உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்/U

விக்கிமூலம் இலிருந்து

U

U bolt: (எந்.) U-மரையாணி: 'U' என்ற ஆங்கில எழுத்தின் வடிவில் அமைந்த மரையாணி. இதன் இரு முனைகளிலும் திருகிழை அமைக்கப்பட்டிருக்கும். இதனை. உந்து ஊர்தியில் உள்ளது போன்ற விற்கருளைப் போல் "பிடிப்பு ஊக்கு’ என்றும் கூறுவர்.

U clamp; (எந், பட்.) U-பற்றுக் கருவி: "U" என்ற ஆங்கில எழுத்தின் வடிவில் அமைந்த பற்றுக் கட்டை, சமதளப் படுகைகளில் வேலைப்பாடு செய்ய வேண்டிய இறுக்கிப் பொருத்துவதற்கு இது பயன்படுகிறது.

U-dometer: (இயற்.) U-மழை மானி: ஒரு வகை மழை மாணி.

Ultimate strength: (பொறி.) இறுதி வலிமை : எந்திரத்தில் மிக அதிக அளவில் நிலைப்படுத்தக் கூடிய பார விசை.

Ultra marine: (வண்.) நீல வண்ணப் பொருள்: வெண் களிமண், கரி, கந்தகம் போன்றவற்றிலிருந்து செய்யப்படும் நீல வண்ணப் பொருள்.

Ultra micro meter: (வண்.) உறுதுண்ணளவை மாணி: அங்குலத்தின் பத்து லட்சத்தில் ஒரு கூறினையும் துள்ளியமாகக் கணிக்கும் அளவை மானி.

Ultra microscope: (வண்.) புடையொளி நுண்ணோக்காடி.

Ultra speed welding: கடும் வேகப் பற்றவைப்பு: இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பற்ற வைப்பு மின் முனைகளைக் கொண்டு, பற்ற வைக்க வேண்டிய பொருளை ஒரே சமயத்தில் தொட்டுச் செய்யப்படும் மிக வேகப் பற்றவைப்பு முறை.

Ultra-violet: புற ஊதாப்பகுதி: கண்ணுக்குப் புலனாகாத நிறப்பட்டையின் ஏழு நிறங்களில் ஊதாக் கதிர்களுக்கு அப்பாற்பட்ட மண்டலம்.

Umber: (வண்.) செங்காவி: மங்கனீஸ் ஆக்சைடும், களிமண்ணும் அடங்கிய பழுப்புச் செங்காவி வண்ணம். இது நிறமியாகப் பயன்படுத் தப்படுகிறது. Uncontrolled spin: (வானூ.) கட்டற்ற சுழற்சி: விமானத்தில் கட்டுக்கடங்காமல் சென்று விடும் சுழற்சி.

Under-ground cable: (மின்.) தரையடிக் கம்பி வடம் : ஈயம் அல்லது பிற நீர்புகாப் பொருள்களில் பொதிந்து வைக்கப்பட்டுள்ள மின் கடத்து கம்பி வடம். இது தரையடியில் மின் கம்பிவடக் குழாய்களினுள் செலுத்திப் புதைக்கப்பட்டிருக்கும்.

Underlay : (வண்.) அடித் தாங்கல் : அச்செழுத்து உருக்களின் அடியில் அடிக் கிடைத்தாள்களைத் தாங்கலாக வைத்து உறுதி செய்தல்.

Under pinning : (பொறி.) அடையுதைவுக் கட்டுமானம் : சுவர்க் கட்டுமானங்களில் கீழ்க்கட்டுமான ஆதரவு அமைத்துத் தாங்குதல் அமைத்தல்.

Under shot wheel : (பொறி.) நீர்விசைச் சக்கரம் : அடியில் நீரோடல் மூலமாக இயக்கப் பெறுகிற சக்கரம்.

Under writer : (மின்.) மின் சாதன ஆய்வாளர் : மின் சாதனங்கள் நீண்ட நாட்கள் உழைக்கக் கூடியனவா, எளிதில் தீப்பிடிக்காமல் காப்புடையனவா என்பதைச் சோதனை செய்து ஆராய்ந்தறிய வல்ல நிறுவன ஆய்வாளர்.

Undulatory movement :

615

(வானூ.) அலையூசல் இயக்கம் : அலைகளைப் போல் ஏற்ற இறக்கத்துடன் இயங்குதல்.

Uniform load : (பொறி.) மாறாநிலைச் சுமை : வேறுபாடின்றி மாறாத நிலையிலுள்ள சுமையளவு. இதில் எஞ்சினின் கட்டமைப்புச் சுமையும், அதில் ஒரு சீராகப் பரப்பி வைக்கப்பட்டுள்ள பாரத்தின் சுமையும் உள்ளடங்கும்.

Unilatral tolerance : ஒரு பக்கத் திறம் : அடிப்படைப் பரிமாணத்திலிருந்து ஒரு பக்கம் கூடுத லாகவோ குறைவாகவோ வேறுபடுவதற்கு இடங்கொடுக்கும் அமைவு. எடுத்துக்காட்டு: 5.250" - 002'

Union : (கம்.) கூட்டிணைப்பு : குழாய்களை இணைத்தல் அல்லது பொருத்துதல்.

Unit magnetic pole : (மின்.) ஒரும காந்தத் துருவம் : ஒரு செ.மீ. துாரத்திலுள்ள சம அளவு ஆற்றல் வாய்ந்த ஒரே துருவத்தை ஒரு டைன் (நொடி விசையழுத்தம்) ஆற்றலுடன் விலக்குகிற காந்தத் துருவம். ஒரு கிராம் எடைமானத்தை ஒரு நொடியில் நொடிக்கு ஒரு செ.மீ. விழுக்காடு செலுத்த வல்ல அளவுடைய விசை ஆற்றல் அலகு ஆகும்.

Unit of Illumination : (மின்.) ஒளியடர்த்தி அலகு : மெழுகு விளக்கொளி ஒரு விளக்கின் ஒளிர் திறன். சராசரி கோள மெழுகு விளக்கொளி என்பது, விளக்கின் 616

மையத்திலிருந்து எல்லாத் திசைகளில் சராசரியாக பரவும் ஒளியின் திறன் ஆகும். சராசரி கிடைமட்ட விளக்கொளி என்பது, விளக்கின் ஒளிமையத்திலிருந்து கிடைமட்டத் தளத்தில் பரவும் சராசரி ஒளித் திறன் ஆகும்.

Unit of magnetic flux : (மின்) காந்தப்பாய்வு அலகு : ஒரு காந்தப் பொருளில் இணைக்கப்பட்டுள்ள காந்த விசை வழிகளின் மொத்த எண்ணிக்கை. இது, ஒரு காந்தச் சுற்று வழியில் பாயும் காந்த ஒட்டமாகக் கருதப்படுகிறது.

Unit of magnetic intensity: (மின்.) காந்த அடர்த்தி அலகு : காந்த இயக்க விசையின் அலகு. காந்தச் சுற்று வழியின் மூலமாக காந்தவிசை வழிகளைச் செலுத்தும் காந்த அழுத்த விசை.

Unit of magnetic reluctance : (மின் .) காந்தத் தடை அலகு : காந்த மூட்டிய பொருளினால் காந் தப்பாய்வுக்கு ஏற்படும் தடையின் அளவு.

Unit power plant : (தானி.) மின்னாக்கி அலகு : உந்து ஊர்தியில் மின்னாக்கம் செய்வதற்கான எந்திரப் பகுதிகளின் முழுத் தொகுதி. இதில் மின்னோடி. மின் செலுத்தி, மின்னோடியின் துணைக் கருவிகள் அனைத்தும் அடங்கும்.

Unit stress : (பொறி.) அழுத்த விசை அலகு : ஓர் அலகு பரப்புப் பகுதியின் மீது ஏற்படும் அழுத்த

விசையின் அலகு. இது பெரும் பாலும் ஒரு சதுர அங்குலத்திற்கு இத்தனை பவுண்டு என்ற கணக்கில் குறிப்பிடப்படும்.

Universal : இன முழுதளாவிய : இயல்பாகப் பல பொருள்களுக்கும் உரித்தகக் கொள்ளத்தக்க பொது மூல அடிப்படைக் கருத்துப் படிவம்.

Universal grinding machine : (பட்.) பொதுசாணை எந்திரம் : சுழல் மேசை, சுழல் உருளை, சுழல் சக்கர முளை பொருத்தப்பட்டுள்ள ஒரு சாணை எந்திரம், இது நீள் உருளைச்சாணை, மேற்பரப்புச் சாணை, முகப்புச்சாணை முதலிய உள்முக, புறமுகச் சாணை தீட்டுதலுக்குப் பயன்படுகிறது.

Universal joint ; (எந்.) பொது இணைப்பு : ஊடு அச்சுகள் நேர் கோட்டில் இல்லாத இரு சுழல் தண்டுகள் தங்கு தடையின்றிச் சுழல்வதற்கு இடமளிக்கிற ஒரு வகை இணைவமைவு.

Universal milling machine : (எந்.) பொது வெட்டு எந்திரம் : ஊடுவெட்டாகவும், நீளவெட்டாகவும் உலோகங்களில் பள்ளங்கள் வெட்டுவதற்கான ஓர் எந்திரம். இதில் சுழலும் வெட்டு கருவிக்கு எதிராக வெட்ட வேண்டிய உலோகத் தகட்டினைச் செலுத்துவர். இந்தச் சுழல் வெட்டுகருவி ஒரு சுழல் மேசையுடன் பொருத்தப்பட்டிருக்கும். Universal saw table : (மர. வே.) பொது ரம்ப மேசை : சாய்தளத்தில் ரம்ப மேசை சுழல்வதற்கு இடமளிக்கிற ஒரு ரம்ப மேசை,

Unlimited ceiling: (வானூ.) வரம்பற்ற உயர எல்லை: மேகமட்டம் 9,000 அடிக்கு மேற்பட்ட நிலையில் விமானம் தங்கு தடையின்றிப் பறப்பதற்கான உயரத்தின் எல்லை.

Unshielded carbon arc welding: காப்பற்ற கார்பன் வில் பற்ற வைப்பு: காப்புக்கருவி எதுவுமின்றி கார்பன் வில் பற்றவைப்பு முறை.

Unshielded metal arc welding: காப்பற்ற உலோக வில் பற்றவைப்பு: வெற்று நிலையில் அல்லது இலேசாக முலாமிட்ட கம்பி அல்லது சலாகை மின்முனையாகப் பயன்படுத்தப்படும் உலோக வில் பற்ற வைப்பு முறை.

Up - holsterry: (மர. வே.) மெத்தை வேலைப்பாடு : அறை கலன்கள் முதலியவற்றுக்கு மெத்தை, திண்டு பொருத்தும் வேலைப்பாடு.

Up keep : (தானி.) பேணுகைச் செலவு : உந்து ஊர்திகளைப் பேணிக் காப்பதற்கான செலவு.

Upper case : (அச்சு.) மேலின எழுத்து : அச்சுக் கலையில் சிறிய எழுத்துக்களிலிருந்து வேறுபட்ட

54

617

தலைப்பு எழுத்துக்களைக் குறிக்கும் மேலின எழுத்துகள்.

Up right : (க.க.) பாரந் தாங்கி : கட்டிடத்திற்குத் தாங்கலாக அமையும் தூண் அல்லது கம்பு.

Uranium : (உலோ.) யுரேனியம்: (விண்மம்) அணு ஆற்றலுக்குப் பயன்படும் தனிமம், கடினமான, தகடாக நீட்டக்கூடிய உலோகம். மிகு வேக எஃகுகளின் வலிமை யினையும், விறைப்புத் தன்மையினையும் அதிகரிப்பதற்கு இது பயன்படுகிறது. இயற்கையான யுரேனியத்தில் U-285, U-238 என்ற இரு முக்கிய ஓரகத் தனிமங்கள் உள்ளன. இயற்கை யுரேனியத்தின் 140 பகுதியில் ஒரு பகுதி U-235 என்பதாகும்.

Urea: (குழை.) யூரியா: பால் உணி விலங்குகளின் சிறு நீரில் அடங்கியுள்ள சேர்மப்பொருள். இது யூரியா ஃபார்பால் டி ஹைடு ரெசினாய்டுகளுக்கான ஆதாரப் பொருளாகவும் பயன்படுகிறது. இது செயற்கையாகவும் தயாரிக் கப்படுகிறது.

Urea resin: (குழை.) யூரியா பிசின்: பிளாஸ்டிக் குடும்பத்தில் ஒருவகை இது யூரியாவும் மெலாமினும் கலந்த அமினோ குடும்பத்தைச் சேர்ந்தது. ஃபார்மால் டிஹைடு அல்லது அதன் மீச்சேர்மப் பொருள்களுடன் வினைபுரிவதன் மூலம் இது பெறப்படுகிறது. இது பதங்கெடுவதைத் தடுக்கக் கூடி யது: எண்ணெய்ப் பசையைத் தடுக்க வல்லது: மேற்ப ரப்பு கடினத்தன்மை கொண்டது. இதனால், இது மின் பொருள்கள் பொத்தான்கள் முதலியவை தயாரிக்கப் பயன்படுகிறது.

Useful load: (வானூ.) இன்றியமையாச் சுமை: விமானத்தில் இன்றியமையாது தேவைப்படும் சுமை விமான ஊழியர்கள், பயணிகள், எரிபொருள் இதில் அடங்கும்.

Utility: பயனோக்கப் பண்பு: நடை முறைப் பயனுடைய பண்பு அல்லது நிலை. நடைமுறைப் பயன் பாடுள்ள பொருள்.