உள்ளடக்கத்துக்குச் செல்

அ. மருதகாசி-பாடல்கள்/கவிஞர் மருதகாசி!

விக்கிமூலம் இலிருந்து

கவிஞர் மருதகாசி!

கால்நூற்றாண்டுக்கும் மேலாக - தமிழ்த்திரைப்
பாட்டுத்துறையில் கோலோச்சிய பெயர்.

இன்றைய புதிய விளைச்சல்களுக்கெல்லாம்
முன்னோடியாயிருந்த நாடறிந்த நாற்றங்கால்.

அவருடைய பாடல்கள் காற்றையும், காலத்தையும்
வென்று இன்றும் அன்றலர்ந்த மலர்களைப் போல்
நின்று நிலவுகின்றன.

கிராமம் கொடுத்த வாழ்க்கைப்படிப்பும், ஆர்வம்
கொடுத்த ஏட்டுப்படிப்பும் கவிஞர் மருதகாசியை
ஈடுசொல்ல முடியாத இசைப்புலவனாய்
வளர்த்திருக்கின்றன.

இன்று தனது அனுபவங்களின் சிகரங்களில்
கொலுவீற்றிருக்கும் இவரிடம் பள்ளிக்
கூடங்களெல்லாம் பாடம் கற்றுக்கொள்ளலாம்.

ஒரு கலைஞன் கவிஞனாயிருப்பதை விடவும்
மனிதனாய் இருப்பதே மகத்துவமானது.

கவிஞர் மருதகாசி - ஒரு மகத்தான மனிதர் -
பண்பாடுகளின் சாரம், நாகரிகத்தின் பிழிவு.

அவரது எழுத்துக்களைப் போலவே மென்மை
யானவர். இந்தக் கலைக்களஞ்சியம் - திரைப்
பாட்டுத்துறைக்கு - காலத்தால் அழியாத
கல்வெட்டு.

கவிஞர் வைரமுத்து