அறிவுக்கு உணவு/ஜோசியம்
Appearance
ஜோசியர் : (தம் மாணவனைப் பார்த்து) தம்பி! நீ ஜாதகம் பார்க்கக் கற்றுக்கொண்டுவிட்டாயா?
மாணவன்: யாவும் கற்றுவிட்டேன்; இனி உங்கள் உதவியின்றி நானே ஜாதகம் பார்த்துச் சொல்லுவேன்.
ஜோசியர்: முக்கியமான ஒன்றை இன்னும் நான் சொல்லிக் கொடுக்கவில்லையே!
மாணவன்: அது என்ன ஐயா?
ஜோசியர்: “எவன் ஜாதகத்தைத் துரக்கிக்கொண்டு வருகிறானோ, அவனுக்குக் கெட்ட காலம் நேர்ந்திருக்கிறது என்பதை முதலில் நினைத்துக் கொள்; பிறகு ஜோசியம் சொல்” என்பதே.