமாகவும், 6"அகலமாக வும் இருக்கும்.

Plano meter: (எந்.) தளப்பரப்புத் தகடு: தளப்பரப்பு அளக்கப் பயன்படும் வார்ப்பிரும்புத் தகடு.

Plans and specifications: (பட்.) வரைபடங்களும் தனிக் குறிப்பீடுகளும்: வரைபடங்களும் அதனுடன் இணைந்துள்ள முழுவிவர அறிவுறுத்தங்களும்.

Plant engineer: எந்திரப் பொறியாளர்: ஒரு குறிப்பிட்ட தொழிலுக்குரிய எந்திர நுட்பச் செயல்முறைகளைச் செயற்படுத்தும் பொறியாளர். தொழி ற் சாலைக்குத் தேவையான எந்திரங்களைத் தயாரிப்பது இவரது பொறுப்பு.

Plaster: (க.க.) அரைச்சாந்து: கணிக்கல்லை (ஜிப்சம்) போதிய அளவு சூடாக்கி, அதிலுள்ள நீரை வெளியேற்றி, நீரற்ற எஞ்சிய பொருளைத் தூளாக்குவதன் மூலம் இது செய்யப்படுகிறது. இது சுவர்

Pla

476

Pla


களிலும் முகடுகளிலும் பூசுவதற்குப் பயன்படுகிறது.

Plaster board: (க.க.) சாந்து அட்டை: அட்டை அரைச் சாந்தினால் செய் யப்பட்டு இருபுறம் காகிதம் ஒட்டிய அட்டை

Plaster cast: சாந்து வார்ப்படம்: வார்ப்புக் குடுவையாகவும் காரை மண்ணாகவும் பயன்படும் களிக்கல் தூளினாலான வார்ப்படம்.

Plastering trowel: சாந்துக் கரண்டி: சாந்து பூசப் பயன்படும் சட்டுவக் கரண்டி. இது எஃகினாலானது; 4"-5" அகலமும், 10".12" நீளமும் உடையது. அலகுக்கு இணையாகக் கைப்பிடிகொண்டது.

plaster lath: (க.க.) சாந்துப் பட்டிகை: சுவர். தளம். மச்சு ஆகியவற்றில் சாந்து பொருந்துவதற்காக அமைக்கும் மரப்பட்டிகை.

Plaster of paris: (வேதி;க.க.) பாரிஸ் சாந்து: வார்ப்புக் குடுவை யாகவும் காரை மண்ணாகவும் பயன்படும் களிக்கல் தூள். வார்ப் படங்களும், மாதிரிப் படிவங்களும் செய்யப் பயன்படுகிறது.

Plastic: (குழை.) பிளாஸ்டிக்: குழைத்து உருவாக்கத்தக்க வார்ப்புப் பொருள்.

Plastic art: குழைமக் கலை: உருவாக்கம் சார்ந்த சிற்பம், மட்பாண்டத் தொழில் முதலிய கலைகள்.

Plasticine: செயற்கைக் களிமண்: குழைவுருவாக்கத்திற்குரிய களி மண்ணினிடமாகப் பள்ளிகளில்



பயன்படுத்தப்படும் செயற்கைக் குழைமப் பொருள்.

Plasticity: (இயற்.) குழை வியல்பு: எளிதில் உருமாறுந் தன்மை . வார்ப்பட உருவத்தை ஏற்று இருத்திக் கொள்ளும் திறன்.

Plasticize: (குழை.) குழைமமாக்குதல்: குழைபொருள் குழுமத்தை உருவாக்குதல் அல்லது வளமாக்குதல்.

Plasticizers: (குழை.) குழைமை உருவாக்கப்பொருள்: குழைபொருள் குழுமத்தை உருவாக்குகிற அல்லது வளமாக்குகிற பொருள்.

Plastics: குழை பொருட் குழுமம்: நிலக்கீல் முதல் சீமைக்காரை வரையில் பல்வேறு குழைவுப் பொருட்களின் தொகுதி. இவை சில அம்சங்களில் இயற்கையான பிசின்களை ஒத்திருப்பவை. எனினும், வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளில் வேறுபட்டவை: குழைம ஆதாரப் பொருட்களில் பல கூட்டிணைப் பொருட்கள் உள்ளன. எனவே, குழைமப் பொருட்களின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருக்கிறது. இவற்றின் முக்கிய பிரிவுகளாவன:

1. வெப்ப உருக்குழைமை: வெப்ப மூட்டப்பெற்ற நிலையில் உருக் கொடுக்கப்பெற்ற குழைமம். அமினோ, பாலிஸ்டர், ஆல்க்கிட், பைனோலிக் ஆகியவை இந்த வகையைச் சேர்ந்தவை.

2. வெப்பியல் குழைமம்: வெப்பத் தால் இளகிக் குளிரில் இறுகும் தன்மையுடைய குழைமம், ஸ்டைரீன் மீச்சேர்மங்கள், கூட்டு மீச்சேர்மங்கள், செல்லுலோசிக்ஸ். பாலித்திலீன், வினைல், நைலான்கள், பல்வேறு புளோரோ கார்பன்கள் இவ்வகையைச் சேர்ந்தவை.

குழைமப் பொருள் குடும்பத்து ஒவ்வொரு பொருளுக்கும் சில குறிப்பிட்ட பண்புகள் உண்டு. சில கடினப் பரப்புடையவை; சில அரிமான எதிர்ப்புடையவை; சில நெகிழ் திறணுடையவை; சில முரடானவை: சில மின் அழுத்தத்தைத் தாங்கக் கூடியவை.

Plastic wood: (மர.வே.) குழைம மரக்கூழ்: காற்றுப் பட்டவுடனேயே கடினமாகிவிடக்கூடிய மரக்கூழ். இது வெடிப்புகளை அடைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனைப் பூசியவுடனேயே அதில் வண்ணம் பூசலாம்.

Plastisol (குழை.) பிளாஸ்டிசோல் : குழைமையாக்கும் பொருட்களுடன் கலந்து கலவைகளாகத் தயாரிக்கப்படும் எந்திரக் குழைமப் பொருள். இதைக் கொண்டு வார்ப்படம் செய்யலாம்; சுருள்கள் தயாரிக்கலாம். நெகிழ் திறனுடைய வார்ப்படங்கள் தயாரிக்கப் பெரும் பாலும் பயன்படுகிறது.

Plate clutch : (தானி; எத்.) தகட்டு ஊடிணைப்பி : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தகடுகளின் மூலம் விசையை அனுப்புகிற ஊடிணைப்பி. இத்தகடுகள் விற்சுருள்களின் அழுத்தத்தின் மூலம்

Pla

477

Pla


பற்றி வைத்துக் கொள்ளப்படுகின் றன.

Plate condenser : தகட்டு மின் விசையேற்றி : மாற்று உலோகத் தகடுகளை இணைத்து இரு மின் முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள மின் விசையேற்றி, இத்தகடுகள் அபிரகம், மெழுகேற்றிய தாள், போன்றவற்றாலானதாக இருக் கும்.

Plate current : தகட்டு மின்னோட்டம் : தகட்டு மின்சுற்று வழியில் பாய்கிற அதிர்வு நேர் மின்னோட்டம்.

Plate cylinder : (அச்சு.) தகட்டு நீள் உருளை : ஒரு சுழல் அச்சு எந் திரத்தில் சுழல்கின்ற பகுதி. இதனுடன் வளைவுடைய அச்சுத் தகடுகள் இணைக்கப்படும்.

Plated bar : (உலோ.) தகட்டிரும்பு : காய்ப்புடைய தகட்டு எஃகு. இது சலாகைகளாக இருக்கும். உலோகத்தைச் சூடாக்கிச் கத்தியலால் அடித்துக் கடினமாக்கப்படுகிறது.

Platen : (எந்.) தகட்டுப் பாளம் : (1) உலோக வேலைப்பாடுகளில் உலோகத்தை அழுத்தித் தகடாக்குவதற்குப் பயன்படும் தகடு (2) அச்சகத்தில் அச்சுத்தாள் அழுத்தும் தகட்டுப் பாளம்.

Platen press : (அச்சு.) தகட்டுப் பாள அச்சு எந்திரம் : அச்சிடும் போது காகிதமும் அச்சுப் படிவமும்

Pla

478

Plu


தட்டையாகப் பொருந்தியிருக்கக் கூடிய அச்சு எந்திரம்.

PIatform : (க.க.) தள மேடை: தரையிலிருந்து உயரமாகக் கிடை மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மரத்தினாலான அல்லது கட்டு மானத்திலான ஒரு மேடை.

Plating : (உலோ.) முலாம் பூசுதல் : உலோகக் குழம்பில் அமிழ்த்துவதன் மூலம் அல்லத மின் பகுப்பு முறை மூலம் உலோக முலாம் பூசுதல் .

Platinite: (உலோ.) பிளாட்டினைட்: 46% நிக்கல் எஃகு அடங்கிய ஓர் உலோகம். இது பிளாட்டினத்தைப் போன்று அதே அளவு வெப்ப விரிவாக்கக் குணகம் உடையது. இதனாலேயே இது மின் விளக்குக் குமிழ்கள் தயாரிப்பதில் பிளாட்டினத்திற்குப் பதிலாகப் பயன்படுகிறது.

Platinoid: (உலோ.) பிளாட்டினாய்டு: செம்பு, துத்தம், ஜெர்மன் வெள்ளி, டங்ஸ்டன் முதலிய உலோகங்கள் அடங்கிய உலோகக் கலவை. அணிகலன்கள், அறிவியல் கருவிகள் செய்யவும், சில தொழில்துறைச் செயல் முறைகளிலும் பயன்படுகிறது.

Pliant; ஒசிவான: தொய்வான;முறியாமல் எளிதில் வளையக்கூடிய.

Pliers: (எந்.) சாமணம்: அகலமான, தட்டையான, சொரசொரப் பான தாடைகளுடைய இடுக்கி போன்ற ஒரு கருவி.


Plinth: (s.a.) தூண் பீடம்: ஒரு தூணை அல்லது பீடத்தை அடிப் பகுதியையொட்டியுள்ள சதுர வடிவப் பகுதி.

Plotting points: (கணி.) மனையிட முனைகள்: ஒரு வரைபடத்தில் மனையிடத்தை வரையறுக்கும் முனைகள்.

Plug: (மின்.) மின்செருகி: மின் கருவிகளுக்கும், மின் வழங்கு ஆதாரங்களுக்குமிடையே இணைப்பு ஏற்படுத்துவதற்கெனச் செருகிப் பொருத்துவதற்குரிய சாதனம்.

Plug fuse: (6är.) செருகு மின் காப்பிழை: திருகு இழைத் தொடர்பு மூலம் நிலையில் பொருத்தபடும் மின் காப்பு இழை,

Piug gauge: (எந்.) செருகு அளவி: எந்திர வேலைப் பொருள்களின் உள் விட்டங்களை அளவிடுவதற்குப் பயன்படும் செருகு அளவி.

Plug tap (எந்.) செருகிநாடா: எந்திரங்கள் மூன்று வரிசைகளிலுள்ள இடையீட்டு நாடா : (1) தொடக்க நாடா; (2) செருகு நாடா; அடி நாடா .

Plug weld: (பற்.) செருகிபற்றாசு: எந்திர உறுப்புகளில் ஒன்றில் அல் லது இரண்டிலும் உள்ள துவாரத்தின் வழியே பற்றாசு பொருத்தி தகடுகளை இணைக்கும் முறை.

Plumb: (க.க.) செங்குத்து: சுவர் போன்று துல்லியமாக நேர் செங்

குத்தாக இருக்கும் அமைப்பு. Pulumbago: காரீயம்: எழுதுகோலுக்காகப் பயன்படுத்தப்படும் ஈயத்தைப் போன்ற கரிவகை. இது மேற்பரப்புகளில் எளிதில் கடத்தாப் பொருளாகப் பூச்சு வேலைக்கும் பயன்படுகிறது.

Plumb and level: (க.க.) தூக்கு நூற்குண்டு: துல்லியமான கிடை மட்டத்தையும், துல்லியமான செங் குத்தையும் அறிவதற்காகப் பயன்படும் உலோக அல்லது மர நூற் குண்டு.

Plumb bob: (க.க.) ஈயக் குண்டு; கட்டிட வேலையில் பயன்படும் தூக்கு நூற்குண்டின் நுனியில் உள்ள ஈயக்குண்டு.

Plumbing: குழாய் வேலை: ஈயக் குழாய் முதலியவற்றைப் பொருத்துதல். பழுது பார்த்தல் போன்ற வேலை

Plummet: தூக்கு நூல்: செங்குத்து ஆழம் பார்ப்பதற்கான கருவியின் தூக்கு நூற்குண்டு,

Ply: படலம்: பல அடுக்குகளாக உருவாக்கிய திண்மையின் ஒரு படலம். இத்திண்மையின் ஒவ்வொரு அடையும் ஒரு படலம் ஆகும்.

Plywood: (மர.வே.) ஒட்டுப் பலகை: படலங்களின் இழைவரை ஒன்றற்கொன்று குறுக்க வைத்து ஒட்டிச் செய்யப்படும் மெல்லிய வன் பலகை

Pneolator: (எந்.) செயற்கைச் சுவாசக் கருவி: இடம்விட்டு இடம்

Pne

479

Poi


கொண்டு செல்லக்கூடிய தானாக இயங்கும் செயற்கைச் சுவாசக் கருவி.

Pneumatic : (பொறி.) காற்றுப் பட்டை : காற்றடைத்த குழாய்ப் பட்டை.

Pneumatic brakes (தானி.) காற்றுத் தடை : காற்று அழுத்தம் அல்லது வெற்றிடம் மூலம் இயக்கப்படும் தடை.

Pneumatic dispatch : காற்றழுத்த இயக்க முறை : காற்றழுத்தத்தினால் அல்லது காற்று வெளியேற்றத்தினால் இயக்கப்பட்டுக் குழாய்கள் வழியாகச் சிப்பங்கள் முதலியவற்றை இடம் பெயர்த்துக் கொண்டு செல்லும் முறை.

Pneumatic tire (தானி.) காற்றுக்குழாய்ப் பட்டை : காற்றடைத்த குழாய்ப் பட்டை.

Pneumatic tools: (பொறி.)காற்றழுத்தக் கருவி : காற்றழுத்தத்தின் மூலம் இயக்கப்படும் சாதனம்.

Pneumatic trough : வளிக் கொள்கலம் : நீர் அல்லது பாதரசப் பரப்பின் மேல் ஜாடிகளில் காற்றினைத திரட்டுவதற்கான கலம்.

Point : (அச்சு.) அச்செழுத்துரு அலகு : அச்செழுத்துருவின் ஒர் அலகு. ஓர் அலகு=.031837 அங்.

Pointing: (க.க.) இணைப்புக் காரைப்பூச்சு: கட்டுமான த்தில் 

Poi

480

Pol


இணைப்புக் காரைப் பூச்சி.

Pointing trowel ; (க.க.) கூர்சட்டுவக்கரண்டி : சுவர் இணைப்பு களில் கூர்மையாகச் சாந்து பூசவும், எஞ்சிய சாந்தினை அகற்றிச் சுத்தப்படுத்தவும் பயன்படும் சிறிய சட்டுவக்கரண்டி.

Polarity: (மின்.) துருவ முனைப்பு: இருகோடிகளும் நிலவுலக முனைக் கோடிகளை நோக்கி முனைத்து நிற்கும் காந்தக்கல், காந்த ஊசி முதலியவற்றின் இயல்பு; மின்னூட்டு முனைக்கோடி இயல்பு.

Polarization : (மின் ) மின் முனைப்பாக்கம் : அடிப்படை மின் கலத்தில், நேர்மின் தகட்டில் ஹைட்ரஜன் குமிழ்கள் சேர்தல். இதனால், அகத்தடை அதிகரித்து, மின்னோட்ட வலிமை குறைகிறது.

Polarized light : (குழை.) ஒருமுகமுக ஒளிக்கதிர் : போக்கின் திசை ஒருமுகப்படுத்தப்பட்ட ஒளிக் கதிர்கள்.

Poles: (மின்.) மின் முனைப்புக் கோடிகள்: ஒரு மின் சுற்று வழியின் மின்முனைப்புக் கோடிகள் (துருவங்கள்)

Pole shoes: (மின்.) காந்த லாடம்: லாடம் போல் வளைந்த துருவ முனைக் காந்தம்.

Polychrome: பல்வண்ணக்கலை: பல வண்ணங்களைக் கொண்டு பூச்சு வேலைப்பாடுகள் செய்தல்

இந்தக்கலை எகிப்தில் தோன்றியது. இத்தாலியில் 16ஆம் நூற்றாண்டில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டது.

Polyester: (குழை.) பாலியஸ்டர்: குழைமக் குடும்பத்தைச் சேர்ந்த செயற்கை இழைவகை. இரு நீரக அனு ஆல்கஹால்களையும்,இருகாடி மூலங்களுடைய அமிலங்களையும் எண்முகச் சேர்ம ஸ்டைரீரினுடனும் பிற வற்றுடனும் இணையுமாறு செய்து பூரிதமற்ற பாலியஸ்டர் தயாரிக்கப் படுகிறது. திரவ வடிவில் இதனை எளிதில் கையாளலாம். இது வெப்பத்தை யும், அரிமானத்தையும் தாங்கக் கூடியது. சிறிய மின்சாரச் சாதனங்கள், கட்டிடச் சேணங்கள் முதலியவை தயாரிக்கப் பயன்படுகிறது.

Polyethylene: (குழை.) பாலித்திலீன்: வெப்பத்தால் இளகிக் குளிரில் இறுகும் இயல்புடையது. எத்திலீன் மீச் சேர்மங்களாலானது. கெட்டியான மெழுகு போன்றது. நீரினால் பாதிக்கப்படாதது. நெகிழ்வுடைய புட்டிகள் வெப்பத்தைத் தாங்கும் விரிப்புகள் தயாரிக்க பயன்படுகிறது.

Polygon: பற்கோணக் கட்டம்: நான்கிற்கு மேற்பட்ட பக்கங்களை யும், கோணங்களையும் உடைய வரைபடிவம்.

Polygon of forces: விசைகளின் பலகோணக் கட்டம்: விசைகளின் முக்கோணங்களின் வரிவாக்கம் , ஒரு பல கோணக்கட்டத்தின் பக்கங்களால் வரிசைப்படி அளவிலும் திசையிலும் பல விசைகள் குறிப்பிடப்படுமானால், அவை சமநிலை யில் இருக்கும்.

Polymer: (குழை.) மீச்சேர்மம்: ஒரே வகைப்பட்ட சேர்மங்களின் அணுத்திரள்கள் இணைந்து வேதியியல முறையில் மாறாமலே அணுத்திரள் எடைமானமும் இயற்பியல் பண்பும் மட்டும் மாறுபட்ட பிறதுருச் சேர்மம்.

Polymerization: (வேதி.) மீச்சேர்ம இணைவு: ஒரே வகைப்பட்ட சேரமங்களி ன் அணுத்திரள்கள் எடைமானமும் இயற்பியல் பண்பும் மட்டும் மாறுபட்ட பிறி துருச்சேர்மமாக இணைதல், எடுத்துக்காட்டு: தாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் 6 பாரமால்டிஹைடு மூலக் கூறுகள் (CH20) பச்சையம் மூலமாக ஒரு சர்க்கரை (C6 H12 O6) மூலக் கூறாக மாறுதல்.

Polyphase: (மின்.) பன்னிலை: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்னோட்ட இயக்கப்படி நிலை அல்லது மின்னியல் முறை யில் ஒன்றோடொன்று இணைக் கப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின் சுற்றுவழிகள்.

Polystyrene(வேதி. குழை.) பாலிஸ்டைரீன் : வெப்பத்தால் இளகிக் குளிரில் இறுகும் இயல்புடைய அமிலத்தை எதிர்க்கக் கூடிய ஒருவகைப் பிசின். அமிலக் 37

Pol

481

Por


கொள்கலங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது

Poly technic : பல தொழில் நுட்பப் பயிற்சியகம்: பல தொழில் நுட்பங்கள் பயிற்றுவிப்பதற்கான பள்ளி அல்லது நிறுவனம்.

Polyvinyls : (குழை ) பாலிவினில்: பாலிவினில் குளோரைடு, பாலிவினில் அசிட்டால், பாலிவினில் ஆல்கஹால் போன்றவை அடங்கிய ஒரு வேதியியல் பொருள் குடும்பம் முதலாவது. வினில் குளோரைடு மீச் சேர்மங்கள் அடங்கிய ஒரு குழைமப் பொருள். இது நீர், ஆல்கஹால், அமிலங்கள், காரங்கள் ஆகியவற்றை எதிர்க்கக் கூடியது.

Poplar : (மர. வே.) நெட்டிலிங்கம்: ஒரு வகை மரம் மென்மையா னது; எடை குறைந்தது. வெள்ளை அல்லது இளம் பசு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதில் எளிதில் வேலைப்பாடுகள் செய்யலாம். கலைப்பொருட்கள் செய்யப் பயன்படுகிறது.

Poppet : (எந்.) கடைசல் தலை: கடைசல் எந்திரத்தின் தலைப் பாகம்.

Poppy heads : (க.க.) ஒப்பனை முகடு: திருக்கோயில் இருக்கை முனையின் ஒப்பனை முகடு.

Porcelain : பீங்கான் : சீனாக் களிமண் அல்லது வெண் களிமண் ணால் செய்யப்படும் பீங்கான கலங்கள்.

Por

482

Pot


Porch : (க.க.) புகுமுக மண்டபம்: ஒரு கட்டிடத்தின் முகப்பில் தனிக் கூரையுடன் கூடிய மண்டபம்.

Porosity : கசிவுத் திறன் : உலோகம் அல்லது பிற பொருள்களின் வழியாக அழுத்தப்படும் போது காற்று, வாயு அல்லது திரவம் கசியும்படி செய்யும் திறன்.

Port : (தானி.) காற்றுப் புழை : எஞ்சினின் உள்ளெரி அறைக்குள் எரிபொருள் செல்வதை அனுமதிக்கக் கூடிய அல்லது வாயுக்கள் வெளியேற அனுமதிக்கக்கூடிய ஒரு வழிப்புழை.

Portal: (க.க.) நுழைவாயில்: அணி வாயிற்கதவம் அல்லது அணிகெழு வாயில், பொதுவாக பெரிய கட்டிடங்களில் உள்ளது.

Portico: (க.க.) மூடுமுன்றில்: தூண்கள் தாங்கும் கூரையுடைய இடம். பொதுவாக ஒரு கட்டிடத்தில் நுழைவாயிலிலுள்ள புதுமுக மண்டபம்.

Portiere: கதவத்திரை: கதவு நிலையில் பயன்படுத்தப்படும் ஒரு திரை.

Portland cement: (க.க.) சீமைக்காரை: சீமைச்சுண்ணாம்பு, களிமண் ஆகியவற்றால் செய்யப்படும் செயற்கைப் பசைமண்.

Positive: ஒளிப்பட நேர்படிவம்: ஒளிப்பட நேர்படிவத்தை ஒத்த உருப்படிவம். இது மறி நிலைப் படிவத்திற்கு எதிர் மாறானது.

Positive electricity: நேர்மின் ஆற்றல்: கண்ணாடியைப் பட்டுத்துணியால் தேய்ப்பதனால் ஏற்படும் மின் ஆற்றல்.

Positive plate: (மின்.) நேர்மின் தகடு: ஒரு சேமக்கலத்திலுள்ள தகடு. இது பொதுவாகப் பழுப்பு நிறத்தில் இருக்கும். மின் சுற்றுவழி முற்றுப் பெறும்போது இதிலிருந்து மின்விசை பாய்கிறது.

Positive pole:வடகாந்த முனை: காந்த வகையில் வடக்கு நோக்கிய முனை.

Positron: நேர் ஆக்கமின்மம்: மின்மங்களுக்கு ஆற்றலில் இணை யாகத் தற்காலிகமாகக் கருவுளில் உருவாகும் நேர்மீன் திரள்.

Potassium (வேதி.) பொட்டாசியம்: வெண்மையான மெழுகு போன்று வெண்மையான உலோகத் தனிமம். இது ஈரக்காற்றில் விரைவாக ஆக்சிஜ னுடன் இணைந்து ஆக்சைடாகக் கூடியது. இதன் உருகுநிலை 63.5°C. வீத எடைமானம் 0.8621. இதன் பலவகை உப்புகள் மிகுந்த பயனுடையவை

Potential:(மின்) மின்னழுத்த நிலை: மின்னுாட்டத்தின் அளவு அல்லது மின் அழுத்தத்தின் அளவு. வேண்டும்போது செயல் திறப்படுத்தப்படும் அடங்கிய மின்னாற்றல் வளம். இது ஒல்ட் என்னும் அவுகுகளில் அளவிடப் படுகிறது. Potential difference : (மின்.) மின்னழுத்த நிலை வேறுபாடு : நிகழக்கூடும் மின்னோட்டத்தின் ஏற்றத்தாழ்வு உச்ச நிலைகளின் வேறுபாடு. இது ஒல்ட் அலகுகளில் அளவிடப்படுகிறது.

Potential energy : (இயற்.) உள்நிலை ஆற்றல் : உள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஆற்றல்.

Potentiometer : (மின்.) மின்னழுத்த ஆற்றல் மானி : மின்னழுத்த நிலைகளை ஒரு தரளவுடன் ஒப்பிட்டு அளவிடுவதற்குப் பயன்படும் ஒரு கருவி.

Potters wheel i வேட்கோத்திகிரி : குயவர்கள் களிமண்ணுக்கு உருக்கொடுக்கப் பயன்படுத்தும் சக்கரம்.

Pottery : மட்பாண்டத் தொழில்: சட்டி பானை செய்யும் மட்பாண் டத்தொழில் அல்லது களிமண் பாண்டத் தொழில்.

Pound : பவுண்ட் : 12 அவுன்ஸ் கொண்ட எடை அலகு.

Power ; (மின்.) மின்விசை : மின்விசையின் அலகு வாட், மின் விசையினால் இயக்கத்தின் போது செய்யப்படும் வேலையின் விகிதத்தைக் கொண்டு இது அளவிடப்படுகிறது. எந்திரவியலில் விசை: இயக்குந்திறம் X தொலைவு காலம்



Pow

488

Pow


Power amplifier: திறன்மிகைப்பி: ஒலிபெருக்கிக்குப் பெருமளவு விசையை அளிக்கப் பயன்படுத்தப்படும் ஒருவகை மின் கருவி.

Power brakes: (தானி:எந்..) விசைத்தடை: மின்னியக்கச் செறிவு முறைமூலம் நீரியல் முறையில் இயக்கப்படும் தடை.

Power factor (மின்.) திறன்கூறு:உண்மைத் திறனுக்கும் தோற்றத் திறனுக்குமிடையிலான விகிதம்.

திறன் கூறு = உண்மைத்திறன் (W) தோற்றத்திறன் (VxA)

Power feed: (எந்.) விசையூட்டம்; கடைசல் எந்திரம், திருகிழை வெட்டுங்கருவி போன்ற எந்திரங்களுக்குத் தானியக்கமுறையில் உட் செலுத்துதல்.

Power hammer: விசைச்சம்மட்டி: காற்று, நீர் , எந்திரவிசை மூலம் இயக்கப்படும் சம்மட்டி. கரைசல் பணிகளில் பயன்படுத்தப்படுகிறது.

Power landing: (வானூ.) விசை இறக்கம்: விமான எஞ்சினின் நீரா விப் புழையின் வாயடைக்கப் பெற்று மெல்ல இயங்குமாறு செய்து விமானத்தைத் தரை இறங்கச் செய்தல்.

Power pack: (மின்.) திறன் அடைப்பு: வானொலிப் பெட்டி,பொது ஒலிபெருக்கி அமைப்பு முதலியவற்றுக்குத் தேவையான மின் 

Pow

484

Pre


னிழையை அல்லது வெப்ப ஆற்றலை வழங்கும் ஒரு சாதனம்.

Power plant: (தானி.) விசை எந்திரம்: எரிபொருள், கரியச் சேர் மானச் செறிவு, எரியூட்டம் குளிர்விப்பு, மசகிடுதல் போன்றவற்றுக் கான அமைவுகள் அமைந்த எந்திரம்.

எந்திரவியலில் மின் விசையை உற்பத்தி செய்து, வழக்கீடு செய்வதற்கான கொதிகலன்கள், மின்னாக்கிகள் முதலியவை.

Power steering: தானி:(எந்.) விசை இயக்காழி: எஞ்சின் இயங் கும்போது சுதந்திரமாக இயக்குவதற்கு அனுமதிக்கும் இயக்காழி. இது இயக்காழி அலகுடன் இணைக்கப்பட்டுள்ள மின்னியக்கச் செறிவியின் மூலம் நீரியல் முறையில் இயக்கப்படுகிறது.

Power transfomer:(மின்.) விசைமின் மாற்றி: உயர்ந்த மின்னழுத் தத்தையும் குறைந்த மின்னோட்டத்தையும், உயர்ந்த மின்னோடத்துடனும், குறைந்த மின்னழுத்தத்துடனும் இணைப்பதற்கும், குறைந்த மின்னழுத்தத்தையும், உயர்ந்த மின்னோட்டத்தையும் உயர்ந்த மின்னழுத்தத்துடனும், குறைந்த மின்னோட்டத்துடனும் இணைப்பதற்கான ஒரு சாதனம். இவை பொதுவாக 60 சுழற்சி அலைவெண்ணுடன் பயன்படுத்தப்படுகிறது.

Power tube: விசைக் குழல்: ஒலி அலைவெண் மிகைப்பியில் கடை

சிக் கட்டத்தில் பயன்படுத்தப்படும் வெற்றிடக்குழல். ஒலி பெருக்கி இயக்கத்திற்கு இது பெரிய அளவிலான ஒலி அலைவெண் அளிக்கிறது.

Power unit: (மின்.) மின்விசை அலகு: மின் சுற்றுவழிகளில் மின் விசையின் அலகு வாட். இது வினாடி ஒன்றுக்கு வேலை ஊக்க ஆற்றலின் ஒர் அலகு செயற்படும் வீதம் ஆகும்.

Precipitate (குழை.) வீழ்படிவு: வேதியியல் மாற்றம் காரணமாக ஒரு கரைசலில் கரையாத வண்டலாகப் படியும் மண்டிப்படிவு.

Precision grinding: (எந்.) துல்லியச் சானை: எந்திரக் கூறுகளின் நுண்ணிடை வேறுபாட்டளவு மிகவும் நெருக்கமாக இருக்கக்கூடி எந்திரச் சாணை.

Precision lathe: (எந்.) துல்லியக்கடைசல் எந்திரம்: துல்லியமான கடைசல் வேலைப்பாடுகளைச் செய்வதற்கேற்ற் சிறிய மேசைக் கடைசல் எந்திரம்.

Prefabricated: (க.க.) முன்னிணைப்பு: கட்டிடங்கள் அல்லது தொழிற்சாலைக்கு வேண்டிய பகுதிகளை அல்லது உறுப்புகளை தனித்தனியாக வேறிடங்களில் முழுமையாக உருவாக்கி, பயன்படுத்த வேண்டிய இடத்திற்குக் கொண்டுவந்து இறுதியாக ஒருங்கிணைத்து அமைத்தல். Preforming: (குழை.) முன்னுருவாக்கம்: பிளாஸ்டிக் தொழிலில் வார்ப்படங்களை விரைவாகவும் மிகக் குறைந்த சேதாரத்துடன் உருவாக்கும் வகையில் வார்ப்படப் பொருட்களை செறிவுடையதாக் கும் முறை.

Preignition ı (தானி.) முன்னிடு வெடிப்பு: உள்வெப்பாலை எரி பொருளின் உரிய நேரததிற்கு முற்பட்ட வெடிப்பு. சூடான கார்பன் படிவுகளாலோ, தவறான எரியூட்டத்தினாலோ இது நிகழலாம்.

Pressed steel:(உலோ.வே.)வடிவமைப்பு எஃகு: எஃகுத் தகடுகள் அல்லது படிவங்கள் மூலம் அழுத்தங் கொடுத்துப் பளபளப்பாக வடி வமைத்த பல்வேறு பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. இவை வடிவமைத்த எஃகு எனப்படும்.

Press room: (அச்சு.) அச்சடிப்பு அறை: அச்சடிக்கும் பணி நடை பெறும் அறை.

Pressure: (மின்.) மின்வலி இயலாற்றல் வேறுபாடு: மின்னியக்க விசை. இது பொதுவாக மின்னழுத்தம் எனக் கூறப்படும்.

இயற்பியலில் ஒர் அலகு பரப்பளவில் விசையழுத்தம்,

Pressure airship: (வானூ.) அழுத்த விண்கலம்: முழுமையாகவோ பகுதியாகவோ உள்ளழுத்தம் மூலம் தனது வடிவத்தைப் பேணிக் கொள்ளும் விண்கலம்.

Pressure altitude: (வானூ.)

Pre

485

Pri


அழுத்த உயரம்: ஒரு தரநிலைப் படுத்திய வாயு மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட அழுத்த நிலைக்கு நேரிணையான உயரம்.

ஒரு விண்கலத்தில் வாயுப்பைகள் முழுமையாக நிரம்பியிருக்கக் கூடிய உயரம்.

Pressure cable; அழுத்த வடம்.

Pressure drop: அழுத்த வீழ்ச்சி.

Pressure nozzle: (வானூ.) அழுத்தக் கூம்பலகு: காற்றில் விமானத் தின் வேகத்தை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு அளவிடு கருவி.

Pressure welding: அழுத்தப் பற்ற வைப்பு: அழுத்தத்தின் மூலம் பற்ற வைப்பு செய்யக்கூடிய பற்றவைப்பு முறை.

Prick punch: (எந்.) ஊசித் துளை: ஒரு சிறிய மையத் துளை. இதனை ‘அமைப்புத் துளை' என்றும் கூறுவர்,

Primary: (மின்.) குறைமின் சுற்று வழி: குறைந்த அழுத்த (6 ஒல்ட்ஸ்) மின் சுற்று வழியைக் குறிக்கிறது.

Primary celi: (மின்.) அடிப்படை மின்கலம்: வேதியியல் ஆற்றலை மின்னியல் ஆற்றலாக மாற்றக் கூடிய மின்கல அடுக்கு. இதில் ஒரு ஜாடியில் மின் பகுப்புக் கரைசலும் இரு மின் வாய்த் தகடுகளும் இருக்கும்.

Primary coil: (மின்.) அடிப்படைச் சுருள்: இந்தச் சுருளில் மூல ஆற் 

Pri

486

Pri


றல் செலுத்தப்பட்டு, விசையின் காந்தக்கோடுகள் உண்டாக்கப் படுகின்றன. அவை இன்னொரு சுருளுடன் இணைக்கப்படும்போது அதில் ஆற்றல் தூண்டப்படுகிறது.

Primary colours: அடிப்படை வண்ணங்கள்: கலவை மூலக் கூறாய் உதவும் சிவப்பு, பச்சை, ஊதா, மஞ்சள் ஆகிய தலையாய வண்ணங்கள்.

Primery planets: அடிப்படைக் கோள்கள்: கதிரவனை மையமாகக் கொண்டு சுழலும் நேர்கோள்கள்.

Primary-type glider: ( வானூ.) அடிப்படை வகைச் சறுக்கு விமானம்; சறுக்கு விமானிகள் அடிப்படைப் பயிற்சி பெறுவதற்காகத் திருத்த மின்றிச் செய்யப்பட்ட சறுக்கு விமானம்.

Primavera: (மர.வே.) சீமை நூக்கு: மத்திய அமெரிக்க மர வகை. மஞ்சள் நிறமுடையது; நாளடைவில் கருமை நிறம் பெறும், அலங்கார மேலடை மெல்லொட்டுப் பலகைகளுக்கும், சன்னல் கதவுகளுக்கும் அறைகலன்களுக் கும் பயன்படுகிறது.

Prime number: (கணி.)பகா எண் : பொதுக் காரணிகள் கொண்டிராமல் ஒருமை அளவுடைய எண் .

Priming paint: (வண்.) முற்சாயம் : முற்சாயமாகச் சாயக்காரர்கள் பயன்படுத்தும் கலவை. இது மேற் பரப்பிலுள்ள துவாரங்களை

அடைப்பதற்கு முதல் சாயமாகப் பூசப்படுகிறது.

Principle of moments: (பொறி.) நெம்புதிறன் விதி: "ஒரு புள்ளியைச் சுற்றிச் சுழலும் பல்வேறு தாக்கு விசைகளின் இயற்கணிதக் கூட்டுத் தொகையானது, அந்தப் புள்ளியில் அவற்றின் கூட்டுவிளைவாக்கத்திற்குச் சமம்' என்னும் விதி.

Printer’s mark: (அச்சு.) அச்சக முத்திரை: அச்சக வாணிக இலச் சினை அல்லது, அடையாள முத்திரை.

Printing: அச்சிடுதல்: தாள் முதலியவற்றில் எழுத்துகளையும் படங் களையும் அழுத்திப் பதியவைத்தல்.

Printing press: அச்சு எந்திரம்: அச்சிடும் எந்திரம். அச்சகம், அச்சிடும் தொழிற்சாலையையும் இது குறிக்கும்.

Prism: (கணி.) பட்டகை: மூன்று அல்லது மூன்றிற்கு மேற்பட்ட தட்டையான பக்கங்களையுடைய நீள் உருளை உரு.

Prismatic colours: (வண்.) பட்டகை வண்ணங்கள்: கதிரவன் ஒளி யில் அடங்கியுள்ள சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், நீலம், பச்சை முதலிய வண்ண நிறங்கள்.

Prismatic compass: காட்சிக் கருவி: காட்சியின் போதே திசைக் குறிப்புத் தரும் நில அளவைக் கருவி. Prismatic powder: கூழாங்கற் பொடி: அறுகோணப் பிழம்புருவான வெடிமருந்துப் பொடி,

<b.Prismoid: முரண்பட்டகை: முரண் இணைவகப் பக்கங்களையுடைய பட்டகை.

Process annealing : பதப்படுத்து முறை: இரும்பை ஆதாரமாகக் கொண்ட உலோகக் கலவைகளைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூலமோ, நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமோ கடும் பதப்படுத்தும் முறை,

Process or chemical metallurgy: செய்முறை அல்லது வேதியியல் உலோகக் கலை: உலோகங்களை உருகவைத்து சுத்திகரிக்கும் முறை.

Product: (பொறி,) உற்பத்திப் பொருள் தொழில்துறையில் உற் பத்தி செய்யப்படும் பொருள்களின் அளவு.

Production: உற்பத்தி : (1) உற்பத்தி செய்யும் செயல் முறை, (2) உற்பத்தி செய்யப்படும் அல்லது தயாரிக்கப்படும் பொருள். (8) தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் அளவு

Production engineer : (பொறி.) உற்பத்திப் பொறியாளர்: உற்பத்திப் பிரிவினைப் பராமரித்து வருவதற்குப் பொறுப்பாகவுள்ள பொறியாளர் மிகத் திறம்பட்ட உற்பத்தி முறைகளைக் கையாளும் வகையில்

Pro

487

Pro


கருவிகளை இயக்குவதற்கும், கருவிகளை வடிவமைப்பதற்கும் இவர் பொறுப்பாக இருப்பர்.

Productivity: உற்பத்தித் திறன் : ஆள்பலம், மூலப்பொருள்கள், எந் திரங்கள் போன்ற பொருளாதார ஆதாரப் பொருள்களையும், ஊழியங்களையும் மிகத் திறமையோடு பயன்படுத்தும் திறன் .

Profile: உருவரைப் படிவம்: பக்க வாட்டான உருவப் படிவம் அல் ைது உருவரை ,

Profileometer: தளப் பரப்பு அளவு மானி: ஒரு தளப்பரப்பின் வழவழப்பினை அல்லது சொர சொரப்பினன அளவிடுவதற்குப் பயன்படும் மிகத் துல்லியமானதொரு கருவி. இதில் வைரமுனையுடைய வரைபடக்கரம் தளப்பரப்பில் நகரும்போது, அந்தக்கரம் ஒரு மின்னியல் களத்தில் ஒரு சுரளை நகர்த்துவதன் மூலம், தளப் பரப்பின் சொரசொரப்புக்கேற்ப ஒரு மின்னோட்டத்தை குறியீட்டு ஊசி சுட்டிக் காட்டுகிறது.

Profiling machine: (எந்.) உருவரை வெட்டு எந்திரம்: உருவரை படிவத்தைப் வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒருவகை எந்திரம். இது சிலவகை வேலைப்பாடுகளுக்கு மிகவும் பயனுள்ள எந்திரம்,

Progression, arithmetical; (கணி.) அளவு வளர்ச்சி கணிதத்தில் கூட்டல் அல்லது கழித்தல் 

Pro

488

Pro


மூலமாக ஒரு எண் வரிசை கூடிக் குறைந்துவரும் பாங்கு.

Progression, geometrical : பெருக்க வளர்ச்சி: நிலையெண்ணால் பெருக்கி வகுத்துக் கொண்டு போகும்போது பெருக்க ஏற்ற இறக்கத் தொடர்புப் பாங்கு.

Progression, hormonic: இசை இயைபுப் படிமுறை வளர்ச்சி: கீழ் வாய்ப் படிமுறை வரிசையின் கணக்கியல் மேல்வாய் மானப் பாங்கு.

Projection: ஏறிவுப் படம்: தளத்திலிருந்து தளத்தின் மீது படிவிக்கப் படும் எறிவுப்படம்.

Projection receiver: ஏறிவுப்பட வாங்கி: தொலைக்காட்சியில் ஒளி யியல் எறிவுப்படத் தத்துவத்தை உள்ளடக்கிய படம் வாங்கிப் பெட்டி.

Projection welding : எறிவுப்பற்றவைப்பு: இரு தளப்பரப்புகளுக்கிடையே வெப்பத்தை ஒரு வரம்புக்குள் ஒருமுகப்படுத்தி எறிவுமூலம் பற்றவைப்பு செய்யும் முறை.

Projector: ஒளிஎறிவுக்கருவி: ஒளி எறிவுக்கருவி அமைவு. திரைப்பட ஒளியுருப்படிவுக் கருவி.

Prony brake: (மின்.) தலைகீழ் தடை : ஒரு தனிவகைக் கப்பித் தொகுதி, தடை இணைப்பு. ஒரு தராசு ஆகியவை கொண்ட ஒரு

எந்திர சாதனம். இது ஒரு மின்னோடியுடன் இணைக்கப்பட்டிருக்கும். பாரம் ஏற்றியிருக்கும்போது இது உண்டாக்கும் குதிரைக் திறனை இது அளவிட்டுக் காட்டுகிறது.

Proof'(அச்சு.)மெய்ப்பு:அச்சுப்படி: பிழைதிருத்தம் செய்வதற்கான அச்சுப்படி அல்லது மெய்ப்புப்படி.

Proof plane; (மின்.) மின்னூட்ட அளவி: காப்புறையிட்ட கைப்பிடியின் மேல் மின்கடத்திப் பொருளின் மின்னூட்ட அளவு கருவி.

Proof-reader: (அச்சு.) பிழைத் திருத்துபவர்: அச்சுப் பார்வைப்படி மெய்ப்புத் திருத்துபவர்.

Propeller: முற்செலுத்தி: கப்பல்களை முற்செலுத்த உதவும் இயக் குறுப்பு.

விமானத்தில் நீர் அல்லது நீராவியால் சுழலும் பொறி உருளையுடைய சுழல் விசிறி.

Propeller-blade angle:(வானூ.) முற்செலுத்து அலகு கோணம்: ஒரு சுழல் விசிறியின் நாண்வரைக்கும் சுழல் விசிறிச் சுழற்சி அச்சுக்குச் செங்குத்தாகவுள்ள ஒரு தளப் பரப்புக்குமிடையிலான கூர்ங்கோணம். இதனை "அலகு கோணம்' என்றும் கூறுவர்.

Propeller efficiency: (வானூ.) முற்செலுத்தித் திறம்பாடு: உந்து ஆற்றலுக்கும் முற்செலுத்தியின் உட்பாட்டு ஆற்றலுக்குமிடையிலான விகிதம். Propeller hub: (வானூ.) முற்செலுத்திக் குடம்: விமானச் சூழல் விசிறியின் மையப்பகுதி: இது இடைத்தொலைவு அளவினை மாற்றும் எந்திர அமைப்பு உடையது. இதனுடன் அலகுகளும் இணைக் கப்பட்டிருக்கும்.

Propeller rake: (வானூ.) முற்செலுத்திச் சாய்வுகோணம்: விமா னத்தில் ஒரு சுழல் விசிறி அலகின் மையப்பகுதியை அச்சுக்குச் செங் குத்தான தளப்பரப்புடன் இணைக்கும் கோட்டின் சராசரிக் கோணம்.

Propeller root: (வானூ.) முற்செலுத்திக் கொளுவி: புடைப்புப் பகுதியின் அருகிலுள்ள முற்செலுத்தி அலகின் பகுதி.

Propeller shaft: (தானி.) முற்செலுத்திச் சுழல் தண்டு: இதனை "இயக்குச் சுழல் தண்டு" என்றும் கூறுவர். உந்துவிசையை பின்புற இருசுக்கு அனுப்பிவைப்பது இது தான்.

Propeller thrust: (வானூ.) முற்செலுத்தி உந்துவிசை: விமானத்தின் முற்செலுத்தியின் முன்னோக்கி உந்தித்தள்ளும் திறன் .

Propeller tipping: (வானூ.) முற்செலுத்திச் சரிவுக் காப்பு: முற் செலுத்தி அலகின் நுனியிலுள்ள , சாய்ந்து விழுவதைத் தடுக்கும் பாதுகாப்பு அமைவு.

Propeller turbine: (வானூ.) முற்

38

Pro

488

Pro


செலுத்து உருளை: நீர் அல்லது நீராவியால் சுழலும் உருளையுடைய விமான எந்திரம்.

Proportional dividers : வீத அளவுக் கவராயம்: வரைபடங்கள் வரைவதற்குப் பயன்படும் கவராயம். இதில் இரு முனைகளுடைய கால்கள் ஒரு சுழல் முளையுடனும் திருகுடனும் இணைக்கப்பட்டிருக்கும். இந்தச் சுழல் முனையையும் திருகையும் கையாண்டு கவராயத்தை வேண்டிய நிலைக்குக் கொண்டுவந்து அளவிடலாம்.

Proportional limit: (உலோ.) வீத அளவு வரம்பு : உலோகங்களில், நீட்சியடைவது அல்லது பாரத்தின் வீத அளவில் இருப்பது அற்றுப் போகும் நிலை,

Proportionately: வீத அளவு: வடிவளவு, பெறுமானம், முக்கியத் துவம் ஆகியவற்றுக்கு உரிய சரி சமவீத அளவில் இருத்தல்.

Propulsive efficiency (வானூ.) உந்தெறிவுத் திறன்: விமானத்தில் உண்மையான உந்து திறனுக்கும் முற்செலுத்தத்திற்குமிடையிலான விகிதம்.

Proscenium: அரங்கு முகப்பு: நாடக அரங்கின் முன்பகுதி, திரைக்கு முன்புள்ள மேடைக்கு மேலுள்ள கவான்பகுதியையும் இது உள்ளடக்கும்.

Protein: (வேதி.) புரதம்: கார்பன், ஆக்சிஜன், ஹைட்ரஜன், நைட்ர

Pro

490

Pul


ஜன், கந்தகம், சில சமயம் பாஸ்பரம், இரும்பு முதலிய உயிர்ச் சத்துகள் கொண்ட ஊட்டப் பொருள். எடுத்துக்காட்டு முட்டை வெண் கரு.

Proton: (வேதி.) புரோட்டான்: அணுவின் கருவினில் உள்ள நேர் மின்மம்.

Protractor 1 கோணமானி: கோணங்களை அளவிடுவதற்கும், காகிதத்தில் கோணங்களை வரைவதற்கும் பயன்படும் ஒரு கருவி. இது படம் வரைவதில் பயன்படுகிறது.

Prussian blue: (வேதி.) அடர் நீலம்: (Fe4(Fe(CN)6)3. அய உப்பில் பொட்டாசியம் அய சயனைடு வினைபுரிவதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. அடர்ந்த நீல வண்ண வீழ்படிவாகக் கிடைக்கிறது. சாயப் பொருளாகவும், காகிதத்திற்கு வண்ண மூட்டவும் பயன்படுகிறது.

Psychrometer: ஈர உணக்கவெப்ப மானி: ஈரக்குமிழுடன், ஈரம் நீக்கிய குமிழும் உடைய ஒருவகை வெப்ப மானி. ஆவியாகும் வேகத்தை அளவிடுவதற்கு உதவுகிறது.

Puddle (பொறி.) கலக்குதல்: (1) தேனிரும்பாக்குவதற்கு உருகிய இரும்பைக் கலக்குதல்.

(2) களிமண்ணையும் மணலையும் நீரோடு கலந்து பிசைந்து குழை சேறாக்குதல்.

Pugging: (க க.) ஒலித்தடுப்பான்: ஒலி ஊடுருவாகாதவாறு தரைத் தளங்களிடையே வைக்கப்படும் களிமண், வாள்தூள், சாந்து முதலிய வற்றின் கலவை.

Puller: (தாணி.) இழுவைக்கருவி: இறுகப் பொருந்திய பாகங்களைப் பிரித்தெடுப்பதற்குப் பயன்படும் எந்திர அல்லது நீரியல் சாதனம். எடுத்துக்காட்டு; சக்கர இழுவை; பல்லினை இழுவை.

Pulley: (எந்; பொறி.) கப்பி: பாரங்களை இழுப்பதற்குப் பயன்படும் உருளை அல்லது கப்பித் தொகுதி.

Pulley lathe: (எந்.) கப்பிக் கடைசல் எந்திரம்: நேரான அல்லது முனையுள்ள முகப்பினைக் கப்பிகள் மீது திருப்புவதற்குப் பயன்படும் ஒருவகைக் கடைசல் எந்திரம்.

Pulley stile: (க.க.) கப்பிக் கடவேணி: கதவு, சுவர், வேலி முதலியவற்றில் எடைகளை ஒரு புறம் ஏற்றி மறுபுறம் இறக்குவதற்காகக் கப்பித் தொகுதிகள் பொருத்தப்பட்டுள்ள நிலை வரிச் சட்டம்.

Pulley tap: (எந்.) கப்பி நாடா: மிக நீண்ட எந்திரத்தண்டு உடைய ஒரு நாடா. இது கப்பிகளின் குடத்தில் திருகிழைத் துளைகளைப் பொருத்துவதற்குப் பயன்படுகிறது.

Pull-out: (வானூ.) விளிம்பொட்டு இதழி: ஒத்துப் பார்வையிடுவதை எளிதாக்கும் பொருட்டுச் சுவடித் தாள்களின் முகப்பு விளிம்பிலிருந்து விரியும் பக்கம்,

Pulp: காகிதக்கூழ்: காகிதம் செய்வதற்கு மரத்துண்டுகள், கந்தைகள் முதலியவற்றைக் கொண்டு செய்யப்படும் ஒரு கலவைக் கூழ்.

Pulpit (க.க.) உரை மேடை: திருக்கோயில் சமய உரை மேடை,

Pulsating current: (மின்.) துடிப்பு மின்னோட்டம்: மின்னோட்ட அளவு ஒரே அளவாக இல்லாமல், ஒரே திசையில் மின்னோட்டம் பாயக்கூடிய நேர் மின் னோட்டம்.

Pulsation welding:துடிப்புப் பற்றவைப்பு: அழுத்தம் கொடுக்காமல் அல்லது மின் முனைகளின் இடங்களை மாற்றாமல் பற்றவைப்பு மின்னோட்டத்தை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை இடையீடு செய்து தைப்பு முறையில் பற்றவைப்பு செய்யும் முறை.

Pulse-jet engine: (வானூ.) துடிப்புத் தாரை எஞ்சின்: ஒரு வகை அழுத்தத் தாரை எஞ்சின் இதில் உள்ளெரிதல் இடைவிட்டு நடை பெறும். இதனால் தொடர் வெடிப்புகள் மூலம் உந்துகை உண்டாகிறது. இதனை 'துடிப்புத் தாரை" என்றும் கூறுவர்.

Pulsometer: (பொறி.) வளிதீர்குழல்: நீராவியைக் கவான் குழாய் வழி கொண்டு செல்வதற்கான வளி

Pum

491

Pul


தீர் குழாய். இது பெரும்பாலும் நீருக்கடியில் கடைகால் போட உதவும் நீர் புகாக்கூண்டு அமைவிலிருந்து நீராவியைக் காலி செய்வதற்குப் பயன்படுகிறது.

Pumich; மாக்கல்: மெருகேற்று வதற்குப் பயன்படும் மாக்கல் வகை. இதனைப் பொடியாக்கிப் பயன்படுத்துவர்.

Pump: (எந்.) இறைப்பான்: திரவங்களைக் காற்றழுத்த ஆற்றல் மூலம் மேலெழச் செய்யும் விசைக் குழாய்.

Punch: (எந்.) தமரூசி: தோல், உலோகம், தாள் முதலியவற்றில் துளையிடுவதற்கு எஃகினால் செய்த ஒரு கருவி.

Punching: துளையிடுதல்: தாள், தோல், உலோகம், முதலியவற்றில் தமரூசியால் துளையிடுதல்,

Punch press: வார்ப்பழுத்துப்பொறி: வார்ப்புருவத் தாய்ப் படிவ அழுத்தும் பொறி.

Punctuation: (அச்சு.) நிறுத்தக் குறியீடு: வாக்கியங்களைச் சொற்றொடர்களாகப் பகுத்துக் காட்டு வதற்குப் பயன்படும் நிறுத்தக் குறியீடுகள்.

Purlin: (க.க.)உத்தர நெடுவிட்டம்: தாங்கணைவு களுக்கிடையாகவும், கூரை உத்தரங்களுக்கு ஆதார மாகவும் அமைக்கப்படும் தாக்கமைவுக் கட்டுமானம், 

Pus

492

Pyr


Push button: (மின்.) மின்விசைக் குமிழ்: ஒரு சிறிய பொத்தானை அல்லது குமிழை அழுத்திக் கொண் டிருக்கும் வரை ஒரு மின்சுற்று வழியை நிறைவு செய்கிற ஒரு சாதனம்.

Push-button starter: (தானி.) அழுத்து பொத்தான் இயக்கி: உந்து ஊர்தியை ஒரு பொத்தானை அழுத் துவதன் மூலம் இயக்கத் தொடங்குவதற்குப் பயன்படும் சாதனம். இது காலால் இயக்கும் விசைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது.

Push-button switch : (மின்.) அழுத்த பொத்தான் விசை : மின்னியல் இணைப்புகளை ஒரு பொத்தா னை அழுத்தி தொடர்பேற்படுத்தவும் இன்னொரு பொத்தானை அழுத்தி இயக்கவும் பயன்படும் விசை.

Pusher airplane : (வானூ.) உங்து விசை விமானம் : முதன்மை ஆதார மேற்பரப்புகளுக்குப் பின்னால் முற்செலுத்தியை அல்லது முற்செலுத்திகளை உடைய ஒரு வகை விமானம்.

Pusher propeller : (வானூ.) உங்துவிசை முற்செலுத்தி : விமானத்தில் எஞ்சினின் பிற்பகுதியில் அல்லது முற்செலுத்தி சுழல் தண்டின் பின் நுனியில் பொருத்தப் பட்டுள்ள முற்செலுத்தி அல்லது சுழல் விசிறி.

Putlog : (க.க.) சாரக்கட்டை : சாரப்பலகைகளைத் தாங்குவதற்கான குறுகிய வெட்டுமரத்துண்டு.

Putty : (வேதி; க. க.) மெருகு கண்ணத்தாள் : கண்ணாடியை

அல்லது உலோகத்தை மெருகிடுவதற்கான சுண்ணத்தாள் வகை.

Puzzolan or slag cement : எரிமலைச்சாம்பற்காரை : எரிமலைச் சாம்பல் அல்லது கொல்லுலைச் சாம்பற் கட்டி மூலம் தயாரிக்கப்படும் சீமைக்காரை அல்லது சிமென்ட். இது சீமைச் சுண்ணாம்பு, களிமண் ஆகியவற்றால் செய்யப்படும் சீமைக்காரை போல் அத்துணை வலுவுடையதன்று, இது பெருமளவில் பயன்படுத்தப்படுவதுமில்லை.

Pyramid : (கணி.) கூம்பு வடிவம்: ஒரு சமதள பல கோண முக்கோணத்தை ஆதாரமாகவும். பொதுவான முகட்டு முனையும் உடைய கூர்ங் கோபுர வடிவம்.

Pyridine (வேதி.) பைரிடின்: காசநோய் மருந்தாகப் பயன்படும் எலும்பு நெய் வடிம மூலப் பொருள் . இது மஞ்சள் நிறமுடையது. இதனை ஆல்கஹாலின் இயல்பு நீக்கியாகவும் பயன்படுத்துகின்ற னர்.

pyrite : (வேதி.) பைரைட் : அயச் சல்பைடுகளில் இயற்கையாகக் கிடைக்கும் பித்தளை போன்ற மஞ்சள் நிறப்பொருள். இதனை 'முட்டாளின் தங்கம்” என்றும் 'கந்தக வைரம்' என்றும் கூறுவர்.

Pyrographing : செதுக்கு வேலை: சூடாக்கப்பட்ட கருவியினால் தோல் அல்லது மரத்தின் மீது தீட்டப்பட்ட செதுக்கு வேலை. Pyrolusitc : (உலோ.)பைரோலூசைட் : முக்கிய மாங்கனீஸ் தாதுப்பொருள். பல நாடுகளில் இரும்பு போன்ற கரு நிறத்தில் கிடைக்கிறது. இது உலோக மாங்கனீஸ் தயாரிக்கப் பயன்படுவதுடன், மின்கலங்கள், வண்ண உலர்த்திகள் ஆகியவற்றிலும் பயன்படுகிறது.

Pyrometer :(எந்;பொறி.) உயர் வெப்பமானி : உலைகளில் உள்ளது போன்ற மிக உயர்ந்த வெப்ப நிலைகளை அளவிடுவதற்குப் பயன்படும் ஒரு கருவி.

Pyroxylin : (வேதி.) பைரோக்சிலின் : வண்ணநெய், செயற்கைத் தோல் ஆகியவற்றிற்கு வெறியத்தில் தோய்த்துப் பயன்படுத்தப்படும் மரச்சத்து வெடியகிப் பொருள். இது எளிதில் தீப்பற்றக் கூடியது; வெடிக்கத்தக்கது. ஒளிப்படச் சுருள்கள் தயாரிப்பதில் பயன்படுகிறது.