உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்/R

விக்கிமூலம் இலிருந்து

R

Rabbet (மர.வே.) மூலைப் பொருத்துவாய்: இசைப்பு வாய் மூலம் இணைப்பதற்கு விளிம்பில் செய்யப்படும் இசைப்பு வாய் வெட்டு.

Race rotation: (வானூ.) இயங்கு சுழற்சி: விமானத்தில் முற்செலுத்தி மூலமாக அல்லது அதன் விளைவாகச் செல்லும் காற்றோட்டத்தின் மீது முற்செலுத்தியின் இயக்கத்தினால் உண்டாகும் சுழற்சி.

Race May: (மின்.) புழைவழி: காப்புக்குழாய், வார்ப்படக் குழாய் போன்ற உட்புழையுடைய பொருள்களைக் குறிக்கும் சொல். இவை பெரும்பாலும் மறைவாக இருக்கும். இவற்றின் வழியாக மின் கம்பிகள் ஒரு வெளிச் செல் வழியிலிருந்து இன்னொரு வழிக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

Rack: அழிச்சட்டம்: 1) பொருள்களை வைப்பதற்கான கொள்கலச் சட்டம்.

(2)பற்கள் பொளிந்த கம்பி அல்லது சட்டம்.

(3)அச்செழுத்து அடுக்குப் பலகை

தாள்மடி. ஒரு தடவை மடித்து 8 ஆக்கப்பட்ட தாள் நான்கு தாள் தொகுதி.

Quirefold: மடிதாள்: ஒருதடவை மடித்து 8 ஆக்கப்பட்ட நான்கு தொகுதி.

களை வைப்பதற்குப் பயன்படும் உலோகத்தாலான அல்லது மரத்தினாலான சட்டம்,

Radar: ராடார் (தொலைநிலை இயக்கம்): ஆற்றல் வாய்ந்த மின்காந்த அலை அதிர்வியக்க மூலம் தன் னிலையும், விமானங்கள், கப்பல்கள், கடற்கரைகள் முதலியவற்றின் நிலைகளும் கண்டறிவதற்குரிய கருவி அமைவு.

Radial: மையவிலக்கு: மையத்திலி ருந்து அல்லது இருசிலிருந்து புற நோக்கி விலகிச் செல்கிற அமைவு.

Radial arm: (எந்.) ஆரைக்கரம்: இயங்கும் பிடிமானம். இது ஆரை: துரப்பண எந்திரத்தில் துரப்பணச் சேணத்தைத் தாங்குகிறது.

Radial axle: (எந்.) ஆரை இருசு: பாதை வளைவுக்குத் தக்கபடி அமைந்த இருசு.

Radial bar: ஆரைச் சலாகை: ஒரு மரச்சலாகை. இதன் நுனியில் ஒரு பென்சில் இணைக்கப்பட்டிருக் கும். இதனைக்கொண்டு பெரிய வளைவுகளை வரையலாம்.

Radial drilling machine : (எந்.) ஆரைத் துரப்பண எந்திரம் : ஒரு கனரகத் துரப்பன எந்திரம். துரப் பணம் செய்யப்படும் பொருளை நகர்த்தாமல் துரப்பணத்தின் நிலையைச் சரி செய்யக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டிருக்கும்.

Radial engine : (வானூ.) ஆரை எஞ்சின் : நிலையான நீள் உருளைகளைக் கொண்ட எஞ்சின். இந்த நீள் உருளைகள் ஒரு பொதுவான வளைவுச் சுழல் தண்டினைச் சுற்றி ஆரை வடிவில் அமைக்கப்பட்டிருக்கும்.

Radiant heat; (இயற்.) தாவு வெப்பம்: மையத்தினின்றும் நாற்றிசையிலும் வெப்பம் தாவிச் சென்று பரவுதல்.

Radiating surface : கதிர்வீச்சுப் பரப்பு: வெப்பக் கதிர்களை வீசிப் பரப்புகிற பரப்பு.

Radiation: (எந், பொறி.) வெப்பக் கதிர்வீச்சு: வெப்பக்கதிர் வீசிப் பரவுதல். அணுக்கதிர்வீச்சு: அணுத்துகள் அல்லது கதிர்கள் ம்க வேகமாக வீசிப் பரவுதல்.

Radiator: (எந்.பொறி.) வெப்பாற்றுப் பொறி: உந்துவண்டிப் பொறி

89

Rad

497

Rad


யின் வெப்பாற்றும் அமைவு.

Radiator hose: (தானி.) வெப்பாற்றுப் பொறி நெழிவுக் குழாய்: உந்து ஊர்தியில் வெப்பாற்றுப் பொறியினையும், எஞ்சினையும் இணைக்கும் நெளிவுக் குழாய்.

Radical: (கணி.) விசைமூல அளவு: எண்களின் வர்க்கமூலம் தொடர்பான அளவு. மூல உறுப்பு: சேர்மத்தின் அடிப்படைக் கூறாக அமைத்து சேர்மத்தின் இயல்பான வேதியியல் மாற் றங்களின் போது மாறாமலே இருக்கும் தனிமம் அல்லது தனி அணு அல்லது அணுக்களின் கூட்டம்,

Radio: (மின்.) வானொலி: கம்பியில்லாச் செய்திப் பரப்பு; கம்பியில்லாச் செய்தி வாங்கும் அமைவு: வானொலிப்பெட்டி; வானொலி ஒலி பரப்பு.

Radioactive: (மின்.) கதிரியக்கமுடைய: பொருள்கள் நேர் மின்னேற்றமும், எதிர் மின்னேற்றமும் உடைய துகள்களை வெளியிடுதல்,

Radioactivity: (வேதி.) கதிரியக்கம்: ஒருவகை அணு இன்னொரு வகை அணுவாக மாறும்போது ஏற் படும் மாறுதல். இந்த மாற்றத்தின் போது அணுவின் உட்கருவிலிருந்து எரியாற்றல் வெளிப்படுகிறது.

Radio astronomy: கதிரியக்க வானியல் : 

Rad

498

Rad


Radio broadcasting: வானொலி ஒலிபரப்பு: செவிப்புலன் ஆற்றலை வானொலி ஆற்றலாக மாற்றி வானொலி அலைகளின் வடிவில் அனுப்புதல்,

Radio channel: வானொலி அலை வரிசை: வானொலி, தொலைக்காட்சி அலை அடையாளக் குறியீடுகளை இடையீடின்றி அனுப்பித் தரும் அலை இடைப்பகுதி. இன்றையத் தொலைக்காட்சி வரைய ளவுகளின் படி, ஒர் அலைவரிசை என்பது 6 மெகாசைக்கிள் அகல விரிவுடையது.

Redio communication: வானொலிச் செய்தித் தொடர்பு: வானொலி ஆற்றல் மூலமாக வாய்மொழிச் செய்தியை அல்லது குறியீட்டுச் செய்தியை அனுப்புதல்.

Radio compass: (வானூ.) வானொலித் திசை காட்டி: கதிரியக்கத் தத்துவத்தின் மூலம் திசைகளைக் குறித்துக் காட்டும் கருவி. இது வானொலி ஒலிபரப்புப் பெட்டியில் அமைந்திருக்கும். அதை நோக்கியே இதன் முள் திரும்பி இருக்கும். இதன் முள் வடக்குத் திசையை நோக்கி இருக்காது.

Radio frequency: (மின்.) வானெலி அலைவெண்: வானொலிச் சைகைகளை அனுப்புவதில் பயன்படுத்தப்படும் மின்னலைகளின் அலைவெண். இது ஏறத்தாழ வினாடிக்கு 40,000-க்கும் 80,000,000-க்கும் இடைப்பட்ட அதிர்வுகளைக் கொண்டிருக்கும்.

Radio goniometer: சைகை இயக்கமானி: கப்பல்களிலிருந்தும் விமானங்களிலிருந்தும் அனுப்பப் படும் கம்பியில்லாச் சைகைச் செய்திகளிலிருந்து அவை இருக்கும் திசையைக் கண்டுபிடிக்கும் கருவி.

Radiogram: கம்பியில்லா ஒலிபரப்புச் செய்தி: வானொலி வாயிலாக அனுப்பப்பட்டு, ஏதோவொரு வழி யில் முகவரியாளருக்கு அஞ்சல் செய்யப்படும் செய்தி.

Radiograph: வெயில் மானி: வெயிலின் செறிவையும் வெயில் காயும் நேரத்தையும் பதிவு செய்வதற்கான கருவி.

Radioisotope: (வேதி.) கதிரியக்க ஓரகத் தனிமம்: கதிரியக்கமுடைய ஒரு தனிமத்தின் வடிவம். இது தனி மத்திற்கு இயற்கையாக அமைந்திருக்கலாம் அல்லது அணுப்பிளப்பு போன்ற வேறு அணுவியல் மாறுதல்கள் மூலம் உணடானதாக இருக்கலாம்.

Radiometer: கதிரியக்கச் செறிவு மானி: கதிரலை இயக்கம் இயக்க ஆற்றலாக மாறுவதைக் காட்டும் கருவி.

Radio phony: ஒலி வெப்ப நிலையாக்கம்:ஒலியலை வெப்பலைகளினால் ஒலியுண்டாக்கும் முறை.

Radioscopy: ஊடுகதிர் ஆய்வியல்:

Radio network: இணைவனம்:வானொலி ஒரு பொதுவான நிகழ்ச்சியை ஒலிபரப்பும் நோக்கத்திற்காக அமைக்கப் பட்டுள்ள பல வானொலி நிலையங்களின் தொகுதி.

Radio phone: வானொலித் தொலைபேசி: வானொலி மூலமாக குரல் செய்தியை அனுப்புவதற்குப் பயன்படும் கருவி.

Radio receiver: வானொலிப் பெட்டி:வானொலி ஆற்றலை ஏற்று கேட்பு ஆற்றலாக மாற்றுவதற்குத் தேவையான சாதனம்.

Radio sonde: மீலனி நிலைமானி: வளிமண்டலத்தின் பல்வேறு தளங்களின் அழுத்தம், வெப்பநிலை. ஈர்மை நிலைகளைக் குறித்து ஒலி பரப்புவதற்காக விமானங்களிலிருந்து விமானக் குடை மூலம் இறக்கப்படும் சிறு வானொலிப் பரப்பமைவு.

Radio station: வானொலி நிலையம்: வானொலிச் செய்திகளை அனுப்பவும் பெறவும் பயன்படும் கருவி அமைந்துள்ள இடம்.

Radio-telegram: வானொலித் தந்தி: கம்பியில்லாத் தந்திமூலம் பெறப்படும் செய்தி.

Radio-therapy: ஊடுகதிர் மருத்துவம்: ஊடுகதிர் (எக்ஸ்ரே) கதிரியக்கம் மூலம் நோய்களைக் குணப் படுத்தும் மருத்துவமுறை.

Radium : (வேதி.) ரேடியம் (கதிரியம்) : தார், வண்டல் திரள்களிலிருந்து பெறப்படும் இயற்கை

Rad

499

Rad


யாகக் கதிரியக்கமுள்ள உலோகத் தனிமம். இது யுரேனியத்தை விட அதிகக் கதிரியக்கம் வாய்ந்தது. யுரேனியம் பெறப்படும் அதே தாதுப் பொருள்களிலிருந்து கிடைக்கிறது.

Radium - therapy : ரேடிய மருத்துவம் : கதிரியக்கத்தையோ, அதன் விளைபொருள்களையோ பயன்படுத்தி நோய் தீர்க்கும் முறை.

Radius : ஆரை : ஒரு கோளம் அல்லது வட்டத்தின் மையத்திலிருந்து அதன் சுற்று வரைக்கு அல் லது தளப்பரப்புக்குச் செல்லும் ஒரு நேர்கோடு.

Radius gauge : (எந்.) ஆரை அளவி : மேடான இடை விளிம்புகளையும், வளைவு முனைகளையும் அளவிடுவதற்கான ஒரு கருவி.

Radius of gyration : (பொறி.) சுழல் ஆரம் : மடிமைத் திருப்புமையை வெட்டுத்தளப்பரப்பினால் வகுப்பதன் மூலம் கிடைக்கும் ஈவின் வர்க்கமூலத்திற்குச் சமமானது.

|-T. Ro = 1

R - /TAT A R= சுழல் ஆரம் 1 : மடிமைத் திருப்புமை A : பரப்பளவு

Radius planer : (எந்.) ஆரை இழைப்புளி: வட்டவரைகள், உந்து ஊர்திகளின் இணைப்புகள் முதலியவற்றில் பயன்படுத்தப்படும் ஒரு தனிவகை இழைப்புளி, 

Rai

500

Ras


Rail : தண்டவாளம்: இருப்பூர்திகளுக்கான தண்டவாளம்.

Rainbow : வானவில் : வெயில் அடித்துக் கொண்டு மழைத்துாறல் விழும் போது, நீர்த்துளிகளில் ஒளிச்சிதறல் ஏற்படுவதன் காரணமாக சூரியனுக்கு எதிர்த்திசையில் வில் போல் காணப்படும் ஏழு நிறங்களின் தொகுதி. இதில் செங்கரு நீலம், நீலம், ஊதா, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு வண்ணங்கள் வரிசையாக அமைந்திருக்கும்.

Rainbow, secondary: எதிர் வானவில் : வானவில்லின் உட்புறமோ, வெளிப்புறமோ காணப்படும் தலைகீழான நிறவரிசையுடைய வானவில்.

Raised printing : (அச்சு.) புடைப்பு அச்சு முறை : எழுத்துகள் மேல் வந்து முனைப்பாக இருக்கும்படி அச்சிடும் முறை.

Rake : (பட்.) சம்மட்டம்: சம மட்டமாக்கப் பயன்படும் கருவி.

Ram : (எந்.) தூலப்பொறி : மதிற் சுவர்களைத் தகர்ப்பதற்குரிய உலோகப் பூணிட்ட பெருந்துாலம்.

Rammer : (வார்.) திமிசுக் கட்டை : மண்ணை அடித்து இறுக்கும் கருவி.

Ramp (க.க.) கோட்டைச் சாய்தளம் : கோட்டை அரணில் இரண்டு தரைமட்டங்களை இணைக்கும் சாய்தளம்,

Random : தொடர்பின்மை : அங்கொன்றும் இங்கொன்றுமான முறைமை. ஒழுங்கற்ற அளவும் வடிவும் கொண்டிருப்பவை.

Random joints : தொடர்பற்ற இணைப்புகள் : மேலொட்டுப் பலகையில் அகலம் சமமாக இருக்கிறதா என்பதைக் கவனத்தில் கொள்ளாமல் தொடர்பின்றிச் செய்யப்படும் இணைப்புகள்.

Random work : (க.க.) ஒழுங்கற்ற வேலைப்பாடு : ஒழுங்கற்ற முறையில் அமைக்கப்படும் கல் வேலைப் பாடு. ஒருசீராக இல்லாத கற்களைக் கொண்டு ஒரு சுவர் கட்டுதல் போன்ற பணி.

Range at full speed (வானூ.) முழுவேக வீச்செல்லை : ஒரு விமா னம் மிகச் சிக்கனமான வேகத்திலும் உயரத்திலும் பறக்கும்போது செல்லக்கூடிய உச்ச அளவு தூரம் .

Rapeseed oil : : கடுகிலிருந்து பெறப்படும் கனமான பழுப்பு நிற எண்ணெய்: இது மசகெண்ணெயாக வும், எஃகிணைப் பதனப்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

Rasp : (எந்.) முரட்டு அரம் : கரடு முரடான பரப்புடைய அரம் போன்ற கருவி.

Raster : (மின்.) எலெக்ட்ரான் ஒளிர்வு : படக்குழாய் திரையில் எலெக்ட்ரான் கற்றையை வீசுவதன் மூலம் உண்டாகும் ஒளிர்வு. Ratchet : (எந்.) பற்சக்கரத் தடை: சலாகை மீது அல்லது சக்கரத்தின் மீது அமைந்த பற்களின் இயக்கத்துடன் ஒரு வழி அசைந்து மறுவழித் தடுக்கும் தடையமைவு.

Ratchet bar : (எந்.) பற்சக்கரத் தடைச் சலாகை : ஒரு வழித் தடைப் பற்சக்கரத்தில் உள்ளது போன்ற பற்கள் கொண்ட ஒரு நேர்ச் சலாகை. இது எந்திரப் பற்களைத் தடுக்கும் அடை தாழினை ஏற்றுக் கொள்ளும்,

Ratchat brace : பற்சக்கரப் பிணைப்புக் கட்டு.

Ratchet drill : (எந்.) ஒரு வழித்தடைப் பற்சக்கரத் துரப்பணம் : இது ஒரு நெம்பு கோலுடைய கையால் இயக்கப்படும் ஒரு துரப்பணம். இதன் ஒரு முனையில் ஒரு துரப் பணப்பிடி அமைந்திருக்கும். இது ஒரு வழித்தடப் பற்சக்கரம், அடை தாழ் மூலம் சுழலக்கூடியது.

Ratchet-wheel: ஒருவழித் தடைப் பற்சக்கரம்: ஒரு வழிப் பற்சக்கரத் தடை அமைக்கப்பட்ட சக்கரம்.

Rated horse power of an engine: (வானூ.) விசை மானம்: ஒரு குறிப்பிட்ட வகை எஞ்சினின் வேக அளவு கணிக்கப்பட்டிருந்து, அது முழுவேகத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட உயரத்தில் அல்லது பெருகிய அழுத்தத்தில் இயங்கும் போது உண்டாகும் சராசரிக் குதிரை விசை.

Rated revolutions: (வானூ.)

Rat

501

Rat


சுழற்சி வேகம்: விசைமானத்திற்கு இணையான சழற்சிகளின் எண் ணிைக்கை.

Rate of climb: (வானூ.) ஏறுமுக வேகம்: ஒரு விமானம் காற்றை எதிர்த்துச் செங்குத்தாக ஏறும் வேக வீதம்.

Rate - of - climb indicator: (வானூ.) ஏறுமுக வேகமானி: ஒரு விமானம் உயரே ஏறுகிற அல்லது உயரத்திலிருந்து இறங்குகிற வேக வீதத்தைக் காட்டும கருவி.

Rate of speed: (எந்.) வேக வீதம்: எந்திர வேலைகளில் வேகவீதம் ஒரு நிமிடத்தில் சுழற்சிகளின் எண்ணிக்கை அல்லது ஒரு நிமிடத்தில் அடி என்ற அளவில் கணக்கிடப்படுகிறது.

Rating of alternators: (மின்.) மாறுமின்னாக்கி வேகம்: மாற்று மின்னோட்டம் உற்பத்தி செய்யும் மின்னாக்கிகளின் வேகம் கிலோ வால்ட்-ஆம்பியர்களில் (KVA) கணக்கிடப்படுகிறது. இது ஆம்பியர் அளவினை மின்னழுத்தத்தின் மடங்குகளாகப் பெருக்கி ஆயிரத்தால் வகுத்துப் பெறப்படுகிறது.

Ratio: வீதத் தொடர்பு: ஒன்றோடு ஒன்றனுக்குள்ள அளவையொட் டிய தொடர்பு.

Ratio of transformation: மின் மாற்று வீதம்: ஒரு மின்மாற்றியில் முதனிலைச் சுருளிலுள்ள சுழல்களின் எண்ணிக்கைக்குமிடையிலான வீத அளவு,

Raw

502

Rea


Rawhide: பதனிடாத் தோல்: பதனிடப்படாத தோல்.

Rawhide gears: (எந்.) தோல் பல்லிணை: இறுக்கமாக அழுத்தப் பட்ட பதனிடப்படாத தோல் வட்டுகளினாலான ஓசை எழுப்பாத பல்லிணை .

Rawhide hammer: தோல் சுத்தி: பதனிடப்படாத தோல் கொண்டையுடைய கைச்சுத்தி. உலோக உறுப்புகளில் இச்சுத்தியைப் பயன்படுத்தும்போது அந்தஉறுப்புகளில் கறல்கள் ஏற்படாமல் இருக்கும.

Raw material:மூலப் பொருள்: செய்பொருளுக்குரிய மூல இயற்கைப் பொருள்.

Rayon: ரேயான் (மரவிழைப்பட்டு): மரக்கூறினிலிருந்து இயற்றப்படும் செயற்கைப் பட்டு வகை.

Reactance: (மின்.)எதிர்வினைப்பு: ஒரு மாற்று மின்னோட்டச் சுற்று வழியில், மின்னோட்டத்தை எதிர்க்காமல், ஆனால் அதற்கும் அதன் மின்னியக்க விசைக்குமிடையிலான நிலைவேறுபாட்டினை உண்டாக்குகிற தடையின் உறுப்பு.

Reaction: எதிர் வினை: வேதியியலில் புறத்தாக்குதலால் ஏற்படும் இயல் மாறுபாடு.

Reaction coil:எதிர்வினைப்புச்சுருள்.

Reaction voltage:எதிர்வினைப்பு மின்னழுத்தம்.

Reaction engine: (வானூ.) எதிர்வினைப்பு எஞ்சின் (எதிர்வினைப்பு விசைப்பொறி): ஓர் எஞ்சின் அல்லது விசைப்பொறி வெளியேற்றும் பொருளுக்குத் தனது எதிர் வினைப்பு மூலம் உந்துவிசையை உண்டாக்குகிறது. இந்த எஞ்சின் எதிர்வினைப்பு எஞ்சின் எனப்படும்.

Reaction turbine: (வானூ.) எதிர்வினைப்பு விசையாழி: சுழலி அலகுகள் கூம்பலகுகளின் வளையமாக அமைந்த ஒருவகை விசையாழி. இந்த அலகுகளிடையிலிருந்து வெளியேற்றப்படும் திரவத்தின் எதிர்வினைப்பு மூலம் விசையாழி சுழல்கிறது.

Reactor:(மின்.) எதிர்வினைப்பான்: மாற்று மின்னோட்டங்களின் ஓட் டத்திற்கு எதிர்ப்பை அளிக்கும் ஒரு சாதனம். பொதுவாக இரும்பு உள்ளிட்டின் மீதான கம்பிச் சுருள்களைக் கொண்டிருக்கும்.

Reagent (வேதி.) வினையூக்கி: எதிர்த்தாக்காற்றல் மூலம் சேர்மத் தின் பொருட்கூறு கண்டுணர உதவும் பொருள். இது பகுப்பாய்வு வேதியியலில் பயன்படும் பொருள்.

Rear axle: (தானி.) பின் இருசு: பல்லிணைகள், இருசுச் சுழல் தண்டுகள், இயங்குபொறி ஆகியவற்றையும் தாங்கிகள், பட்டை வளையங்கள் போன்ற இயக்கு வதற்குத் தேவையான துணை உறுப்புகளையும் கொண்ட பின் இருசு.

Reaumur thermometer: (இயற்.) ரோமர் வெப்பமானி: ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் பயன்படுத்தப்படும், ஒரு வெப்பமானி. இதில் பனிக்கட்டியின் உருகுநிலை 0° ; நீரின் கொதிநிலை 80".

Receiver: (மின்.) செவிக்குழல்: தொலைபேசிச் செய்தியைக் கேட் பதற்கு காதருகே வைத்துக் கேட்கப்படும் கருவி.

(2) ஒலி-ஒலிப்பெட்டி: அலை பரப்புகளை ஒலியாகவோ ஒளியாகவோ மாற்றுவதற்கான அமைவு.

Receptacle: (மின்.) கொள்கலம்: வெண்சுடர் மின் விளக்கினைப் பொருத்துவதற்கான சுவர்க் குதை குழி,

Reciprocating: (எந்.) எதிரெதிர் இயக்கம்: முன்னும் பின்னும் மாறி மாறி இயங்குதல்.

Reconnaissance:முன்னாய்வு: நில அளவைப் பணியில் நில அள வைப் பணியைத் தொடங்குவதற்கு முன்பு நடத்தப்படும் முன்னீடான ஆய்வு.

Recording thermometer: பதிவு வெப்பமானி: வெப்பமாறுதல்களை நிரந்தரமாகப் பதிவு செய்து கொள்ளும் ஒரு வெப்பமானி. இது ஒரு காகிதப் பட்டையில் அல்லது சுருளில் தானாகவே வெப்பநிலை

Rec

508

Red


யைப்பதிவு செய்துகொள்ளும்.

Recrystallization:(உலோ) மறுபடிகமாக்கல்: கெட்டியாக்கப்பட்ட உலோகத்தைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூலமாகவோ, நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமாகவோ பதப்படுத்தி அதன் இயல்பான பண் பியல்புகளுக்கும், கட்டமைப்புக்கும் மீண்டும் கொண்டு வருதல்.

Rectangle (கணி.) நாற்கரம்: நான்கு பக்கங்களைக் கொண்ட நாற்கட்ட வடிவம். இதன் கோணங்கள் செங்கோணமாக இருக்கும்; எதிர்ப்பக்கங்கள் சமமாகவும் இணையாகவும் இருக்கும். அண்டைப் பக்கங்கள் சமமாக இருக்க வேண்டியதில்லை.

Rectifier: (மின்.) மின்திருத்தி: மாற்றுமின்னோட்த்தை நேர்மின் னோட்டமாக மாற்றும் கருவி.

Rectfier tube: மின்திருத்திக் குழாய்: மாற்று மின்னோட்டத்தை நேர் மின்னோட்டமாக மாற்றுவதற்குப் பயன்படும் ஒரு வெற்றிடக் குழாய்.

Red : சிவப்பு : நிறமாலையில் ஆரஞ்சு நிறத்திற்கும் வெங்கரு நீலத்திற்கும் இடைப்பட்ட அடிப்படை வண்ணம்.

Red brass : (உலோ.) செம்பித்தளை: சிறந்த வார்ப்பட இயல்பும் எந்திர வினைத்திறனும் உடைய உயர்ந்த செப்புப் பித்தளை. இதில்

Red

504

Rel


85% செம்பும், வெள்ளீயம், ஈயம், துத்தநாகம் வெவ்வேறு அளவுகளிலும் கலந்திருக்கும்.

Red lead : (வேதி.) வங்கச் செங்தூரம் : (Pb3 04) ; ஈய மோனாக்சைடை அல்லது காரீயத்தைச் சூடாக்குவதன் மூலம் இது கிடைக்கிறது. கண்ணாடிக்கலம், இரும்பு துருப்பிடிப்பதைத் தடுக்கும் செஞ்சாயம் தயாரிக்கப் பயன்படுகிறது. குழாய் இணைப்புகளைக் கசிவு களைத் தடுக்கும் பொருளாகவும் பயன்படுகிறது.

Red oak : (பட்.) செங்கருவாலி: வெண் கருவாலியை விடக் கருமை யாகவும், முரட்டுக் கரணைகளும் உடைய மரம். எளிதில் உடையக் கூடியது; நுண்துளைகளுடையது. கட்டிடங்களில் உள் அலங்காரத்திற்கும், அறைகலன்கள் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது.

Reducer: செறிவு குறைப்பான்: ஒளிப்பட மறிநிலைத் தகட்டின் செறிவினைத் தளர்த்த உதவும் பொருள்.

Reinforcement : (குழை.) வலிவூட்டும் பொருள் : பிளாஸ்டிக் பொருளுக்கு வலிவும், விறைப்பும் அளிக்கக் கூடிய பொருள். இவை பெரும்பாலும் கண்ணாடி இழை உடையதாக இருக்கும். பிசின் இழை. நாரிழை, கல்நார் போன்ற பொருள்களும் இதற்குப் பயன்படுகிறது.

Reinforcing steel: (பொறி.) வலி

வூட்டும் எஃகு : கான் கிரீட் கட்டுமானத்தில் அதிக வலிவூட்டுவதற் காகப் பயன்படுத்தப்படும் எஃகுச் சலாகைகள்

Relative humidity : சார்பு ஈரப்பதன்: ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை யில், காற்றில் இருத்தி வைத்துக் கொள்ளக்கூடிய மொத்த ஈரப்பத னுக்கும், காற்றிலுள்ள ஈரப்பதன் அளவுக்குமிடையிலான வீத அளவு.

Relative inclinometer: (வானூ.) சார்புச் சாய்வுமானி : விமானம் பறக்கும் உயரத்தை வெளிப்படைப் புவியீர்ப்பு அடிப்படையில் காட்டும் ஒரு சாதனம். விமானத்தின் முடுக்கு விசை, புவியீர்ப்பு விசை இவற்றின் கூட்டு விளைவாக்கம்.

Relative motion, (இயற்.) சார்பு இயக்கம்: ஒரு பொருளைச் சார்ந்து இன்னொரு பொருள் இயங்குதல்.

Relay: (மின்.) துணைமின்விசையமைவு: ஒரு முதன்மை மின் சுற்று வழியில். குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ஒர் உள் சுற்றுவழியை உண்டாக்க அல்லது மூடப் பயன்படும் ஒரு துணைச் சாதனம்,

Relay station: அஞ்சல் நிலையம்: வானொலி அல்லது தொலைக் காட்சியில், இன்னொரு நிலையத்தின் ஒளி-ஒலி நிகழ்ச்சிகளை வாங்கி அஞ்சல் செய்யும் நிலையம்.

Relief map:புடைப்பியல் நிலப் படம்: வண்ணவரைக் குறியீடுகள் மூலம் புடைப்பியல் தோற்றம் அளிக்கப்பட்ட நிலப்படம்.

Relief printing: (அச்சு.) புடைப்பியல் அச்சடிப்பு: வண்ணவரைக் குறியீடுகளால் அமைக்கப்படும் புடைப்பியல் தோற்ற அமைவுடன் அச்சடித்தல்.

Reliving arch: விடுப்பு வில் வளைவு: சுவரின் அடிப்பகுதிப் பளுக் குறைக்கும்படி உள்வரியாகக் கட்டப்படும் வில் வளைவு.

Reluctance: (மின்.) காந்தத் தடை: காந்தமேற்றிய பொருள், காந்தப் பாய்வுக்கு ஏற்படுத்தும் தடையின் அளவு.

Remote control: (வானூ.) தொலைக்கட்டுப்பாடு: மின்காந்தவியல், நெம்புகோல் போன்ற சாதனங்கள் மூலம் நெடுந்தொலைவிலிருந்து கட்டுப்படுத்தல்.

அஞ்சல் அல்லது பிற மின்காந்தச் சாதனங்கள் மூலம் மின்னியல் கருவிகளை அல்லது எந்திரத்தை இயக்குதல்.

Remote pickups: சேய்மை அஞ்சல்: தொலைக் காட்சி நிலையத்திற்கு வெளியேயுள்ள ஊர்தி ஒளி பரப்புச் சாதனம் அல்லது தொலைவில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள சாதனம் மூலமாக நிகழ்ச்சிகளை ஒளி பரப்புதல்.

Renewable fuse: (மின்.) புதுப்பிக்கத்தக்க உருகி: உருகும்

40

Rep

605

Rep


பொருளை எளிதில் மாற்றக் கூடியவாறு, பொதிந்து வைக்கப்பட்டுள்ள உருகி.

Repair kit:செப்பனிடு கருவிக்கலம்: ஒரு குறிப்பிட்ட துறையில் பழுது பார்ப்பதற்குப் பயன்படும் கருவிகளும், உறுப்புகளும் அடங்கிய ஒரு கலம்.

Replica: உருவநேர்படி: ஓர் உற்பத்திப் பொருளின் நேர் பகர்ப்பு.

Repousse: (உலோ.) புடைப் பகழ்வு: மெல்லிய உலோகத்தில் புடைப்பகழ்வுச் சித்திரமாக மறு புறமிருந்து அடித்து உருவாக்கப்பட்ட உலோக ஒப்பனை வேலைப்பாடு.

Representative: உருமாதிரி:மிகச் சிறந்த வகையின் அல்லது பாணி யின் வகைமாதிரி.

Reprint: (அச்சு.) மறு அச்சுப் பதிப்பு: மூல அச்சுப்பதிப்பு காலி யான பிறகு, அதிகத் திருத்தங்கள் இல்லாமல் முன்னையதைப் போல வேறு அச்சுப்பதிப்பாக அச்சிடுதல்.

Reproducing: மறுபடி எடுப்பு: மீண்டும் படி எடுத்தல். திரும்பப் படியெடுத்து வழங்குதல்.

Reptile press; பணிமுறைசாரா செய்தித்தாள்: பணிமுறைசாராத அரசுச் சார்புடைய செய்தித்தாள்கள். 

Rep

506

Res


Repulsion:(மின்.) புறவிலக்கு விசை: ஒரேமாதிரியாக மின் னேற்றஞ் செய்யப்பட்ட இரு பொருள்கள் தம்மிடையே ஒன்றை பொன்று உந்தித்தள்ளும் ஆற்றல்.

Repulsion motor: புறவிலக்க மின்னோடி:

Reredos: பலிபீடத் திரை: பலி பீடத்தின் பின்புறச் சுவரை மறைக் கும் வேலைப்பாடுடைய திரை.

Rasidual magnetism: (மின்) எஞ்சு காந்தம்: ஓர் இரும்புத் துண்டி லிருந்து காந்தவிசை நீக்கப்பட்ட பிறகு அதில் எஞ்சியிருக்கும் சிறிதளவு காந்தவிசை.

Residue: (தானி.) எஞ்சுபடிவு: எரித்த பிறகு படிந்திருக்கும் எச்சப் பொருள்,

Resilience: எதிர் விசைப்பு: வில் போல் நிமிர்ந்து எதிர்த்தடிக்கும் செயல் அல்லது ஆற்றல் ஒரு பொருள் நலிந்து தொய்வுற்ற பின்பு மீட்டெழுந்து முன்னுருப் பெறும் ஆற்றல்.

Resin: பிசின்: நீரில் கரையாமல், ஆல்ககால், ஈதர் முதலியவற்றில் கரையக்கூடிய மரப்பிசின் வகை.

Resinoid: (குழை.) செயற்கைப் பிசின் : இயற்கைப் பிசின்களிலிருந்து வேறுபட்ட செயற்கைப் பிசின் பொருள்கள்.

Resistal: (உலோ.) ரெசிஸ்டால்: மிக உயர்ந்த தரமுடைய துருப்

பிடிக்காத எஃகு. இதில் காந்தம் ஏறுவதில்லை. இது அமிலத்தை எதிர்க்கக் கூடியது.

Resistance: (மின்.) தடை: மின்னோட்டம் பாய்வதைத் தடுக்கக் கூடிய ஒரு பொருளின் பண்பு.

Resistance coil: (மின்.) தடைச்சுருள்: குறிப்பிட்ட அளவு அதிகத் த டையாற்றல் கொண்ட கம்பிச் சுருள். நைக்ரோம் அல்லது இரும் பினாலான இந்தக் கம்பிச் சுருள், மின்னோட்டத்தைக் குறைப்பதற்காக ஒரு மின் சுற்றில் செருகப்பட்டிருக்கும்.

Resistance unit: (தானி.) தடை அலகு: எலெக்ட்ரான் பாய்வதை மிகுதியாகத் தடுக்கும் திறன் கொண்ட ஓர் உலோகத்தினாலான ஒரு சிறிய கம்பிச்சுருள் அல்லது ஒரு சிறிய கார்பன் சலாகை. இந்த அலகுகள், உந்து ஊர்தியின் மின்னியல் சுற்றுவழிகளில், மின்னோட்டத்தைக் குறைப்பதற் காகச் செருகப்படுகின்றன.

Resistance welder: தடைப் பற்றவைப்பு எந்திரம்: தடையமைப்பு கொண்ட ஒரு பற்றவைப்பு எந்திரம்.

Resistance welding: தடைப் பற்றவைப்பு: மின்னோட்டம் பாய்வ தைத் தடுப்பதன் மூலம் உண்டாகும் வெப்பத்தின் வாயிலாக அழுத்தம் ஏற்படுத்திப் பற்றவைக்கும் முறை.

Resistance wire; (மின்.) தடைக் கம்பி: மின் தடையுண்டாக்கும் நிக்கல்-குரோமியம் மின்தடைக் கம்பி.

Resisting moment: (பொறி.) சுழற்சித்தடை: எதிரெதிராக இயங்கும் இரண்டு உள்முக விசைகள் கொண்ட எந்திரத்தின் பகுதியில் விறைப்புச்சூழல் திறன் மூலம் கழற்சிக்குத் தடை உண்டாக்குதல்.

Resisting shear: (பொறி,) தடைத் துணிப்பு: ஓர் எந்திரப் பகுதியின் செங்குத்துத் துணிப்புக்குச் சமமான எதிரெதிர் உள்முக விசை.

Resolution: படத் தெளிவு: தொலைக்காட்சிப் படத்தின் தெளிவுத் திறன்.

Resolution of forces: (இயற்.) விசைப் பிரிவீடு: இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட விசைகளின் பிரிவீடு. இவற்றின் கூட்டு விளை வானது, ஒரு குறிப்பிட்ட விசைக்குச் சமமாக இருக்கும்.

Resonance: (மின்.) ஒத்திசைவு: ஒரு மின்சுற்று வழியில் தூண்டு எதிர்வினைப்பினை மட்டுப்படுத்தி, மின்னோட்டம் பாய்வதற்கு ஒம் தடையை மட்டுமே விட்டுச் செல்லும் திலை.

Retard: இயக்கத் தடை: அலை இயக்கத்திற்குத் தடை ஏற்படுத்து தல்.

Retort; வாலை: காய்ச்சி வடித்தலில் பயன்படுத்தப்படும் கீழ்

Ret

507

Rev


நோக்கி வளைந்த கழுத்துடைய கண்ணாடி வடிகலம்.

Retractable wheel: (வானூ.) உள்ளிழுப்புச் சக்கரம்: விமானத்தில், உடற்பகுதிக்குள் அல்லது சிறகுகளுக்குள் இழுத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சக்கரம்.

Return bend: (பட்.) வளைகுழாய்: ‘U வடிவில் அமைந்த பொருத்தப் பட்டுள்ள வளைவுக்குழாய்.

Reveal: (க.க) பக்கச் சுவர்ப் பரப்பு: கதவு, பலகணி ஆகியவற் றின் உட்புறப்பக்கச் சுவர்ப் பரப்பு.

Reverse curve: மறுதலை வளைவு; "S" வடிவ வளைவு.

Reverse mold: (வார்.) மறுதலை வார்ப்படம்: உள்ளபடியான வார்ப் படத்தைத் திணிப்பதற்குரிய ஒரு மாதிரி வார்ப்படம்.

Reverse plate (அச்சு.) மறுதலை அச்சுத்தகடு: கறுப்புப் பின்னணி யில் வெள்ளை வடிவங்களைப் பதிவு செய்யும் வகையில் கறுப்பு, வெள்ளை வண்ணங்களை மறு தலையாக அச்சிடக் கூடிய அச்சுத் தகடு.

Reversible propeller: (வானூ.) மறுதலை முற்செலுத்தி: விமானத் தடை உண்டாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் மறுதலை அழுத்தம் விளைவிக்கும் வகையில் விசை மாற்றம் செய்யக்கூடிய முற்செலுத்தி அல்லது சுழலி,

Rev

508

Rid


Reversing gear: (எந்.) மறுதலைப் பல்லிணை: ஓர் எஞ்சினை அல்லது எந்திரத்தை எதிர்த்திசையில் இயங்குமாறு செய்யக் கூடிய பல்லிணை.

Revolution: (பட்.) சுற்றுகை: ஒரு பொருள் தனது அச்சில் ஒரு முழுமையான சுற்றினைச் சுற்றும் செயல். இது சுழற்சியிலிருந்து வேறுபட்டது. சுழற்சி என்பது ஒரு முழுச்சுற்றினையோ ஒரு சுற்றின் ஒரு பகுதியையோ குறிக்கிறது. சுழல் தண்டின் சுற்றுகை போன்ற ஒரு தொடர்ச்சியான சுழற்சியைச் சுற்று குறிக்கிறது.

Revolution counter: (எந்.) சுற்றுகை அளவி: ஒரு சுழல் தண்டின் சுற்றுகைகளின் எண்ணிக்கையை அளவிடுவதற்கான ஒரு சாதனம். ஒரு சுழல்தண்டின் முனையில் ஒரு முள்ளினை அழுத்துவதன் மூலம் சுற்றுகையின் எண்ணிக்கையான ஒர் எண் வட்டில் பதிவு செய்யப் படுகிறது.

Revolutions per minute: சுற்றுகை வேகம்: ஓர் எந்திரம் ஒரு நிமிடத்திற்குச் சுற்றும் வேகத்தின் வீதம்.

Revolving field: (மின்.) சுழல் புலம்: புருச்சுருள்களும் துருவங் களும் நிலையாக இருக்காமல் சுழன்று கொண்டிருத்தல்.

Rf pickup: வானொலி அலைவெண் அனுப்பீடு: ஒலி-ஒளிச் சைகை களின் வானொலி அலைவெண்.

அனுப்பீடு:

Rheo - stat : (மின்.) தடை மாற்றி : உந்துபொறி முடுக்கும் வகையில் மின்வலி இயக்கக் கட்டுப்பாட்டமைவு.

Rheostatic control : (மின். ) தடை முறைக் கட்டுப்பாடு : ஒரு மின்னகத்தில் வேறுபட்ட மின் தடையின் அல்லது காந்தத் தடையின் மூலம் கட்டுப்படுத்தும் ஓர் அமைவு.

Rhodium : (உலோ.) ரோடியம்: பிளாட்டினம் குழுவைச் சேர்ந்த திண்ணிய வெண்ணிற உலோகத் தனிமம்.

Rhom boid : (கணி.) செவ்வினையகம் : எதிரெதிர்ப் பக்கங்களும் கோணங்களும் மட்டுமே சரி சமமாக இருக்கும் இணைவகம்.

Rhombus : (கணி.) செவ்வினைவகம் : அண்டைப் பக்கங்கள் சரி சமமாகவும், கோணங்கள் விரி கோணங்களாகவும் உள்ள ஒரு இணைவகம்.

Riddle : (வார்.) சல்லடை : கூலம், சரளைக்கல், கரித்துாள் முதலியன சலிப்பதற்கான பெரும்படி அரிதட்டு.

Ridge : (க.க.) கூடல் வாய் : இரு சரிவுகள் கூடும் மேல்வரை: நீண்ட மோட்டின் வரை முகடு.

Ridge pole : (க.க.) முகட்டு உத்தரம் : கூரை முகட்டு உத்தரம்: Ridge roof: (க.க.) முகட்டு& கூரை : மோட்டுக் கூடல் வாயில் உத்தரங்கள் சந்திக்கும் கூரை.

Ridge tiles : (க.க.) மோட்டு ஒடு : மோட்டுக் கூடல் வாய் ஒடு.

Rittler : (உலோ.) தக்கப் பள்ளம்: அரிகாரர் அரிப்பில் பொன்னைத் தேக்கிக் கொள்ளும் பள்ளம்.

Right angle : செங்கோணம்|நேர் கோணம் : ஒன்றுக்கொன்று செங்குத்தாக நிற்கும் கோடுகளினால் உண்டாகும் 90° கோணம்.

Right-hand engine (வானூ.) வலம்புரி எஞ்சின் : விமானத்தில் எதிரே நின்று பார்ப்பவருக்கு வலம் புரியாகச் சுழலும் முற்செலுத்தியினைக் கொண்ட எஞ்சின்.

Right - hand screw : (எந்.) : வலம்புரியாணி : வலம்புரியாகச் சுழற்றும் போது முன்னேறும் அமைப்புடைய புரியாணி.

Right-hand tools : (பட்.) வலக்கைக் கருவி : வலது கையினால் கையாள்வதற்கேற்பச் செய்யப்பட்ட கருவி.

Right line : நேர்க்கோடு :இரு புள்ளிகளுக்கிடையிலான மிகக் குறுகிய தொலைவு.

Rigidity : விறைப்பு : வளைவு நெளிவுக்கு இடந்தராத கட்டிறுக்கத் தன்மை.

Ring : (கணி.) வளையம்:

Rin

609

Ris


(1) ஒரே மையத்தைக் கொண்ட இரு சுற்று வட்டங்களிடையில் அடங்கிய சம தள உருவம்.

(2) சனிக்கோளின் தட்டு வளையம்.

Ring bolt : வளைய மரையாணி: கண்வழியே ஒரு வளையம் கொண்ட கண்மரையாணி.

Ring cowling : (வானூ.) வளைய மேல்மூடி : வானூர்தியில் வளைய வடிவிலான எந்திர மேல் மூடி. இது காற்றினால் குளிர்விக்கப்படும் வட்டவடிவ எஞ்சினைச் சுற்றி வைக்கப்பட்டிருக்கும். இழுவையைக் குறைத்து, குளிர்ச்சியை அதிகரிக்கிறது.

Ring gauge : (எந்.) வளைய அளவி : புற விட்டங்களை அள விடுவதற்குப் பயன்படும் வளைய வடிவ அளவு கருவி.

Ring gear : (தானி;) வளையப் பல்லிணை : குடம் அல்லது மையத் துவாரம் இல்லாத வளைய வடிவப் பல்லிணை.

Rise and run: (மர.வே.) சரிவு: செங்குத்தான நிலையினின்றும் சரிந்து செல்லும் கோண அளவைக் குறிக்கும் சொல்.

Riser : (க.க.) படிநிலைக் குத்து: (1) இரண்டு படிகளின் மேற் பரப்புகளை இணைக்கும் செங்குத்துப் பகுதி.

(2) நீராவி, நீர், வாயு முதலியவற்றைக் கொண்டு செல்வதற் 

Riv

510

Roc


கான அமைப்பின் செங்குத்துக் குழாய்.

(8) ஒரு கட்டிடத்தின் ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்குச் செல்லும் மின் கம்பிகள் அல்லது மின்கம்பி வடங்கள் அடங்கிய செங்குத்தான காப்புக் குழாய்.

Rivet (உலோ. வே.) குடையாணி : மறுபறம் தட்டிப் பிணைத்து இறுக்குவதற்கான ஆணி. இவை, தட்டையான அல்லது தட்டம் போன்ற அல்லது பொத்தான் போன்ற அல்லது காளான் போன்ற அல்லது வீங்கிய கழுத்துப் போன்ற கொண்டையுடையனவாக இருக்கும்.

Rivet forge : குடையாணி உலை: குடையாணிகளை அவை தேவைப்படுகிற இடத்தில் சூடாக்குவதற்காகக் கொதிகலன் செய்பவர் களால் அல்லது இரும்பு வேலை செய்பவர்களால் பயன்படுத்தப்படும் கையில் எடுத்துச் செல்லக் கூடிய உலை.

Riveting : குடையாணி அடிப்பு : குடையாணிகளைக் கொண்டு இறுக இணைத்தல் அல்லது பிணைத்தல்.

Rivet set : குடையாணி பொருத்தி: குடையாணிகளைப் பொருத்து வதற்குப் பயன்படும் குடைவான அல்லது கிண்ண முகப்புக் கொண்ட எஃகுக் கருவி.

Roach : (வானுt.) கப்பல் கவிவு : கப்பலில் சதுரப்பாயின் அடியி லுள்ள கவிவு. இதிலிருந்து கண

                                                                      மான நீர்த்தாரை நீர்ப்பரப்புக்கு மேலே பீச்சி எறியப்படும்.

Road drag : சாலை இழுவை: சாலையின் மேற்பரப்பினைச் சமப்படுத்துவதற்காக அதன் மேல் இழுக்கப்படும் சாதனம். இது சாலையைச் சுரண்டிச் சமனிடும் எந்திரத்திலிருந்து வேறுபட்டது.

Roaster : (தானி.) தங்குதுறை நாவாய் : கரையோர்ம் நங்கூர் மிட்டு நிற்கும் கப்பல். இதில் இருவர் இருக்கலாம். பின்புறத்தில் சரக்குகள் வைப்பதற்கான அறை இருக்கும்.

Roadster : கீற்று உலை : கணியங்கள் அல்லது உலோகங்களி லிருந்து தீங்கு தரும் வாயுக்கள், கார்போனிக் அமிலம், கந்தக டையாக் சைடு ஆகியவற்றை விரைந்து ஆவியாக்கி நீக்குவதற்குப் பயன்படும் நீற்றுவதற்கான உலை.

Roasting : (உலோ.) கீற்றுதல்: கனியங்கள் அல்லது உலோகங் களிலிருந்து தீங்கான வாயுக்கள், கார்போனிக் அமிலம், கந்தக டை யாக்சைடு ஆகியவற்றை விரைந்து ஆவியாகச் செய்வதற்காகக் கையாளப் படும் செய்முறை.

Robot : எந்திர மனிதன்: மனிதன் செய்யும் காரியங்களைத் தானி யங்கு எந்திர நுட்பங்கள் மூலம் தானே செய்திடும் எந்திரம். இத்தகைய கருவி மூலம் இயக்கப்படும் ஊர்தி அல்லது பொறி.

Rock crystal: (கணி.) படிகப் பாறை : நிறமற்ற, ஒளி ஊடுருவக் கூடிய படிகக்கல் வகை.

Rocket : (வானூ.) உந்து கூண்டு (ராக்கெட்) : அக எரிபொருளாற் றலால் தொலைவுக்கு அல்லது உயரத்திற்கு உந்தித் தள்ளப்படும் உலோகத்தாலான நீள் வட்டு.

Rococo: (க.க.) மிகு ஒப்பணைக் கலைப் பாணி: மனைப்பொருள்கள், சிற்பம் முதலியவற்றில் 17, 18 ஆம் நூற்றாண்டுப் பாணியை அடியொற்றி மிகையான உருவரை ஒப்பனைகளைச் செய்தல்:

Rod: (மர. வே.) அளவுகோல்: செங்குத்துப் படிகளில் செங்குத்து உயரத்தைத் துல்லியமாக அளவிடுவதற்குப் பயன்படும் அளவுகோல்:

கட்டுமானத்தில் 11 முழம் நீளமுடைய அளவை அலகு.

Rod assembly: (தானி.) இணைப்புக்கோல் தொகுதி: இணைப்புக் கோல், உந்து தண்டு, உந்து தண்டு ஊசி. உந்துதண்டு வளையங்கள் போன்றவை அடங்கிய.

Rod ends: (பொறி ) இணைப்புக் கோல் நுனி: த ங் கி க ைள க் கொண்ட இணைப்புக்கோல்களின் நுனிப்பகுதி. இதில் இணைப்புத் தகடு, திண்ணிய கொண்டை போன்ற வகைகள் உண்டு.

Roll: (தானி.) உருள்வு: சுழலும் பொருளின் கழல்வான சாய் வாட் டம். நீட்டுப்போக்கான ஓர் அச்சில் ஒரு முழுச் சுழல்வு சுழலுதல்.

Rolled gold: பொன்முலாம் உலோ

Rol

511

Rom


கம்: உலோகத்தின் மேலிடப்பட்ட மெல்லிய தங்கத் தகடு.

Rolled iron: (பொறி.) உருட்டு இரும்பு: உருட்டு முறையின் மூலம் தேவையான வடிவில் தயாரிக்கப்பட்ட இரும்புத் தகடு.

Roller bearing: (பொறி.) உருள் தாங்கி: குண்டு தாங்கிகளில் பயன்படுத்தப்படும் வட்ட எஃகுக் குண்டுகளுக்குப் பதிலாகக் கெட்டிப்படுத் திய எஃகு உருளைகளினாலான தாங்கி.

Roller chain: உருளைச் சங்கிலி: ஓசையையும், உராய்வையும் குறைப்பதற்காக நீள் உருளைகளினால் அல்லது உருளைகளினால் செய்யப்பட்ட கண்ணிகளைக் கொண்ட சங்கிலி.

Rolley : பாரப்பொறி வண்டி: நான்கு தட்டை உருளைப் பொறி வண்டி.

Rolling mill: உருட்டு ஆலை: உருட்டுதல் மூலம் இரும்பைத் தக டாக்கு ஆலை.

Rolling-press: அழுத்துப் பொறி:

Rolling stock: உருள் ஊர்தி :இருப்புப் பாதைமேல் உருண்டு செல்லும் இயக்கு பொறிகள், வண்டிகள் முதலியவற்றின் தொகுதி.

Roman (அச்சு.) ரோமன் அச்செழுத்து: எழுத்துருவில் விளிம்பிற்குக் கட்டுருக் கொடுக்கும் நுண்வரைமான முனைப்பாகவுள்ள அச்செழுத்து வகை.

Rom

519

Ros


Roman-esque (க.க.) ரோமானிய பாணி: பண்டைய ரோமானிய ரோமாபுரிப் பாணிக்கும் இடை நிலைக் காலத்திய 'கோதிக்' பானிக்கும் இடைப்பட்ட நிலையில் வில்வட்ட வளைவுகளும் வளைவு மாடங்களும் நிறைந்த சிற்பப் பாணி.

Roof boards or roofers: (க.க.) கூரைப்பலகைச் சட்டம்:கூரை ஓடு களுக்கு அடியிலுள்ள பலகைச் சட்டம்.

Roof truss: (க.க.) கூரைத் தாங்கணைவு: கூரைக்கு ஆதாரமாக ஒன்று சேர்த்துப் பிணைக்கப்பட்டுள்ள மரத்தினாலான அல்லது இரும்பினாலான ஆதாரக்கட்டு.

Root: (எந்.) வர்க்க மூலம்: கணிதத்தில் ஓர் எண்ணின் பெருக்க மூலம்.

Root diameter: (எந்.) ஆதார விட்டம்: ஒரு திரிகிழையின் ஆதார விட்டம்.

ஒரு பல்லிணைச் சக்கரத்தில் பல்லின் அடிப்புறத்தில் உள்ள விட்டம்.

Rope drilling: கயிற்றுத் துரப்பணம்: கயிற்றினால் இயங்கும் துரப்பணத்தால் துளையிடுதல்.

Rope driving : (எந்.பொறி.) கயிற்று இயக்கம்: கயிற்றுப் பல் பல்லிணை மூலம் விசையை மாற்றம் செய்தல். இது வார்ப்பட்டை இயக்கத்திலிருந்து வேறுபட்டது.

Rosebit: (எந்.) துளையிடு கருவி

துரப்பணத் துவாரங்களுக்கு மெருகேற்றும் திண்மையான நீள் உருளை வடிவ இணைத் துளையிடு கருவி.

Rose cutter: (பட்.) பட்டை வெட்டு கருவி: அரை உருள் வடிவில் பன்முகமாகச் செதுக்கப்பட்ட பட்டை வெட்டுகருவ

Rose-engine:கடைசல் பொறி: ஒரு வகைக் கடைசல் பொறி அமைவு

Rosendale cement: ரோசண்டேல் சிமெண்ட்: நியூயார்க் அருகிலுள்ள ரோசண்டேல் அருகில் கிடைக்கும் இயற்கை சிமெண்டுக்கு அளிக்கப்பட்டுள்ள பெயர்.

Rose reamer:(எந்.) பட்டைத் துளைச் சீர்மி: உலோகங்களில் துளையிடுவதற்கான பொறியமைவு. இதில் பக்கங்களுக்குப் பதிலாகச் சாய்வாகவுள்ள நுனி மூலம் வெட்டுதல் நடைபெறுகிறத

Rose window: (க.க.) ரோசாப் பலகணி: ரோசாப்பூ வடிவில் அமைந்த பலகணf.

Rosette: (க.க.) ரோசாப் பூவணி: ரோசா வடிவத்திலான பூவணி வேலைப்பாடு.

Rose wood: (மர.வே.) கருங்காலி: கறுப்பு நிறமுள்ள. கனத்த, கடினமான, எளிதில் உடையக்கூடிய மரம். மேலடை மெல்லொட்டுப் பலகையாகப் பயன்படுத்தப்படுகிறது Rosin: மண்டித்தைலம்: தேவதாரு மரங்களிலிருந்து பிசின் வடிவில் கிடைக்கும் பொருள். வெள்ளீய வேலைப்பாடுகளில் பற்ற வைப்பதற்கான உருகுபொருளாகப் பயன்படுகிறது. வண்ணங்கள், சோப்புகள் செய்வதற்கும் பயனாகின்றது.

Roster: வேலை முறையேடு: ஒர் அட்டவணை அல்லது பெயர்ப் பட்டியல்.

Rostrum : (க.க.) உரை மேடை: பொதுவில் உரையாற்றுவதற்குப் பயன்படும் பேச்சு மேடை.

Rotary : சுழல் பொறி : ஒரு சக்கரம் போல் தனது அச்சில் சுழலும் பொறி.

Rotary converter : (மின்.) சுழல் ஒரு போக்கி : மாற்று மின்னோட் டச் சுற்று வழியுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு தனிப்பொறி. இது நேர் மின்னோட்டத்தை அல்லது மாற்று மின்னோட்டத்தை வழங்கும்.

Rotary cutter : (எந்.) சுழல் கத்தி : ஒரு சுழல் முனையுடன் இணைக்கப்பட்டுள்ள, சுழலும் கத்தி. இது சுழலும் போது வேலைப்பாடு செய்யப்படும் பொருள் வெட்டப்படுகிறது.

Rotary engine : (வானூ.) சுழல் எஞ்சின் : ஆரை வடிவில் அமைக்கப்பட்ட நீள் உருளைகள்

41

Rot

518

Rot


கொண்ட ஒர் எஞ்சின். இந்த எஞ்சின் ஒரு நிலையான வணரி அச்சுத்தண்டினைச் சுற்றிச்சுழலும்.

Rotary induction system: (வானூ.) சுழல் தூண்டல் முறை: ஆரை எஞ்சின்கள் மீது பயன்படுத்தப்படும் எரி-வளி கலப்பித் தூண்டல் முறை. இதில் எரிபொருள் செறிவினை நீர் உருளைகளுக்குப் பகிர்மானம் செய்வதில் ஒரு சுழல் விசிறி உதவுகிறது.

Rotary press: (அச்சு.) சுழல் அச்சு எந்திரம்: சுழல் முறையிலான அச்சுப் பொறி. இதில் அச்சிடும் பரப்பு ஒரு சுழலும் நீள் உருளையுடன் பிணைக்கப்பட்டிருக்கும். ஒர் உருளைச் சுருளிலிருந்து காகிதம் ஊட்டப்படும்.

Rotogravure: (அச்சு.) சுழல் செதுக்குருவ அச்சு வேலை: ஒரு செப்பு நீர் உருளையில் செய்யப்பட்ட செதுக்கு வேலைப்பாட்டிலிருந்து ஒருசுழல் அச்சு எந்திரத்தின் மீது செதுக்குருவ அச்சுவேலை.

Rotor: (வானூ.) சுழலி: (1) விமானத்தில் ஒரு சுழல் சிறகு அமைப்பி லுள்ள முழுச் சுழற்சிப் பகுதி.

(2) ஒரு மாற்று மின்னோடியின் அல்லது மின்னாக்கியின் ஒரு சுழல் உறுப்பு.

Rotor-craft: (வானூ.) சுழலி விமானம்: எல்லா உயரங்களிலும் சுழலி அல்லது சுழலிகளினால் முழுமையாக அல்லது பகுதியாகத் 

Rot

514

Row


தாங்கப்படுகிற ஒரு விமானம். இதில் விமானத்தின் காற்றழுத்தத் தளம், ஒர் அச்சினைச் சுற்றிச் சுழல்கிறது.

Rotten-stone: மெருகுச்சுண்ண மணற்கல்: நுண்ணிய பொடியாக விற்பனை செய்யப்படும் சிதைந்த சுண்ணாம்புக்கல். இது பரப்புகளை மெருகிடுவதற்குப் பயன்படுகிறது.

Rotunda: (க.க.) வட்டக் கூடம்: வட்ட வடிவ அறை.

Rouge: (வேதி.) அய ஆக்சைடு: (Fe202) இது அயச் சல்பேட்டைச் (FeSO4) சூடாக்குவதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது வண்ணச் சாயமாகவும், கண்ணாடி, உலோகம், நவமணிகள் ஆகியவற்றில் மெருகேற்றுவதற்கும் பயன்படுகிறது.

Roughcast: (எந்.) குத்துச் சாந்து: சுவருக்குப் பூசப்பெறும் சரளைச் கண்ணாம்பு கலந்த குத்துச்சாந்து.

Rough cut: (எந்.) அராவுதல்: கரடுமுரடான பகுதிகளை அராவி அறைகுறையாக மெருகிடுதல்.

Roughing tool: (எந்.) அராவு கருவி: சொரசொரப்பான பகுதிகளை நீக்குவதற்கு எந்திரங் களை இயக்குபவர்கள் பயன்படுத்தும் கருவி. பொதுவாக வார்ப்பிரும்பு, தேனிரும்பு, எஃகு போன்றவற்றை வெட்டுவதற்கு இது பயன்படுகிறது.

Rough lumber: முரட்டு வெட்டு

மரம்: ரம்பத்தினால் வெட்டப்பட்ட சீர்வடிவற்ற வெட்டு மரம்.

Roundel: பதக்கம்: வட்டவடிவமான ஒப்பனை வாய்ந்த விருதுப் பதக்கம்.

Round nose tool: (எந்.) வட்டமுனைக் கருவி: சொரசொரப்பான பகுதிகளை வெட்டி நீக்குவதற்குப் பயன்படும் ஒரு வகைக் கருவி.

Round-point chisel: (எந்.) வட்ட நுனி உளி: எண்ணெய் வரிப் பள்ளங்களை வெட்டுவதற்குப் பயன் படும் வட்ட நுணி கொண்ட சிற்றுளி,

Round-tube Radiator: (தானி.) வட்டக்குழாய்க் கதிர்வீசி : சேமக்கலத்தின் மேற்புறத்திலிருந்து கீழ்ப்பகுதிக்குச் செல்லும் வகையில் மிக நெருக்கமாக அமைக்கப்பட்ட வட்டவடிவக் குழாய்கள் பயன் படுத்தப்படும் வெப்பம் கதிர்வீசி, வரிசையாக அமைந்த மென்தகடுகள் வழியே இந்தக் குழாய்கள் செல்லும் போ தும் அவற்றில் ஆவிக் கசிவு ஏற்பட்டு, குளிர்விக்கும் அமைப்பில் உண்டாகும் வெப்பம் முழுமையான கதிர்வீச்சுக்கு உள்ளாகிறது.

Roving : (குழை.) முதிரா இழை : இழுத்துச் சற்றே முறுக்கப்படும் பஞ்சு, கம்பளம் முதலியவற்றன் சிம்பு.

Rowlock : (க.க.) உகை மிண்டு:படகுத் துடுப்பு உகைப் பாதாரமான அமைவு. Royal : எழுது தாள் : எழுதுவதற்கான 24 "x 19" அளவுள்ள தாள்.

Rubber : (வேதி.) ரப்பர் : சிலவகை வெப்ப மண்டலத் தாவரங்களிலிருந்து சுரக்கும் பாலிலிருந்து கிடைக்கும் ஹைட்ரோ கார்பன். இது நெகிழ்திறனும் வாயுவும் நீரும் ஊடுருவ முடியாத இயல்பும் கொண்டது. இதனாலேயே இது தொழில் துறையில் உந்து ஊர்தி களின் டயர்கள் செய்யவும், நீர் புகாத வண்ணம் காப்பு செய்யவும், மின் காப்பு செய்யவும் பயன்படுத் தப்படுகிறது.

Rubber cement : ரப்பர் சிமெண்ட்: பல்வேறு நோக்கங்களுக்காக வெவ்வேறு முறைகளில் ரப்பர் சிமெ ண்ட் செய்யப்படுகிறது. கச்சா ரப்பரை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு கரைப்பானைச் சேர்ப்பதன் மூலம் சாதாரண ரப்பர் சிமெண்ட் செய்யப்படுகிறது. கரைப்பானாகப் பயன்படுத்த கார்பன்டைசல்பைடு மிகச் சிறந்தது; பென்சால் நல்லது; மிகவும் மலிவானது; கேசோலினும் கரைப்பானாகப் பெருமளவில் பயன்படுத் தப்படுகிறது.

Rubble ; (க.க) கட்டுமானக் கல் : கொத்தாத கட்டுமானக் கல்.

Rubble masonry : (க.க.) கற்கட்டுமான வேலை : கொத்தாத கட்டுமானக் கல் கொண்டு அடித் தளம் அமைதல் போன்ற நயமற்ற கட்டிட வேலை செய்தல்.

Rub

515

Rul


Rubidium: மென்மையான வெள்ளீய உலோகத் தனிமம்.

Rubrication : (க.க.) பின்புல வண்ணப் பூச்சு: இனாமல் அல்லது வண்ணப் பூச்சு மூலம் ஒரு பின் புலத்திற்கு வண்ணம் பூசுதல்,

Rub - stone: சாணைக்கல்: சாணை பிடிப்பதற்குப் பயன்படும் கல்.

Ruby : கெம்புக்கல் : ஆழ்ந்த செந்நிறத்திலிருந்து வெளிறிய ரோசா நிறம் வரை உள்ள மணிக் கல் வகை.

Rudder : (வானூ.) சுக்கான் : விமானம் இடப்புறமாகவும் வலப் புறமாகவும் பறக்கும் திசையைக் கட்டுப்படுத்துவதற்காக விமானத்தின் பின்புறத்தில் இணைக்கப்பட்டுள்ள உறுப்பு.

Rudder angle: (வானூ.) சுக்கான் கோணம்: விமானத்தின் சுக்கானுக்கும் அதன் சமதள ஒரு சீர்மைக்குமிடையிலான கூர்ங்கோணம்.

Rudder pedals: (வானூ.) சுக்கான் மிதிகட்டை: சுக்கானைக் கட்டுப்படுத்தி இயக்குவதற்கான மிதிகட்டைகள்.

Rudder torque: (வானூ.) சுக்கான் முறுக்கம்: விமானத்தின் மீது சுக்கான் மூலம் செலுத்தப் படும் திரிபு முறுக்கம்.

Rule: (அச்சு.) இடைவரித்தகடு: 

Rul

516

Rut


அச்சில் வாசக இடைவெட்டுக் குறிப்புக்கோடு.

Ruling machine: (அச்சு.) வரியிடு பொறி: அச்சுக்கலையில் தாளில் இணைவரிகள் இடுவதற் கருவி.

Rung: குறுக்குச் சட்டம்: ஏணியில் அல்லது நாற்காலியில் உள்ளது போன்ற குறுக்குச் சட்டம்.

Runic: (அச்சு.) அணிவரி அச்சுரு: பண்டைய ஜெர்மானிய இன வரிவடிவ எழுத்துப் பாணியில் அமைந்த திண்ணிய அணிவரி அச்சுரு.

Runner: (குழை,) வார்ப்புப் புழை: உலோக வார்ப்புச் சட்ட வார்ப்புப் புழை.

Running head: (அச்சு.) தொடர்தலைப்பு: ஒரு நூலில் பக்கந்தோறும் திரும்பத் திருப்பத் தொடர்ந்து வரும் தலைப்பு.

Runway: (வானூ.) ஓடுபாதை: விமான நிலையத்திலுள்ள எல்லாப் பருவ நிலைகளிலும் ஏறி இறங்குவதற்கான ஒடுபாதை.

Runway localizing beacon: (வானூ.) ஓடுபாதை ஒளிவிளக்கு: விமான நிலையத்தில் ஓடுபாதை நெடுகிலும் அல்லது தரையிறங்கு தளத்தில் அதற்குச் சற்றுத் தொலைவிலும் பக்கவாட்டில் ஒளி

பாய்ச்சி வழிகாட்டுவதற்கான சிறிய ஒளி விளக்கு.

Rush: நாணற்புல்: நாற்காலிக்கு அடியிருவதற்குப் பண்டைக்காலம் முதல் பயன்படும் பிரம்பு வகை நாணற் புல்லின் தண்டு.

Rust: (வேதி ) இரும்புத்துரு: நீருடன் இணைந்த அய ஆக்சைடு,

Rusticatión: (க.க.) மேற்பரப்பு அளி: கட்டுமான இணைப்புகளில் மேடுபள்ள வரையிட்டுக் கரடு முர டான மேற்பரப்பு அளி.

Rusting: (வேதி.) வண்ணச் சாயமிடல்: நவச்சாரக் கரைசலில் அல்லது வலுக்குன்றிய ஹைட்ரோ குளோரிக் அமிலக் கரைசலில் பளபளப்பான உலோகத் தோரணிகளை நனைத்து, வண்ணப் பூச்சு உறிந்து விடாத வகையில் சாயமிடுதல்.

Rust joint: (கம்.) துருப்பிணைப்பு: கசிவைத் தடுப்பதற்கு அல்லது மிகுதியான அழுத்தத்தைத் தாங்குவதற்கு ஒர் ஆக்சி கரணியைப் பயன்படுத்திச் செய்யப்படும் பிணைப்பு.

Ruthenium: (உலோ.) ருதேனியம்: விழுப்பொன் வகையைச் சார்ந்த அரிய திண்மத் தனிமம். இது பிளாட்டினத்தைக் கெட்டிப்படுத்துவதற்கும், பேனா முனை உலோகக் கலவைகள் செய்வதற்கும் பயன்படும் அரிய உலோகம்,