அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்/W

விக்கிமூலம் இலிருந்து
W

Wainscot: (க.க.) சுவர்ப் பலகை: உட்புறச் சுவர்களில் நேர்த்தி செய்யப்பட்ட பலகைகளைப் பதித்து அழகுபடுத்துதல்.

Wainscoting: (க.க.) சுவர்ப் பலகையிடு: உட்புறச் சுவர்களில் நேர்த்தி செய்யப்பட்ட பலகைகளை அமை.

Wainscoting cap: (க.க.) சுவர்ப் பலகைத் தொப்பி: சுவர்ப் பலகைகளின் உச்சியில் வார்ப்புகளை அமைத்தல்.

Wall bed: (க.க.) சுவர்ப்படுக்கை: சுவரில் பொருத்தப்பட்ட படுக்கை பயன்படுத்தப்படாதபோது இப் படுக்கை சுவருக்குள் அமைந்த உள்ளிடத்துக்குள் அல்லது சுவரை ஒட்டியபடி படிந்து கொள்ளும். இதன் மூலம் இடம் மிச்சப்படும்.பல வகைகளிலான இவ்விதப் படுக்கைகள் சிறிய இல்லங்களில் பொதுவில் பயன்படுத்தப்படுகின்றன.

Wallboard : (க.க.) சுவர் போர்டு : கட்டடத்துக்குள்ளாக உள்புறச் சுவர்களிலும் கிடைமட்டக் கூரைகளிலும் பிளாஸ்டர் பூச்சுக்குப் பதில் ஒட்டி நிற்கும் வகையில் பயன்படுத்தப்படுவது.

Wall bracket : (எந்.) சுவர் பிராக்கெட் : செங்கோண வடிவிலான தண்டு இரு புயங்களில் ஒன்றைச் சுவர் மீது அல்லது கம்பம் மீது பொருத்தலாம். எதையேனும் தாங்கி நிற்க மற்றொரு புயம் உதவும்.

wall plate : (க.க.) சுவர் பிளேட்: வேலை பளு பரவலாக அமையும் பொருட்டு உத்தரம், இரும்பு கர்டர் ஆகியவற்றை இரு ஓரங்களிலும் தாங்கி நிற்க சுவரில் பிதுக்கமாக அமைந்துள்ள மரத் தண்டு.

Wall socket : (க.க.) சுவர் துளையம் : மின்சாரம் பெறுவதற்கென சுவருக்குள் அல்லது சுவர் மேல் அமைந்த மின்னோட்ட முனை.

Wane : (மர. வே.) கோட்டம் : உத்திரம் அல்லது பலகை ஒரு நுனியிலிருந்து மறு நுனி வரை ஒரே சமமாக இல்லாமல் ஏதாவதுஒரு புறம் சற்று கோணலாக இருத்தல்.

Warding file : (எந்.) பட்டை அரம் : மெல்லிய, தட்டையான அரம். குறிப்பாக பூட்டுத் தயாரிப்பாளர்கள் பயல்படுத்துவது.

Warp : (வானூ.) பாவு நூல்: விமான இறக்கையின் வடிவம் மாறும் வகையில் அதை வளைத்628

தல் (துணி) தறியில் நீளவாட்டில் அமைந்த பாவுநூல். (மர. வே.) ஈரப்பசை அல்லது"வெப்பம் கார ணமாக மரம் நெளிந்து போதல்.

Warping : (வார்.) நெளிசல் : ஒரு வார்ப்படம் ஆறும்போது ஏற்படுகிற சீரற்ற நிர்ப்பந்தங்கள் கார ணமாக வார்ப்படத்தில் ஏற்படுகிற கோணல் அல்லது நெளிசல்.

Wash : (வானூ.) குலைவு : வானில் பறக்கும் போது ஒரு விமானத்தின் இறக்கைகளும், சுழலியும் காற்றில் ஏற்படுத்தும் குலைவு.

Washer : (எந்.) வாஷர் : ஒர் இணைப்பு அல்லது ஸ்குரு போன்றவை சிறிதும் இடைவெளியின்றி நன்கு பொருந்தி உட்காருவதற்காகப் பயன்படுத்தப்படுகிற நடுவே துளையுள்ள ஒரு தட்டையான சிறிய வட்டு.

Washer cutter : வாஷர் கட்டர்: தோல், ரப்பர் போன்றவற்றைக் கொண்டு வாஷர் தயாரிக்கின்ற கருவி நிலையான நடுவெட்டுப் பகுதியையும், மாற்றியமைக்கத் தக்க இரு வெட்டு முனைகளையும் கொண்டது.

Washin : (வானூ.) வாஷின் : விமானத்தின் இறக்கை நுனியில் தாக்கு கோணம் அதிகரிக்கின்ற அளவுக்கு இறக்கையை வளைத்து விடல்.

Wash out : (வானு.) வாஷவுட் :

விமான இறக்கையின் நுனியில் தாக்கு கோணம் குறைகின்ற வகையில் இறக்கையை வளைத்துவிடல்.

Waste : (பட்.) கழிவுப் பருத்தி:பருத்தி மில்களில் கழிவுப் பொருளாக மிஞ்சுவது. ஆலைக் கூடங்களில் எந்திரங்களைத் துடைக்கப் பயன்படுவது. இது மெல்லிய, மிருதுவான பருத்தி இழைகள் ஒன்றோடு ஒன்று மெத்தையாகச் சேர்ந்த வடிவில் இருக்கும்.

Waste lubrication : (எந்.) கழிவு மசகு : அச்சு முனை அமைந்த பெட்டிக்குள்ளாக எண்ணெய் தோய்ந்த கழிவுப் பொருளை அடைத்து வைத்தல். ரயில் பெட் டிகளில் இவ்விதம் மசகிடும் முறை கையாளப்படுகிறது:

Water bar : ( க.க.) நீர்த் தடுப்புத் தண்டு : நீர், குறிப்பாக மழை நீர் உள்ளே நுழையாமல் இருப்ப தற்காக ஜன்னலின் அடிப்புறத்தில் மரக் கட்டைக்கும், கல்லுக்கும் இடையில் செருகப்படுகிற தண்டு அல்லது பட்டை.

Water cooling: (பொறி.) நீர்வழி குளிர்விப்பு: உள்ளெரி என்ஜினில் தோன்றும் வெப்பத்தை நீர் ஜாக்கெட், ரேடியேட்டர் ஆகியவற்றின் வழியே நீரைச் செலுத்தி அகற்றும் முறை.

Water gas: (வேதி.) நீர் வாயு: ஒரு வித வாயு. மிகச் சூடான நிலக்கரி அல்லது கோக் மீதாக நீராவி யைச் செலுத்தும்போது உண்டாவது. இந்த வாயு திரவ ஹைட்ரோ கார்பன்களைக் கொண்டது. சில சமயங்களில் எரிபொருளாக அல்லது வெளிச்சம் தருவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

Water glass: (வேதி.) நீர்க் கண்ணாடி: குவார்ட்ஸ் மணலை. பொட்டாஷ் அல்லது சோடியம் ஹைட்ரேட்டுடன் சேர்த்து தயாரிக்கப்படுகிற சோடியம் அல்லது பொட்டாசியம் சிலிக்கேட் கரைசல். இது எண்ணெய் கலந்தது போலக் குழம்பாக இருக்கும். ஒட்டு வதற்கும், காப்புப் பூச்சாகவும், தீக்காப்புப் பொருளாகவும் பயன்படுவது.

Water hammer: நீர் அறைவு: ஒரு குழாயின் வழியே செல்லும் நீரைத் திடீரென்று தடுத்து நிறுத்தினால் சம்மட்டி அறைவது போன்று எழும் ஒலி.

Water jacket: (பொறி.) நீர்ப் போர்வை: மோட்டார் பிளாக் மற்றும் ஹெட்டின் வெளிப்புற மூடு உறையானது அதற்கும் சிலிண்டர் சுவர்களுக்கும் இடையே நீர் பாய்ந்து செல்லும் வகையில் வடிவமைக் கப்பட்டிருக்கும். மோட்டார் இயங்கும்போது தோன்றும் வெப்பத்தைத் தொடர்ந்து அகற்றுவது இந்த ஏற்பாட்டின் நோக்கம்.

Water mark: நீரோட்டம்: காகிதம் தயாரிக்கப்படுகையில் புடைப்பான டிசைன் கொண்ட ஒரு சிலிண்டர் ஏற்படுத்தும் அழுத்தம்

828

காரணமாக காகிதத்தில் ஏற்படும் குறியீடு. பின்னர் காகிதத்தில் வெளிச்சம் ஊடுருவும் வகையில் வைத்துப் பார்த்தால் அந்த டிசைன் தெரியும். அது நீரோட்டம் எனப்படும்.

Water proofing walls: (க.க.) நீர் புகாப்பூச்சு: சுவருக்குள் நீர் அல்லது ஈரம் பாயாமல் தடுப்பதற்காக கான்கிரீட்டுடன் ஒரு கலவையைக் கலத்தல். அல்லது அந்தக் கலவையைச் சுவர் மீதே பூசுதல்.

Water pump: (தானி.) நீர் பம்ப்: மோட்டார் என்ஜினைக் குளிர்விப்பதற்கான முறையில் நீரோட்டம் நடைபெறுவதற்குப் பயன்படும் பம்ப். இந்த பம்புகள் பொதுவில் சிலிண்டர் பிளக் முன்பாக அமைந்திருக்கும். விசிறி இயக்கத்துடன் அல்லது ஜெனரேட்டர் மூலம் பம்ப் இயக்கப்படுகிறது.

Water putty: (மர.வே.) அடைப்புப் பொடி: இப்பொடியை நீருடன் கலந்து மரப்பொருள்களில் உள்ள மெல்லிய வெடிப்புகள், ஆணித் துவாரங்கள். முதலியவற்றை அளப்பதற்குப் பயன்படுத்தலாம். எனினும், பளபளப்பூட்டுவதற்கு உகந்ததல்ல.

Water recovery apparatus: (வானூ.) நீர் சேகரிப்புச் சாதனம்: வான் கப்பலில் உள் எரி என்ஜின் களிலிருந்து வெளிப்படுகிற வாயுக்களைச் சேகரித்து குளிர்வித்து அவற்றில் அடங்கிய நீரைப் பிரித்தெடுக்கிற சாதனம், 680

Water softener: (கம்.) நீர் மென்னாட்கி : வீடுகளில் கிடைக்கும் நீரில் கால்சியம் மக்னீசியம் சல் பேட், பைகார்பனேட் அடங்கியிருந்தால் சோப்பிலிருந்து நுரை வராது. நீரிலிருந்து உட்பொருட்களை அகற்றும் கருவி. இந்த நோக்கில் பயன்படுத்துகிற வேதிப் பொருள்.

Water spots : (வண்.அர.) பூச்சுத் திட்டு: ஒரு பொருளுக்கு வார்னிஷ் பூச்சு அளிக்கும்போது மாறுபட்ட நிறத்துடன் சிறு திட்டுகள காணப்படும் சில சமயங்களில் சற்று ஆழமாகவும் காணப்படும். ஈரப்பசை உள்ளே அமைந்த காரணத்தால் ஏற்படுவது.

Water table: (க.க.) நீர் வடிகை: ஒரு கட்டடத்தைச் சுற்றி சற்று நீட்டிக் கொண்டிருக்கிற சரிவான பலகை மழைநீர் சுவர் மீது விழாமல் இருப்பதற்கான ஏற்பாடு.

Watt: (மின்.) வாட்: மின்சக்தியின் அலகு. இது வோல்ட்டை ஆம்பியரால் பெருக்கினால் கிடைக்கும் தொகைக்குச் சமம்.

Watt hour (மின்.) வாட் மணி: மின் சக்தியின் பணியை அளக்கும் அலகு. இது ஒருமணிநேரம் ஒரு வாட்டைச் செலவழித்தால் ஆகும் மின்சக்தியின் அளவு.

Wattless current: (மின்.) வாட் இல்லா மின்சாரம்: மாறுமின்னோட்டத்தில் விசையை உற்பத்தி செய்ய வோல்டேஜூடன் சேராத பகுதி.

செயலற்ற பகுதி. செயல் பகுதிக்கு மாறானது .

Watt meter: (மின்,) வாட் மானி : மின சக்தியை வாட் கணக்கில் அளப்பதற்கான கருவி; அதாவது வோல் ட்டை ஆம்பியரால் பெருக்கி வரும் கணக்கில் காட்டுவது. அந்த வகையில் வோல்ட் மீட்டர், அம்மீட்டர் ஆகிய இரண்டின் பணியைச் செய்வது.

Watt Second: (மின்.) வாட் விநாடி : மின் சக்தியை அளக்கும் அலகு, இது ஒரு விநாடி நேரத்துக்கு ஒரு வாட் செலவழித்தால் ஆகும் மின் சக்திக்குச் சமம்.

Watts per candle: (மின்.) கேண்டில் அளவில் வாட்: ஒரு மின் பல்பு, எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்துகிறது என்பதை இடைமட்டமாக சராசரியாக உற்பத்தியாகிற கேண்டில் பவர் அளவில் வாட் கணக்கில் கூறுவது.

Wave length: (மின்.) அலை நீளம் : இரு திசை மின்சாரத்தின் ஒரு முழு சைன் அலையின் மீட்டர் அளவிலான நீளம் வானொலியைப் பொருத்த வரையில் டிரான்ஸ் மீட்டர் கருவியால் வெளியிடப்படுகிற அடுத்தடுத்த இரு மின்சார அலைகளின் உயர் பட்சப் புள்ளிகள் இடையிலான தொலைவு.

Waviness : (குழை.) அலைவம்: மேற்பரப்பு அலை மாதிரியில் வளைந்து அமைதல். Wax: (வேதி.) மெழுகு : உயர் ஒற்றை அணு ஆல்கஹாலின் கரிம உப்பும், மிகுந்த கொழுப்பு அமில மும் கலந்தது. உதாரணம்: தேன் மெழுகு

Wax engreving; (அச்சு.) மெழுகி உருமானம்: மெழுகு அளிக்கப்பட்ட தாமிரத் தகடுகளின் மீது தக்கபடி வடிவம் கொடுத்து பின்னணியை தயார்படுத்தி அதிலிருந்து எலெக்ட்ரோ பிளேட் வகை பிளேட்டைத் தயாரித்து அச்சிடுதல் .

Wax finish: (மர. வே.) மெழுகு நேர்த்தி: மரத்தால் ஆன பொருட்கள் மீது இதற்கென்று தயாரிக்கப் பட்ட மெழுகைப் பூசித் தேய்ப்பதன் மூலம் மிக நைசான நேர்த்தியைப் பெற முடியும்.

Ways: பட்.) சறுக்குப் பள்ளம் : நெடுக அமைந்த சிறுபள்ளம். வேலை செய்யப்படுகின்ற பொருள் அல்லது அதைத் தாங்கிய பொருள் இப் பள்ளங்களின் மீது அமைந்தபடி சறுக்கிச் செல்லும்.

weak sand: (வார்.) சேரா மணல்: வார்ப்பட வேலைக்கான மணலில் சிறு சத அளவுக்குக் களிமண் இருப்பதன் விளைவாக ஒன்று கூடிச் சேராத மணல்.

Wear and tear: தேய்ந்தழிதல் : பயன் காரணமாக மதிப்பில் ஏற்படும் குறைவு.

weather: பருவ நிலை: மரம், கல் அல்லது வேறு ஏதேனும்


681

பொருள், பருவ நிலையின் விளைவாக காய்ந்து. உலர்ந்து, உருமாறி, சிதைந்து போகும் நிலைமை.

Weather boards: (க.க.) மழைப் பலகை: கதவு, பலகணி போன்றவற்றில் மேலிருந்து கீழாக ஒன்றன் நுனியின் ஒன்றாக அடுக்கி அமைந்த பலகைகள் மழை நீர் உள்ளே புகாமல் வடிவதற்கு ஏற்பாடு.

Weathering : (க.க.) கட்டுமான முகட்டுத்தளச் சாய்வு : சுவரின் மேற்புறத்தில் அமைந்த மடிப்புகள், விளிம்பு, உதை சுவர் ஆகியவற்றில் மழை நீர் தேங்கா மல் இருக்க அளிக்கப்படும் சரிவு. (மரம்) காற்று, மழை, வெயில் போன்றவற்றினால் மரத்தின் மேற் புறத்தில் ஏற்படும் பாதிப்பு.

Weather strip : (க.க.) கசிவுத் தடுப்பான் : சன்னல், மற்றும் கதவுகளின் வெளிப்புறத்தின் கீழ்ப் பகுதியில் உலோகம், மரம் அல்லது வேறு பொருளில் செய்யப்பட்ட பட்டையை அமைத்தல். கதவு மீது படும் நீர் கீழிறங்கும் போது உள்ளே வராமல் தடுக்கும் ஏற் பாடு.

Web : (எந்.) வெப் : வார்ப்படங்கள் அடித்து உருவாக்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றின் இரு பகுதிகளை இணைக்கும் மெல்லிய தகடு அல்லது பகுதி. (காகிதத் தயாரிப்பு) காகிதத் தயாரிப்பு எந்திரத்தில் தயாரிப்பு நிலையில் உள்ள அல்லது தயாரிக்கப்பட்ட காகிதம், 682

Webbing : சாக்குப் பட்டை : சணல் இழையைக் கொண்டு 3, 3 1/2 மற்றும் 4 அங்குல அகலத்தில் 72 கெஜ நீளத்துக்குத் தயாரிக்கப்படுகிற சாக்குப் பட்டை. மர இருக்கை பிரேம்களில் ஸ்பிரிங்குகளுக்குக் கீழே அமைக்கப்படுவது.

Webbing stretcher : விறைப்புக்கட்டை : மர இருக்கைச் சாதனங்களில் திறப்புகளின் மீதாக போர்த்து துணியை விறைப்பாக இழுத்துக் கட்ட உதவும் சிறிய கட்டை. தட்டையான இக்கட்டையின் ஒரு புறத்தில் இறுகப் பிடித்துக் கொள்ள வாட்டமாக ஏதாவது பொருள் சுற்றப்பட்டிருக்கும். மறு புறத்தில் செருகுவதற்கு வசதியாக கூரான உருக்கு முனைகள் இருக்கும்.

Web – calendered : சுருள் நேர்த்தி : காகித உற்பத்தியின் போது காகிதம் நீண்ட சுருளாக இருக்கும் போதே சுழல் உருளைகள் இடையே செலுத்தப்பட்டு மழ மழப்பாக்கப்படுதல்.

Web of drill : (எந். ) குடைவி முனை : ஒரு குடைவு கருவியில் சுழன்று இறங்கும் வெட்டுக் குழிவு களின் அடிப்புறத்தில் குடைவியின் பருமன் .

Wedge : (எந்.) ஆப்பு : ஆங்கில "V வடிவில் மரம் அல்லது உலோகத்தால் ஆன துண்டு. ஒரு பொருஎளில் வலுவான அழுத்தத்தை ஏற்படுத்த அல்லது இரண்டாகப் பிளக்கப் பயன்படுவது.

Wedging : பதமாக்கல் : களி மண்ணைப் பொருளாக உருவாக்கும் நோக்கில் அதை நன்கு பிசைந்து பதப்படுத்துவது.

Weft or woof : ஊடு : தறியில் குறுக்காக அமையும் நூல்கள்.

Weight : காகித எடை : ஒரு ரீம் காகிதத்தின் அல்லது 1000 ஷீட் காகிதத்தின் எடையைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் சொல் .

Weight font: (அச்சு.) பான்ட் எடை : இன்ன எழுத்து இன்ன விலை என்பதற்கு மாறாக எடைக் கணக்கில் விற்கப்படும் அச்சு எழுத்துகள்.

Weighting : துணி எடைமானம் : பட்டுடன் கனிம உப்புகள் அல்லது வேறு பொருட்களைச் சேர்த்து பட்டுக்கு கனம் சேர்த்தல்.

Weir (பொறி.) தூம்பு : ஆறு , அல்லது ஒடையின் குறுக்கே எழுப்பப்படும் சுவர் அல்லது அணை மின் உற்பத்திக் காரியங்களுக்கு, போதுமான நீர் கிடைக்கச் செய்வதற்காக நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் கட்டப்படுவது.

Welding : (எந்.) பற்று வைப்பு : இரும்பு: அல்ல து உருக்குத் தகடு போன்றவற்றின் ஓரங்களை இணைக்கும் முறை, ஆக்சி ஆசிடிலின் மின்சாரம் அல்லது அடிப்பதன் மூலம் சேர்ப்பது. Welding rod : (பற்ற) பற்ற வைப்புத் தண்டு : பொதுவில் 24 அங்குல நீளமும், 4, 8/8, அல்லது 1/2 அங்குலக் குறுக்களவும் கொண்டது. தீப்பீச்சு மூலம் பற்ற வைக்கையில் இணைக்க வேண்டிய இடத்தில் இத்தண்டுகள் உருகி இணைக்கும்.பற்ற வைப்புத் தண்டு கள் செய்ய வேண்டிய வேலையின் தரத்தைப் பொருத்து வெவ்வேறு வகைப் பொருட்களால் ஆனது.

Welding transformer : (மின்.) பற்றுவைப்பு மின்மாற்றி : ஒன்றோடு ஒன்று பொருத்தப்படுகிற உலோகப் பகுதிகளை இணைப்பதற்கு வெப்பம் பெறப் போதுமான மின்சாரத்தை உடனே தரும் இறக்கு மின்மாற்றி.

Weld - mark : (குழை,)இணைப்பு அடையாளம் : பிளாஸ்டிக் பொருளின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தாரைகள் முற்றிலுமாக ஒ ன் று சேராத காரணத்தால் ஏற்படும் அடையாளம்.

Weld period : பற்று வைப்புக் காலம் : பற்ற வைப்பதை ஒரு தடவை முற்றிலுமாகச் செய்து முடிப்பதற்கு ஆகும் காலம்.

Weld time: பற்றுவைப்பு நேரம் : ஒரு தடவை பற்று வைக்கும் போது மின்சாரம் பாய்வதற்கு அனுமதிக் கப்படுகிற நேரம். துடிப்பு - பற்று வைப்பில் பற்று வைப்பு நேரத்தில் சூடாறும் நேரமும் அடங்கும்.

56

638

Well hole: (க.க.) மாடிப் படிக் குழி: படிக்கட்டுத் தொகுதிகள் அடுத்தடுத்து 3 திசைகளில் திரும்பி அமையும்போது அவற்றின் நடுவே செங்குத்தாக அமைந்த இடைவெளி.

Welted edge: தடித்த விளிம்பு: இருக்கைச் சாதன ங்களில் போர்த்து துணிகளின் விளிம்புகளைச் சேர்த்துத் தைக்கையில் உட்புறமாக துணி போர்த்திய ஒரு கயிற்றைக் கொடுத்துத் தைத்தல். இதன்மூலம் இணைப்புகள் புடைப்பாக இருக்கும்.

Wet end: ஈர முனை: காகிதத் தயாரிப்பு எந்திரத்தில் காகிதம் உருப்பெற்று முதலாவது ஈரம் போக்கும் உருளை வரையிலான பகுதி.

Wet rot: ஈர உருத்து: ஈரப்பசை, உகந்த வெப்பம் காரணமாக மரக் கட்டை உளுத்துப் போதல்.

Wet steam: ஈர நீராவி: ஈரப்பசை அடங்கிய தெவிட்டிய நீராவி.

Wheel and axle: சக்கரமும் அச்சும்: பளுவைத் தூக்குவதற்கு மிக எளிய எந்திர விதி. அச்சில் அமைந்த சக்கரத்தின் வெளிச் சுற்று மீது விசை செலுத்தப்படு கிறது. சங்கிலி அல்லது கயிறு மூலம் எடையானது அச்சுடன் இணைக்கப்படுகிறது.

Wheel base: சக்கர அடிமானம் : கார் அல்லது வாகினில் உள்ளது 684

போன்று முன் சக்கர மையத்திலிருந்து பின் சக்கர மையம் வரை உள்ள தூரம்.

                                                    Wheel dresser; (எந்.) சக்கரத் தீட்டுக் கருவி அரைப்பு: சக்கரங்களின் வெட்டு முகங்களை மறுபடி கூராக்கவும்,பயன்படும் கருவி.

Wheel hub: சக்கரக் குடம்: ஒரு சக்கரத்தில் ஆரைக் கால்கள் அனைத்தும் வந்து சேருகின்ற மையப்பகுதி. இப்பகுதியில் தான் அச்சுக்கான துளை அமைந்திருக் கும்.

Wheel lathe: சக்கரக் கடைசல் எந்திரம்: குறுகிய மேடையும் ஆழமான இடைவெளியும் கொண்ட விசேஷ கடைசல் எந்திரம். சக்கரங்களைக் கடைவதற்குப் பயன்படுவது.

Wheel puller: (தானி.) சக்கர இழுவி: மோட்டார் வாகனச் சக்கரங்களை அச்சிலிருந்து விடுவித்து வெளியே இழுப்பதற்கான கருவி.

wheel window: (க.க.) சக்கரப் பலகணி: சக்கரத்தில் உள்ளது போன்று ஆரைகள் அமைந்த வட்ட வடிவ ஜன்னல்.

Wheel wright: சக்கரப் பணியாளர்: வாகின்கள் அல்லது அலை போன்றவற்றைத் தயாரிக்கிற அல்லது பழுது பார்க்கிற பணியாளர்.

whetting: (எந்.) தீட்டுதல்:


வெட்டு முனையைக் கூறாக்குவதற்காக சிறு துளி எண்ணெய் சேர்க்கப்பட்ட தீட்டு கல்லில் தீட்டுவது.

Whirler: சுழல்வி: மண்பாண்டங்களுக்கு பட்டையிடும் போது அல்லது அலங்கார வேலைப்பாடு செய்யும் போது பயன்படுத்தப்படும் சுழல் கருவி.

White antimony: (வண்.அர.) வெள்ளை ஆன்டிமனி: பெயிண்ட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிற நச்சற்ற வெள்ளை நிறப்பொருள். டைட்டாணியம் ஆக்சைட் பெயிண்ட் போன்று மெல்ல உலரும் தன்மையை அளிப்பது.

White cedar: (மர.வே.) வெள்ளை செடார்: 30 முதல் 50 அடி உயரம் வளரும் மரம். குறுக்களவு ஒன்று முதல் 2 அடி இருக்கும், லேசான மரம். மென்மை யானது. நீடித்து உழைப்பது. கூரை அமைக்கவும் படகு கட்டவும் வேலிக் கம்பமாக நடவும், மரச்சாமான்கள் தயாரிக்கவும் பயன்படுவது.

White coat: வெள்ளைப் பூச்சு: சிமெண்ட் போன்ற பூச்சு அளிக்கப்பட்ட சுவர் மீது உறுதியான வெள்ளைப் பூச்சு அளித்தல். இப்பூச்சுப் பொருளானது பிளாஸ்டர் ஆஃப் பாரிசும்,சுண்ணாம்புக் குழைவும் அடங்கியது. இதனுடன் சில சமயம் பொடியாக்கப்பட்ட சலவைக் கல்லும் சேர்க்கப்படும். மேல் பூச்சுக்கு ஜிப்சம் குழைவும் பயன் பயன்படுத்தப்படலாம். White iron: (உலோ.) வெள்ளை இரும்பு: மிகவும் உறுதியான வார்ப்பு இரும்பு, தயாரிப்பின் போது வார்ப்பானது உலோக அச்சில் குளிர்விக்கப்படுகிறது.

White lead: (வேதி;வண்.) ஒயிட்லெட்: காரீயத்தின் ஹைட்ரேடட் கார்பனேட், பெயிண்ட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

White - metal Iloyas ; (உலோ.) வெள்ளை உலோகக் கலோகங்கள் : துத்தம், ஈயம், தாமிரம் ஆகிய வற்றைச் சேர்த்து தயாரிக்கப்படுகிற அலோகம், மோட்டார் வாகனத்தில் கடினமான உறுப்புகளை அச்சு வார்ப்பு மூலம் தயாரிக்கப் பயன்படுவது.

White oak : (மர.வே.) ஒயிட் ஒக் : அமெரிக்க ஓக் மரங்களில் மிகவும் உறுதியானது, எடை மிக்கது. அடர்ந்து அமைந்தது. நீடித்த உழைப்பும், வலிமையும் தேவைப்படுகிற பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

White pine : (மர. வே.) வெள்ளை பைன் : நீளவாட்டில் உள்ளோட்டம் அமைந்த மென் மரம் : வெளிறிய நிறம்: வடிவமைப்புப் பணிகளுக்கும், இணைப்புப் பணிக்கும் விரிவாகப் பயன்படுவது.

அச்சிடப்

White space :(அச்சு.) வெள்ளிடம் : ஒரு ஷீட்டில் அச்சிடப்படாத பகுதி.

|

68వ

White spots : (வண்; அர.) வெள்ளைத் தட்டு : இறுதிப் பூச்சு அடித்த பின்னர் காணப்படும் சிறு சிறு வெள்ளை நிறப்புள்ளிகள் அல்லது திட்டுகள் அவசரமாகச் செய்த வேலை காரணமாக உள்ளே ஈரப் பசை சிக்குவதால் ஏற்படுவது. சரியாகத் தயாரிக்கப் படாத மட்டமான கரைப்பானைப் பயன்படுத்துவதாலும் ஏற்படுவது.

White spruce : (மா. வே.) விலை குறைவான சாதாரண மரம் : பெரிதும் பிரேம்களைச் செய்யவும், தரைகளை அமைக்கவும், மற்றும் அது போன்ற பணிகளுக்கும் பயன்படுவது.

White wash : (க.க.) வெள்ளையடி : நீரில் கரைத்த சுண்ணாம்பை பிரஷ் கொண்டு பூசுதல் அல்லது ஸ்பிரே கருவி மூலம் ஸ்பிரே செய்தல். சுண்ணாம்பு நன்கு ஒட்டிக் கொள்ள சில சமயங்களில் உப்பு சேர்ப்பது உண்டு. நீலத்தைச் சேர்த்தால் நல்ல வெண்மை கிடைக்கும்.

whiting : (வேதி.) வெள்ளைப் பசை : நன்கு பொடி செய்த சாக்கட்டி எண்ணெயுடன் நன்கு கலந் தால் பசை போலாகும். துளைகளை சந்துகளை அடைப்பதற்குப் பயன்படுவது.

Whitney keys (எந்.) விட்னி கீஸ் : சதுர தண்டு சாவிகள். இரு முனைகளிலும் துணிகள் மழுங்கலாக இருக்கும். 636

Whitworth thread : (எந்.) விட்வர்த் திருகு ; தர நிர்ணயப்படுத்தப்பட்ட இங்கிலாந்தின் திருகுபுரி தலைப்பகுதியும் நுனியும் மழுங்கலாக இருக்கும். புரியின் கோணம் 55 டிகிரி.

Whole depth : (பல்லி.) மொத்த ஆழம்: ஒரு சக்கரத்தின் பல் பற்றிய அளவு. மேல் விளிம்புக் கோட்டிலிருந்து பல்களுக்கு இடையே உள்ள பள்ளத்தின் அடிமட்டம் வரையிலான மொத்த ஆழம்.

Whorl : (மர.வே.) சுருள் பாணி : நெருக்கமாக இல்லாத சுருள் வடிவப் பாணி.

Wicket : (க. க.) உள் கதவு: பெரிய கதவுக்குள்ளாக அதன் பகுதியாக அமைந்த சிறுகதவு.

Wick • feed oilers : (எந்.) திரி மசகு : தேக்கி வைக்கப்பட்ட எண்ணெயிலிருந்து வெளிப்படும் திரி மூலம் மசகிடுதல். எண்ணெயில் மூழ்கியுள்ள முனையிலிருந்து எண்ணெயானது திரி வழியே மசகிட வேண்டிய பகுதிக்குச் செல்லும் ஏற்பாடு.

Wiggler : (எந்.) மையக் குறியிடு கருவி : துளையிடப்பட வேண்டிய பொருளின் நடுமையத்தை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து, துளைத்தண்டின் நுனிக்கு நேர் செங்குத்தாக அந்த மையம் அமையும்படி செய்ய உதவும் கருவி.

Wild black cherry : (மர.வே.) காட்டு கருப்புச் செர்ரி மரம் : பொதுவில் 2 முதல் 3 அடிக் குறுக்களவுடன் 50 முதல் 65 அடி உயரம் வரை வளரும் மரம். இந்த மரம் சிவந்த பழுப்பு நிறம் கொண்ட கணிசமான அளவுக்கு و கெட்டியானது உறுதியானது. பருவ நிலைகளால் பாதிக்கப்பட்டு வெடிப்பு விடாதது : வளையாதது இருக்கைகள், நுண்ணிய வேலைப்பாடுள்ள பலகைகள் முதலியவற்றைத் தயாரிக்கப் பயன்படுவது

Winch : (எந்.) விஞ்ச் : பாரம் தூக்கும் திருகு உருளை ஏற்றப் பொறி.

Wind : நெளிசல் : ஒரு மரத்தில் இருக்கின்ற நெளிசல் அல்லது கோணல்,

Wind cone : (வானூ.) காற்று திசை காட்டி : விமான நிலையத்தில் காற்று வீசும் திசையைக் காட் டுவதற்காக உள்ளது. குறுகிக் கொண்டே வரும் நீண்ட துணி ஒரு தண்டின் மீது கட்டி வைக்கப்படும்.

Winders : (க. க.) விரியும்படி : மாடிப்படிகளில் சில படிகள் மட்டும் ஒரு புறம் அகன்றும் மறு புறத்தில் குறுகியும் அமைந்திருப்பது. மாடிப்படிகளில் வளைவி லும், திருப்பங்களிலும் இவ்விதமாக அமைந்துள்ள படிகள்.

Wind indicator :(வானூ.) காற்றுக் காட்டி: தரைமட்டக் காற்றின் வேகம், வீசும் திசை ஆகியவற்றைக் காட்டுகிற கருவி.

Winding stair :சுழல்படி : தொடர்ந்து திசை மாறியபடி உயரே செல்லும் படிகள். படிகள் வளைந்து செல்லலாம். அல்லது நடுவில் திட்டுகளுடன் வளைந்து செல்லலாம். படிகளின் நடுவே உள்ள கிட்டத்தட்ட வட்டவடிவ இடைவெளியானது படிக்கிணறு எனப்படும். இது அகன்று இருக்கும். படிகளின் கைப்பிடியும் சுழன்று மேலே செல்லும்.

Windlass : பாரம்தூக்கும் பொறி: "வண்டி லாசு’’ என்றும் கூறுவது உண்டு.

Wind load : (பொறி.) காற்று விளைவு : ஒரு கட்டுமானம் மீது வீசும் காற்றினால் ஏற்படுகின்ற பாரம்.

Window : (க.க.) பலகணி : ஒரு கட்டடத்தில் அமைந்த பல திறப்புகள். உள்ளே வெளிச்சமும், காற்றும் கிடைப்பதற்காக அமைக்கப்படுவது வேண்டும்போது மூடிக் கொள்ள சட்டங்களுக்குள்ளாக ஒளி ஊடுருவும் பொருள் இணைக்கப்பட்ட ஏற்பாடு கொண்டது.

Window head : (க.க.) பலகணித் தலை: பலகணிச் சட்டத்தின் மேல் பகுதி.

Window jack : பலகணிச் சாரம் :பலகணி அடிச்சட்டத்துடன் பொருந்துகிற, அத்துடன் வெளியே

887

நன்கு நீட்டிக் கொண்டிருக்கிற சிறிய வலுவான மேடை. பொதுவில் பெயிண்ட் அடிப்பவர்கள் பயன்படுத்துவது.

Window seat : (க.க.) பலகணி இருக்கை : பலகணிக்குக் கீழே அல்லது பலகணியின் உள் அமைந்த இடத்தில் பொருந்துகிற இருக்கை.

Wind shake: காற்று வெடிப்பு: மரத்தை வெட்டுவதற்கு முன்னதாக மரத்தின் தண்டுகளில் காற்று காரணமாக ஏற்படும் வெடிப்பு.

Windshield wiper : (தானி.) கார்கண்ணாடித் துடைப்பான் : காரின் முன்புறத்தில் உள்ள கண் ணாடியில் மழைநீர், அல்லது விழு பணி படியும்போது அதைத் தொடர்ந்து அகற்றி ஓட்டுபவருக்கு எல்லாம் தெளிவாகத் தெரிய உதவும் கருவி, எந்திர முறை மூலம் பல வெற்றிட ஏற்பாட்டின் கீழ் மின்சார மூலம் அல்லது கையால் இயக்கப்படுவது. மழைநீரை, விழுபனியை அகற்ற உறுதியான நீண்ட தண்டின் முன்புறத்தில் ரப்பர் பட்டை அமைந்தது.

Wind tee : (வானூ.) காற்று திசைக் காட்டி: காற்று எத்திசையை நோக்கி விசுகிறது என்று காட்டு வதற்கு விமானம் தரை இறங்கும் பகுதியில் அல்லது அருகே உள்ள கட்டுமானத்தின் உச்சியில் 'T' வடிவில் அமைந்த பெரிய காற்று திசைக்காட்டி. 688

Wind tunnel : (வானூ.) காற்றுச் சுரங்கம் : செயற்கையாக வேண்டிய அளவில் காற்று வீசும்படி செய்வதற்கான சாதனம் அடங்கிய கூடம் : விமான மாடல் போன்றவை வைக்கப்பட்டு காற்று வீசுவதால், காற்று இயக்க விசைகள் சோதனைப் பொருள் மீது ஏற்படுத்தும் விளைவுகளை ஆராய காற்றுச் சுரங்கம் உதவுகிறது.

Wing : (வானூ) இறக்கை : விமானத்தின் முக்கிய தாங்கு பரப்புகள். இடது இறக்கை, வலது இறக்கை, மேல் இறக்கை, கீழ் இறக்கை ஆகியன அடங்கும். (கட்டிட) முதன்மை கட்டடத்திலிருந்து பிரிந்து நீண்டு அமைந்த 'கட்டடப் பகுதி.

Wing axis: (வானூ.) இறக்கை அச்சு: இறக்கையின் எல்லாப் பகுதிகளின் வான் இயக்க மையங்களின் குவியம்.

Winged dividers: இறக்கையுள்ள பகிர்வி: நீளமான கோடுகளைப் பகிர்ந்து, பிரித்துப் பிரித்து அளப்ப தற்கான இறக்கையுள்ள கருவி. கூரான இரு கால்களில் ஒன்றின் மேற்புறத்தில் இணைக்கப்பட்ட மெல்லிய தகடு மற்றதன் ஊடாகவும் சென்று அமைந்திருக்கும். துளையுள்ள காலில் பொருத்தப்பட்ட நிலைப்பு ஸ்குருவை முடுக்கினால் இக்கருவி அளவு மாறாமல் அப்படியே இருக்கும். குறுகாது; விரியாது.

Wing heavy: (வானூ.) இறக்கை

இறக்கம்: விமானம் குறிப்பிட்டதொரு போக்கில் சாதாரணமாகப் பறக்கும்போது கிடை நிலைக் கட்டுப்பாடுகள் இயக்கப்படாத நிலையில் விமானத்தின் வலது அல்லது இடது இறக்கை கீழ் நோக்கிச் சாய்ந்த நிலை.

Wing loading: (வானூ.) இறக்கை எடைமானம்: முற்றிலுமாக பளு ஏற்றப்பட்ட நிலையில் மொத்த எடையை, தாங்கு பரப்பினால் வகுத்து வரும் எண்.

Wing nut: (எந் ) இறக்கை நட்டு: நட்டுகளில் ஒரு வகை. இந்த வகை நட்டில் அதன் இரு புறங்களிலும் இறக்கை போல இரு மெல்லிய பகுதிகள் நீட்டிக் கொண்டிருக்கும். இறக்கைகளைப் பற்றி நட்டு முடுக் கப்படும் அல்லது வெளியே எடுக்கப்படும்.

Wing profile; (வானூ.) இறக்கை விளிம்புரு: ஒரு விமானத்தின் இறக்கையின் ஓரங்களை மட்டும் காட்டும் படம்.

Wing rib: (வானூ.) இறக்கை முதுகு: விமான இறக்கையின் உள் கட்டுமானத்தில் விமான வயிற்றுப் புறப் பகுதியிலிருந்து இறக்கையின் ஊடே அதன் வெளி விளிம்பு வரை அமைந்த தண்டு. அதுவே இறக்கைக்கு வடிவத்தை அளிக்கும் அடிப்படைத் தண்டு.

Wing section: (வானூ.) இறக்கைக் குறுக்கு வெட்டு: விமான இறக்கையின் நீளவாட்டு அல்லது வேறு கோணத்திலான குறுக்கு வெட்டுத் தோற்றம்.

Wing skid (வானூ.) இறக்கை முட்டு: விமான இறக்கை சாய்ந்து தரையைத் தொடாதபடி தடுக்க இறக்கையின் நுனியின் கீழ் நிறுத்தப்படுகிற முட்டு.

Wing spar: (வானூ.) இறக்கைத் தண்டு: விமானத்தின் இறக்கையின் உட்புறக் கட்டுமானத்தால் நீளவாட்டில் அமைந்த பிரதான தண்டு.

Wing tip: (வானூ ) இறக்கை முனை: விமானத்தின் இறக்கையின் வெளிக்கோடி முனை.

Wing tip flare: (வானூ.) இறக்கை முனை வானுர்தி: விமானம் கீழிறங்குகையில் வெளிச்சம் தேவைப்படுமானால் இயக்குவிப்பதற்கான வாகனம். இது இறக்கையின் நுனிகளில் பொருத்தப்பட்டிருக்கும்.

Wing truss: (வானூ.) இறக்கைக் கூடு: விமான இறக்கையின் உட் புறக் கட்டுமான பிரேம்களின் கூடு. இணைப்புத் தண்டுகள், குறுக்குத் தண்டுகள், கம்பிகள், கேபிள்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவை. இதன் வடிவமைப்பின் விளைவாக இறக்கையின் எடை விமானத்தின் உடலுக்கு மாற்றப்படுகிறது.

Wiped joint: (கம்மி.) துடைப்பு ஒட்டு: இரு துண்டுகளை ஒன்றாக ஒட்ட வைக்கும்போது இரண்டை

689

யும் சூடேற்றி தக்க சூடு வந்ததும் வேண்டிய ஒரங்களைச் சேர்த்து வைத்து அவற்றின் மீது உருகிய ஒட்டு உலோகத்தை ஊற்றுதல், பிறகு ஓரளவுக்குச் சேர்ந்ததும், குழம்பு நிலையில் ஒட்டுக்கு மேலுள்ள எஞ்சிய உலோகத்தை துடைப்புத் துணி கொண்டு துடைத்து அகற்றுதல்.

Wiper: (எந்.) துடைப்பி: கோண வட்ட இயக்கியின் ஒரு வடிவம். சரிந்து ஏறுகிற அல்லது துடைக்கிற பணியைச் செய்வது.

Wire bar: (உலோ.)கம்பிப் பாளம்: உருளைகளில் கொடுத்து தண்டுகளாக மாற்றுவதற்கான தாமிரப் பாளம். உருளைக்குள் எளிதில் செருக சரிவான விளிம்பு இருக்கும்.

Wire brush: கம்பி பிரஷ்:தூரிகைக்குப் பதில் உருக்கினால் ஆன மெல்லிய துண்டுகள் அல்லது கம்பி களைக் கொண்ட பிரஷ். ஒரு பரப்பின் மீதுள்ள துருசு, அழுக்கு அல்லது வேறு பொருட்களை அகற்றப் பயன்படுவது.

Wire cloth: கம்பி துணி: மெல்லிய கம்பிகளில் ஆன துணி.

Wired edge; கம்பியிட்ட ஓரம்:ஒரு பொருளின் ஒரத்துக்கு வலுவேற்ற விளிம்பில் கம்பியைப் பொருத்தி அதை மூடி விடுதல்.

Wire drawing: கம்பி இழுத்தல்; கம்பி தயாரிக்கும் முறை. உலோகத் தண்டு, தக்க உலோகத் தட் 6 40

டின் நடுவே உள்ள ஓட்டை வழியே இழுக்கப்படும்.

Wire gauge (எந்.) உயர் அளவு மானி : தயாரிக்கப்படுகிற கம்பி, மற்றும் தகடுகளின் குறுக்கு அறைகளைக் கண்டறிவதற்கென குறியீடுகளையும், அளவு எண்களையும், கம்பி, தகடு ஆகியவற்றை வைத்து அளவு பார்க்க வெவ்வேறு அளவுகளில் குழிவுகளையும் கொண்ட தகடு. அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிற அமெரிக்க தர நிர்ணய உருக்கு கம்பி அளவு மானி அதிகார முறையில் அங்கீ கரிக்கப்பட்டது. ஆனால் சட்ட மதிப்பு இல்லாதது. வரி விதிப்புப் பணிகளுக்கு பிர்மிங்ஹாம் அளவுமானி அமெரிக்க சட்ட மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்தது ஆகும். "அமெரிக்கன் பிரவுன் அண்ட் ஷார்ப் காஜ், தாமிரக் கம்பிகளையும், இரும்பல்லாத உலோகங்களால் ஆன கம்பிகளையும் அளக்கப் பயன்படுகின்றன.

Wire glass:(க.க.) கம்பி பதித்த கண்ணாடி : அகன்ற இடை கம்பி வலை உள்ளே பதிக்கப்பட்ட கண்ணாடி.தற்செயலாகக் கண்ணாடி உடைந்தாலும் துண்டுகள் சிதறாமல் தடுக்க இந்த ஏற்பாடு உதவும்.

wire mark: கம்பிக் குறி: காகிதம் தயாரிக்கப்படுகையில் காகிதம் மீது ஃபோர்ட்ரீனியர் எந்திரத்தின் கம்பி அல்லது உருளை எந்தி

ரத்தின் உறை ஏற்படுத்தும் அடையாளக்குறி.

Wire nails: கம்பி ஆணிகள் : கம்பிகளிலிருந்து செய்யப்படுகிற ஆணிகள் பல்வேறு காரியங்களுக்கு ஏற்ப பல அளவுகளில் பல விதமான தலைகளுடன் தயாரிக்கப்படுபவை. முன்னர் இருந்த வெட்டு ஆணிகளுக்குப் பதில் இவை பரவலாகப் பயன்படுபவை.

withe : (க.க.) வித் : அதே புகைக் குழாயில் புகை வழிகளுக்கு இடையில் அமைந்த பகுதி.

Wolframite : (உலோ.) வோல்ஃப்ராமைட் : அலுமினியம். டங்ஸ்டன், மற்றும் சிறு அளவில் தாமிரம், துத்தம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிற ஜெர்மன் அலோகம். இது டுராலுமினியத்தின் பல பண்புகளைப் பெற்றுள்ளது.

Wood alcohol - (வேதி.) மர ஆல்கஹால் : காண்க மெதனால் .

Woodcut: (அச்சு.) மரச் செதுக்கு அச்சு: அச்சடிப்பதற்கு மரக் கட்டையால் செய்யப்படுகிற பிளேட் இதில் தேவையில்லாத பின்னணி செதுக்கி அகற்றப்படும். அச்சிடப்பட வேண்டியவை புடைப்பாக நிற்கும்.

Wood engraving; (அச்சு.) மரச்செதுக்கு வேலை: மரச்செதுக்கு அச்சுகளைத் தயாரிக்கும் அலை. Wood finishing; (மர.வே.) மர நேர்த்தி: மரப்பொருட்களுக்கு இறுதி நேர்த்தி அளிக்க அவற்றைத் தயார்படுத்துவது, பின்னர் பெயின்ட் அல்லது வார்னிஷ் கொடுப்பது; குறிப்பிட்ட நேர்த்தி தேவைப்பட்டால் பாலிஷ் அளிப்பது.

Wood flour : மர மாவு: மிக நைசாகப் பொடி செய்யப்பட்ட மரம். பொதுவில் ஒயிட் பைன் மரத்திலிருந்து தயாரிக்கப்படுவது. லினோலியம் தரை, ரப்பர் ஆகியவற்றில் உள்ள சிறு ஒட்டைகளை அடைப்பதற்குப் பயன்படுவது.

Wood pattern making: மரத்தால் ஆன வடிவங்கள்: மரத்தைக் கொண்டு மாடல்கள் அல்லது பிளான்களைத் தயாரிப்பது.

Wood pulleys (எந்.) மரஉருளை: இது வார்ப்பு இரும்பினால் ஆன உருளை (ஜகடை) யை விட லேசானது. எனினும் அதே அளவிலான பெல்ட் இறுக்கத்தில் 25 சதம் கூடுதலாக விசையைச் செலுத்தியது. மிகுந்த ஈரம் பாய்ந்த வேலைகளுக்கு உகந்தது அல்ல.

Wood screws: (பட்.) மரவேலை திருகாணிகள்: மரவேலைகளுக்குப் பயன்படும் திருகாணிகள் நீள்வட்ட வட்ட, மழுங்கலான தலை என பலவகையான தலைகளுடன் தயாரிக்கப்படுகின்றன. ஆணியின் அளவுதலை அதிகபட்சமாகப்பிடிக்

57

641

கின்ற நிலையிலிருந்து முனை வரை கணக்கிடப்படுகிறது. ஜிம் லெட் கூர்முனை அளவுகள் தரப் படுத்தப்பட்டவை. திருகாணிகள் பிரகாசமாக அளவில் கால்வனைஸ் செய்யப்பட்டவை. நீல நிறம் அளிக்கப்பட்டவை. பல வகையான திருகாணிகள் ஒரு சைஸ் ஆணிக்கும் அடுத்த சைஸ் ஆணிக்கும் உள்ள வித்தியாசம் 0.013 அங்குலம், ஆணிகளின் நம்பர்கள் 1 முதல் 30 வரை உள்ளன.1/4 அங்குலம் முதல் 6 அங்குலம் வரை பல நீளங்களில் உள்ளன. ஆணியில் புரிகள் மட்டும் அமைந்த பகுதி மொத்த நீளத்தில் 10இல் 7 பங்கு அளவுக்கு உள்ளது. புரிகள் கோணம் 82 டிகிரி.

Wood turning: மரக் கடைசல்: மரக் கட்டைகளை கடைசல் எந்திரத்தில் கொடுத்துக் கடைவது,

wood work: மர வேலைப்பொருள்: மரத்தால் ஆன பொருட்கள்.

Woof: குறுக்கு இழை: நெசவில் அகலவாட்டில் அதாவது குறுக்காக அமைந்த இழை. நீளவாட்டிலான பாவு நூலுக்கு நேர்மாறானது.

Work: வேலை: வேலை என்பது நேரக் கணக்கில் அன்றி அடி|ராத்தல், அங்குலம் ராத்தல், கணக்கில் கூறப்படுகிறது. (இயற்) விசையை தொலைவினால் பெருக்கி வரும் தொகையானது வேலைக்குச் சமம். 642

Working depth : (பல்லி). செயல் ஆழம்: பல் சக்கரத்தில் மேல் விளிம்புக் கோட்டிலிருந்து கிளி யரன்ஸ் அதாவது இடைவெளிக் கோட்டு வரையிலான ஆழம். அதாவது மொத்த ஆழத்திலிருந்து இடைவெளியைக் கழித்து வரும் ஆழம்.

Working drawing: (க.க.) செயல் வரைபடம்: எல்லா அளவுகளும், தேவையான பணிக் குறிப்புகளும் கொண்ட பணியை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு உதவுகிற வரைபடம்.

Working gauges: (எந்.) செயல் அளவு மானிகள்: உற்பத்திக்குப் பயன்படுத்துகிற அளவுமானி களைக் குறிக்கும் சொல்.

Working load: (பொறி.) பணி நிலை பாரம்: ஒரு கட்டுமானம் சாதாரணமாக உள்ளாகிற பாரம். அது அதிகபட்ச பாரம் அல்ல. மாறாக சராசரி பாரம்.

Working unit stress: (பொறி.) செயல் யூனிட் அழுத்தம்: இறுதியான அழுத்தத்தை பாதுகாப்பு அலை எண்ணால் வகுத்து வருவது .

Work life: (குழை.) பசைக் காலம்: ஒரு செயலூக்கியுடன் அல்லது பிற பொருளுடன் கலந்த பின்னர் ஒரு பசைப் பொருள் உபயோகிக்கத் தக்க நிலையில் உள்ள நேரம்.

Works manager; பணி மேலாளர்:

ஒரு தொழிற்சாலையின் ஜெனரல் சூபரின்டெண்ட். பல தொழிற்சாலைகளில் பிரதம என்ஜினியர் போன்றவர்.

Worm - and - gear steering: (தானி.) நெளிதண்டு மற்றும் கியர் ஸ்டியரிங் : ஸ்டியரிங் கியர் தண்டின் கீழ்முனையில் அமைந்த நெளி தண்டுடன் கூடிய ஏற்பாடு. நெளி கியர் குறுக்குத் தண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். தகுந்த படி பொருந்தியுள்ளதா என்று சரி பார்த்து அமைக்க இயலும்.

Worm drive : (தானி.) நெளி தண்டு இயக்கம்: பெவல் பல்லிணை பினியன், அல்லது செயின் மூலமாக இல்லாமல் நெளிதண்டும், சக்கரமும் இணைந்த செயல் மூலம் இயங்குவது.

Worm gearing : (பல்லி.) நெளி பல்லிணை : திருகுபுரி பல்லிணையும், பல்சக்கர பல்லிணையும் இணைந்த பல்லிணை.

Worm Threads: (எந்.) நெளி புரி : இப்புரிகள் ஆக்மி ரகத்தைச் சேர்ந்தவை. 29 டிகிரி கோணத் தில் அமைந்தவை. எனினும் தரப்படுத்தப்பட்ட ஆக்மி புரியை விட ஆழமானவை.

Wove paper : வலைச்சட்டக் காகிதம் : நெருக்கமான வலையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட காகிதம். இதில் நீரோட்டம் இராது.

Wreath (க.க.) படிகளின் வளை கைப்பிடி : மாடிப்படியின் கைப்பிடியில் செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் வளைந்த பகுதி. மாடிப்படியின் துவக்கத்தில் கீழே உள்ள தாங்கு தூணுடன் பக்கவாட்டில் இணைக்கப்படுவது.

Wreath piece : (க.க.) மாடிப் படி வளை கைப்பிடித் துண்டு: சுழன்று செல்லும் மாடிப்படிகளின் வளைந்து வளைந்து செல்லும் கைப்பிடியின் ஒரு பகுதி.

Wrecking bar : (எந்) பாடழிவுக் கைப்பிடி : பொதுவில் ஒன்று முதல் இரண்டு அடி நீளமுள்ள உருக்குத் தண்டு. ஒரு முனையில் மெல்லிய விளிம்பு இருக்கும். மறு முனை வளைந்து பிடிமானத்துக்கு உகந்தபடி குழிவுடன் கூடிய பல் இருக்கும்.

Wrench : (எந்.) திருகு குறடு : சாதாரண ரகங்கள் நட்டுகளுக்கு ஏற்ப எளிதில் மாற்றிக் கொள்ளத் தக்கவை. மங்கி குறடு, இரட்டை முனை, குறடு, "எங் குறடு, பாக்ஸ் குறடு, டி குறடு, துளைக்குறடு முத லியவை (எந்திர) போல்ட் அல்லது நட்டுகளைத் திருப்புவதற்கு விசையைச் செலுத்துவதற்கான இசைக்

848

கருவி.

Wrinkling : (வண்:அர.) திரளுதல் : பெயிண்ட் அ ல்லது வார்னிஷ் அடக்கம் போதிய அளவுக்கு அதிகமாகக் கனமாக பூசினால், வெப்பம் அதிகமாகக் இருந்தால், காற்றில் ஈரப்பசை மிகுதியாக இருந்தால் அல்லது பரப்பின் மீது நீட்சித் தன்மை கொன்ட பிலிமை பரப்பினால் சுருக்கம் விழும் அல்லது பெயின்ட், வார்னிஷ் திரண்டு நிற்கும்.

Wrong font; (அச்சு.) தவறான பான்ட் : அச்சுக்கோக்கப்பட்ட வாசகத்தால் இதர எழுத்துகளிலி ருந்து வித்தியாசமாக உள்ள வேறு அளவிலான எழுத்து.

Wrong side : தவறான பக்கம் : கம்பி வலை கொண்டு தயாரிக்கப்பட்ட காகிதத்தில் கம்பி வலை மீது அமைந்த புறத்தில் அடையாளம் இருக்கும். இது தவறான பக்கமாகும்.

Wrought iron : (உலோ.) தேனிரும்பு : பெரும்பாலான கார்பனும், இதர உள்ளிடப் பொருட்களும் அகற்றப்பட்ட இரும்பு.