அல்லங் கீரனார்
Appearance
அல்லங் கீரனார்
[தொகு]நற்றிணை- 245. நெய்தல்திணை
[தொகு]- (குறைநேர்ந்த தோழி தலைமகளை முகம்புக்கது)
- நகையா கின்றே தோழி தகைய
- அணிமலர் முண்டகத் தாய்பூங் கோதை
- மணிமரு ளைம்பால் வண்டுபடத் தைஇ
- துணிநீர்ப் பௌவந் துணையோ டாடி
- ஒழுகுநுண் ணுசுப்பி னகன்ற வல்குல் (5)
- தெளிதீங் கிளவி யாரை யோவென்
- அரிதுபுண ரின்னுயிர் வௌவிய நீயெனப்
- பூண்மலி நெடுந்தேர்ப் புரவி தாங்கித்
- தானம் மணங்குத லறியான் நம்மில்
- தானணங் குற்றமை கூறிக் கானற் (10)
- சுரும்பிமிர் சுடர்நுதல் நோக்கிப்
- பெருங்கடற் சேர்ப்பன் தொழுதுநின் றதுவே.